அவுஸ்திரேலியாவின் தெற்கு கடற்கரையில் விடுமுறை மற்றும் சர்ஃபிங் செய்யும் இடத்தில் உள்ள கடல் பகுதியில் ஒரு சுறா வாலிபரை தாக்கி கொன்றதாக போலீசார் இன்று தெரிவித்தனர். தாக்குதலுக்குப் பிறகு, யோர்க் தீபகற்பத்தில் உள்ள இன்ஸ் தேசிய பூங்காவில் உள்ள எதெல் கடற்கரைக்கு அருகில், உடல் தண்ணீரில் இருந்து எடுக்கப்பட்டது…
குரானை எரித்ததாகக் கருதப்பட்டவர் பாகிஸ்தானில் எரித்துக் கொலை
பாகிஸ்தானில் இஸ்லாமியத் திருமறையான குரானை இழிவுபடுத்தியதாக குற்றம்சாட்டப்பட்ட முஸ்லிம் ஒருவரை கும்பல் ஒன்று எரித்துக் கொன்றுள்ளதாக காவல்துறையினர் கூறுகின்றனர். நாட்டின் தென்பகுதியில் சீதா வட்டகையில் உள்ள ஒரு கிராமத்துப் பள்ளிவாசல் ஒன்றில் அந்நபர் இரவுப்பொழுதைக் கழித்திருந்தார். மறுநாள் காலையில் அந்த பள்ளிவாசலுக்குள் குரானின் பிரதி ஒன்று எரிந்து கருகிய…
சீன இராணுவ அதிகாரிகளுக்கு ‘ஆடம்பர விருந்து தடை’
உலகிலேயே கிட்டத்தட்ட முப்பது லட்சம் உறுப்பினர்களுடன் ஆட்பலத்தில் மிகப்பெரிய இராணுவம் சீனாவுக்கு உரியது. சீனாவை ஆளும் கம்யூனிஸக்கட்சியின் ஆயுதப்படை பிரிவுதான் நாட்டின் இராணுவமும் கூட. அதன் இராணுவத்தில் முன்னெடுக்கப்படுகின்ற மாற்றங்கள் பொதுவாக முக்கிய சீர்திருத்தங்களாகவே பார்க்கப்படுகின்றன. இந்த இராணுவத்திலுள்ள உயர் அதிகாரிகள் இனிமேல் அரச செலவில் விருந்துபசார களியாட்டங்களை…
உலக அழிவு மற்றும் 3 நாள் இருள் எல்லாம் வதந்தி…
மக்கள் மத்தியில் பீதியை கிளப்பிக்கொண்டிருக்கும் உலக அழிவு மற்றும் 3 நாள் இருள் என்பவற்றை நாசா விஞ்ஞானி டேவிட் மொரிஸன் முற்றாக மறுத்துள்ளார். கடந்த சில வாரங்களாவே நாசாவை மேற்கோள்காட்டி உலக அழிவு மற்றும் 3 நாள் தொடர்ச்சியான இருள் என சில மத அமைப்புக்கள் தங்களின் சுய…
அயர்லாந்தில் கருக்கலைப்பை சட்டபூர்மவாக்க நடவடிக்கை
அயர்லாந்தில் கருக்கலைப்பை சட்டபூர்மவாக்க நடவடிக்கை எடுக்கப்படும் என அந்நாட்டு அரசு அறிவித்துள்ளது. தாயின் உயிருக்கு ஆபத்து ஏற்படும் என்று கண்டறியப்பட்டால், அச்சூழலில் கருக்கலைப்பை அனுமதிக்க அங்கு சட்டம் கொண்டுவரப்படுகிறது. கருக்கலைப்புக்கு குறித்த விஷயத்துக்கு சட்ட ரீதியாக ஒரு தெளிவைக் கொண்டுவர அமைக்கப்பட்ட வல்லுநர் குழுவின் அறிக்கையை அடுத்தே அரசின்…
உலக மக்களில் 80% பேர் மத நம்பிக்கை உடையவர்களே: புதிய…
உலக மக்கள் தொகையில் 80 சதவீதத்தினர் ஏதாவது ஒரு மதத்தை பின்பற்றுபவர்களாக இருப்பது உலக அளவில் நடத்தப்பட்ட ஒரு ஆய்வில் தெரியவந்துள்ளது. உலகில் சுமார் 600 கோடி பேர் மதத்தை சார்ந்துள்ளனர் என்பது பியூ என்ற ஆய்வு நிறுவனம் நடத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது. சுமார் 200 நாடுகளில் செய்யப்பட்ட…
‘அமெரிக்காவில் துப்பாக்கி விதிகளை கடுமையாக்க வேண்டும்’
அமெரிக்கா முழுவதிலும் துப்பாக்கிச் சட்டங்களை கடுமையாக்க வேண்டும் என்று கனக்டிகட் மாகாணத்தின் ஆளுநர் டான் மேல்லோய் கோரிக்கை விடுத்துள்ளார். ஆட்களை சுடப் பயன்படுத்தும் துப்பாக்கிகளுக்கு கனக்டிகட் மாகாணத்தில் ஏற்கனவே தடை இருக்கின்ற போதிலும், அந்தத் தடை நாடு முழுவதிலும் இல்லாமையே தமது மாகாணத்திலும் வன்முறையாளர்களை கட்டுப்படுத்த முடியாமல் போனமைக்கு…
உலகம் அழியும் என்று பீதி கிளப்பியவர்கள் கைது
இந்த மாதம் 21 ஆம் தேதியுடன் உலகம் அழியப்போகிறது என்று ஆருடம் சொல்வதற்காக சீனாவின் பல்வேறு ஊர்களில் பொதுச் சதுக்கங்களில் கூடியவர்கள் சிலரை காவல்துறையினர் கைதுசெய்துள்ளனர். நாட்டின் மத்தியப் பகுதியிலும் மேற்கு மாகாணங்களிலும் பல இடங்களில் உலகம் அழியப்போகிறது என்று நம்பும் பிரிவினர் கூடினார்கள் என்றும் காவல்துறையினர் இவர்களைக்…
அமெரிக்காவில் பயங்கரம்: துப்பாக்கிச்சூட்டில் 20 குழந்தைகள் பலி
நியூயார்க்: அமெரிக்காவின் கானிக்டிகட் பகுதியில் கிண்டர்கார்டன் பள்ளியில் அடையாளம் தெரியாத நபர் ஒருவர் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 20 குழந்தைகள்உட்பட 28 பேர் பலியானதாக கூறப்படுகிறது. துப்பாக்கிச்சூடு நடத்திய நபரும் சட்டுக்கொல்லப்பட்டதாக கூறப்படுகிறது. கானிக்டிக்ட் பகுதியில் உள்ள சான்டி ஹூக் பள்ளியில் , 20 வயது மதிக்கத்தக்க அந்த நபர்…
உக்ரைனில் கடும் பனியையே கரைய வைத்த நிர்வாணப் பெண்களின் போராட்டம்
உக்ரைன் நாட்டு பாராளுமன்றம் பெரும் அமளி துமளியை சந்தித்துள்ளது. கூட்டம் தொடங்கிய முதல் நாளிலேயே எம்.பிக்களுக்கிடையே கடும் அடிதடி மூண்டுள்ளது. அதேபோல பெண்கள் அமைப்பைச் சேர்ந்த பெண்கள் சிலர் நாடாளுமன்றத்திற்கு வெளியே நிர்வாணப் போராட்டத்தில் ஈடுபட்டதால் அந்தப் பகுதியே பரபரப்பானது. உறைய வைக்கும் கடும் குளிரையும் பொருட்படுத்தாமல் பெண்கள்…
கட்டுப்பாட்டை இழந்து விட்ட சிரியா அதிபர் : ரஷ்ய வெளியுறவு…
டமாஸ்கஸ்: சிரியாவில், அதிபர், பஷர் அல் ஆசாத் கட்டுப்பாட்டை இழந்து விட்டார். இதனால், கிளர்ச்சியாளர்களின் கை ஓங்கியுள்ளதாக ரஷ்யா தெரிவித்துள்ளது. சிரியாவில், அதிபர் பஷர் அல் ஆசாத்தை பதவி விலக கோரி எதிர்கட்சியினர் பல மாதங்களாக போராடி வருகின்றனர். சிரியா ராணுவத்தினர், கிளர்ச்சியாளர்களை ஒடுக்கி வருகின்றனர். 21 மாதங்களாக…
அத்துமீறி நுழைந்த சீன விமானத்தை விரட்டியடித்த ஜப்பான் போர் விமானங்கள்
டோக்கியோ: சர்ச்சைக்குரிய தீவில், சீன விமானம் ஒன்று அத்துமீறி பறந்ததால் ஜப்பானிய போர் விமானங்கள் அதிரடியாக சென்று அந்த விமானத்தை விரட்டியடித்தன. சீனாவுக்கும், ஜப்பானுக்கும் இடையே உள்ளது, ஷென்காகு தீவு. இந்த தீவை சீனா, 'டையாயூ' என்றழைக்கிறது. பண்டை காலம் தொட்டு, இந்த தீவு தங்கள் எல்லைக்குட்பட்டு இருப்பதாக…
பாலியல் வழக்கில் இருந்து விடுவிக்கப்பட்டார் ஸ்ட்ராஸ்கான்
பணிப்பெண்ணிடம் பாலியல் ரீதியாக தவறான முறையில் நடக்க முயன்ற குற்றச்சாட்டிலிருந்து சர்வதேச நாணய நிதியத்தின் முன்னாள் தலைவர் டொமினிக் ஸ்ட்ராஸ்கான் விடுவிக்கப்பட்டார். சர்வதேச நாணய நிதியத்தின் தலைவராக இருந்த டொமினிக் ஸ்ட்ராஸ்கான், நியூயார்க் சென்றிருந்த போது அங்குள்ள ஹோட்டல் ஒன்றில் பணிப்பெண் ஒருவரிடம் தவறாக நடக்க முயன்றார் என்று…
எச்சரிக்கையை மீறி ராக்கெட்டை ஏவியது வடகொரியா
சியோல்: அண்டை நாடுகளின் எதிர்ப்பை மீறி, வட கொரியா, நேற்று, ராக்கெட்டை விண்ணில், வெற்றிகரமாக ஏவியது. சட்டவிரோதமாக, அணு ஆயுதம் தயாரிக்கும் நாடுகளின் பட்டியலில், ஈரான், வடகொரியா இடம் பெற்றுள்ளன. வடகொரியாவுக்கும் தென் கொரியாவுக்கும், நீண்ட நாட்கள் சண்டை நடந்தது. ஜப்பான், தென் கொரியா, பிலிப்பைன்ஸ் போன்ற நாடுகள்,…
உளவு பார்த்த இஸ்ரேலிய கழுகு சூடானில் சிறை பிடிப்பு
கர்த்தூம்:இஸ்ரேலுக்கு உளவு பார்த்ததாக, பிணம் தின்னி கழுகு, சூடானில் சிறைபிடிக்கப்பட்டு உள்ளது. இஸ்ரேல் நாட்டுக்கும், பாலஸ்தீனத்துக்கும் பகைமை நிலவுகிறது. பாலஸ்தீனத்துக்கு, ஆப்ரிக்காவில் உள்ள சூடான் நாடு, ஆயுத சப்ளை செய்வதாக இஸ்ரேல் கூறுகிறது. இதற்கிடையே, சூடான் நாட்டின் டார்பர் நகரில், பிணம் தின்னி கழுகு பறந்தது. இதை அந்நாட்டு…
45 ஆண்டுகளுக்கு பின் பாலஸ்தீனம் திரும்பிய ஹமாஸ் தலைவர்
காசா: பாலஸ்தீனத்தின் ஹமாஸ் இயக்க தலைவர், 45 ஆண்டுகளுக்கு பின், சொந்த ஊருக்கு திரும்பியுள்ளார். பாலஸ்தீனத்துக்கும், இஸ்ரேலுக்கும் நீண்ட நாட்களாக பகைமை நிலவி வரு கிறது. பாலஸ்தீனத்தின் பல பகுதிகளை, இஸ்ரேல் இன்னும் தன் வசம் வைத்திருக்கிறது. இந்த பகுதிகளில், குடியிருப்புகளை கட்டவும் இஸ்ரேல் திட்டமிட்டு உள்ளது. தங்கள்…
கேட் அனுமதிக்கப்பட்ட மருத்துவமனையை ஏமாற்றிய வானொலி நிலையம்
இளவரசர் வில்லியம்ஸின் மனைவி, கேம்ப்ரிட்ஜ் சீமாட்டி கேத்தரின், கர்ப்பமுற்றிருக்கும் நிலையில், அவர் அனுமதிக்கப்பட்டிருக்கும் இலண்டன் மருத்துவமனையை ஆஸ்திரேலிய வானொலி நிலையம் ஒன்று, அரச குடும்பத்தினரைப் போல நடித்து தொடர்பு கொண்டு, கேத்தரினின் உடல் நிலை குறித்த தகவல்களை வாங்கியதாக மருத்துவமனை ஒப்புகொண்டிருக்கிறது. இந்த வானொலி நிலையத்தின் நிகழ்ச்சித் தயாரிப்பாளர்கள்,…
பிலிப்பைன்ஸில் சூறாவளி: சாவு எண்ணிக்கை 100 ஆக அதிகரிப்பு
தென் சீனக்கடல் பகுதியில் உள்ள பிலிப்பைன்ஸ் நாட்டின் தெற்கு பகுதியான மிண்டோனாவை நேற்று தைபூன் எனப்படும் சூறாவளிக் காற்று தாக்கியது. மணிக்கு 210 கிலோ மீட்டர் வேகத்தில், பலத்த மழையுடன் வீசிய இந்த சூறாவளிக்கு 'தைபூன் பூபா' என பெயரிடப்பட்டுள்ளது. இதனால் மிண்டோனா பகுதியில் மின்சாரம் துண்டிக்கப்பட்டது. சாலை…
செவ்வாய் கிரகத்தில் மனிதர்களை குடியேற்ற அமெரிக்க விண்வெளி நிறுவனம் திட்டம்
லண்டன் : செவ்வாய் கிரகத்தில், 80 ஆயிரம் பேரை குடியேற்ற திட்டமிட்டுள்ளதாக அமெரிக்க விண்வெளி நிறுவனம் தெரிவித்துள்ளது. சூரியக் குடும்பத்தைச் சேர்ந்த செவ்வாய் கிரகம், பூமியிலிருந்து, 57 கோடி கி.மீ., தூரத்தில் உள்ளது. இந்த சிவப்பு நிற கிரகத்தில், மனிதன் வாழ்வதற்கு ஏற்ற சூழல் குறித்து, அமெரிக்காவின் நாசா…
பாலஸ்தீனர்களுக்கு ஐநா சபையில் உறுப்பினர் அல்லாத பார்வையாளர் அந்தஸ்து
ஐநா சபையில் non-member observer state, அதாவது 'உறுப்புரிமை அற்ற பார்வையாளர்' என்ற அந்தஸ்து கிடைத்துள்ளதை பாலஸ்தீனியர்கள் கொண்டாடுகிறார்கள். மேற்குகரையில் ரமல்லா நகரிலுள்ள யாசீர் அரபாத் சதுக்கத்தில் பாரம்பரிய இசைமுழங்க, பாரம்பரிய நடனங்களை ஆடியபடி,மக்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தி வருகின்றனர். காசா நகரிலும் மக்கள் வீதிகளில் ஆடிப்பாடி, வாகனங்களின் ஹோர்ன்களை…
பாலஸ்தீனத்தை அங்கீகரிக்க ஐ.நா.-வில் வாக்கெடுப்பு; 126 நாடுகள் ஆதரவு!
நியூயார்க்: பாலஸ்தீனத்தை தனி நாடாக அங்கீகரிக்கும் தீர்மானம் தொடர்பாக, ஐ.நா.-வில் நடந்த வாக்கெடுப்பில், அமெரிக்கா, ஜெர்மன், இஸ்ரேல், பிரிட்டன் உள்ளிட்ட நாடுகள் எதிர்த்து வாக்களித்துள்ளன - ஜெர்மன் உள்ளிட்ட நாடுகள் கலந்து கொள்ளவில்லை. பாலஸ்தீனத்துக்கும், இஸ்ரேலுக்கும் நீண்ட காலமாகப் பகை நிலவி வருகிறது. பாலஸ்தீனத்தை, தனி நாடாக அங்கீகரிக்கக்…
எதிர்க்கட்சி தலைவர் மிட் ரோம்னிக்கு வெள்ளை மாளிகையில் ஒபாமா விருந்து
வாஷிங்டன்: தேர்தலில் தன்னை எதிர்த்து போட்டியிட்ட, குடியரசு கட்சி வேட்பாளர் மிட் ரோம்னிக்கு, அமெரிக்க அதிபர் ஒபாமா, வெள்ளை மாளிகையில் நேற்று விருந்தளித்தார். அமெரிக்க அதிபர் தேர்தல், 6--ஆம் தேதி நடந்தது. ஜனநாயக கட்சி சார்பில் போட்டியிட்ட ஒபாமா மீண்டும் அதிபராக தேர்வு செய்யப்பட்டுள்ளார். இவரை எதிர்த்து குடியரசு…
மனைவி ஆண் என 19 ஆண்டுக்கு பிறகு புரிந்து கொண்ட…
தன் மனைவி ஆண் என்பதை, 19 ஆண்டுகளுக்கு பிறகு புரிந்து கொண்டார், பெல்ஜியம் நாட்டைச் சேர்ந்த ஜான் (வயது 64) என்பவர். ஜான், 93-ஆம் ஆண்டு இந்தோனேசியாவைச் சேர்ந்த மோனிகா என்பரை இரண்டாவம் தாரமாக திருமணம் செய்து கொண்டார். 48 வயதாகும் மோனிகாவுக்கு, குழந்தை இல்லை. இது குறித்து,…
விமானிக்கு திடீரென உடல் நலம் குன்றியதால் விமானியாக மாறிய பயணி
இலண்டன்: நடு வானில் பறந்த, பயணிகள் விமானத்தில் விமானிக்கு திடீரென உடல் நலம் குன்றியதால், பயணி ஒருவர் உதவியுடன் விமானம் பத்திரமாக தரையிறக்கப்பட்டது. அயர்லாந்து நாட்டிலிருந்து ஜெர்மனியின் பிராங்க்பர்ட் நோக்கி, 262 பயணிகளுடன் விமானம் பறந்து கொண்டிருந்தது. திடீரென, சக விமானிக்கு தலைவலி ஏற்பட்டு மேற்கொண்டு பணியை தொடர…