`இந்தி தினம்: இந்தி பேசாத மாநிலங்கள் மீது நடத்தப்படும் மோசமான…

இந்திய அரசியல் நிர்ணய சபை, தேவநாகரி எழுத்து வடிவத்தில் எழுதப்படும் இந்தி மொழியை இந்தியாவின் ஆட்சி மொழியாக, கடந்த 1949-ஆம் ஆண்டு தேர்வு செய்யப்பட்ட செப்டம்பர் 14-ஆம் நாள் இந்தி தினமாக ஆண்டுதோறும் கொண்டாடப்படுகிறது. பல தசாப்தங்களாக இந்தித் திணிப்பை எதிர்த்து வந்த வரலாறு கொண்ட தமிழ் நாட்டில்,…

கதிராமங்கலத்தில் 116 நாள், நெடுவாசலில் 154 நாள் நீடிக்கும் போராட்டம்…

புதுக்கோட்டை: ஹைட்ரோ கார்பன் திட்டத்தை ரத்து செய்ய கோரி புதுக்கோட்டை மாவட்டம், நெடுவாசல் கிராமத்தில் கிராம மக்கள் 154 நாளாக போராட்டம் நடத்தி வருகின்றனர். இதேபோல கதிராமங்கலத்தில் 116வது நாளாக போராட்டம் நடக்கிறது. புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அருகே உள்ள நெடுவாசல் உள்பட நாடு முழுவதும் 31 இடங்களில்…

சுங்கச்சாவடிகளில் ரவுடிகள் மூலமே கட்டணம் வசூல் செய்யப்படுகிறது.. நீதிபதிகள் கடும்…

மதுரை: தேசிய நெடுஞ்சாலை சுங்கச்சாவடிகளில் ரவுடிகள் மூலமே கட்டணம் வசூல் செய்யப்படுவதாக மதுரை ஹைகோர்ட் நீதிபதிகள் கண்டனம் தெரிவித்துள்ளனர். சுங்கச்சாவடிகளில் வாகனங்கள் நீண்ட நேரம் காத்திருப்பதாக மதுரை மாவட்டம் மேலூரைச் சேர்ந்த பழனிகுமார் என்பவர் வழக்கு தொடர்ந்தார். அந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது வழக்கை விசாரித்த…

காஷ்மீர் விவகாரம் நேருவின் தவறால் விளைந்தது – அமைச்சர் ஜிதேந்திரா…

புதுடெல்லி, ”வேறு எந்த மாநிலத்திலும் காஷ்மீர் விவகாரம் போல விவகாரங்கள் இல்லை. காஷ்மீர் இந்தியாவுடன் இணைப்பு ஒப்பந்தம் மூலம் இணைந்ததது; இது பிற சிற்றரசுகள் எப்படி இணைந்தனவோ அதைப்போலவேதான் இருந்தது. நேரு காஷ்மீர் விவகாரத்தை ஐக்கிய நாடுகள் சபைக்கு எடுத்துச் சென்ற தவறில் துவங்கி பல தவறுகள் தொடர்ந்து நடந்துள்ளன.…

இந்தியாவில் ஒரு சதவீதம் பேரிடம் மட்டும் செல்வம் குவிவது எப்படி?

இந்தியாவின் பொருளாதார சீர்திருத்தங்களால் ஏற்றத்தாழ்வு சட்டென அதிகரித்துள்ளதா? ஃபிரஞ்ச் பொருளியல் வல்லுநர் லூகாஸ் சேன்சல், தாமஸ் பிக்கெட்டி ஆகியோர் செய்த புதிய ஆய்வு 'ஆம்' என்கிறது. 2013ல் வெளியாகி அதிகம் விற்கப்பட்ட 'மூலதனம்' என்ற நூலின் ஆசிரியர் பிக்கெட்டி. முதலாளித்துவம், பொருளாதார ஏற்றத்தாழ்வுகள் குறித்து ஆய்வு செய்தது இந்நூல்.…

‘நீட்’ தேர்வு பயிற்சி மையங்கள் ஏற்படுத்தப்பட்டு உள்ளதா? தமிழக அரசுக்கு…

சென்னை, உடுமலைப்பேட்டையை சேர்ந்த மாணவி கிருத்திகா, பிளஸ்-2 மதிப்பெண் அடிப்படையில் தன்னை மருத்துவ கலந்தாய்வுக்கு அழைக்க உத்தரவிடக்கோரி சென்னை ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்திருந்தார். இந்த மனுவை விசாரித்த நீதிபதி என்.கிருபாகரன், ‘நீட்’ தேர்வு அடிப்படையில் மருத்துவ கலந்தாய்வை நடத்த சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டதால் கிருத்திகாவின் மனுவை தள்ளுபடி செய்தார்.…

குர்மீத் சிங், அசராம் பாபு, ராதே மா உள்பட 14…

அலகாபாத், இந்து சாதுக்களின் தலைமை அமைப்பான அகில பாரதிய அக்காரா பரிஷத் நேற்று 14 போலி சாமியார்களின் பெயர்கள் அடங்கிய பட்டியலை வெளியிட்டு உள்ளது. போலி சாமியார்களிடம் ஏமாற வேண்டாம் என்று மக்களை எச்சரிப்பதற்காக அலகாபாத்தில் உள்ள இந்த அமைப்பு இந்த தகவலை வெளியிட்டு உள்ளது. இருபெண்கள் பாலியல் பலாத்காரம்…

நவோதயா பள்ளிகளை அனுமதிக்க முடிவெடுக்க தமிழக அரசுக்கு உயர்நீதிமன்றம் காலக்…

மத்திய அரசின் மனிதவள மேம்பாட்டு அமைச்சகத்தின் கிழ் செயல்படும் ஜவகர் நவோதயா வித்யாலயா பள்ளிகளை தமிழகத்தில் தொடங்க அனுமதி அளிப்பது தொடர்பாக முடிவை எடுக்க தமிழக அரசுக்கு சென்னை உயர்நிதிமன்ற மதுரை கிளை 8 வார கால அவகாசம் அளித்துள்ளது. எனினும் தமிழகம் போன்ற அதிகமான பள்ளிகளை கொண்டுள்ள…

ஷரியாவில் தலையிட அனுமதிக்க முடியாது: அகில இந்திய முஸ்லீம் தனிநபர்…

இஸ்லாமியர்களின் தனிப்பட்ட சட்டத்தில் தலையிட மேற்கொள்ளப்படும் முயற்சிகளை அனுமதிக்கமுடியாது என்று அகில இந்திய முஸ்லீம் தனிநபர் சட்ட வாரியம் கூறியிருக்கிறது. 'ஷரீயத் சட்டத்தில் தலையிட யாரையும் அனுமதிக்க முடியாது' என்று போபாலில் ஞாயிறன்று நடைபெற்ற நீண்ட ஆலோசனைக் கூட்டத்திற்கு பிறகு, அகில இந்திய முஸ்லீம் தனிநபர் சட்ட வாரியத்தின்…

தமிழகத்தில் ஆதிதிராவிட மாணவிகளுக்கு உறைவிட பள்ளிகள் -மத்திய மந்திரி தகவல்

சென்னை, தென் மாநில மற்றும் யூனியன் பிரதேசங்களை சேர்ந்த சமூக நலத்துறை மந்திரிகள் பங்கேற்ற மண்டல கூட்டம் சென்னையில் நேற்று நடைபெற்றது. மத்திய சமூக நீதி மற்றும் அதிகாரம் அளித்தல் துறை மந்திரி கிருஷ்ணன் பால் குர்ஜர் தலைமை தாங்கினார். கூட்டத்தில், மத்திய மந்திரிகள் ராம்தாஸ் அத்வாலே, விஜய் சம்ப்லா,…

தமிழகத்தில் மத்திய அரசின் நவோதயா பள்ளிகளை தொடங்க மதுரை ஐகோர்ட்டு…

மதுரை, கன்னியாகுமரி மகா சபா அமைப்பின் செயலாளர் ஜெயக்குமார் தாமஸ், மதுரை ஐகோர்ட்டில் தாக்கல் செய்த மனுவில், சி.பி.எஸ்.இ. பாடத்திட்டத்தின் கீழ் கேந்திரிய வித்யாலயா, ஜவகர் நவோதயா வித்யாலயா போன்ற பள்ளிகளை மத்திய அரசு நடத்தி வருகிறது. தமிழகத்தில் கேந்திரிய வித்யாலயா பள்ளிகள் மட்டும் தான் உள்ளன. ஜவகர் நவோதயா…

மறக்க முடியாத இமானுவேல் சேகரன்

ராமநாதபுரம்: பரமக்குடியில் இமானுவேல் சேகரனின் 60ஆவது நினைவுதினம் இன்று அனுஷ்டிக்கப்படுகிறது. ஒடுக்கப்பட்ட மக்களின் தலைவரான தியாகி இம்மானுவேல் சேகரன், ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூருக்கு அருகில் உள்ள செல்லூர் கிராமத்தைச் சேர்ந்தவர். இவரது தந்தை ஆசிரியர் வேதநாயகம், தாயார் ஞானசுந்தரி. இவர்களது மூத்த மகனாக 9-10-1924ம் ஆண்டு பிறந்தார் இம்மானுவேல்…

ஆம்.. இந்தியாவில் தமிழ்நாடு தனிதான்! ‘நீட்’டமான வரலாறு!

எந்த மாநிலமும் எதிர்க்காத ’நீட்’ தேர்வினை தமிழ்நாடு மட்டும் தனியாக எதிர்ப்பதும்-விலக்கு கோருவதும் ஏன்? என்பது முதல் கேள்வி.  மற்ற கல்விமுறைகளுடன் போட்டியிடும் வகையில் மாநிலக் கல்விமுறை தரமாக உள்ளதா? நீட் தேர்வில் ஒரு  முறை தோற்றாலும் மூன்று முறை எழுத முடியுமே? மருத்துவக் கல்வியைத் தவிர வேறு…

நெல்லையில் கொட்டப்படும் கேரள மாநில கழிவுகள்… அவதியுறும் மக்கள்!

நெல்லை: கேரளாவில் இருந்து நெல்லை அருகே லாரிகளில் கொண்டு வந்து பல டன்கள் கழிவுகள் கொட்டப்படுவதால் பொதுமக்கள் தொற்றுநோய் அச்சத்தில் உள்ளனர். நெல்லை மாவட்டம் ஆலங்குளம் அருகே மாயமான்குறிச்சியில் 500க்கும் மேற்பட்ட குடியிருப்புகளும், குருவன்கோட்டையில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட குடியிருப்புகளும் உள்ளன. இந்த இரண்டு கிராமங்களுக்கு இடையிலுள்ள மானூர் கால்வாய்…

தமிழர் அடையாள அழிப்பின் தொடர்ச்சியா சி.பா.ஆதித்தனார் சிலை அகற்றம்? சீமான்…

சென்னை: 'தமிழர் தந்தை' சி.பா.ஆதித்தனார் சிலையை மீண்டும் எழும்பூரில் நிறுவ வேண்டும் என்று நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் வலியுறுத்தியுள்ளார். சீமான் இன்று விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: 'உடல் மண்ணுக்கு! உயிர் தமிழுக்கு!' என முழக்கமிட்டு, தமிழுக்கும், தமிழருக்குமாய் தன் வாழ்வினை முற்றுமுழுதாக செலவிட்டு வாழ்ந்து…

தேரா சச்சா செளதாவில் கண்டறியப்பட்ட ‘ரகசிய’ குகை மற்றும் சடலங்கள்

பாலியல் தாக்குதலுக்காக சிறையிலடைக்கப்பட்ட ஹரியானா சாமியார் குர்மித் ராம் ரஹீம் சிங்கின் தேரா சச்சா செளதா பற்றிய சர்ச்சைகள் அண்மையில் வெடித்துள்ள நிலையில், அந்த அமைப்பில் உள்ள பல ரகசியங்கள் குறித்து செய்திகள் அண்மைகாலமாக ஊடகங்களில் கசிகின்றன. அங்கிருக்கும் குகை ஒன்று குறித்தும், அந்த அமைப்பின் தலைமையகத்தில் சடலங்கள்…

அமெரிக்கத் தமிழர்களுக்குப் பின்னால் அரசியல் சக்திகளா?.. அதிமுகவின் குற்றச்சாட்டு உண்மையா?

வாஷிங்டன்(யு.எஸ்): அமெரிக்கா உட்பட , அனிதாவின் மரணத்திற்காக போராடுபவர்களுக்குப் பின்னால் அரசியல்கட்சிகள் இருக்கின்றன என்று அதிமுகவின் ஆவடி குமார் குற்றம் சாட்டியுள்ளார். தொலைக்காட்சி விவாதம் ஒன்றில், பங்கேற்ற அவர் போராட்டக்காரர்களை தீவிரவாதிகள் போலவும் சித்தரித்துள்ளார். அதே விவாதத்தில் பங்கேற்ற அமெரிக்கத் தமிழர் கவிதா பாண்டியன், போராட்டக்காரர்களை தீவிரவாதிகளாக குறிப்பிட்டதற்கு…

தற்போதைய சூழ்நிலையில் முதல்-அமைச்சராக மு.க.ஸ்டாலின் வரவேண்டும் கருத்துக்கணிப்பில் 41 சதவீதம்…

சென்னை, தற்போதைய அரசியல் சூழ்நிலையில் தமிழக முதல்-அமைச்சராக மு.க.ஸ்டாலின் வரவேண்டும் என்று 41 சதவீதம் பேர் ஆதரவு தெரிவித்திருப்பதாக லயோலா கல்லூரியில் படித்த முன்னாள் மாணவர்கள் நடத்திய கருத்துக்கணிப்பில் தெரியவந்துள்ளது. சென்னை லயோலா கல்லூரியில் படித்த முன்னாள் மாணவர்கள் நடத்தும் பண்பாட்டு மக்கள் தொடர்பகம் சார்பில் தமிழகம் முழுவதும் 5,874…

நீட் தேர்வுக்கு எதிரான தமிழக போராட்டங்களுக்கு உச்சநீதிமன்றம் தடை!

டெல்லி: நீட் தேர்வுக்கு எதிராக தமிழகத்தில் நடைபெற்று வரும் போராட்டங்களுக்கு உச்சநீதிமன்றம் தடை விதித்துள்ளது. நீட் தேர்வால் தமிழக மாணவர்களின் மருத்துவ படிப்பு கனவு தகர்ந்து போனது. இதனால் அரியலூர் அனிதா தற்கொலை செய்து கொண்டார். அனிதாவின் தற்கொலை தமிழகத்தை கொந்தளிக்க வைத்துள்ளது. கடந்த ஒருவாரமாக தமிழகத்தில் மாணவர்கள்…

தேவைப்படும் பட்சத்தில் இந்திய ராணுவம் எல்லையை தாண்டி எதிரிகள் மீது…

உதம்பூர், ஜம்மு காஷ்மீர் மாநிலம் உதம்பூரில் வடக்கு மண்டல ராணுவ தளபதி தேவராஜ் அன்பு கூறியதாவது: இந்திய ராணுவத்திற்கு தேவைப்படும் பட்சத்தில் எல்லையை தாண்டி எதிரிகள் மீது இந்திய ராணுவம் தாக்குதல் நடத்தும்.  கடந்த ஆண்டு செப்டம்பரில் நடைபெற்ற சர்ஜிக்கல் ஆப்ரேஷனில் பாகிஸ்தானில் 7 பயங்கரவாத முகாம்களை இந்திய…

அனிதாவுக்கு நீதி கோரி 6-வது நாளாக தொடரும் போராட்டம்… களத்தில்…

திருவாரூர் : நீட் தேர்வுக்கு தடை கோரி அரசுப் பள்ளி மாணவர்களும் தமிழகம் முழுவதும் போராட்டக் களத்தில் இறங்கியுள்ளனர், தங்களது மருத்துவ உயர்கல்விக் கனவை நசுக்கும் நீட்டை ரத்து செய்ய வேண்டும் என்று அவர்கள் முழக்கங்களை எழுப்பி வருகின்றனர். தமிழக பாடத்திட்டத்தின் கீழ் படித்து பத்தாம் வகுப்பில் 476…

உரிமைக் குரல் தொடரும்: குண்டர் சட்டத்தில் கைதாகி விடுதலையான வளர்மதி…

நெடுவாசல் ஹைட்ரோ கார்பன் திட்டத்திற்கு எதிராக துண்டுப் பிரசுரங்களைக் கொடுத்ததால் குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்ட 23 வயதான சேலம் வீராணத்தை சேர்ந்த மாணவி வளர்மதி பல்வேறு கட்ட போராட்டங்களுக்கு பின் சென்னை உயர் நீதிமன்ற உத்தரவின் பேரில் கோவை மத்திய சிறையிலிருந்து வியாழக்கிழமை பிற்பகல்…

டெல்லியில் தமிழக விவசாயிகள் ஒப்பாரி போராட்டம்

இந்தியாவின் தலைநகர் டெல்லியிலுள்ள ஜந்தர் மந்தரில் தொடர் போராட்டம் நடத்தி வரும் தமிழக விவசாயிகளின் 53 ஆம் நாளான இன்று புதன்கிழமை விவசாயி ஒருவரை பிணத்தைப் போல படுக்க வைத்து, ஒப்பாரி போராட்டம் நடத்தினர். விவசாய கடன்களை ரத்து செய்வது, நதிகளை இணைப்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து…