இராக் படையினரிடம் ஹவிஜா நகரை இழந்த ஐ.எஸ் தீவிரவாதிகள்

இஸ்லாமிய அரசு எனக் கூறிக்கொள்ளும் ஐ.எஸ் தீவிரவாதிகளின் இறுதி நிலப்பகுதிகளில் ஒன்றான ஹவிஜாவை மீண்டும் கைப்பற்றிவிட்டதாக இராக் அரசு படைகள் தெரிவித்துள்ளன. நேற்றைய தினம் (புதன்கிழமை), 196 ஐ.எஸ் தீவிரவாதிகளை கொன்றுவிட்டதாகவும், 98 கிராமங்களை கைப்பற்றியுள்ளதாகவும் ராணுவம் தெரிவித்துள்ளது. ஆயிரக்கணக்கான பொதுமக்கள் வசிக்கும் ஹவிஜா நகர் கடந்த 2014…

பாகிஸ்தான் வழிக்கு வரவில்லை என்றால் எந்தஒரு நடவடிக்கைக்கும் தயார் -அமெரிக்கா…

பாகிஸ்தான் எங்களுடைய வழிக்கு வரவில்லை என்றால் எந்தஒரு நடவடிக்கைக்கும் தயார் என அமெரிக்கா எச்சரிக்கை விடுத்து உள்ளது. அமெரிக்காவின் டொனால்டு டிரம்ப் அரசு பயங்கரவாதம் விவகாரத்தில் பாகிஸ்தானுக்கு எதிராக கடினமான நகர்வை முன்னெடுத்து வருகிறது. அமெரிக்காவின் தெற்கு ஆசியா மற்றும் ஆப்கானிஸ்தானுக்கான கொள்கை முடிவு குறித்து பேசிய டொனால்டு…

`சில தினங்களில் கேட்டலோனியா சுதந்திரம் குறித்து அறிவிக்கப்படும்’

கேட்டலோனியா இன்னும் சில தினங்களில் தன் சுதந்திரத்தை அறிவிக்கும் என்று, தன்னாட்சி அதிகாரம் கொண்ட அந்த மாகாணத்தின் தலைவர் பிபிசியிடம் தெரிவித்தார். ஸ்பெயினிலிருந்து பிரிந்து சென்று தனி நாடு அமைத்துக் கொள்வதற்கான வாக்கெடுப்பு ஞாயிற்றுக்கிழமை நடந்தது. அந்த வாக்கெடுப்பிற்கு பின் முதன்முதலாக பிபிசி-க்கு பேட்டி அளித்த கேட்டலோனியாவின் தலைவர்…

லாஸ் வேகஸ் துப்பாக்கி சூடு எங்கிருந்து எப்படி நடத்தப்பட்டது?

லாஸ் வேகஸில், ரூட் 91 என்ற மூன்று நாள் நாட்டுப்புற இசைத் திருவிழாவின் கடைசி நிகழ்ச்சிமுழு வீச்சில் நடந்துகொண்டிருந்த போது, 64 வயதான ஸ்டீஃபன் பேடக் துப்பாக்கிச் சூட்டை நடத்தினார். தாக்குதல் நடந்த மூன்று நாட்களுக்கு முன்பு, அதாவது செப்டம்பர் 28-ம் தேதி மாண்டலே பே ஹோட்டலில் உள்ள…

ரோஹிஞ்சாக்கள் பற்றிய காணொளி: பர்மிய அழகியின் பட்டம் பறிப்பு

பர்மிய அழகு ராணி ஒருவர், மியான்மரின் ரகைன் மாகாணத்தில் நடக்கும் வன்முறை குறித்து தான் பதிவேற்றிய ஒரு காணொளியின் காரணமாக தனது பட்டத்தை இழந்துவிட்டதாக கூறியுள்ளார். ஸ்வே எய்ன் ஸி என்னும் அந்த அழகி, மியான்மரில் அமைதியின்மையை ஏற்படுத்துவதாக ரோஹிஞ்சா போராளிகளை குற்றஞ்சாட்டி ஒரு காணொளியை கடந்த வாரம்…

தனிநாட்டுக்கு கேட்டலோனியா மக்கள் பெரும்பான்மை ஆதரவு

ஸ்பெயின் நாட்டின் ஒரு மாகாணமான கேட்டலோனியா, தனி நாடாகப் பிரிந்து செல்வது தொடர்பாக நடத்தப்பட்ட பொதுமக்கள் கருத்தறியும் வாக்கெடுப்பில் தனிநாடு கோரிக்கைக்கு பெரும்பான்மை ஆதரவு கிடைத்திருப்பதாக கேட்டலன் தலைவர் கார்லஸ் பூஜ்டியமோன் கூறியுள்ளார். சுதந்திரத்தை சுயாதீனமாக அறிவித்துக் கொள்ள இந்த வாக்கெடுப்பின் வெற்றி வழிவகுத்துள்ளது என்றும் அவர் தெரிவித்தார்.…

லாஸ் வேகஸில் 58 பேரை கொன்ற துப்பாக்கிதாரி யார்?

லாஸ் வேகஸில் நடந்த இசை நிகழ்ச்சியில் துப்பாக்கி சூடு நடத்தி குறைந்தது 58 பேரைக் கொன்று, 515க்கும் மேற்பட்டவர்கள் காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருப்பதற்குக் காரணமான சந்தேகத்துக்குரிய துப்பாக்கிதாரியைப் பற்றிய பல விவரங்கள் வெளியாகியுள்ளன. ஞாயிற்றுக்கிழமை இரவு அமெரிக்க பாடகர் ஜேசன் அல்டின் இசை நிகழ்ச்சியின் போது 64 வயதான…

லாஸ் வேகஸ் சூதாட்ட விடுதி அருகே துப்பாக்கி சூடு: 20-க்கும்…

அமெரிக்காவின் லாஸ் வேகஸ் நகரில் உள்ள மாண்டலே பே ஹோட்டல் அருகே பலத்த துப்பாக்கிச் சூட்டில்20-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். மேலும். இந்த சம்பவத்தில் குறைந்தது 100 பேர் காயமடைந்தனர். மாண்டலே பே சூதாட்ட விடுதியின் மேல் மாடியில் இருந்து துப்பாக்கி சூடு நடத்தப்பட்டதாக இந்த சம்பவத்தை நேரில் கண்ட…

ஆஸ்திரியாவில் முஸ்லிம் பெண்கள் முகத்திரை அணிய தடை அமலுக்கு வந்தது

ஆஸ்திரியாவில் பொது இடங்களில் முஸ்லிம் பெண்கள், முழு முகத்தையும் மூடும் முகத்திரை அணிவதற்கான தடை அமலுக்கு வந்தது. ஆஸ்திரியவின் கோட்பாடுகளைப் பாதுகாக்கும் விதமாக, தலைமுடியில் இருந்து, தாடை வரை முகம் முழுமையாக தெரிய வேண்டும் என இச்சட்டம் கூறுகிறது. தீவிர வலதுசாரி சுதந்திர கட்சி வெற்றிபெற அதிகம் வாய்ப்புள்ளதாகக்…

பிரான்ஸ் ரயில் நிலையத்தில் கத்தியால் தாக்குதல்; 2 பெண்கள் பலி

தெற்கு பிரான்ஸின் , மார்சே நகரின் புனித சார்லஸ் ரயில் நிலையத்தில் நடந்த தாக்குதலில் இருவர் இறந்துள்ளதாக , ஊடக செய்திகள் தெரிவிக்கின்றன. `இருவர் இந்தத் தாக்குதலில், கத்தியால் குத்தப்பட்டு இறந்தனர் ` என்று , அந்த பகுதியில் காவல் அதிகாரி, ஆலிவர் டீ மேசியார்ஸ், ஏ.ஃப்.பி செய்தி…

குர்திஸ்தான் பகுதிக்குச் செல்லும் சர்வதேச விமானங்களை நிறுத்தியது இராக்

இராக்கின் வட பகுதியில் நடத்திய கருத்து வாக்கெடுப்பில் குர்திஸ்தான் விடுதலைக்கு ஆதரவாக 92 சதவீத மக்கள் வாக்களித்துள்ள நிலையில், இந்த வாக்கெடுப்பை எதிர்த்துவரும் இராக் மத்திய அரசு, குர்திஸ்தான் பகுதிக்குச் செல்லவேண்டிய, அங்கிருந்து வெளியே வர வேண்டிய சர்வதேச விமானங்களை ரத்து செய்துள்ளது. குர்திஸ்தான் பகுதியில் உள்ள இர்பில்,…

கொல்லப்படவில்லையா பக்தாதி? புதிய ஒலிப்பதிவு வெளியானது

கொலை செய்யப்பட்டதாகக் கூறப்படும் இஸ்லாமிக் ஸ்டேட் இயக்கத்தின் தலைவர் அபூபக்கர் அல் பக்தாதியின் குரல் எனச் சொல்லப்படும் ஒலிப்பதிவு ஒன்றை, ஐ.எஸ்.ஸுடன் தொடர்புள்ள இணையதளம் ஒன்று வெளியிட்டுள்ளது. அதில், பக்தாதியினது என்று நம்பப்படும் அந்தக் குரல், ஜப்பான் மற்றும் அமெரிக்கா மீதான வடகொரியாவின் பயமுறுத்தல் நடவடிக்கைகள் குறித்துப் பேசுகிறது.…

ஐரோப்பாவில் 50 வயதுக்கு மேற்பட்டோர் மத்தியில் அதிகரிக்கும் எச்.ஐ.வி.

ஒரு புதிய ஆய்வின் படி, ஐரோப்பாவில் ஐம்பது வயதுக்கு மேற்பட்டோர் மத்தியில் எச்.ஐ.வி. நோய்த்தொற்று அதிகரித்து வருவது கண்டறியப்பட்டுள்ளது. ஐரோப்பிய நோய் தடுப்பு மற்றும் கட்டுப்பாடு மையத்தைச் சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள் 2004-2015க்கு இடையிலான காலத்தில் 31 நாடுகளில் நோய்த் தொற்று ஏற்பட்டவர்களின் விகிதங்களை ஆய்வு செய்தனர். 2015 ஆம்…

வங்கதேச படகு விபத்தில் 63 மியான்மர் ரோஹிஞ்சாக்கள் பலி?

மியான்மர் நாட்டில் வன்முறைக்குள்ளான ரோஹிஞ்சா முஸ்லிம்கள் சென்ற படகொன்று வங்கதேச கடற்பகுதியில் கடலில் மூழ்கியதில் 63 பேர் இறந்ததாக நம்பப்படுகிறது. சர்வதேச குடியேறிகளுக்கான அமைப்பின் செய்தித்தொடர்பாளர் ஜோயல் மில்லமான், இருபத்தி மூன்று பேர் இறந்ததாகவும் மற்றும் நாற்பது பேர் காணாமல் போயுள்ளனர் என்று கருதப்படுவதாகவும் கூறினார். வங்கதேசத்திற்குள் நுழைய…

ரோஹிஞ்சா நெருக்கடி: ஐ.நா.வின் ராகைன் பயணத்தை ரத்து செய்த மியான்மர்…

மியான்மரின் ராகைன் மாகாணத்தில் பெருமளவிலான ரோஹிஞ்சா முஸ்லிம்கள் வெளியேறிய விவகாரத்தில், அந்த மாகாணத்தை நேரில் பார்ப்பதற்காக ஐ.நா. மன்றம் மேற்கொண்டிருந்த திட்டத்தை மியான்மர் அரசாங்கம் ரத்து செய்துள்ளதாக ஐ.நா தெரிவித்துள்ளது. கடந்த ஆகஸ்ட் மாதம் 25-ஆம் தேதி வன்முறை தொடங்கிய பிறகு, முதல் முறையாக அப்பகுதியை பார்வையிட ஐநா…

வட கொரிய நிறுவனங்களை மூடிவிட சீனா கட்டளை

சீனாவில் செயல்பட்டு வருகின்ற வட கொரிய நிறுவனங்களை அடுத்த ஆண்டு ஜனவரி மாதத்திற்குள் மூடிவிட சீனா கட்டளையிட்டுள்ளது. அணு ஆயுதங்களை உருவாக்குவதில் கண்டு வரும் முன்னேற்றத்திற்கு தண்டனையாக விதிக்கப்பட்டுள்ள ஐக்கிய நாடுகள் மாமன்றத்தின் தடைகளை நடைமுறைப்படுத்தும் சீனாவின் முயற்சிகளின் ஒரு பகுதியாக இந்த நடவடிக்கை வந்துள்ளது. வட கொரிய…

இந்துக்களின் படுகொலை மியான்மர் மோதலில் நடந்த கொடூரங்களுக்கு சாட்சியம்!

யங்கூன், மியான்மரில் பவுத்தர்களால் ஒரு மில்லியன் ரோஹிங்யா இஸ்லாமியர்கள் வங்காளதேசத்தில் இருந்து சட்டவிரோதமாக குடிபெயர்ந்தவர்கள் என்று பார்க்கப்படுகிறது. பல்வேறு தாக்குதலை எதிர்க்கொண்டு தலைமுறைகள் கணக்கில் வசித்துவரும் இவர்களுக்கு அரசு குடியுரிமை வழங்க மறுத்து வருகிறது. மியான்மரில் போலீஸ் படையினர் மீது கடந்த மாதம் 25-ந் தேதி ரோஹிங்யா முஸ்லிம் கிளர்ச்சியாளர்கள்…

தாய்லாந்து முன்னாள் பிரதமர் இங்லக் சின்னவாட்டுக்கு 5 ஆண்டுகள் சிறை

தாய்லாந்து நாட்டின் முன்னாள் பிரதமர் இங்லக் சின்னவாட்டுக்கு கிராமப்புற விவசாயிகளுக்கு அரசி கொள்முதல் விலையில் மானியம் அளித்தது தொடர்பான வழக்கில் ஐந்து ஆண்டுகள் சிறை தண்டனை வழங்கப்பட்டுள்ளது. ஆனால், தண்டனை அளிப்பதற்கு முன்னதாகவே அவர் நாட்டை விட்டு வெளியேறிவிட்டார். அந்நாட்டு அரசுக்கு 8 பில்லியன் அமெரிக்க டாலர் வரை…

முதல்முறையாக பெண்கள் வாகனம் ஓட்ட அனுமதி : செளதி மன்னர்…

நாட்டில் முதல்முறையாக பெண்கள் வாகனம் ஓட்ட அனுமதிக்கும் ஆணையொன்றை செளதி அரேபியா மன்னர் சல்மான் பிறப்பித்துள்ளதாக அந்நாட்டின் அரசு ஊடகம் தெரிவித்துள்ளது. இது குறித்த அறிக்கைகளை அரசு அமைச்சரவைகள் 30 நாட்களுக்குள் தயார் செய்யவுள்ளதாகவும், 2018 ஜூன் மாதத்துக்குள் இது தொடர்பான ஆணை அமல்படுத்தப்படும் என்று செளதி அரேபிய…

வட கொரியா மீது போரா? : அமெரிக்கா மறுப்பு

தனது நாட்டின் மீது போர் பிரகடனம் செய்திருப்பதாக அமெரிக்கவை குற்றஞ்சாட்டும் வட கொரியாவின் ஓர் அறிக்கையை அமெரிக்கா அபத்தமான யோசனை என்று கூறி புறக்கணித்துள்ளது. அமெரிக்காவின் குண்டு வீச்சு விமானங்களை சுட்டுத்தள்ளும் உரிமை எங்களுக்கு இருக்கிறது என்று வட கொரியா கூறியதையடுத்து, தேவையற்ற தூண்டுதல்களை நிறுத்துமாறு அந்நாட்டிற்கு அமெரிக்கா…

மேற்குக்கரை: பாலஸ்தீனியர் சுட்டதில் மூன்று இஸ்ரேலியர் பலி

மேற்குக் கரையில் இஸ்ரேலின் ஆக்கிரமிப்பில் உள்ள ஹர் அடார் என்னும் யூதக் குடியிருப்பின் நுழைவாயிலில், இன்று செவ்வாய்க்கிழமை, ஒரு பாலஸ்தீனியர் சுட்டதில் மூன்று இஸ்ரேலியர்கள் கொல்லப்பட்டதாக இஸ்ரேல்நாட்டுப் போலீசார் தெரிவித்துள்ளனர். தாக்குதல் நடத்திய அந்த நபர் அருகாமையில் உள்ள கிராமத்தில் இருந்து வந்தவர். 37 வயதான அவரும் பிறகு…

சீனாவில் தாயை வகுப்புக்கு அழைத்து வரும் பேராசிரியருக்கு குவியும் பாராட்டு

பல்கலைக்கழக பேராசிரியர் ஒருவரும், அவருடைய வயது முதிர்ந்த தாயும் சீனாவிலுள்ள சமூக ஊடகங்களில் நட்சத்திரங்களாக பிரபலமடைந்துள்ளனர். தென் மேற்கு சீனாவில் அமைந்துள்ள குய்சொள மாகாணத்தை சேர்ந்த பேராசிரியர் ஹூ மிங் என்பவர், ஞாபக சக்தி இழப்பு (அல்சிமர்) நோய் ஏற்பட்டுள்ள தன்னுடைய வயது முதிர்ந்த தாயை கல்லூரிக்கு அழைத்து…

போர் பிரகடனம் செய்த அமெரிக்க விமானங்களை சுட்டு வீழ்த்துவோம்- வடகொரியா

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், தனது நாட்டுக்கு எதிராக போர் பிரகடனம் செய்திருப்பதாகக் குற்றம் சாட்டியுள்ள வட கொரிய வெளியுறவு அமைச்சர், அமெரிக்க குண்டு வீச்சு விமானங்களை சுட்டுத்தள்ள தங்களுக்கு உரிமை உள்ளது என்று தெரிவித்தார். நியூயார்க்கில் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர், ரி யங்-ஹோ, தங்கள் நாட்டு வான்…