அவுஸ்திரேலியாவின் தெற்கு கடற்கரையில் விடுமுறை மற்றும் சர்ஃபிங் செய்யும் இடத்தில் உள்ள கடல் பகுதியில் ஒரு சுறா வாலிபரை தாக்கி கொன்றதாக போலீசார் இன்று தெரிவித்தனர். தாக்குதலுக்குப் பிறகு, யோர்க் தீபகற்பத்தில் உள்ள இன்ஸ் தேசிய பூங்காவில் உள்ள எதெல் கடற்கரைக்கு அருகில், உடல் தண்ணீரில் இருந்து எடுக்கப்பட்டது…
முதுமையில் உடற்பயிற்சி மூளையை ஆரோக்கியமாக்கும்
அறுபது வயதுக்கு மேற்பட்டவர்கள் தொடர்ந்து உடற்பயிற்சி செய்வதன் மூலம் மூளை சுருங்குவதைத் தடுத்து, டிமெண்டியா எனப்படும் நினைவிழப்பு நோய் வராமல் பார்த்துக்கொள்ள முடியும் என்று ஆய்வாளர்கள் கண்டறிந்துள்ளனர். எடின்பர்க் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த ஆய்வாளர்கள் அறுபது வயதுக்கு மேற்பட்ட 638 பேரிடம் செய்த ஆய்வின் முடிவுகளை வெளியிட்டிருக்கிறார்கள். அறுபது எழுபது…
சண்டையில் கடாபி மகன் கொல்லப்பட்டார்: லிபியா அறிவிப்பு
திரிபோலி : லிபியா முன்னாள் அதிபரும் சர்வதிகாரியுமான மும்மர் கடாபி பொது மக்களால் நடத்தப்பட்ட புரட்சியின் போது கடந்த ஆண்டு அக்டோபர் 20-ந் தேதி கொல்லப்பட்டார். அதை தொடர்ந்து அவரது ஆட்சி வீழ்ந்தது. இந்த நிலையில், கடாபியின் இளைய மகன் காமிஸ் அல் கடாபியும் கொல்லப்பட்டதாக தற்போது தகவல்…
முஸ்லிம் மாணவிகள் ஹிஜாப் அணிவதற்கு ரஷ்ய அதிபர் எதிர்ப்பு
முஸ்லிம் மாணவிகள் ஹிஜாப் அணிவதற்கு ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். பள்ளி மாணவிகள் தலையை மறைக்க ஹிஜாப் அணிந்து பள்ளிக்கு வருவது கூடாது என அவர் தெரிவித்துள்ளார். ரஷ்யாவில் மொத்த சனத்தொகையில் 15 கோடி மக்களில், இரண்டு கோடி பேர் முஸ்லிம்கள் ஆவர். செசன்யா, வடக்கு காகசஸ்,…
கொள்ளையனை முறியடித்த 82 வயதான பாட்டி
ஆஸ்திரியாவில் கிராம வங்கி ஒன்றைக் கொள்ளையிட துப்பாக்கி , மற்றும் கைக்குண்டுடன் வந்த கொள்ளையன் ஒருவனை , 82 வயதான பாட்டி ஹெர்த்தா வாலெக்கர் என்பவர் தன்னந்தனியாக முறியடித்தார். கிராம வங்கி ஒன்றை துப்பாக்கி முனையில் கொள்ளையடிக்க முயன்று கொண்டிருந்த இந்த கொள்ளையனின் பின் புறம் பதுங்கி முன்னேறிய, ஹெர்த்தா…
ராம்னிக்கு வட்டியும் முதலுமாக திருப்பிக் கொடுத்த ஒபாமா
ஹாம்ஸ்டெட் : இன்று காலை நடைபெற்று முடிந்த அமெரிக்க அதிபர் தேர்தலின் இரண்டாவது நேரடி விவாதத்தில், தன்னை கடுமையாக எதிர்த்துப் பேசி வரும் குடியரசுக் கட்சி வேட்பாளர் ராம்னிக்கு வட்டியும் முதலுமாக திருப்பிக் கொடுத்தார் தற்போதைய குடியரசுத் தலைவர் பாரக் ஒபாமா. அடிக்கடி தனது நிலையை மாற்றிக் கொள்ளும்…
நான்கு சூரியன்களைக் கொண்ட புதிய கிரகம் கண்டுபிடிப்பு
நான்கு சூரியன்களால் ஒளிபெறும் புதிய கிரகத்தை வானியலாளர்கள் கண்டுபிடித்துள்ளனர். இப்படி ஒரு புதிய கிரகம் கண்டுபிடிக்கப்பட்டிருப்பது இதுவே முதல்முறை என்கிறார்கள் இந்த கிரகத்தை கண்டுபிடித்திருக்கும் வானியலாளர்கள். பிளானட் ஹண்டர்ஸ் என்கிற இணையதளமும், ஐக்கிய ராஜ்ஜியம் மற்றும் அமெரிக்காவில் இருக்கும் வானியல் ஆய்வு மையங்களும் இணைந்து இந்த கண்டுபிடிப்பை செய்திருக்கின்றன.…
சுதந்திர ஸ்காட்லாந்து: மக்கள் கருத்தறியும் வாக்கெடுப்புக்கு உடன்பாடு
ஸ்காட்லாந்து சுதந்திரம் பெற்று தனிநாடாக வேண்டுமா இல்லையா என்ற வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த தீர்மானத்தை ஸ்காட்லாந்து மக்களே எதிர்வரும் 2014-ஆம் ஆண்டில் எடுக்கப் போகிறார்கள். இதற்கான மக்கள் கருத்தறியும் வாக்கெடுப்பு தொடர்பான விதிமுறைகளை வரையறை செய்கின்ற உடன்பாட்டிலேயே ஐக்கிய இராச்சியத்தின் பிரதமர் டேவிட் கமரோனும் ஸ்காட்லாந்தின் முதல் அமைச்சர்…
தாலிபன்களால் சுடப்பட்ட மலாலாவுக்கு பிரிட்டனில் சிகிச்சை
பாகிஸ்தானில் பெண் பிள்ளைகளின் கல்விக்காக குரல் கொடுத்துவந்ததால் தாலிபன் பயங்கரவாதிகளால் தலையில் சுடப்பட்ட மலாலா யூசுஃப்சாய் (14 வயது சிறுமி) மேலதிக சிகிச்சைகளுக்காக பிரிட்டனுக்கு கொண்டுவரப்பட்டுள்ளார். பர்மிங்ஹாம் நகரிலுள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்படவுள்ள மலாலாவுக்கு தலையில் மண்டையோட்டுப் பகுதியில் ஏற்பட்டுள்ள சிதைவுகளுக்கு சிகிச்சை அளிக்கப்படவுள்ளது. அவரது மூளைப் பகுதியை சீரமைக்கும்…
2 வயது மகளை கொடுமைப்படுத்திய தாய்க்கு 99 ஆண்டு சிறை
டல்லாஸ்: இரண்டு வயது மகளின் கையை பசை போட்டு சுவற்றில் ஒட்ட வைத்து, கடுமையாகத் தாக்கிய தாய்க்கு 99 ஆண்டுகள் சிறைத் தண்டனை அமெரிக்காவில் வழங்கப்பட்டு உள்ளது. அமெரிக்காவின், டல்லாஸ் பகுதியைச் சேர்ந்தவர் எலிசபெத் எஸ்கலோனா. இவரது இரண்டு வயது மகள், குறும்பு செய்த காரணத்தால் குழந்தையின் கையில்…
ஒபாமாவின் தேர்தல் பணிமனை மீது மர்ம மனிதன் துப்பாக்கிச் சூடு
டென்வர்: அமெரிக்க அதிபர் ஒபாமாவின் தேர்தல் பணிமனை மீது மர்ம மனிதன் துப்பாக்கிச் சூடு நடத்தியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. அமெரிக்க அதிபர் தேர்தலில் போட்டியிடும் ஒபாமாவும் ரோம்னியும் தீவிரமான பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். ஒபாமாவுக்காக டென்வர் நகரில் ஒபாமாவின் தேர்தல் பணிமனை அமைக்கப்பட்டுள்ளது. இந்த பணிமனையை நோக்கி…
இலங்கை பிரச்னையில் இரட்டை நிலைப்பாடா? மௌனம் காத்தார் கனடிய பிரதமர்
இலங்கை பிரச்னை குறித்த ஊடகவியலாளர்களின் கேட்கப்பட்ட கேள்விகளுக்கு கனேடிய பிரதமர் ஸ்டீவன் ஹார்பர் பதிலளிக்கவில்லை எனத் தெரிவிக்கப்படுகிறது. செனகலில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்ட போது பிரதமர் ஹார்பரிடம் இலங்கை நடைபெற்ற மனித உரிமை மீறல் குறித்து கேள்வி எழுப்பப்பட்டுள்ளது. அத்துடன், மனித உரிமை மீறல்கள் இடம்பெற்று…
வட-மேற்கு பாகிஸ்தானில் குண்டுத் தாக்குதல்;15 பேர் பலி
வட-மேற்கு பாகிஸ்தானில் கடைத்தெரு ஒன்றில் நடந்துள்ள கார்க் குண்டுத் தாக்குதலில் குறைந்தது 15 பொதுமக்கள் கொல்லப்பட்டுள்ளனர், 30 பேர் வரையில் காயமடைந்துள்ளனர். கைபர் பழங்குடிப் பகுதிக்கு அருகில் தாரா ஆதம் கெல் நகரில் தற்கொலை குண்டுதாரி ஒருவர் இந்தத் தாக்குதலை நடத்தியுள்ளாக உள்ளூர் தகவல்கள் தெரிவிக்கின்றன. தாலிபன்களுக்கு எதிராக…
இலக்கியத்துக்கான நோபல் பரிசு : சீன எழுத்தாளருக்கு அறிவிப்பு
ஸ்டாக்ஹோம் : சீன எழுத்தாளர் மோ யானுக்கு, இலக்கியத்துக்கான நோபல் பரிசு, அறிவிக்கப்பட்டுள்ளது. மருத்துவம், இயற்பியல், வேதியியல், இலக்கியம், பொருளாதாரம் ஆகிய துறைகளில், தலை சிறந்த நிபுணர்களுக்கு, ஒவ்வொரு ஆண்டும், உலகின் மிக உயரிய விருதான நோபல் பரிசு வழங்கப்பட்டு வருகிறது. உலக அமைதிக்காகவும், மக்களுக்கும், தன்னலமற்ற சேவையாற்றுபவர்களுக்கும்,…
பாக்கிஸ்தானில் கல்விக்காக குரல்கொடுத்த 14 வயது சிறுமி மீது துப்பாக்கிசூடு
பாகிஸ்தானின் வடமேற்கே உள்ள ஸ்வாத் பள்ளத்தாக்கு பழங்குடியினப் பகுதியில் பெண் குழந்தைகளின் கல்விக்காகக் குரல்கொடுத்து வந்தவரும், சமாதானத்துக்கான பன்னாட்டு விருது ஒன்றுக்காக பெயர் முன்மொழியப்பட்டவருமான மலாலா யூஸுஃப்ஸயீ என்ற 14 வயது சிறுமி மீது துப்பாக்கிசூடு நடத்தப்பட்டுள்ளது. தாக்குதலில் காயமடைந்த இவரும் இன்னொரு சிறுமியும் உயிராபத்திலிருந்து மீண்டுள்ளதாக செய்திகள்…
பாலியல் தொந்தரவு: ஆஸ்திரேலிய சபாநாயகர் பதவி விலகல்
ஆஸ்திரேலிய நாடாளுமன்றத்தில் முன்பு ஊழியராக இருந்த ஓரினச் சேர்க்கையாளர் ஒருவர் Read More
மாலைதீவுகளின் முன்னாள் அதிபர் மொஹமட் நஷீட் கைதுசெய்யப்பட்டார்
மலைதீவுகளின் முன்னாள் அதிபர் மொஹமட் நஷீட் அந்நாட்டு காவல் துறையினரால் கைதுசெய்ய Read More
ரஷ்ய பெண்கள் மனதில் குடியிருக்கும் விளாடிமிர் புதின்!
மாஸ்கோ: ரஷ்யாவின் அதிபராக இருக்கும் புதினின் மீது அந்நாட்டு பெண்களுக்கு அப்படி ஒரு மோகமாம்! லெவாடா என்ற நிறுவனம் அண்மையில் ஒரு கருத்துக் கணிப்பை நடத்தியது. ரஷ்யா நாடு முழுவதும் மொத்தம் 2 ஆயிரம் பெண்களிடம் கருத்து கேட்கப்பட்டது. அதில் ஐந்து பெண்களில் ஒருவர் ரஷ்ய அதிபர் புதினை…
ஒபாமாவுக்கு தேர்தல் நிதியாக 5000 கோடி வசூல்!
வாஷிங்டன் : அமெரிக்க ஜனாதிபதியை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் நவம்பர் மாதம் 6ம் தேதி நடைபெறவுள்ளது. இந்நிலையில், ஆளும் ஜனநாயகக் கட்சிக்கு கட்சிநிதி குவியத் தொடங்கியுள்ளது. அதிபர் ஒபாமாவின் தேர்தல் பிரசாரத்தின் போது கடந்த மாதம் அதிக பட்சமாக 181 மில்லியன் அமெரிக்க டாலர் கிடைத்ததுள்ளது. இதுவரை 947 மில்லியன்…
ஆப்கானிஸ்தானில் மனித குண்டு தாக்குதலுக்கு 20 பேர் பலி
காபூல் : ஆப்கானிஸ்தானில் முகாமிட்டுள்ள அமெரிக்கா தலைமையிலான நேட்டோ படைக்கு எதிராக தலிபான் மற்றும் அல்கொய்தா தீவிரவாதிகள் தாக்குதல்களை நடத்தி வருகின்றனர். கிழக்கு பகுதியில் கோஸ்ட் நகரில் மக்கள் நடமாட்டம் அதிகமுள்ள சந்தை தொகுதியில் நேட்டோ படை வீரர்கள் நேற்று காலை 8.30 மணியளவில் ரோந்து நடவடிக்கையில் ஈடுபட்டுக்கொண்டிருந்தனர்.…
சிரியாவுக்கு ஆயுத கடத்தலை தடுக்க ஈரான் விமானங்களில் ஈராக் அதிரடி…
சிரியாவில் அதிபர் பஷர் அல் ஆசாத்துக்கு எதிராக பொதுமக்கள் போராடி வருகின்றன. அவர்களை ராணுவம் கொன்று குவித்து வருகிறது. இதுவரை 25 ஆயிரம் பேர் கொல்லப்பட்டுள்ளனர். இந்த பிரச்சினையை முடிவுக்கு கொண்டுவர ஐ.நா.வும், அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளும் தீவிரமாக உள்ளன. ஆனால் அதிபர் ஆசாத் பதவி விலக மறுப்பதுடன்…
சர்ச்சைக்குரிய திரைப்படம்: பாகிஸ்தானில் இந்து கோவில் மீது தாக்குதல்
இஸ்லாமாபாத்: பாகிஸ்தானில் சர்ச்சைக்குரிய திரைப்படத்தை எதிர்த்து, நடந்த போராட்டத்தின் போது, இந்து கோவிலும், இந்துக்கள் வீடுகளும் சூறையாடப்பட்டன. அமெரிக்காவில், 'முஸ்லிம்களின் அப்பாவிதனம்' என்ற பெயரில் ஒரு திரைப்படம் வெளியிடப்பட்டது. இந்த படத்தில், நபிகள் நாயகத்தை கேலி செய்வது போன்ற காட்சி இடம் பெற்றதால் உலகம் முழுவதும் உள்ள முஸ்லிம்கள்…
ஜாலிக்காக கேலி செய்தவனை அன்பால் திருத்திய சீக்கிய பெண்
லண்டன்: முகத்தில் முடி வளர்ந்ததை புகைப்படம் எடுத்து இணையதளத்தில் வெளியிட்டு கிண்டலடித்த வாலிபரை, அன்பாக பேசி மன்னிப்பு கேட்க வைத்தார் சீக்கிய பெண் ஒருவர். அமெரிக்காவில், ஒஹியோ பல்கலைக்கழகத்தில் மருத்துவம் படித்து வரும் மாணவி, பல்பிரீத் கவுர். ஹார்மோன் குறைபாடு காரணமாக பல்பிரீத்தின் முகத்தில் முடி வளர்ந்து ஆண்…
தாய், தந்தை என்ற வார்த்தையை நீக்க பிரான்ஸ் அரசு திட்டம்
லண்டன்: ஓரின சேர்க்கையாளர்களின் திருமணத்தை ஆதரிக்கும் பிரான்ஸ் நாடு, அரசு ஆவ Read More