ஐநா சபை, கடந்த 1995 ஆம் ஆண்டிலிருந்து இந்தியா மிகவும் பாதிப்படைந்திருப்பதாகவும் அவர் கூறினார். இர்மா புயல் போன்றவை புதிய இயல்புகளாக மாறியுள்ளன. இது புவி வெப்பமடைதலையே சுட்டிக்காட்டுகின்றது என்றார் அவர்.
உயரும் கடல் மட்டங்களாலும், இதர பருவகால மாற்றங்களாலும் மில்லியன் கணக்கான மக்களும், பல லட்சம் கோடி மதிப்புள்ள சொத்துக்களும் ஆபத்தைச் சந்திக்கின்றன என்றார் பொதுச் செயலர் குட்டரேஸ்.
1970 ஆம் ஆண்டிலிருந்து இயற்கை சீற்றங்களின் எண்ணிக்கை மும்மடங்கு அதிகரித்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.
அமெரிக்கா, சீனா, இந்தியா, பிலிப்பைன்ஸ் மற்றும் இந்தோனேஷியா ஆகியவை அதிகளவிலான இயற்கைச் சீற்றங்களை 1995 ஆம் ஆண்டு முதல் சந்தித்துள்ளன. இதன் எண்ணிக்கை 1,600 ற்கும் அதிகம் என்ற குட்டரேஸ் அதாவது ஐந்து தினங்களுக்கு ஒரு இயற்கைச் சீற்றம் என்ற கணக்கில் இது நிகழ்ந்துள்ளது என்றார்.
உலகைக் காக்க தூய்மையான தொழில்நுட்பங்களை ஏற்படுத்தும் முயற்சி நிகழ்ந்து வருகிறது என்ற அவர் மறுசுழற்சி வளங்களின் விலை குறைந்து வருவது ஊக்கம் அளிப்பதாகவுள்ளது என்றார். இதனால் மாசின் அளவு குறையும் என்று நம்பிக்கைத் தெரிவித்தார்.
-dailythanthi.com