புலிகள் அமைப்பினால் மட்டுமே தொடர்ந்தும் பாதுகாக்க முடியும்! தொடரும் ஈருருளிப்பயணம்..

தமிழின அழிப்புக்கு பரிகார நீதியை வலியுறுத்தி பெல்ஜியத்தில் ஆரம்பிக்கப்பட்ட மனிதநேய ஈருருளிப்பயணம் இன்று 8 வது நாளாக 80 km தூரம் சுவிஸ் நாட்டை ஊடறுத்து ஜெனிவா நோக்கி செல்கின்றது. இன்றைய தினம் சுவிஸ் வாழ் தமிழ் உறவுகள் இருவர் ஈருருளிப்பயணத்தில் இணைந்துகொண்டு தமது ஆதரவையும் தெரிவித்துள்ளனர். நாளைய தினம் ஈருருளிப்பயணம்…

காணாமல் போனோர் தொடர்பில் அரசு கூறும் நொண்டிச்சாட்டால் ஏமாற்றமடைகிறோம்: வவுனியா…

காணாமல் போனோர் தொடர்பாக அரசு கூறும் நொண்டிச்சாட்டால் வவுனியா வளாக ஆசிரியர் சங்கம் ஏமாற்றமடைகின்றது என வவுனியா வளாகத்தின் ஆசிரியர் சங்கம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. வவுனியாவில் காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்களுக்கு ஆதரவு தெரிவித்து யாழ் பல்கலைக்கத்தின் வவுனியா வளாகத்தினால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையிலேயே இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது. இவ் அறிக்கையில்…

2009இல் வவுனியா கம்பி வேலி முகாமுக்குள் நடந்த பலாத்காரம் –…

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 34ஆவது கூட்டத் தொடர் ஜெனிவாவில் ஆரம்பமாகியுள்ளது. இந்த கூட்டத் தொடர் இலங்கைக்கு முக்கியத்துவம் வாய்ந்த ஒன்றாக பார்க்கப்படுகின்றது. குறிப்பாக, 2015ஆம் ஆண்டு ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் கொண்டு வரப்பட்ட தீர்மானத்தை அமுல்படுத்துவதற்கு இலங்கை கால அவகாசம் கோரியுள்ளது. அத்துடன்,…

கேள்விகளால் தடுமாறி நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தை இலங்கைக்கு அழைத்த வெளிவிவகார…

இலங்கையில் இடம்பெற்ற அழிவுகளை சுட்டிக்காட்டி தனது குடும்பத்தாருக்கு ஏற்பட்ட அழிவுகள் மற்றும் தமிழ் மக்கள் மத்தியில் ஏற்பட்ட அழிவுகளை நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் மனித உரிமைகள் தொடர்பான அமைச்சர் மணிவண்ணன் பத்மநாபன் சுட்டிக்காட்டியுள்ளார். இலங்கையில் நல்லாட்சி என கூறி வெளிநாடுகளில் உள்ளவர்களை மீள் அனுப்புகிறது எனவும் ஆனால் அவர்களுக்கு…

வடக்குக்கு காணி பொலிஸ் அதிகாரங்கள் பகிரப்படவேண்டும்: அத்துரலியே ரத்தன தேரர்

வடக்கு மாகாணத்துக்கு காணி மற்றும் பொலிஸ் அதிகாரங்கள் வழங்கப்படல் அவசியம் என்று நாடாளுமன்ற உறுப்பினர் அத்துரலியே ரத்தன தேரர் தெரிவித்துள்ளார். இலங்கை தேசிய பேரவையின் நிகழ்வு ஒன்றில் உரையாற்றும்போது அவர் இந்த கருத்தை வெளியிட்டுள்ளார். புதிய அரசியலமைப்பின் மூலம் தேசிய இனப்பிரச்சினையை தீர்க்கலாம் என்று பலரும் கூறுகின்றனர். இதனை…

ஜெனிவாவில் இன்று இலங்கை தொடர்பில் ஒற்றை வரியுடன் முடித்த அமெரிக்கா?

இலங்கை தொடர்பில் அமெரிக்காவின் நிலைப்பாடு இன்று ஜெனிவாவில் வெளிப்படுத்தப்படலாம் என்று எதிர்பார்க்கப் பட்ட நிலையில் ஒற்றை வரியுடன் அமெரிக்கா உரையாற்றியுள்ளது. ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் 2015 ஒக்ரோபரில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தை இலங்கை முழுமையாக நடைமுறைப்படுத்தவில்லை. இந்த நிலையில், இலங்கைக்கு கால அவகாசத்தை வழங்கும் தீர்மானம் ஒன்று கொண்டு…

கேப்பாப்புலவு மக்களின் போராட்டத்திற்கு வெற்றி : சொந்த மண்ணில் கால்…

கேப்பாப்புலவு பிலக்குடியிருப்பில் விமானப்படையினர் வசம் இருந்த மக்களின் காணிகள் விடுவிக்கப்பட்டுள்ளன. இதனடிப்படையில் 54 பேரின் காணிகள் விடுவிக்கப்பட்டுள்ளதாக மாவட்ட அரசாங்க அதிபர் உத்தியோகபூர்வமாக தெரிவித்துள்ளார். குறித்த காணிகள் இன்று 12 மணியளவில் விடுவிக்கப்பட்டுள்ளதுடன், விடுவிக்கப்பட்ட காணிகளை உரிமையாளர்கள் பார்வையிட்டு வருவதாக தெரிவிக்கப்படுகிறது.   இதேவேளை மிகுதி காணிகள் விடுவிக்கப்படாததால்,…

புலம்பெயர் இலங்கை தமிழர்களுக்கு இரட்டை குடியுரிமை: முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி

தமிழ் நாட்டில் உள்ள புலம்பெயர் இலங்கை தமிழர்களுக்கு இரட்டை குடியுரிமை வழங்குவது குறித்து இந்திய பிரதமர் நரேந்திர மோடிக்கு குறிப்பாணை ஒன்றை தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி வழங்கியுள்ளார். இலங்கைத் தமிழர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் குறித்தும் குறிப்பாணையில் குறிப்பிடப்பட்டிருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதேவேளை, மாநிலத்தில் உள்ள 23 பிரச்சினைகள் தொடர்பிலும்…

நாங்கள் உங்களைக் கொல்லுவோம், கொல்லவில்லை என்றும் தீர்ப்போம்! எவனும் தலையிட…

போர்க்குற்ற விசாரணையில் சர்வதேச நீதிபதிகளுக்கு அறவே இடமில்லை என்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மீண்டும் நிறுதிட்டமாகக் கூறியுள்ளார். சர்வதேச நீதிபதிகளை இலங்கைக்குள் அனுமதிப்பதில்லை என்று முன்பும் ஒருதடவை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கூறியிருந்தார். அவரின் இக்கருத்து இலங்கையின் ஆட்சிப் பீடத்துக்கு ஏதும் புதிதானதல்ல. தேர்தல் காலத்தில் நல்ல அரசியல்வாதிகளாக…

தாயக உறவுகளுக்கு சர்வதேசத்தில் உரத்து குரல் கொடுக்க வேண்டும்: கஜேந்திரகுமார்…

நீதிக்காக போராடும் தாயக உறவுகளுக்கு, புலம்பெயர் தமிழர்கள் சர்வதேசத்தில் உரத்து குரல் கொடுக்க வேண்டும் என தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்துள்ளார். தமிழின அழிப்புக்கு நீதிகேட்டு எதிர்வரும் ஆறாம் ஐ.நா நோக்கி உலகத் தமிழ் உறவுகள் மாபெரும் பேரணியில் ஈடுபடவுள்ளனர். இதில் அனைத்து தமிழர்களும்…

இலங்கையை பாராட்டியுள்ள புதிய ஐநா பொதுச்செயலர்!

ஜெனிவாவுக்குப் பயணம் மேற்கொண்டுள்ள இலங்கை வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர, ஐ.நா பொதுச்செயலர் அன்ரனியோ குரெட்டஸை நேற்று சந்தித்துப் பேச்சு நடத்தினார். கடந்த ஜனவரி முதலாம் நாள் புதிய ஐ.நா பொதுச்செயலராகப் பொறுப்பேற்ற பின்னர் அன்ரனியோ குரெட்டஸை, வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர, முதல்முறையாகச் சந்தித்துள்ளார். இந்தச் சந்திப்பின்…

யாழில் இரு குழுக்களிடையே மோதல்! கத்திகள், சைலன்சருடன் அட்டகாசம் செய்த…

யாழ்ப்பாணம் பிரதான வீதியிலுள்ள மடத்தடியில் இரு குழுக்களிடையே கடுமையான மோதல் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. குறித்த மோதல் மடத்தடியிலுள்ள சுகாதார நிலையம் ஒன்றுக்கு அருகில் நேற்று மாலை வேளையில் நடந்துள்ளதாகவும், இதனால் குறித்த பகுதியில் பதற்ற நிலை தோன்றியதாகவும் குறிப்பிடப்படுகின்றது. கத்திகள், வாள்கள், சைலன்சர் மற்றும் பல ஆயுதங்களுடன் சுமார்…

இலங்கையை குறி வைக்கும் ட்ரம்ப் : பிரேரணையை கொண்டுவருகிறது அமெரிக்கா

ஐ.நா மனித உரிமைகள் பேரவையில், இலங்கை தொடர்பான பிரேரணை இம்முறை பிரித்தானியா முன்வைக்கும் எனத் தெரிவிக்கப்பட்டிருந்த நிலையில், குறித்த பிரேரணையை இம்முறையும் அமெரிக்காவே முன்வைக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஏனைய நாடுகளுடன் இணை அனுசரனையுன் குறித்த பிரேரணையை இம்முறையும் அமெரிக்காவே முன்வைக்கும் வாய்ப்புகள் இருப்பதாக, கொழும்பு ஆங்கில நாளிதழ் ஒன்று…

ஈழத் தமிழர் பிரச்சினையும் இந்திய நிலைப்பாடும் – அனைத்துலக ஊடகம்

இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி மார்ச் 2015ல் சிறிலங்காவிற்கு வரலாற்று முக்கியத்துவம் மிக்க பயணம் ஒன்றை மேற்கொள்ளும் வரை, ஈழத்தமிழ் மக்களின் பிரச்சினை தொடர்பாக அமைதி காத்தே வந்திருந்தார். இவர் சிறிலங்காவிற்கு வருகை தந்த பின்னர் , ஈழத்தமிழர் விவகாரம் தொடர்பான தனது அணுகுமுறையையும் மீள ஆராய்வதற்கான தக்க…

அமரர் எஸ்.ஜி. சாந்தன் அவர்களுக்கு தமிழீழத்தின் அதியுயர் ‘மாமனிதர்’ விருது…

தமிழீழத்தின் முன்னணிப்பாடகராக திகழ்ந்த எஸ். ஜி. சாந்தன் அவர்கள் சாவடைந்த செய்தி தமிழ்மக்கள் அனைவரையும் ஆறாத்துயரத்தில் ஆழ்த்தியுள்ளது. தனது இசை ஞானத்தால் மக்களை பரவசப்படுத்தி எழுச்சியை ஏற்படுத்திய குரல் ஓய்ந்துவிட்டது. தாயகப்பாடல்களையும், பக்திப்பாடல்களையும் பாடுவதிலும், நடிப்பதிலும் வல்லவராக இருந்தவர். தொடக்ககாலப்பகுதியில் இசைக்குழுவொன்றிலும் பாடிக்கொண்டிருந்தார். “அரிச்சந்திர மயானகாண்டத்தில்” தன் சிறப்பான…

ஈழ மக்களுக்கு ஆதரவாக லண்டனில் வெடித்தது போராட்டம்… ஆயிரக்கணக்காணவர்கள் பங்கேற்பு

இலங்கையில் தமிழ் மக்கள் முகம் கொடுத்துள்ள பிரச்சினைகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து புலம் பெயர் தமிழ் மக்களினால் லண்டனில் கவனயீர்ப்பு போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது. குறித்த போராட்டம் 10 Downing Street , Westminster , London SW14 2AA எனும் இடத்தில் இன்று மாலை 4 மணி முதல்…

17ஆவது நாளாகவும் தொடரும் கேப்பாப்புலவு மக்களின் போராட்டம்

கேப்பாப்புலவு மக்களின் போராட்டம் இன்றோடு 17ஆவது நாளாகவும் தொடர்கின்றது இந்த நிலையில் தமது போராட்டத்தினை நிறைவு செய்வதற்கு விரைவில் காணிகள் விடுவிக்கப்படவேண்டும் என கேப்பாப்புலவு மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். மேலும் எமக்கு உரிய தீர்வு கிடைக்கும் வரை இந்த போராட்டம் தொடரும் இவற்றை குழப்ப நினைப்பவர்கள் விலகி நின்று…

காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளின் போராட்டத்திற்கு சிங்கள மற்றும் முஸ்லிம் மக்கள்…

வவுனியாவில் காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளின் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து சிங்கள மற்றும் முஸ்லிம் மக்களும் ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டுள்ளனர். இவ்வாறு போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து தென்னிலங்கையைச் சேர்ந்த மக்களே இணைந்துள்ளனர். அத்துடன் காணாமல் போன ஊடகவியலாளர் பிரகீத் எக்னலிகொடவின் மனைவி அத்துடன் முஸ்ஸிம் மற்றும் சிங்கள மக்கள் இப்போராட்டத்தில்…

இலங்கையர்களுக்கு அரசியல் தஞ்சம் மறுப்பு! அமெரிக்காவின் முன்னாள் புலனாய்வு அதிகாரி…

தனது உயிரை காப்பாற்றுவதற்காக பாரிய அர்ப்பணிப்புக்களை மேற்கொண்ட இலங்கையர்களின் நிலை குறித்து கவலை அடைவதாக அமெரிக்காவின் முன்னாள் புலனாய்வு அதிகாரி எட்வர்ட் ஸ்னோவ்டன் தெரிவித்துள்ளார். குறித்த இலங்கை தம்பதிக்கு ஹொங்கொங்கில் அரசியல் பாதுகாப்பு வழங்கப்படாமை “விபரிக்க முடியாத சோகம்” என ஸ்னோவ்டன் குறிப்பிட்டுள்ளார். தற்போது ரஷ்யாவில் அரசியல் தஞ்சம்…

விடுதலைப் புலிகள் இல்லாத போது அவர்களைத் தூற்றுவது கோழைத்தனம்

விடுதலைப் புலிகளின் தலைவர் வே. பிரபாகரன் ஒரு மாவீரன் என்று இலங்கையின் இராணுவத் தளபதிகளே போற்றுமளவில் விடுதலைப் புலிகள் அமைப்பும் அதன் தலைமையும் இருந்ததென்பது மறுக்க முடியாத உண்மை. தமிழினம் பற்றி இந்த உலகம் நினைக்கவும் சிந்திக்கவும் தலைப்பட்டமைக்கு விடுதலைப் புலிகளின் தலைவர் வே. பிரபாகரனே காரணம் என்றால்…

எனக்கு வேதனையாக உள்ளது! வெளிப்படையாகவே சொல்கிறேன்! நாடாளுமன்றத்தில் சம்பந்தன்

தமிழ் மக்களிடம் இருந்து பறிமுதல் செய்யப்பட்ட காணிகள் அனைத்தும் விடுவிக்க வேண்டுமென எதிர்க் கட்சித் தலைவர் இராஜவரோதயம் சம்பந்தன் தெரிவித்துள்ளார். நாடாளுமன்றத்தில் சபை ஒத்திவைப்பு பிரேரணையின் போது இடம்பெற்ற விவாதத்திலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். அங்கு உரையாற்றிய எதிர்க் கட்சித் தலைவர், சிறுபான்மையினர்களுடைய பகுதிகள் தொடர்ந்தும் விடுதலை செய்யப்படாமல்…

சர்வதேசத்தை மட்டுமல்ல தமிழரையும் வென்றால்தான் நல்லாட்சி!

எதிர்க்கட்சித் தலைவர் இரா சம்பந்தன் கடந்த புதன்கிழமை பாராளுமன்றத்தில் ஆற்றிய உரை அரசாங்கம் உட்பட தென்னிலங்கை அரசியல் சக்திகளால் மிக ஆழமாக சிந்திக்கத் தூண்டுவதாக நோக்க வேண்டியுள்ளது. நல்லாட்சி அரசு மீது தமிழ் மக்கள் வைத்திருக்கும் பாரிய நம்பிக்கை மீது ஒரு இடைவெளி ஏற்பட்டிருப்பதாகச் சுட்டிக்காட்டி இருக்கும் எதிர்க்கட்சித்…

அகதிகள் குறித்து சர்வதேச ரீதியில் இணைந்து செயற்பட வேண்டும்: ஜனாதிபதி

சட்டவிரோதமான முறையில் புலம்பெயர்ந்து வருவோர் தொடர்பில் சர்வதேச ரீதியில் இணைந்து செயற்பட வேண்டியது அவசியமான ஒன்று என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இதனை தெரிவித்துள்ளார். புலம்பெயர்வோர் சுகாதாரம் தொடர்பான சர்வதேச ஆலோசனை மாநாட்டின் நிறைவு நிகழ்வு இன்று இடம்பெற்றது. கொழும்பில் இடம்பெற்ற இந்த நிகழ்வில் கலந்துகொண்டு கருத்து…