ஸ்பெயினில் மாடுகளை அடக்கிக் கொல்லும் போட்டிக்கு விதிக்கப்பட்ட தடை நீக்கம்

ஸ்பெயினின் கடலோனிய பிரதேசத்தில் மாடுகளை அடக்கிக் கொல்லும் விளையாட்டுக்கு விதித்த தடை அரசியல் அமைப்பிற்கு எதிரானது என்று கூறி அரசியலமைப்பு நீதிமன்றம் ஒன்று, அத்தடையை நீக்கியுள்ளது. இந்த மாட்டை அடக்கும் விளையாட்டை ஸ்பானிஷ் கலாச்சாரத்தின் ஒரு பகுதி என்றும் இம்மாதிரியான முடிவுகளை மத்திய அரசுதான் எடுக்க வேண்டும் என்றும்…

சைவ உணவு பழக்கம் உள்ளவர்கள் ராணுவத்தில் சேர முடியாதா?

சுவிட்சர்லாந்து நாட்டில் சைவ உணவு பழக்கம் கொண்ட நபரை ராணுவத்தில் சேர்க்க அனுமதி மறுக்கப்பட்டதற்கு எதிராக அந்நாட்டு நீதிமன்றம் அதிரடி உத்தரவு பிறபித்துள்ளது. சுவிஸில் உள்ள Lausanne நகரை சேர்ந்த Antoni Da Campo என்பவர் கடுமையான சைவ உணவு பழக்கம் கொண்டவர். இதுமட்டுமில்லாமல், விலங்குகள் நல அமைப்பான…

அமெரிக்காவில் தற்போது கடும் நிறவெறி நிலவிவருகிறது!

அமெரிக்காவில் தற்போது கடும் நிறவெறி நிலவிவருகிறது. பல இடங்களில் கறுப்பு இன இளைஞர்களை வெள்ளை இனப் பொலிசார் தேவை இல்லாமலே சுட்டுக் கொலை செய்தார்கள். மேலும் சில பொலிசார் அடித்து உதைத்தார்கள். நேற்று முன் தினம் இடம்பெற்ற சம்பவம் மேலும் பரபரப்பை தோற்றுவித்துள்ளது. றோட்டில் பாதசாரிகள் நடக்கும் இடத்தில்…

அமெரிக்க ஆதிக்கத்திற்கு எதிராக மூண்டது கலவரம்: தாக்கப்பட்ட பொலிஸ் வாகனம்

பிலிப்பைன்ஸ் நாட்டில் அமெரிக்க ஆதிக்கக்கத்திற்கு எதிராக அந்நாட்டு தூதரகம் முன்பு திரளான மக்கள் கூடி பேரணியில் ஈடுபட்டது கலவரத்தில் முடிந்துள்ளது. பிலிப்பைன்ஸ் நாட்டில் அமைந்துள்ள அமெரிக்க தூதரம் முன்பு கூடிய ஆயிரக்கணக்கான பொதுமக்கள் அமெரிக்க ராணுவத்தை நாட்டில் இருந்து வெளியேற்ற வேண்டும் என கோரிக்கை விடுத்தனர். கூட்டத்தை கலைக்க…

இளவரசரின் தலையை வெட்டி மரண தண்டனையை நிறைவேற்றிய சவுதி அரசு

சவுதி அரேபியா நாட்டில் வாலிபர் ஒருவரை சுட்டுக் கொன்ற குற்றத்திற்காக அரசு குடும்பத்தை சேர்ந்த இளவரசர் ஒருவருக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சவுதி அரேபியாவின் அரச குடும்பத்தை சேர்ந்தவர் Turki bin Saud al-Kabir என்ற இளவரசர் ஆகும். கடந்த 2012ம் ஆண்டு டிசம்பவர் மாதம்…

விலங்குகள் ஓட்டப்பந்தயத்திற்கு பெருகும் எதிர்ப்புகள்: சுவிஸில் தடை வருமா?

சுவிஸில் தினமும் நடைபெற்று வரும் பன்றி ஓட்டப்பந்தயத்தை ஒழிக்க வேண்டும் என விலங்குகள் நல ஆர்வலர் கோரிக்கை விடுத்துள்ளார். Nancy Holten என்ற விலங்குகள் நல ஆர்வலரே குறித்த பந்தயத்தை ஒழிக்க வேண்டும் என போராடி வருகிறார். Nancy Holten கூறியதாவது, st.Gallen மாகாணத்தில் olma விவசாய கண்காட்சி…

ஐஎஸ் தீவிரவாதிகளை விரட்டாமல் விடமாட்டோம்: தயாரான இராணுவத்தினர்

ஐஎஸ் தீவிரவாதிகளிடமிருந்து ஈராக்கின் முக்கிய நகரான Mosul-ஐ நிச்சயம் கைப்பற்றுவோம் எனவும் அதற்கான ராணுவ பணிகள் தொடங்கி விட்டதாகவும் ஈராக் பிரதமர் Haider -al- Abadi நம்பிக்கை தெரிவித்துள்ளார். ஈராக் நாட்டில் உள்ள பெருநகரமான Mosulலில் தற்போது ஒரு மில்லியனுக்கும் மேலான மக்கள் வசித்து வருகின்றனர். கடந்த 2014…

அவுஸ்திரேலிய தேசிய பாடத்திட்டத்தில் தமிழ்மொழி! பாராளுமன்றத்தில் நாளை பிரேரணை

அவுஸ்திரேலியாவின் தேசிய கல்வித் திட்டத்தில் தமிழ் மொழியை ஒரு பாடமாக இணைத்துக் கொள்ள வேண்டும் என Prospect தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் ஹூ மெக்டெர்மாட் (Hugh Mcdermott) கோரிக்கை விடுத்துள்ளார். இது தொடர்பான பிரேரணையை நியூ சவுத் வெல்ஸ் பாராளுமன்றத்தில் நாளைய தினம் தாக்கல் செய்யவுள்ளார். தமிழ் கல்வியும்,…

சுரங்க தொழிலாளர்களுக்கு அடித்த ஜாக்பாட்: ரிம30.7 கோடி மதிப்பிலான பச்சை…

மியான்மார் நாட்டில் சுரங்க தொழிலாளர்கள் சிலர் 175 டன் எடை கொண்ட பச்சை மாணிக்கக் கல் பாறையை கண்டு பிடித்துள்ளனர். இதன் மதிப்பு 1,100 கோடி என கூறப்படுகிறது. மியான்மரில் சுரங்க தொழிலாளர்கள் சிலருக்கு ஜாக்பாட் அடித்த மகிழ்ச்சி. உலகின் விலைமதிப்பற்ற கற்களில் ஒன்றான பச்சை மாணிக்கக் கல்…

தமிழின் அருமை: கனடா தந்தது பெருமை

டொரண்டோ: தமிழ் மொழியின் பழமை, இலக்கிய செழுமை ஆகியவற்றையும், கனடா சமுதாயத்திற்கு தமிழர்கள் ஆற்றிய பணிகளையும் அங்கீகரிக்கும் விதமாக, ஜனவரி மாதத்தை தமிழ் பாரம்பரிய மாதமாக கனடா அரசு அறிவித்துள்ளது.கனடாவில் எம்பியாக இருக்கும் தமிழர் கேரி ஆனந்த சங்கரி, தமிழ் மொழியின் செழுமையை அங்கீகரிக்கும் விதமாகவும், கனடாவுக்கு தமிழர்கள்…

200 நாடுகள் சேர்ந்து செய்த ஒப்பந்தம் என்ன?

உலகின் காலநிலையை பாதுகாக்கும் நோக்கத்தில் சுமார் 200 நாடுகள் சேர்ந்து பைங்குடில் (Green House) வாயுக்கள் வெளியிடுவதை மட்டுப்படுத்துவதற்காக ஒப்பந்தம் செய்துள்ளன. நவீன உலகில் அனைத்து நாடுகளுமே தங்களுடைய சொகுசான வாழ்க்கைக்காக நவீன சாதனங்களை உருவாக்கிக் கொண்டு, சுற்றுச்சூழலை மாசுப்படுத்தி வருகின்றன. மனிதர்களின் இந்த தவறான நடவடிக்கைகளால் காற்று…

உலக நாடுகளை அச்சுறுத்தும் முக்கிய பிரச்சனை எது?: இதோ விரிவான…

உலக நாடுகளை கவலையில் ஆழ்த்தும் முக்கிய பிரச்சனைகளில் முன்னணியில் இருப்பது தீவிரவாதம் மற்றும் வேலைவாய்ப்பின்மை என்பது சமீபத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது. வளர்ச்சி அடைந்த அல்லது வளரும் நாடுகளாக இருந்தாலும், ஒவ்வொரு நாடும் ஒரு முக்கிய பிரச்சனையை கடும் போராட்டத்துடன் எதிர்கொண்டு வருகிறது என்பது மறுக்க முடியாத உண்மை. இவ்வாறு…

அவளை உடனே தூக்கிலிட்டு கொல்ல வேண்டும்! இளம் பெண்ணுக்கு எதிராக…

பாகிஸ்தானில் கடவுளை அவமதித்ததாக குற்றம்சாட்டப்பட்டுள்ள இளம்பெண்ணை உடனே தூக்கில் போட வேண்டும் என்று வலியுறுத்தி ஏராளமானோர் போராட்டம் நடத்தி வருகின்றனர். பாகிஸ்தானில் சிறுபான்மை மதத்தைச் சேர்ந்த ஆசியா பிபி என்ற இளம் பெண் அந்நாட்டின் பெரும்பான்மை மதக்கடவுளை தவறாகச் சித்தரித்ததாக குற்றச்சாட்டு எழுந்தது. இது குறித்து தொடரப்பட்ட வழக்கில்…

கின்னஸ் சாதனை படைத்த 92 வயது முதியவர்

உலகின் மிக வயதான பிளம்பர் என்ற கின்னஸ் சாதனையை படைத்துள்ளார் கனடாவின் 92 வயது முதியவர். கனடாவை சேர்ந்த லோர்ன் பிக்லி(Lorne Figley) என்பவரே இந்த சாதனையை படைத்துள்ளார். 92 வயதான போதிலும் பிளம்பர் தொழிலில் மிக உற்சாகமாக ஈடுபட்டு வருகிறார். 1947ம் ஆண்டில் தொழிற்பயிற்சி முடித்த இவர்,…

களிமண் உறைக்குள் மம்மிகள்: சீனாவில் 2000 ஆண்டுகள் பழமையான கல்லறை…

சீனாவில் 2000 ஆண்டுகளுக்கும் முந்தைய பழமையான கல்லறை ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அதில் 113 முன்னோர்களின் உடல்கள் களிமண் தொட்டிகளுக்குள் அடக்கம் செய்து பதப்படுத்தப்பட்டுள்ளன. இதை கண்டுபிடித்த சீன தொல்பொருள் ஆய்வாளர்கள் தங்கள் முன்னோர்களின் செயலை வியந்துள்ளனர். 2000 ஆண்டுகளுக்கு முன்பே மட்பாண்டங்களில் வைத்து புதைக்கும் சடங்கு சீனாவில் இருந்ததற்கான…

மருத்துவர் உதவியுடன் தற்கொலை செய்பவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு

சுவிட்சர்லாந்து நாட்டில் குணப்படுத்த முடியாத நோயின் காரணமாக மருத்துவர்களின் உதவியுடன் தற்கொலை செய்துக்கொள்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. சுவிஸின் மத்திய புள்ளியியல் துறை நேற்று அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில், கடந்த 2014ம் ஆண்டில் மட்டும் மருத்துவர்களின் உதவியுடன் 742 பேர் தற்கொலை செய்துள்ளதாக தெரியவந்துள்ளது. இந்த…

காதலனைத் திருமணம் செய்ததற்காக கிடைத்த தண்டனை: ஆப்கான் பெண்களின் அவலம்

ஆஃப்கானிஸ்தானில் குற்றங்களுக்காக தண்டிக்கப்படும் பெண்கள் வீட்டு வேலை செய்யப் பயன்படுத்தப்படுகின்றனர். பெண்களுக்கான தனிச்சிறைச்சாலைகள் இல்லாததே இதற்குக் காரணம் எனக் கூறப்படுகிறது. ஆஃப்கானிஸ்தான் நாட்டின் தென்கிழக்கில் பாகிஸ்தான் எல்லையை ஒட்டி அமைந்துள்ளது பக்திகா மாகாணம். பெரும்பாலும் தீவிரவாதிகளின் ஆதிக்கத்தில் உள்ள இந்த மாகாணத்தில் முறையான நீதிமன்றங்கள் இல்லை. குற்றங்களில் ஈடுபடும்…

ஏமனில் போர் குற்றப் புலனாய்வு நடத்த ஐநா மனித உரிமை…

கடந்த பத்து நாட்களில் 370 பேர் கொல்லப்பட்டுள்ள நிலையில், ஏமனில் பொது மக்கள் பலியாவதில் திடீர் அதிகரிப்பு காணப்படுவதாக ஐநாவின் மனித உரிமைகள் ஆணையர், செய்த் ராத் அல்ஹுசேன் தெரிவித்திருக்கிறார். போர் குற்றம் நடந்திருக்கும் சாத்தியக்கூறு தொடர்பாக சர்வதேச புலனாய்வு நடத்த வேண்டும் என்ற அவருடைய கோரிக்கையை மீண்டும்…

கேலக்ஸி நோட் செவன் திறன்பேசியின் விற்பனை, பரிமாற்றத்தை நிறுத்த சாம்சங்…

தென் கொரிய மின்னணு நிறுவனமான சாம்சங், அதன் கேலக்ஸி நோட் செவன் திறன்பேசியின் (Galaxy Note Seven smartphone) விற்பனை மற்றும் பரிமாற்றத்தை நிறுத்துமாறு, உலகம் முழுவதும் உள்ள தனது தொழில் கூட்டாளிகளை வலியுறுத்தியுள்ளது. பேட்டரியில் உள்ள பிரச்சனைகள் காரணமாக அந்த அலைபேசி தீ பிடிக்கும் நிகழ்வுகள் ஏற்படுவதாகத்…

ஆப்கானிஸ்தான் தீவிரவாதிகளா? அவர்கள் யார்? ஆச்சரியப்பட வைத்த மக்கள்

ஆப்கானிஸ்தானில் மையம் கொண்டுள்ள ஆப்கான் தீவிரவாதிகளை பற்றி உலக மக்களே அறிந்துவைத்திருக்கிறபோது, அங்கு Wakhan என்ற மலைப்பகுதியில் வசிக்கும் பழங்குடியின மக்களுக்கு ஆப்கான் தீவிரவாதிகள் பற்றியும், நாட்டில் நடக்கும் போர் பற்றியும் எதுவும் தெரியாமல் இருப்பது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. டஜிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆகிய நகரங்களுக்கு இடைப்பட்ட பகுதியில்…

இறுதிச்சடங்கின் போது நடந்த விபரீதம்: 140 பேர் பலி

சவுதி தலைமையிலான ராணுவத்தினர் ஏமனில் வான் வழி விமான தாக்குதல் நடத்தியதில் 140 பேர் பலியாகியுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஏமன் நாட்டில் உள்ள சனா நகரில் இறுதி சடங்கு நிகழ்ச்சி ஒன்று நடந்து கொண்டிருந்தது. அப்போது திடீரென விமான படை தாக்குதல் அங்கு நடத்தபட்டது. இந்த தாக்குதலில்…

அதிரடி! போதை மருந்து குற்றங்களில் ஈடுபடுவோரை கொலை செய்யும் பிலிப்பைன்ஸ்…

பிலிப்பைன்ஸ் அதிபர் ரோட்ரிகோ டுடர்டியின் நூறு நாள் ஆட்சியில் இதுவரை போதை மருந்து கடத்தல்காரர்கள், குற்றம்புரிவோர் என 3700 பேர் அதிரடியாக கொல்லப்பட்டுள்ளனர். பிலிப்பைன்ஸ் நாட்டில் போதை மருந்தின் ஆதிக்கமும், அந்த பழக்கத்தில் ஈடுபடுவோர் எண்ணிக்கையும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. methamphetamine என்னும் போதை வஸ்துவுக்கு அந்நாட்டில்…

அதிகரித்து வரும் இணையதள விளையாட்டு மோகம்…சீனா மேற்கொண்ட அதிரடி முடிவு

சிறுவர்களிடையே இணையதள மோகத்தைக் குறைக்கும் நோக்கில் நடுநிசிக்குப் பிறகு இணையதள விளையாட்டுகளுக்குத் தடை விதிக்க சீன அரசு புதிய விதிகளை அறிமுகப்படுத்த உள்ளது. சீனாவில் சுமார் 75 கோடி பேர் இணையத்தளத்தை பயன்படுத்தி வருகின்றனர். இவர்களில் பெரும்பாலானோர் இணையதளத்தை பொழுதுபோக்கு சேவைகளுக்கும், ஆன்லைன் விளையாட்டுகளுக்குமே பயன்படுத்துவதாக ஆய்வு குறிப்புகள்…