நந்திக்கடல்… நீடிக்கும் மர்மம்! – ஈழத்திலிருந்து நேரடி ரிப்போர்ட்!

ஐ.நா மனித உரிமைகள் பேரவை அமைந்திருக்கும் ஜெனிவா நகருக்கு நிகராக, ஒட்டுமொத்த இலங்கையின் கவனத்தையும் ஈர்த்திருக்கிறது, ‘கேப்பாப்புலவு’. முள்ளிவாய்க்காலுக்குக் கூப்பிடு தொலைவில் இருக்கிறது இந்தக் கிராமம். ‘கேப்பாப்புலவு எமது நிலம்… எமது நிலத்தைத் திருப்பிக் கொடு’ என்கிற ஒற்றைக் கோரிக்கையுடன், இராணுவ முகாமை முற்றுகையிட்டிருக்கிறார்கள், கேப்பாப்புலவு மக்கள். அதிலும்…

புலம்பெயர் அமைப்புக்களின் செயற்பாடுகளை எண்ணி வெட்கித் தலைகுனிகிறேன்! யாழில் இருந்து…

ஐக்கிய நாடுகள் சபையின் 34 ஆவது கூட்டத்தொடரில் முன்வைக்கப்படவுள்ள பிரேரணையில் பல்வேறு சட்டச்சிக்கல்கள் காணப்படுவதாக தெரிவிக்கப்படுகிறது. இது தொடர்பில் சட்டத்தரணி சுகாஷ் லங்காசிறிக்கு கருத்து தெரிவிக்கையில், தற்போது இலங்கைக்கு கால அவகாசம் வழங்குவதா அல்லது இல்லையா என்பதே அனைவரையும் குழப்பத்தில் ஆழ்த்தியுள்ளது. ஏற்கனவே இலங்கைக்கு வழங்கப்பட்ட கால அவகாசத்தினை…

கடும் நிபந்தனையுடன் கால அவகாசம் வழங்க தமிழ் தேசியக் கூட்டமைப்பு…

கடும் நிபந்தனையுடன் கால அவகாசம் வழங்குவதற்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தீர்மானம் நிறைவேற்றியுள்ளது. அதில் அங்கத்துவம் வகிக்கும் ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி கட்சி (ஈபிஆர்எல்எப்) மாத்திரம் இதில் உடன்படவில்லை என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற மற்றும் மாகாணசபை…

தெரியாமல் தமிழ் தலைமைகளை தெரிவு செய்துவிட்டோம்..! ஜெனிவாவில் வெளிப்பட்ட ஆதங்கம்

கடந்த அரசாங்கத்தின் ஆட்சியாரள்களை மாற்றியமைக்க தமிழ் மக்களுடன் கைகோர்த்து நின்றவர்கள், ஆட்சி மாற்றத்தின் பின்னர் ஜனாதிபதி மற்றும் பிரதமரின் செயற்பாடுகள் குறைவடைந்துள்ளது. காணாமல் போனவர்கள் குறித்து விசாரணை செய்வதற்கு அரசாங்கத்தினால் ஓ.எம்.பி கொண்டு வரப்பட்டுள்ள போதிலும், அதில் எந்தவொரு பயனும் இல்லை. இலங்கையில் இடம்பெற்ற யுத்தக்குற்றச்சாட்டுகள் தொடர்பில் ஓ.எம்.பி…

இரண்டு ஆண்டுகள் பொறுமைகொள்ள முடியாது : சம்பந்தன் சபையில் கொந்தளிப்பு

வடக்கு கிழக்கு உள்ளிட்ட பகுதிகளில் படையினரின் கட்டுப்பாட்டில் இருக்கும் காணிகளை விடுவிக்க இரண்டு ஆண்டுகள் காத்திருக்க முடியாது என எதிர்க்கட்சி தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார். பாராளுமன்றில் நேற்றைய தினம் உரையாற்றிய அவர் இதனை தெரிவித்துள்ளார். தொடர்ந்தும் கருத்து தெரிவித்த அவர், ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 34ஆவது…

கூட்டமைப்பின் நோக்கத்திற்காக செயற்படும் அரசாங்கம்! சமஷ்டியை அடைய சம்பந்தன் எடுத்த…

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நாட்டை இரண்டாகப் பிரிக்கும் சமஷ்டி அரசியலமைப்பையே கோருகிறது. அதனை அடைந்துகொள்வதற்காகவே 2015 ஆம் ஆண்டு ஜனவரி 8 ஆம் திகதி இந்த அரசாங்கத்தை ஆட்சிபீடமேற்றுவதற்கு ஒத்துழைப்பு வழங்கினர் என பாராளுமன்ற உறுப்பினர் பத்ம உதயஷாந்த குணசேகர தெரிவித்துள்ளார். தேசிய சுதந்திர முன்னணி ஏற்பாடு செய்த…

போர்க்குற்றங்கள் தொடர்பில் ஐ.நா பேரவையில் முறைப்பாடு செய்யுமாறு விடுத்த கோரிக்கை…

போர்க்குற்றச் செயல்கள் தொடர்பில் ஐக்கிய நாடுகள் பாதுகாப்புப் பேரவையில் முறைப்பாடு செய்யுமாறு விடுத்த கோரிக்கை நிராகரிக்கப்பட்டுள்ளதாக சிங்கள ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது. போர்க்குற்றச் செயல்கள் தொடர்பில் இலங்கை அரசாங்கத்தை, ஐக்கிய நாடுகள் பாதுகாப்புப் பேரவையில் முன்நிறுத்த வேண்டுமென ஈழப் புலம்பெயர் அமைப்புக்கள் ஐந்தும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் 11…

கொல்லப்பட்டார்களா..? அப்படியானால் உத்தரவிட்டது யார்..? பாராளுமன்றில் பெரும் சர்ச்சை

வடக்கு மற்றும் கிழக்கில் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் தொடர்போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் தமிழ் தேசியக் கூட்டமைப்பு இந்த விடயம் தொடர்பில் பாராளுமன்றில் கேள்வியெழுப்பியுள்ளது. கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் காணாமல் போனவர்கள் குறித்து பாராளுமன்றில் இன்று கேள்வியெழுப்பியுள்ளார். இதன் போது தொடர்ந்தும் கருத்து தெரிவித்த அவர், இறுதி…

முல்லைத்தீவில் இருந்து ஜெனிவாவில் ஒலித்த பெண்ணின் ஆதங்கம்!! நெகிழ்ச்சியான பதிவுகளுடன்…

இலங்கை அரசு பின்நோக்கியே செல்வதாக காணாமல் போனோர் அமைப்பின் ஏற்றபாட்டாளரும் மன்னார் மறை மாவட்ட அருட்தந்தையுமான செபமாலை தெரிவித்துள்ளார். ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் 34வது கூட்ட தொடர் ஜெனிவாவில் இடம்பெற்றுக் கொண்டிருக்கின்றது. இந்நிலையில், ஜெனிவா சென்றுள்ள அருட்தந்தை செபமாலை லங்காசிறி 24 செய்திச் சேவைக்கு கருத்து தெரிவித்தார்.…

ஐ.நா மனித உரிமை ஆணையாளரின் பரிந்துரைகளை ஏற்றுக்கொள்ள முடியாது!

ஐ.நா மனித உரிமை ஆணையாளரின் அறிக்கை இறையாண்மை கொண்ட நாட்டைக் கட்டுப்படுத்தாது என்றும், அவரது அறிக்கையில் உள்ள எல்லா பரிந்துரைகளையும் ஏற்றுக்கொள்ள முடியாது என்றும் சிறிலங்காவின் பிரதி வெளிவிவகார அமைச்சர் ஹர்ஷ டி சில்வா தெரிவித்துள்ளார். கொழும்பில் நேற்று நடத்திய செய்தியாளர் சந்திப்பில் அவர், ஐ.நா மனித உரிமை…

குடும்பமாக சரணடைந்த விடுதலைப் புலி உறுப்பினர்கள் காணாமல் போனது எப்படி?…

குடும்பமாக சரணடைந்த விடுதலைப் புலி உறுப்பினர்கள் பல பேர் காணாமல் போயிருக்கிறார்கள். அவர்களுக்கு என்ன நடந்தது என்பது குறித்து நீதியான முறையில் விசாரணைகளை இந்த அரசாங்கம் மேற்கொள்ள வேண்டும் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் கேள்வி எழுப்பியுள்ளார். நாடாளுமன்றத்தில் இன்று நிகழ்த விவாதத்தின்…

பிரித்தானியாவில் எழுச்சிப் போராட்டம் வித்தியாசமான முறையில் உருப்பெற்றுள்ளது!

பிரித்தானியாவில், புலம்பெயர்ந்து வாழும் இலங்கைத்தமிழ் மக்களால் முன்னெடுக்கப்பட்ட அறவழி உண்ணாவிரத போராட்டமானது 10ஆவது நாளாக இன்றும் தொடர்கின்றது. இந்த போராட்டம் தமிழ் மக்களின் கோரிக்கைகளை ஐக்கிய நாடுகள் சபையிடம் முன்வைக்கும் முகமாகவும், தமிழ் மக்களின் பிரச்சினையை முன்னிறுத்தியும் முன்னெடுக்கப்பட்டுக் கொண்டிருக்கின்றது. கடுமையான குளிர், கொட்டும் மழை, அதிவேகமான காற்றுக்கு…

இலங்கை தொடர்பான அமெரிக்காவின் அறிக்கை வெளியானது! ஈழத்தமிழர்கள் அதிர்ச்சியில்

ஜெனிவாவில் நடைபெற்றுக்கொண்டிருக்கும் மனித உரிமைகள் கூட்டத்தொடரில் இலங்கை தொடர்பான அமெரிக்காவின் அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. ஈழத்தமிழர் தரப்புக்கு சாதகமாக அமையும் என எதிர்பார்த்திருந்த குறித்த அறிக்கை, தமிழர்களுக்கு பெரும் ஏமாற்றத்தையே கொடுத்துள்ளது. இதில் இலங்கை அரசை காப்பாற்றும் வகையிலேயே இலங்கை தொடர்பான அமெரிக்காவின் அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. https://youtu.be/L2Q3pbTb-Uo -http://www.tamilwin.com  

இந்தியாவுடன் சிரித்துக் கொண்டே கைலுக்கி தமிழக மீனவரை படுகொலை செய்த…

ராமேஸ்வரம்: எங்கள் நட்புநாடு என இந்திய தலைவர்களுடன் சிரித்தபடியே கைகுலுக்கிக் கொள்ளும் சிங்கள சிறிசேனாதான் இப்போது அப்பாவி தமிழக மீனவரின் உயிரை கோரமாக குடித்திருக்கிற கொடூரத்தை நிகழ்த்தியுள்ளார். சிறிசேன இலங்கை அதிபரான பின்னர் நடந்தேறிய முதலாவது தமிழக மீனவர் படுகொலை இது. இலங்கை அதிபர்களாக இருந்த ஜெயவர்த்தனே, சந்திரிகா…

ஐ.நாவின் புதிய தீர்மானத்திலும் இலங்கை அரசுக்குக் கடும் அழுத்தம்

இலங்கை தொடர்பாக ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் கொண்டுவரப்படவுள்ள புதிய தீர்மானத்தில், 2015 தீர்மானத்தில் தெரிவிக்கப்பட்டுள்ள விடயங்களை நடைமுறைப்படுத்துவதில் ஏற்பட்டுள்ள முன்னேற்றங்கள் குறித்து தொடர்ந்தும் பேரவைக்கு அறிக்கை சமர்ப்பிக்கவேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது. குறிப்பிட்ட தீர்மானத்தின் நகல்வடிவம் மீது இன்று விவாதம் நடைபெறவுள்ள நிலையில் இந்த நகல் வடிவத்தை…

ஐநா தாமத அட்டுழியங்கள் மின்னஞ்சலில் வந்த செய்தி..காலத்தை அரசியலாக்கும் மகாப்பாவிகள்…

ஐநா மனித உரிமைப் பேரவையில் இலங்கை: உண்மை நிலை என்ன? ஐநா மனித உரிமைகள் பேரவையின் 34 ஆம் கூட்டத்தொடரில் இலங்கை மீதான விவாதம் 2017 மார்ச் 22 ஆம் நாள் வர இருக்கிறது. இதுகுறித்த சில கேள்விகளும் பதிலும் கீழே: 1. ஐநா மனித உரிமைகள் பேரவையில்…

எங்களது போராட்டங்களை கொச்சைப்படுத்தாதீர்கள் : வவுனியாவில் காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள்…

எங்களது போராட்டங்களையும், ஆதரவு தருபவர்களையும் கொச்சைப்படுத்துகிறீர்கள். இதனால் நாங்கள் நாதியற்றவர்களாக, மனவேதனையுடன் போராடுகிறோம் என வவுனியாவில் போராடும் காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் தெரிவித்துள்ளனர். வவுனியாவில் காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் இன்று 11 ஆவது நாளாகவும் தமது சுழற்சி முறையிலான உண்ணாவிரதப் போராட்டத்தை மேற்கொண்டு வருகின்றனர். போராட்டகாரர்கள் கருத்து தெரிவிக்கையிலேயே…

‘ஜனாதிபதி ஏமாற்றிவிட்டார்’ நடுவீதியில் அமர்ந்த வடமாகாண சபை உறுப்பினரும் மக்களும்

காணாமல் போனவர்களின் உறவினர்களையும், பட்டதாரிகளையும் சந்திப்பதாக கூறி அழைத்த ஜனாதிபதி பின்னர் சந்திக்காமல் சென்றுள்ள நிலையில் வடமாகாண சபை உறுப்பினர் சிவாஜிலிங்கம் உட்பட மக்கள் அனைவரும் நடுவீதியில் அமர்ந்து போராட்டம் நடத்தியுள்ளனர். ஜனாதிபதியின் வருகையை ஈர்க்கும் வகையில் காணாமல் ஆக்கப்பட்டோர் மற்றும் இராணுவத்தில் சரணடைந்தவர்களின் உறவினர்கள் என அனைவரும்…

முன்னாள் போராளிகளினால் நாட்டுக்கு ஆபத்து – கண்காணிக்குமாறு ஜனாதிபதிக்கு அறிவுரை…

வடக்கு கிழக்கில் இராணுவத்தையும் புலனாய்வுப் பிரிவினையும் அதிகரிக்குமாறு முன்னாள் பிரதி அமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரன் எனப்படும் (கருணா) கோரிக்கை விடுத்துள்ளார். ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் அவர் இந்தக் கோரிக்கையை முன்வைத்துள்ளார். கொழும்பு பத்திரிகையொன்றுக்கு அளித்த நேர்காணலில் அவர் இதனைத் தெரிவித்துள்ளார். அவர் மேலும் கூறுகையில்… வடக்கு கிழக்கு மாகாணங்களில்…

தமிழர்களும் சிங்களவர்களும் ஏன் ஒற்றுமையாக இருக்க முடியாது? யாழில் ஜனாதிபதி…

வடக்கில் பாதிக்கப்பட்ட தமிழ் மக்களுக்கு அபிவிருத்தி செய்வதே ஜனாதிபதியின் உண்மையான அபிலாசை என வடமாகாண ஆளுநர் ரெஜினோல்ட் குரே தெரிவித்தார். யாழ்ப்பாணத்தில் “ஜனாதிபதியிடம் சொல்லுங்கள்” அலுவலகத்தை திறந்து வைக்கும் நிகழ்வு இன்று இடம்பெற்றது. இதில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே வடமாகாண ஆளுநர் இதை குறிப்பிட்டார். தொடர்ந்து உரையாற்றுகையில்,…

இலங்கையில் சமஸ்டி ஆட்சி நிறுவப்பட வேண்டுமென ஐ.நா பிரதிநிதி பரிந்துரை

இலங்கையில் சமஸ்டி முறைமையிலான ஆட்சி நிறுவப்பட வேண்டுமென ஐக்கிய நாடுகள் அமைப்பின் பிரதிநிதியொருவர், ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையில் பரிந்துரை செய்துள்ளார். ஐக்கிய நாடுகள் அமைப்பின் சிறுபான்மையின மக்கள் தொடர்பான பிரதிநிதி ரீடா ஐசாக் இதனைத் தெரிவித்துள்ளார். இலங்கையின் இனப்பிரச்சினைக்கு நிரந்தர தீர்வாக அதிகாரங்கள் பகிரப்பட வேண்டுமெனவும்,…

யுத்தம் முடிந்து 8 வருடங்கள் நிறைவடைந்துள்ள போதிலும் மக்களின் பிரச்சினைகள்…

எமக்கிடையில் பிரிவினையை ஏற்படுத்த வடக்கு, தெற்கு மற்றும் வெளிநாடுகளில் உள்ள நிறைய பேர் சதி செய்கின்றனர். இதனை பேஸ்புக் ஊடாக அவதானிக்க முடியும். குறிப்பாக நான் பேஸ்புக் பார்ப்பதும் இல்லை. இது போன்ற விடயங்களை தொடர்ந்து பார்ப்பதால் ஒரு பயனும் இல்லையென ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இன்று யாழில்…

இலங்கை பொறுப்புக் கூறல் விடயங்களில் மந்த கதியில் செயற்படுகிறது: சையிட்…

ஜெனீவாவில் நடைபெற்றுவரும் ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையின் 34வது கூட்டத் தொடரில் எதிர்வரும் 22ஆம் திகதி இலங்கை தொடர்பிலான அறிக்கையை ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணையாளர் சமர்ப்பிக்கவுள்ளார். அந்த அறிக்கை தற்போது வெளியாகியுள்ளது. அதிலேயே மேற்கண்டவாறு குறிப்பிடப்பட்டுள்ளது.   அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது, “இலங்கையில் கால…