காஷ்மீர் பிரச்சனையில் இஸ்லாமிய கூட்டமைப்பின் அழைப்பை சீனா நிராகரித்தது

India-Pak-China_SECVPFபெய்ஜிங், காஷ்மீர் பிரச்சனையை இந்தியா மற்றும் பாகிஸ்தான் இருதரப்பு பேச்சுவார்த்தையின் மூலம் தீர்த்துக்கொள்ள வேண்டும். பிரச்சனையில் ஐ.நா. தீர்மானத்தை பிரகடனம் செய்யவேண்டும் என்ற இஸ்லாமிய கூட்டமைப்பின் அழைப்பை சீனா நிராகரித்து உள்ளது.

காஷ்மீரில் பயங்கரவாதிகளை நுழைய செய்தும், இங்கிருக்கும் பிரிவினைவாதிகளுக்கு பண உதவி செய்தும், பயங்கரவாதிகளுக்கு எல்லா நிலைகளிலும் உதவி செய்தும் அமைதியின்மையை பாகிஸ்தான் செய்து வருகிறது. பாகிஸ்தானின் சதிதிட்டத்தை இந்தியா முறியடித்து வருகிறது. காஷ்மீரில் அமைதியின்மையை ஏற்படுத்த அனைத்து வழியிலும் முயற்சி செய்யும் பாகிஸ்தான், ஐ.நா.வில் பிரச்சனையை எழுப்பி வருகிறது. காஷ்மீர் விவகாரம் உள்நாட்டு விவகாரம் என இந்தியா கூறிவிட்டது, இம்முறையும் ஐ.நா.வில் பாகிஸ்தான் காஷ்மீர் பிரச்சனையை எழுப்பியது.

முன்னதாகவே காஷ்மீர் பிரச்சனையை எழுப்புவோம் என பாகிஸ்தான் கூறிய போது, நீங்கள் எழுப்பினாலும் யாரும் கேட்க தயாராக இல்லை என இந்தியா கூறிவிட்டது.

பாகிஸ்தான் கூறியது போன்றே ஐ.நா.வில் காஷ்மீர் பிரச்சனையை எழுப்பி பேசியது. காஷ்மீர் பிரச்சனையில் ஐ.நா. சபை தலையிட வேண்டும் என பாகிஸ்தான் பிரதமர் அப்பாஸி பேசிஉள்ளார். காஷ்மீர் பிரச்சனையை தீர்க்க சிறப்பு குழுவை ஐ.நா. அனுப்ப வேண்டும் என்றும், ஐ.நா. சபை காஷ்மீர் விவகாரத்தில் ஏற்கனவே கொண்டுவந்த தீர்மானத்தை நிறைவேற்ற வேண்டும் என்றும் அப்பாஸி பேசிஉள்ளார். பாகிஸ்தான் அங்கம் வகிக்கும் இஸ்லாமிய கூட்டமைப்பும் (இஸ்லாமியர்கள் அதிகமாக வாழும் இந்தியா கூட்டமைப்பில் உறுப்பினராக பாகிஸ்தான் எதிர்த்து வருகிறது.) காஷ்மீர் விவகாரத்தில் ஐ.நா. சபை தீர்மானத்தை நிறைவேற்ற வேண்டும் என அழைப்பு விடுத்து உள்ளது.

இஸ்லாமிய கூட்டமைப்பு ஐ.நா. சபையின் தீர்மானத்தை அமல்படுத்த வேண்டும் என அழைப்பு விடுத்து உள்ளநிலையில், சீனா இப்பிரச்சனையை இந்தியா மற்றும் பாகிஸ்தான் தீர்த்துக் கொள்ள அனுமதிக்க வேண்டும் என கூறிஉள்ளது. இதுதொடர்பான கேள்விக்கு பதிலளித்து பேசிய சீன வெளியுறவுத்துறை செய்தித் தொடர்பாளர் லு காங், “இதுதொடர்பான செய்தியை சீனாவும் கவனத்தில் கொண்டு உள்ளது. காஷ்மீர் விவகாரத்தில் சீனாவின் நிலைப்பாடும் தெளிவானது. வரலாற்றில் இருந்தே காஷ்மீர் பிரச்சனை தொடர்கிறது. இந்தியா மற்றும் பாகிஸ்தான் பேச்சுவார்த்தையை அதிகரிக்க முடியும் என சீனா நம்புகிறது.

இதுதொடர்பான பிரச்சனையை சரியான முறையில் கையாண்டு, கூட்டாக பிராந்திய அமைதி மற்றும் ஸ்திரத்தன்மையை பாதுகாக்க வேண்டும்,” என கூறிஉள்ளார்.

-dailythanthi.com

TAGS: