நெல்லையில் கொட்டப்படும் கேரள மாநில கழிவுகள்… அவதியுறும் மக்கள்!

garbageநெல்லை: கேரளாவில் இருந்து நெல்லை அருகே லாரிகளில் கொண்டு வந்து பல டன்கள் கழிவுகள் கொட்டப்படுவதால் பொதுமக்கள் தொற்றுநோய் அச்சத்தில் உள்ளனர்.

நெல்லை மாவட்டம் ஆலங்குளம் அருகே மாயமான்குறிச்சியில் 500க்கும் மேற்பட்ட குடியிருப்புகளும், குருவன்கோட்டையில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட குடியிருப்புகளும் உள்ளன.

இந்த இரண்டு கிராமங்களுக்கு இடையிலுள்ள மானூர் கால்வாய் பகுதியில் கடந்த சில நாட்களாக கேரள மாநிலம் எர்ணாகுளம் பகுதியில் இருந்து கழிவுகள் டன் டன்னாக லாரிகளில் கொண்டு வந்து கொட்டப்படுகிறது. மேலும், இந்தக் குப்பைகளை கொட்டும் மர்ம நபர்கள் இரவு நேரங்களில் கழிவுகளில் உள்ள மின் வயர்கள், பிளாஸ்டிகளை எரிப்பதால் அதிலிருந்து கிளம்பும் நச்சு புகையால் அப்பகுதி மக்கள் மூச்சு திணறலுக்கு ஆளாகி வருகின்றனர்.

தற்போது மழை பெய்து வருவதால் குப்பைக் கழிவுகளிலிருந்து தொற்றுநோய் ஏற்படும் என்ற அச்சத்தில் உள்ளனர். இதுகுறித்து அதிகாரிகளுக்கு புகார் கொடுத்தும் அவர்கள் நடவடிக்கை எடுக்காமல் இருப்பதால் பொதுமக்கள் அதிருப்தியில் உள்ளனர்.

இந்நிலையில் இரவில் அப்பகுதிக்கு குப்பைகளைக் கொட்ட வந்த லாரிகளை பொதுமக்கள் மடக்கி பிடித்து ஆலங்குளம் காவல் நிலையத்தில் ஓப்படைத்தனர். அதனைத் தொடர்ந்து போலீசார் விசாரணையில் ஈடுபட்டு வருகின்றனர்.

tamil.oneindia.com

TAGS: