ஜெயலலிதா இட்லியும் சாப்பிடல, சட்னியும் சாப்பிடல… நாங்க பொய் சொன்னோம்…

மதுரை: ஜெயலலிதா இட்லி சாப்பிட்டதாக நாங்கள் கூறியது பொய் என்று அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் பகிரங்கமாக ஒப்பு கொண்டுள்ளார். ஜெயலலிதா கடந்த 2016ஆம் ஆண்டு செப்டம்பர் 22ஆம் தேதியன்று உடல்நல குறைபாட்டால் அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். அவரை காண மருத்துவமனை வாயிலில் ஏராளமான கூட்டம் கூடியது. நாளுக்கு நாள் ஜெயலலிதா…

ரோஹிங்யாக்களை தடுக்க இந்திய ராணுவம் சில்லி, ஸ்டன் குண்டுகளை பயன்படுத்துகிறது…

புதுடெல்லி, மியான்மரில் ராக்கின் மாகாணத்தில் ரோஹிங்யா முஸ்லிம் கிளர்ச்சியாளர்கள் கடந்த மாதம் 25–ந் தேதி போலீஸ் மீது தாக்குதல் நடத்தியதைத் தொடர்ந்து, அங்குள்ள அந்த இனத்தவர் மீது வன்முறை கட்டவிழ்த்து விடப்பட்டது. மியான்மரில் வசித்து வரும் சிறுபான்மை முஸ்லிம்களான ரோஹிங்யாக்களுக்கு எதிராக ராணுவமும், பிற பிரிவினரும் வன்முறையை கட்டவிழ்த்து விட்டுள்ளனர்.…

காஷ்மீர் பிரச்சனையில் இஸ்லாமிய கூட்டமைப்பின் அழைப்பை சீனா நிராகரித்தது

பெய்ஜிங், காஷ்மீர் பிரச்சனையை இந்தியா மற்றும் பாகிஸ்தான் இருதரப்பு பேச்சுவார்த்தையின் மூலம் தீர்த்துக்கொள்ள வேண்டும். பிரச்சனையில் ஐ.நா. தீர்மானத்தை பிரகடனம் செய்யவேண்டும் என்ற இஸ்லாமிய கூட்டமைப்பின் அழைப்பை சீனா நிராகரித்து உள்ளது. காஷ்மீரில் பயங்கரவாதிகளை நுழைய செய்தும், இங்கிருக்கும் பிரிவினைவாதிகளுக்கு பண உதவி செய்தும், பயங்கரவாதிகளுக்கு எல்லா நிலைகளிலும் உதவி…

அனிதாவை தற்கொலைக்கு தூண்டியது யார்? தாழ்த்தப்பட்டோர் ஆணையம் பரபரப்பு பரிந்துரை

அரியலூர்: மாணவி அனிதா திடீரென தற்கொலை செய்து கொண்டது ஏன்? அவரை தூண்டியது யார் என்ற கோணத்தில் விசாரணை நடத்துமாறு அரியலூர் மாவட்ட ஆட்சியர் மற்றும் எஸ்.பியிடம் தேசிய தாழ்த்தப்பட்டோர் நல ஆணையம் சார்பாக பரிந்துரைக்கப்பட்டுள்ளது. நீட் அடிப்படையில் தான் மருத்துவ சேர்க்கை நடை பெற வேண்டும் என்று…

தாவூத் இப்ராகிம் பாகிஸ்தானில் உள்ளார் என சகோதரர் இக்பால் கஸ்கர்…

மும்பை, மும்பையில் 1993-ம் ஆண்டு, மார்ச் மாதம் 12-ந்தேதி 257 பேரை கொன்று குவித்த தொடர் குண்டுவெடிப்பு வழக்கில் முக்கிய குற்றவாளி, தாவூத் இப்ராகிம் (வயது 59). அவர் மும்பை தொடர் குண்டுவெடிப்புகளை நடத்திவிட்டு பாகிஸ்தானுக்கு தப்பி ஓடி, அங்கு அந்த நாட்டின் உளவு அமைப்பான ஐ.எஸ்.ஐ.யின் உதவியுடன்…

கமல்ஹாசனை நம்பி மக்கள் ஏமாந்து விடக்கூடாது உதயகுமார் பேட்டி

நெல்லை, நெல்லை கலெக்டர் அலுவலகத்துக்கு நேற்று வந்திருந்த உதயகுமார் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:– கூடங்குளத்தில் முதலாவது மற்றும் 2–வது அணு உலைகளுக்கு எதிராக மக்கள் ஒன்று திரண்டு கடுமையாக போராடினார்கள். 5 ஆண்டுகள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்ட போதும் மத்திய, மாநில அரசுகள் கண்டுகொள்ளவில்லை. எனவே…

பாசனத்திற்கு இல்லாமல் புஷ்கரம் பூஜைக்கு திறக்கப்பட்டதா காவிரி?

காவிரி டெல்டா பகுதிகளில் சம்பா சாகுபடிக்கு தண்ணீர் திறந்து விடாமல், காவிரி மகாபுஷ்கரம் (காவிரி ஆற்றை வழிபடும் விழா) நிகழ்வுக்காக திறந்துவிடப்பட்டதாகக் கூறி தமிழக விவசாயிகள் அமைப்பினர் கண்டனம் தெரிவித்துள்ளனர். கடந்த ஆறு ஆண்டுகளாக குறுவை சாகுபடி(ஜூன் முதல் ஜூலை வரை) இல்லாமல் சம்பா சாகுபடியை (ஆகஸ்ட் முதல்…

காஷ்மீர் பிரச்சினை தீர்க்கப்படாவிட்டால் இந்தியாவுடன் உறவுகளில் முன்னேற்றம் இருக்காது பாகிஸ்தான்…

காஷ்மீர் பிரச்சினை தீர்க்கப்படாவிட்டால் இந்தியாவுடனான உறவுகளில் எந்த முன்னேற்றம் இருக்காது என பாகிஸ்தான் பிரதமர் ஷாஹித் அப்பாஸி தெரிவித்துள்ளார். இந்தியத் தாக்குதலை எதிர்கொள்ள குறுகிய தூரம் பாய்ந்து தாக்கும் அணு ஆயுதங்களை உருவாக்கியுள்ளதாக பாகிஸ்தான் பிரதமர் ஷாஹித் அப்பாஸி தெரிவித்துள்ளார். நியூயார்க்கில் அவர் பேசும்போது, இந்திய ராணுவத்தினர் மறைமுக…

கீழடி அகழாய்வுக்கு பொறுப்பாளராகஅமர்நாத் ராமகிருஷ்ணனை நியமிக்க வேண்டும் டாக்டர் ராமதாஸ்…

சென்னை, பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- மதுரை அருகே கீழடியில் தொல்லியல் துறை மேற்கொண்டு வந்த 3-ம் கட்ட அகழாய்வு இறுதிக் கட்டத்தை நெருங்கி விட்டதாகவும், கடந்த ஆண்டு கண்டறியப்பட்ட கட்டுமானங்களின் தொடர்ச்சியோ, அதனுடன் தொடர்புடைய கூறுகளோ கிடைக்கவில்லை என்றும் அதன் பொறுப்பாளர் ஸ்ரீராமன் கூறியுள்ளார்.…

மியான்மர் வன்முறையில் தப்பிய இந்துக்கள் இந்தியாவில் அடைக்கலம் கிடைக்கும் என…

டாக்கா, மியான்மரில் போலீஸ் படையினர் மீது கடந்த மாதம் 25-ந் தேதி ரோஹிங்யா முஸ்லிம் கிளர்ச்சியாளர்கள் (அர்சா) தாக்குதல் நடத்தி, 12 பேரை கொன்றனர். அதைத் தொடர்ந்து, ராக்கின் மாகாணத்தில் இருந்து வந்த அந்த இன மக்கள் மீது ராணுவமும், புத்த மதத்தினரும் வன்முறையை கட்டவிழ்த்து விட்டனர். அதைத் தொடர்ந்து…

தமிழ் அகதிகளை சிறிலங்காவுக்கு திருப்பி அனுப்ப வேண்டும்- உமர் அப்துல்லா…

இந்தியாவில் உள்ள தமிழ் அகதிகளை சிறிலங்காவுக்குத் திருப்பி அனுப்ப வேண்டும் என்று ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தின் முன்னாள் முதலமைச்சர் உமர் அப்துல்லா தெரிவித்துள்ளார். மியான்மாரில் இருந்து வரும், ரொஹிங்யா முஸ்லிம் அகதிகளை இந்தியாவை விட்டு வெளியேற்ற வேண்டும் என்று குரல்கள் ஒலித்து வரும் நிலையில், இதுபற்றி அவர் கருத்து வெளியிட்டுள்ளார்.…

பிச்சை எடுப்பது போல கர்நாடகாவிடம் காவிரி நீருக்காக கெஞ்சுகிறோம்: சுப்ரீம்கோர்ட்டில்…

டெல்லி: காவிரி விவகாரத்தில் மத்திய அரசை நம்ப முடியாது என்று உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு சார்பில் வாதம் முன்வைக்கப்பட்டது. காவிரி நடுவர்மன்ற தீர்ப்பை எதிர்த்து கர்நாடக அரசு தாக்கல் செய்த வழக்கு விசாரணை சுப்ரீம் கோர்ட்டில் நடைபெற்று வருகிறது. கர்நாடகா, கேரளா, தமிழகம் ஆகிய மாநிலங்கள் வழக்கில் வாதாடிவிட்ட…

இந்தியா இயற்கைச் சீற்றங்களால் மிகவும் பாதிக்கப்படும் மூன்றாவது நாடு –…

ஐநா சபை, கடந்த 1995 ஆம் ஆண்டிலிருந்து இந்தியா மிகவும் பாதிப்படைந்திருப்பதாகவும் அவர் கூறினார். இர்மா புயல் போன்றவை புதிய இயல்புகளாக மாறியுள்ளன. இது புவி வெப்பமடைதலையே சுட்டிக்காட்டுகின்றது என்றார் அவர். உயரும் கடல் மட்டங்களாலும், இதர பருவகால மாற்றங்களாலும் மில்லியன் கணக்கான மக்களும், பல லட்சம் கோடி மதிப்புள்ள…

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காமல் என்ன செஞ்சீங்க? மத்திய அரசுக்கு…

டெல்லி: காவிரி நதிநீர் தொடர்பான வழக்கில் மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் கண்டனம் தெரிவித்துள்ளது. காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காமல் மத்திய அரசு கால தாமதம் செய்தது ஏன் என்று உச்சநீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது. காவிரி நடுவர்மன்ற தீர்ப்பை எதிர்த்து கர்நாடக அரசு தாக்கல் செய்த வழக்கு விசாரணை சுப்ரீம்…

திருமுருகன் காந்தி மீதான குண்டர் தடுப்பு சட்ட நடவடிக்கை ரத்து

மே 17 இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தி உள்ளிட்டநால்வர் மீதான குண்டர்கள் தடுப்பு சட்ட நடவடிக்கை ரத்து செய்யப்பட்டுள்ளது. சென்னை உயர் நீதிமன்றம் இன்று (செவ்வாய்க்கிழமை) வெளியிட்டுள்ள உத்தரவில் திருமுருகன் காந்தி, இளமாறன், அருண் மற்றும் டைசன் மீது பதியப்பட்ட அந்த வழக்கை ரத்து செய்துள்ளது. கடந்த மே மாதம் 21…

நவோதயா பள்ளிகளை ஏன் எதிர்க்க வேண்டும்: கல்வியாளர்கள் கூறும் காரணங்கள்

தமிழகத்தில் மத்திய அரசின் உதவியுடன் நவோதயா பள்ளிகளை தொடங்குவதற்கு எட்டு வாரங்களில் ஏதுவான நடவடிக்கைகளை எடுக்கவேண்டும் என்று கடந்த வாரத்தில் சென்னை உயர்நீதிமன்றத்தின் மதுரை கிளை உத்தரவிட்டுள்ள சமயத்தில், அனைத்து மாணவர்களுக்கும் சமவாய்ப்பை ஏற்படுத்துவதற்குப் பதிலாக பாகுபாட்டை ஏற்படுத்துவதாக கல்வியாளர்கள் கூறுகின்றனர். மக்களவை துணைத்தலைவர் தம்பிதுரை தமிழகத்தில் நவோதயா பள்ளிகள் திறக்க சுமார்…

தமிழர் தொன்மையை பறைசாற்றும் கீழடி அகழாய்வில் கிடைத்துள்ள பொருட்களின் சிறப்புகள்…

சிவகங்கை: கீழடியில் நடைபெற்று வரும் 6-ஆம் கட்ட அகழாய்வு பிரிவில் கண்டெடுக்கப்பட்டவை குறித்தும், என்னென்ன பணிகள் நடைபெற்று வருகிறது என்பது குறித்தும் இந்த பருவத்தில் கண்டெடுக்கப்பட்டுள்ளவை எப்படி ஆவணப்படுத்தப்பட உள்ளது என்பது குறித்து ஆய்வறிக்கை வெளியாகியுள்ளது. இதுகுறித்து பெங்களூரில் உள்ள இந்திய தொல்லியல் துறையின் (அகழாய்வு பிரிவு-6) தொல்லியல்…

371-ஆவது அரசியல் சாசன பிரிவு தமிழகத்துக்கு கிடைத்தால் மத்திய அரசு…

விழுப்புரம்: தமிழகத்துக்கு 371-வது அரசியல் சாசன பிரிவு தமிழகத்துக்கு கிடைத்தால் மத்திய அரசு எதிலும் தலையிட முடியாது என்று தருமபுரி எம்.பி.யும், பாமக இளைஞரணி தலைவருமான அன்புமணி ராமதாஸ் தெரிவித்தார். இடஒதுக்கீட்டுக்கான போராட்டத்தின் போது துப்பாக்கிச் சூட்டில் 21 பேர் பலியான தியாகிகள் நினைவு நாளை முன்னிட்டு விழுப்புரம்…

திருவனந்தபுரம் பத்மநாபசுவாமி கோவிலில் காணாமல் போன வைரகற்கள் மீட்பு

திருவனந்தபுரம், திருவனந்தபுரம் பத்மநாபசுவாமி கோவிலில் சில ஆண்டுகளுக்கு முன்பு காணாமல் போன பல கோடி ரூபாய் மதிப்புள்ள வைரகற்கள் மீட்கப்பட்டன. வைரகற்கள் மாயம் கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் பல நூற்றாண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்ட பிரசித்த பெற்ற பத்மநாபசுவாமி கோவில் உள்ளது. இந்த கோவிலில் சயன கோலத்தில் காட்சி தரும்…

ஆசிய நீச்சல் போட்டி: தங்கம் வென்ற நெல்லை மாணவன்!

உஸ்பெகிஸ்தான் நாட்டில் ஆசிய நீச்சல் போட்டி நடைபெற்றது இந்த நீச்சல் போட்டியில், இந்தியா சார்பாகக் நெல்லையை சேந்த் 9-ம் வகுப்புப் படிக்கும் மாணவர் லியோனார்ட் கலந்து கொண்டார். இந்தப் போட்டியில், திறமையாகச் செயல்பட்ட லியோனார்ட் தங்கம் வென்றுள்ளார். ஆசியப் போட்டியில் தங்கம் வென்று, சொந்த ஊருக்கு திரும்பிய அவருக்கு…

ரூ.100 கோடி சொத்தை உதறிவிட்டு துறவறம் போகும் தம்பதி…

பல கோடி சொத்துக்களை உதறிவிட்டு கணவன்,மனைவி துறவறம் செல்லும் விவகாரம் பலருக்கும் ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது. ராஜஸ்தான் மாநிலம் சித்தோர்கர் மாவட்டத்தை சேர்ந்த ஒரு பாஜக பிரமுகரின் மகள் அனாமிகா(34). இவர் சுமித் ரத்தோர் (35) என்பவரை 4 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் செய்து கொண்டார். இந்த தம்பதிக்கு 3…

பெற்றோரை முதியோர் இல்லத்தில் சேர்க்கும் அரசு ஊழியரா? 10% சம்பளம்…

திப்ருகர்: அதிக சம்பளம் வாங்கியும் வசதியாக உள்ள அரசு ஊழியர்கள் தங்களின் வயதான பெற்றோர்களை முதியோர் இல்லத்தில் சேர்த்தால், அவர்களின் சம்பளத்தில் இருந்து 10% பிடித்தம் செய்யப்படும் என்று அசாம் அரசு புதிய சட்டம் இயற்றியுள்ளது. இன்றைய சூழ்நிலையில் பெற்று வளர்த்து ஆளாக்கிய பெற்றோர்களை தவிக்கவிடுவது பலரது வாடிக்கையாக…

செம்மரம் வெட்டச்சென்ற தமிழர்கள் கைது: அரைநிர்வாணமாக ஆந்திரா சிறையில் சித்ரவதை

கடப்பா: ஆந்திரா மாநிலத்தில் செம்மரம் வெட்ட சென்றதாக கைது செய்யப்பட்ட தமிழர்கள் அரை நிர்வாணமாக சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். ஆந்திர போலீசார் சித்தரவதை செய்வதாக புகார் எழுந்துள்ளது. கடந்த 13 தேதி கடப்பா மாவட்டத்தில் இருந்து சித்தூருக்கு 3 பேருந்துகளில் தமிழகத்தைச் சேர்ந்தவர்கள் சென்று கொண்டிருந்த போது பலாப்பள்ளி சோதனைச்சாவடி…