குரான் எரிப்பு வழக்கு : பாகிஸ்தான் சிறுமி விடுதலை

பாகிஸ்தானில் குரானின் சில பக்கங்களை எரித்ததாக, ரிம்ஷா என்ற 14 வயது கிறிஸ்த்துவ சிறுமி மீது சுமத்தப்பட்டிருந்த மத நிந்தனை வழக்கை அந்நாட்டின் உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்துவிட்டது. குற்றஞ்சாட்டப்பட்ட அந்தப் பெண் அப்பாவி என்றும், இந்த வழக்கு சட்டத்தின் துஷ்பிரயோகம் என்றும் அவரது வழக்கறிஞர் பிபிசியிடம் தெரிவித்துள்ளார். கடந்த…

கொட்டகையில் குடியிருக்கும் உருகுவே அதிபர்

ஓட்டுப் போடும் மக்களின் வாழ்க்கைத் தரத்திலிருந்து பெரிதும் விலகிப்போய் அரசியல் தலைவர்கள் சொகுசு வாழ்க்கை வாழ்கிறார்கள் என்ற மக்களின் பொறுமலை சாதாரணமாக பல நாடுகளிலும் கேட்க முடியும். ஆனால் உருகுவே நாட்டில் அதுவல்ல நிலைமை. அந்நாட்டின் அதிபர் திறந்த வெளியில் தகரக் கொட்டகையில் வாழ்கிறார். (காணொளியை பார்வையிட இங்கே…

குப்பைத் தொட்டிக்குள் மாண்ட ஐந்து ஏழைச் சிறார்கள்; சீனாவில் மனதை…

சீனாவின் தென்மேற்கே வீடின்றி வீதியில் வாழ்ந்து வந்த சிறார் ஐந்து பேர் பெரிய குப்பைத் தொட்டி ஒன்றுக்குள்ளிருந்து சடலமாகக் கண்டெடுக்கப்பட்டுள்ளதாக செய்திகள் கூறுகின்றன. குளிர் தாங்கமுடியாமல் கதகதப்புக்காக குப்பைத் தொட்டிக்குள் இறங்கிய இந்தச் சிறார் மூச்சுத் திணறி இறந்திருக்கலாம் என்று காவல்துறையினர் நம்புகின்றனர். சுமார் பத்து வயதுடைய இந்த…

காசா மீதான இராணுவ நடவடிக்கைகளை இஸ்ரேல் விரிவுபடுத்தும் : இஸ்ரேல்…

மத்திய கிழக்கின் காசாவில் ஹமாஸ் ஆயுததாரிகளுக்கு எதிரான தமது இராணுவ நடவடிக்கைகளை கணிசமான அளவில் விரிவுபடுத்த தான் தயாராக இருப்பதாக இஸ்ரேலியப் பிரதமர் பென்ஜெமின் நெதன்யாஹு கூறுகிறார். காசாவில் இருந்து இஸ்ரேலிய நிலப்பரப்பில் ராக்கெட் குண்டுகளை ஹமாஸ் ஆயுததாரிகள் தொடர்ந்து வீசிவரும் அதேவேளை, காசா மீதான இஸ்ரேலின் வான்…

ஜப்பான் நாடாளுமன்றம் கலைக்கப்பட்டது; பொதுத் தேர்தல் அறிவிப்பு

ஜப்பானின் நாடாளுமன்றம் கலைக்கப்பட்டு பொதுத் தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. தற்போது இருந்த நாடாளுமன்றத்தின் பதவிக் காலம் முடியும் முன்பாகவே அது கலைக்கப்பட்டு தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. எனினும் தேர்தல் தேதி வெளியாகவில்லை. இருந்தாலும் அடுத்த ஒரு மாதத்துக்குள் தேர்தல் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. நடைபெறவுள்ளத் தேர்தலில், முன்னாள் வலதுசாரி பிரதமர் மீண்டும்…

ஹமாஸ் இராணுவ தளபதி இஸ்ரேலிய வான் தாக்குதலில் படுகொலை

பாலத்தீன ஆயுதக் குழுவான ஹமாஸின் இராணுவத் தலைவர் அஹ்மட் ஜபாரி அவர்கள் காசாவில் வைத்து இஸ்ரேலிய வான் தாக்குதலில் படுகொலை செய்யப்பட்டார். காசாவுக்கு எதிரான இஸ்ரேலிய இராணுவ தாக்குதல்கள் 4 வருடங்களுக்கு முன்னர் ஆரம்பிக்கப்பட்ட பின்னர் கொல்லப்பட்ட மிகவும் உயரிய ஹமாஸ் தலைவர் ஜபாரி ஆவார். அவரது சகா…

பெண்ணுக்கு “முறையற்ற” மின் அஞ்சல்: அமெரிக்க தளபதி மீது விசாரணை

ஆப்கானிஸ்தானிலுள்ள அமெரிக்க படைகளின் தலைமைத் தளபதியான ஜெனரல் ஜான் அல்லென் மீது அமெரிக்க பாதுகாப்புத் துறை விசாரணை ஒன்றை ஆரம்பித்துள்ளது. அமெரிக்க உளவுத்துறையான சிஐஏவின் தலைவர் பதவியில் இருந்து டேவிட் பெட்ரேயஸ் அண்மையில் விலக காரணமான விவகாரத்தில் சம்பந்தப்பட்டிருந்த ஜில் கெல்லி, பெண்ணுடன் முறையற்ற தொடர்பாடல்களை ஜெனரல் ஜான்…

ஊழலால் அவப் பெயர்: சீன அதிபர்

ஊழல் பிரச்னை காரணமாக சீனாவும், அதை ஆளும் கம்யூனிஸ்ட் கட்சியும் பெரும் பாதிப்புகளை எதிர்நோக்குவதாக சீன அதிபர் ஹூ ஜிண்டாவோ எச்சரித்துள்ளார். சீனாவில் தற்போது தலைமை மாற்றம் நடைபெறவுள்ள நிலையில் இந்த எச்சரிக்கை வந்துள்ளது. பீஜிங்கில் நடக்கும் மக்கள் காங்கிரஸ் அவையை துவக்கி வைத்துப் பேசிய ஹூ ஜிண்டாவோ,…

சர்ச்சையை ஏற்படுத்திய ‘Innocence of Muslims’ திரைப்படத்தை தயாரித்தவருக்கு சிறை

உலகளவில் சர்ச்சையை ஏற்படுத்திய 'இன்னசன்ஸ் ஆப் முஸ்லிம்ஸ்' திரைப்படத்தை தயாரித்தவருக்கு ஓராண்டு சிறைத் தண்டனை வழங்கி அமெரிக்க நீதிமன்றமொன்று தீர்ப்பளித்துள்ளது. அமெரிக்க நிறுவனமொன்றால் கடந்த செப்டம்பர் மாதம் தயாரித்து வெளியிட்ட 'இன்னசன்ஸ் ஒப் முஸ்லிம்ஸ்' என்ற திரைப்படத்தில், நபிகள் நாயகத்தை அவமதிக்கும் வகையிலான சர்ச்சைக்குரிய காட்சிகள் இடம்பெற்றிருந்தன. இதனால் ஆத்திரமடைந்த…

அமெரிக்காவிற்கு சிறப்பான மாற்றம் வர உள்ளது: சிகாகோவில் ஒபாமா வெற்றி…

சிகாகோ: அமெரிக்காவிற்கு சிறப்பான மாற்றம் வர உள்ளது என மீண்டும் அமெரிக்க அதிபராக தேர்வுசெய்யப்பட்டுள்ள பராக் ஒபாமா கூறியுள்ளார். அமெரிக்க அதிபர் தேர்தலில் பராக் ஒபாமா வெற்றி பெற்றதைத் தொடர்ந்து உலகம் முழுவதிலும் இருந்து ஒபாமாவிற்கு பாராட்டுக்கள் குவிந்த வண்ணம் உள்ளன. இந்நிலையில், தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்டதும் ஒபாமாவை…

அமெரிக்க அதிபர் தேர்தலில் பராக் ஒபாமா வெற்றி!

மிகுந்த பரபரப்புக்கு மத்தியில் நடைபெற்று முடிந்த அமெரிக்காவின் அடுத்த குடியரசுத் தலைவரை தேர்வு செய்வதற்கான தேர்தலில் தனக்கு சவால் விடுத்த குடியரசுக் கட்சி வேட்பாளர் மிட் ரோம்னியை தோற்கடித்து பராக் ஒபாமா வெற்றிபெற்றுள்ளார். அனல் பறக்கும் பிரசாரம், நேற்று இரவு முடிந்த நிலையில், அமெரிக்காவின் 50 மாகாணங்களில் இன்று…

ஒபாமாவுக்காக ஓட்டுபோட வந்த 108 வயது பாட்டி!

அமெரிக்காவின் தென் கரோலினா மாநிலத்தில் 108 வயது மூதாட்டி முதல் முறையாக வாக்களிக்கப் போகிறார். எழுதப் படிக்கத் தெரியாத அவருக்கு ட்ரைவிங் லைசென்ஸ் உள்ளிட்ட எந்த அடையாள அட்டையும் இல்லை. அதனால் இதுவரை வாக்களிக்கவும் இல்லை. இந்த தடவை தேர்தல் விவாதங்களை கவனித்து வந்த அவருக்கு வாக்களிக்க வேண்டும்…

அமெரிக்க அதிபர் தேர்தல்: போர்க்கள மாநிலங்களில் இறுதிக்கட்டப் பிரச்சாரம்

அமெரிக்க அதிபர் தேர்தல் வாக்குப்பதிவுக்கு இன்னும் ஒரு நாள் இருக்கும் நிலையில், பிரதான கட்சிகளின் இரு வேட்பாளர்களான, பராக் ஒபாமாவும், மிட் ரோம்னியும் அமெரிக்காவின் ஸ்விங் ஸ்டேட்ஸ் எனப்படும் போர்க்கள மாநிலங்களில் கடைசி நேர சூறாவளி பிரச்சாரங்களை மேற்கொண்டு வருகின்றனர். நேற்று முன்தினம் சனிக்கிழமை பின்னிரவில், அதிபர் ஒபாமாவும்,…

சாண்டி புயலை வைத்து சர்ச்சைப் புயலைக் கிளப்பிய கவர்ச்சி மாடல்

நியூயார்க்: பிரேசில் நாட்டைச் சேர்ந்த கவர்ச்சி மாடல் அழகி நானா கோவியா, சாண்டி புயலால் சீரழிந்து போன நியூயார்க் நகரில், சேதத்திற்கு மத்தியில் நின்று போஸ் கொடுத்து அதை பேஸ்புக்கில் போட்டு புதிய சர்ச்சையைக் கிளப்பியுள்ளார். அமெரிக்காவே சோகத்தில் மூழ்கிக் கிடக்கும்போது இப்படியா அதை வைத்து விளம்பரம் தேடிக்கொள்வது…

தபாலில் வந்த மலைப்பாம்புகள்; ஊழியர்கள் அலறியடித்து ஓட்டம்!

ஜோகன்னஸ்பர்க்: தபால் பொதியில் அனுப்பப்பட்ட மலைப்பாம்பை கண்டு, தபால் ஊழியர்கள் அலறியடித்து ஓடிய சம்பவம் ஒன்று தென் ஆப்ரிக்காவின் ஜோகன்னஸ்பர்க் அருகே உள்ள சபி நகரத்தில் இடம்பெற்றுள்ளது. சபி நகரத்திலுள்ள தபால் அலுவலகத்திற்கு வந்த தபால்பொதிகளை, ஊழியர்கள் தனித்தனியாக பிரித்து கொண்டிருந்தனர். வந்த தபால்பொதிகளுக்கு நடுவே, வெள்ளை மலைப்பாம்பு…

சிரியா: அரச படையினரை கிளர்ச்சிக்காரர்கள் கொல்வதாகக் காட்டும் வீடியோ

சிரியாவின் வடக்கே அரச படையினரின் சோதனைச் சாவடி ஒன்றைத் தாக்கி அங்கிருந்தவர்களைப் பிடித்த கிளர்ச்சிக்காரர்கள், அரச படைச் சிப்பாய்கள் ஒரு டஜன் பேரை அதே இடத்தில் கேள்விக் கணக்கின்றி கொல்வதாகக் காட்டும் வீடியோ ஒன்று இணையத்தில் வெளியாகியுள்ளது. கொதிப்படைந்து காணப்படும் துப்பாக்கிதாரிகள் 'அல்லாஹு அக்பர்' என்று கோஷமிட்டபடி, தரையில்…

மலேசியாவில் தஞ்சம் அடைய வந்த மியன்மார் படகு கவிழ்ந்தது; 130…

டாக்கா: மியான்மரில் இருந்து மலேசியாவுக்கு தஞ்சம் அடைய படகில் வந்தபோது வங்கதேச கடற்பரப்பில் மாயமான 130 பேரை அந்நாட்டு கடலோரக் காவல்படை தேடி வருகிறது. மியான்மரில் குடியேறிய வங்கதேச நாட்டவர் தங்களுக்கும் குடியுரிமை கோருகின்றனர். ஆனால் பூர்வகுடிகள் இதை கடுமையாக எதிர்க்கின்றனர். இதனால் இருதரப்புக்கும் இடையே தொடர் மோதல்கள்…

இஸ்ரேலை மிரட்ட சூடான் துறைமுகத்தில் ஈரான் போர்க்கப்பல்கள்

கார்தோம்: ஈரான் நாட்டைச் சேர்ந்த இரண்டு போர்க் கப்பல்கள் அதன் நட்பு நாடான சூடானில் நிறுத்தப்பட்டுள்ளது. சூடான் மீதான இஸ்ரேலின் தாக்குதலை தடுக்கவும், இஸ்ரேலுக்கு மிரட்டல் விடுக்கவுமே இந்த கப்பல்கள் நிறுத்தப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. சூடான் நாட்டில் கார்தோம் நகரின் தெற்கு பகுதியில் அமைந்துள்ள ஆயுத தொழிற்சாலையில் அண்மையில் இரண்டுமுறை…

அமெரிக்க அதிபர் தேர்தல் : வாக்களிக்கும் வாக்காளர்களுக்கு ‘இலவசங்கள்’ அறிவிப்பு

வாஷிங்டன் : அமெரிக்க அதிபர் தேர்தலில், வாக்களிப்பில் கலந்துகொள்ளும் வாக்காளர்களுக்கு, இலவச யோகா பயிற்சி அளிக்கப்படும் என விளம்பரம் செய்யப்பட்டுள்ளது. அமெரிக்காவில், வரும் 6ம் தேதி, அதிபர் தேர்தல் நடக்கிறது. ஜனநாயக கட்சி சார்பில், அதிபர் ஒபாமா இரண்டாவது முறையாக, இந்த தேர்தலில் போட்டியிடுகிறார். இவரை எதிர்த்து, குடியரசு…

விஞ்ஞானிகளை நடுங்கவைக்கும் நிலநடுக்கத் தீர்ப்பு

இத்தாலியில் 2009-ஆம் ஆண்டு கடும் பாதிப்புக்களை ஏற்படுத்திய லாகுய்லா நிலநடுக்கத்தை துல்லியமாக கணித்து பொதுமக்களை சரியாக எச்சரிக்கத்தவறிய குற்றச்சாட்டின் கீழ் ஆறு விஞ்ஞானிகளுக்கும் ஒரு பேரிடர் மையத்தடுப்பு மையத்தின் உயர் அதிகாரிக்கும் ஆறுஆண்டுகள் சிறைத் தண்டனை மற்றும் சுமார் எட்டுமில்லியன் யூரோ அபராதம் விதிக்கப்பட்டிருக்கிறது. இத்தாலியை கடுமையாக பாதித்த…

அமெரிக்காவை தாக்கியது ‘சான்டி’ புயல்- இலட்சக்கணக்கானோர் இடப்பெயர்வு!

நியூஜெர்சி: அமெரிக்காவை அச்சுறுத்தி வந்த சான்டி புயல் இன்று அதிகாலை நியூ ஜெர்சியை தாக்கியது. இப்புயலால் இதுவரை 65 பேர் பலியாகி உள்ளனர். 10 லட்சத்துக்கும் அதிகமானோர் பாதுகாப்பான இடங்களுக்கு மாற்றப்பட்டுள்ளனர். கரீபியன் கடற்பரப்பில் உருவான சான்டி புயல் ஜமைக்கா, கியூபா உள்ளிட்ட நாடுகளைப் பதம் பார்த்துவிட்டு அமெரிக்கா…

நடுவானில் பறந்த விமானத்தில் தூங்கிய பிரிட்டன் விமானிகள்

லண்டன்: 'பிரிட்டன் ஏர்லைன்ஸ்' விமானத்தின் இரண்டு விமானிகள், விமானம் நடுவானில் பறந்து கொண்டிருந்த போதே தூங்கிக் கொண்டிருந்தது கண்டு பிடிக்கப்பட்டுள்ளது. பிரிட்டன் ஏர்லைன்ஸ் விமானத்தில், விமானிகள் அடிக்கடி தூங்குவதாக புகார் வந்தன. இந்நிலையில், விமானத்தின் முதன்மை விமானி, கழிப்பறைக்கு செல்வதற்காக, சக விமானிகளிடம் விமானத்தை ஓட்டும் பொறுப்பை ஒப்படைத்துள்ளார். சில…

அமெரிக்காவை அலறவைத்த சான்டி புயல்; அவசரநிலை அறிவிப்பு

நியூயார்க்: அமெரிக்காவை தாக்க உள்ள சான்டி புயலை எதிர்கொள்வதற்காக பல மாநிலங்களில் அவசர நிலை பிரகடனங்கள் வெளியிட்டுள்ளன. அமெரிக்காவை தாக்கப் போகும் மிகப் பெரிய புயலாக இது இருக்கும் என்பதால் தீவிரமான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அமெரிக்காவையொட்டிய கரீபியன் கடற்பரப்பில் சில நாட்களுக்கு முன்பு சான்டி புயல்…