காணமல்போனோரின் உறவினர் முன்னே கண்கலங்கிய ஜோன் ரொரி!

கனடா- ரொறன்ரோ நகரின் மாநகராட்சி மன்றத்தலைவர் ஜோன் ரொரி இன்று முள்ளிவாய்க்கால் சென்றுள்ள நிலையில் அவர் முல்லைத்தீவில் கவனயீர்ப்பு போராட்டத்தில் கலந்திருக்கும் காணமல் போனோர்களின் உறவினர்களுடன் சந்தித்து கலந்தரையாடியுள்ளார். குறித்த பிரமுகருடன் வடக்கு மாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன், வடமாகாணசபை உறுப்பினர் துரைராசா ரவிகரன், விவசாய அமைச்சர் பொ.ஐங்கரநேசன் மற்றும்…

முள்ளிவாய்க்கலில் அஞ்சலி செலுத்தினார் சர்வதேச முக்கிய பிரமுகர்

கனடா- ரொறன்ரோ நகரின் மாநகராட்சி மன்றத்தலைவர் ஜோன் ரொர்ரி (John Tory) இன்று முள்ளிவாய்க்கலுக்கு விஜயம் செய்துள்ளார். இந்த விஜயத்தின் போது 2009 ஆம் ஆண்ட இறுதியுத்தத்தின் போது பல ஆயிரக்கணக்கான பொதுமக்கள் கெல்லப்பட்டு அடக்கம் செய்யப்பட்ட பகுதிக்கு சென்றுள்ளார். இதன்போது அவர் அங்குள்ள பொது முள்ளிவாய்க்கால் நினைவேந்தல்…

புலிகளுடனான இறுதி யுத்தம் : உண்மை நிலவரத்தை ஜனாதிபதிக்கு வழங்க…

புலிகளுடனான இறுதி யுத்தத்தின் போது இடம்பெற்ற விடையங்கள் தொடர்பில் இராணுவத்தினர் தங்களது உண்மையான நிலைப்பாட்டினை ஜனாதிபதிக்கு வாய்மொழிமூலமான அறிக்கையினை கையளிக்க விரும்புவதாக, தேசிய அமைப்புக்களின் ஏற்பாட்டாளர் பெங்கமுவேநால தேரர் நேற்று ஜனாதிபதி செயலகத்தில் அறிக்கை ஒன்றினை கையளித்திருந்தார். குறித்த விடயத்தினை ஜனாதிபதிக்கு தெரிவிக்குமாறு கோரி ஜனாதிபதியின் உதவி செயலாளர்…

அதிக வட்டிக்கு கடன் – வடக்கில் தற்கொலை செய்து கொள்வோரின்…

வடமாகாணத்தில் வட்டிக்கு கடன்பெற்று, அதனை மீள செலுத்த முடியாமையால் தற்கொலை செய்து கொள்வோரின் எண்ணிக்கை அதிகரி்துள்ளது. யுத்தத்தின் பின்னர் வடபகுதி மக்களின் வாழ்வாதாரத்தை உயர்த்துவதற்காக பல்வேறு வேலைத்திட்டங்கள் இதுவரை மேற்கொள்ளாமையினால் இந்த நிலை ஏற்பட்டுள்ளது. கைத்தொழில் மற்றும் பயிர்செய்கை நடவடிக்கைகளுக்காக பல்வேறு நிதி நிறுவனங்கள் அதிக வட்டிக்கு கடன்…

படையினரை சர்வதேச நீதிமன்றத்தில் முன்னிறுத்த முயற்சிகளா?!– மறுக்கிறார் ரணில்

இலங்கை பாதுகாப்பு தரப்பினரை நீதிமன்றத்தில் முன்நிறுத்தும் எந்தவித முயற்சியும்மேற்கொள்ளப்படவில்லை என பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். கொழும்பில் நேற்று இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே அவர்இதனை தெரிவித்தார். இவ்வாறான நிலையில், பாதுகாப்பு படையினரை சர்வதேச நீதிமன்றத்தின் முன் கொண்டுசெல்வதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்படுவதாக சில தரப்பினர் குற்றம் சாட்டுகின்றனர்.…

இலங்கைக்கு கால அவகாசம் வழங்க கூடாது! ஐ.நாவிடம் இந்தியா சிவில்…

மனித உரிமை ஆணையகத்துக்கு கையளிக்க வேண்டிய கோரிக்கை மனுவை தமிழ்நாடு,பாண்டிச்சேரி,கர்நாடக மாநிலங்களின் சிவில் இயக்கங்களின் சார்பில் கையெழுத்திட்ட பிரதிநிதிகள் குழு, ஐநா.பிரநிதியிடம் கையளித்துள்ளது. சென்னையில் உள்ள ஐநா துணைத் தூதரகத்தில் இன்று 17-03-2017 காலை 11-மணியளவில் குறித்த மனு கையளிக்கப்பட்டது. குறித்த மனுவில் வலியுறுத்தப்பட்டுள்ளதாவது, தற்போது ஜெனிவாவில் நடைபெற்று…

இராணுவத்தினரால் ஈழத்தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டது ஐ.நாவில் நிரூபணம்!

முள்ளிவாய்க்கால் யுத்தத்தில் எமது ஈழத்தமிழர்கள் இராணுவத்தினரால் படுகொலை செய்யப்பட்டனர். உலகின் கண்களை கட்டிவிட்டு இத்தனை கொடூரங்களை செய்திருக்க முடியாது என தமிழ் இன உணர்வாளரும் திரைப்பட இயக்குனருமான வ.கௌதமன் உரையாற்றியிருந்தார். ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் 34 ஆவது கூட்ட தொடர் ஜெனிவாவில் இடம்பெற்று வருகின்றது. ஐ. நா…

தடைகள் இருப்பின் அதனை நீக்க வேண்டும்..! மங்களவின் கருத்துக்கு கூட்டமைப்பு…

இலங்கையில் இடம்பெற்றதாக கூறப்படும் மனித உரிமை மீறல்கள் மற்றும் யுத்தக் குற்றச்சாட்டுகள் தொடர்பில் சர்வதேச நீதிபதிகள் அடங்கிய விசாரணைப் பொறிமுறையே வேண்டும். இந்த விடயத்தில் ஒரு போதும் மாற்றுக்கருத்து கிடையாது என தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார். நடைமுறையில் உள்ள அரசியல் அமைப்புக்கு அமைய…

நாங்கள் உங்களிடம் ஒப்படைத்த பிள்ளைகளுக்கு நடந்தது என்ன?: போராட்டகாரர்கள் உருக்கம்

வவுனியாவில் கையளிக்கப்பட்டு காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் 22 ஆவது நாளாகவும் இன்று தமது சுழற்சி முறையிலான போராட்டத்தினை முன்னெடுத்துள்ளனர். கையளிக்கப்பட்ட தமது உறவினர்களை விடுவிக்கக் கோரியும், அரசியல் கைதிகளை விடுதலை செய்யக் கோரியும் மற்றும் அவசரகாலச் சட்டத்தினை நீக்குமாறு கோரியும் இவர்கள் தமது போராட்டத்தினை தொடர்ந்து வருகின்றனர். இதன்போது…

எதிர்ப்பார்ப்போடு தொடரும் பன்னங்கண்டி மக்களின் போராட்டம்

கிளிநொச்சி, பன்னங்கண்டி மக்களின் போராட்டம் 14 ஆவது நாளாகவும் இன்று தொடர்கிறது. காணி அனுமதி பத்திரம் வீட்டுத்திட்டம் உள்ளிட்ட அடிப்படை வசதிகளை கோரி பன்னங்கண்டி கிராம மக்கள் தொடர் கவனயீர்ப்பு போராட்டத்தை மேற்கொண்டு வருகின்றனர். போராட்டம் தொடர்ந்து வரும் இந்த நிலையில், அண்மையில் குறித்த காணி உரிமையாளரின் உறவினர்…

2009இன் பின்னர் ஈழத் தமிழர்களுக்கு விசேட அமைப்பு..

ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் 34ஆவது கூட்டத்தொடர் ஜெனிவாவில் இடம்பெற்று வருகின்றது. கடந்த வருடம் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தை நடைமுறைப்படுத்துவதற்கு ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் மேலும் இரண்டு வருடகால அவகாசத்தை இலங்கை எதிர்பார்க்கும் விடயம் பிரதான தலைப்பாக தற்போது மாறியுள்ளது. இந்த நிலையில், சர்வதேச சமூகம் இலங்கை அரசுக்கு…

மிகவும் கொடூரமான முறையில் சித்திரவதை..! அவலக்குரலை கேட்காமல் இருந்திருக்க முடியாது

முன்னாள் இராணுவத்தளபதி ஜகத் ஜயசூரிய இரசிய சித்திரவதை முகாம் ஒன்றை நடத்தியிருந்ததாக சர்வதேச உண்மை மற்றும் நீதி திட்டத்தின் நிறைவேற்று பணிப்பாளர் யஸ்மீன் சூகா தெரிவித்துள்ளார். வன்னி கட்டளைத்தளபதியாக ஜகத் ஜயசூரிய கடமையாற்றிய காலத்தில், 2007ஆம் ஆண்டு முதல் 2009ஆம் ஆண்டு வரையான காலப்பகுதியில் இந்த முகாம் நடத்தப்பட்டுள்ளதாகவும் அவர்…

சிங்களவர்களின் குடியேற்றமாக மாறும் முல்லைத்தீவு

முல்லைத்தீவு- நாயாறு பகுதியில் மிக பெரியளவில் சிங்கள குடியேற்றம் ஒன்றை உருவாக்குவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக வடமாகாணசபை உறுப்பினர் து.ரவிகரன் தெரிவித்துள்ளார். இவ்விடயம் தொடர்பில் மேலும் கருத்து தெரிவித்துள்ள அவர், நாயாறு கிராமத்தை அண்டிய பகுதியில் தமிழ் மக்களின் நிலங்களை அபகரித்து “மாயபுர” என பெயரிடப்பட்டுள்ளதுடன் அவ்விடங்களில் குடியேற்ற நடவடிக்கைகள்…

நடை பிணங்களாக வாழ்வதை விட முள்ளிவாய்க்காலில் இறந்திருக்கலாம் : உறவுகளை…

எங்கள் பிள்ளைகளை தொலைத்து விட்டு நடமாடும் பிணங்களாக அலைகின்றோம். இந்த கொடுமையை அனுபவிப்பதைவிட குடும்பமாக அன்று முள்ளிவாய்க்காலில் இறந்திருக்கலாம் என்று காணாமல் போனோரின் உறவினர்கள் கண்ணீர்மல்க கூறியுள்ளனர். காணாமல் போனோரின் உறவுகள் ஒன்றிணைந்து முல்லைத்தீவு மாவட்ட செயலகத்துக்கு முன்பாக முன்னெடுத்துள்ள தொடர் கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுப்பட்டு வருகின்றனர். இராணுவத்திடம் ஒப்படைக்கப்பட்ட எமது…

வன்னி நிலத்தில் இரசாயன ஆயுதங்களை யார் பயன்படுத்தினர்..? ஐ.நாவில் மனம்…

பெரும்பான்மை மக்கள் மற்றும் இராணுவத்தினரை திருப்தி படுத்தும் வகையில் இலங்கை அரசாங்கம் செயற்பட்டுக்கொண்டிருக்கின்றது. அத்துடன், வடகிழக்கில் உள்ள தமிழ் மக்களை அழிப்பதற்கு சர்வதேசமே உதவி செய்தது. எனவே, சர்வதேசமே தமிழ் மக்களுக்கு நீதியை பெற்றுக்கொடுக்க வேண்டும். ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 34வது கூட்ட தொடர் ஜெனஜவாவில்…

கால அவகாச கோரிக்கைக்கும் தமிழ்த் தேசிய கூட்டமைப்புக்கும் சம்பந்தமில்லை: ஞா.சிறிநேசன்…

மனித உரிமைப் பேரவைக்கு கால அவகாசம் கொடு கொடுக்கவில்லை என்பது தமிழ் தேசிய கூடடமைப்பினராகிய கருத்து அல்ல, கால அவகாசம் கேட்பது இலங்கை அரசு. கால அவகாசம் கொடுப்பது மனித உரிமைப் பேரவை. இது தமிழ் தேசிய கூட்டமைப்பாகிய எங்களுக்கு சம்பந்தமில்லை. செய்து முடிக்கவேண்டும் என்பது தான் எங்களின்…

புலிகள் அமைப்பின் முன்னாள் பெண் உறுப்பினர் கைது : விசாரணைகள்…

புனர்வாழ்வளிக்கப்பட்ட விடுதலைப் புலிகள் அமைப்பின் முன்னாள் பெண் உறுப்பினர் உள்ளிட்ட மூவரை கைது செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். நேற்றைய தினம் வெள்ளவாய கொடவெஹரகள பகுதியில் வைத்து குறித்த அனைவரும் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. அந்த பகுதியில் இடம்பெற்ற நிகழ்வு ஒன்றுக்காக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன சென்றிருந்த நிலையில், சந்தேகநபர்கள்…

விசாரணையைச் சந்திக்காமல் ஓடுபவனுக்கு முதுகெலும்பு இல்லை – மைத்திரிக்கு சுமந்திரன்…

எந்த விசாரணையையும் சந்திக்க முடியாது என்று ஓடுகிறவன் தனக்கு முதுகெலும்பு இருக்கிறதென்று கூற முடியாது என்று சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேனவுக்கு, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் பதிலடி கொடுத்துள்ளார். மட்டக்களப்பு- செங்கலடியில் இன்று நடந்த இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் கல்குடா தொகுதி முன்னாள்…

இலங்கைக்கு கால அவகாசம் வழங்கக் கோரும் தீர்மானத்துக்கு எதிராக வவுனியாவில்…

இறுதி மோதல்களில் இடம்பெற்ற மனித உரிமை மீறல்கள் உள்ளிட்ட போர்க்குற்றங்களுக்கு காரணமானவர்களை விசாரணை செய்வதற்கு, ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையினால் பரிந்துரைக்கப்பட்ட தீர்மானத்திற்கு பதிலளிக்கும் கடப்பாட்டினை தொடர்ந்தும் உதாசீனம் செய்துவரும் இலங்கை அரசுக்கு, ஜெனீவாவில் இன்னும் இரண்டு வருட கால அவகாசம் வழங்குமாறு கோரிக்கை விடுக்கும் தமிழ்த் தேசியக்…

பாரிய குற்றச்சாட்டுகளிலிருந்து தப்பித்துக் கொள்ளும் இலங்கை இராணுவத்தினர்: யஸ்மீன் சூகா

இலங்கை குறித்த சர்வதேசத்தின் நிலைப்பாட்டில் 180 பாகை மாற்றம் ஏற்பட்டுள்ளதாக சர்வதேச உண்மை மற்றும் நீதித் திட்டத்தின் தலைவர் யஸ்மீன் சூகா தெரிவித்துள்ளார். இலங்கையில் ஆட்சி மாற்றம் ஏற்பட்ட போதிலும் இராணுவத்தினர் மேற்கொண்ட குற்றச் செயல்களுக்கு பொறுப்பு கூறாத நிலைமை தற்போதும் நீடிக்கிறது. அத்தடன், துஸ்பிரயோகங்கள், குற்றச் செயல்கள்,…

இராணுவம் போர்க்குற்றங்களில் ஈடுபடவில்லை! கோத்தா தலைமையில் அறிக்கை

இராணுவப் படையினர் போர்க்குற்றச் செயல்களில் ஈடுபடவில்லை என நிரூபிக்கும் நோக்கில் அறிக்கை வெளியிடப்படவுள்ளது. முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ச தலைமையில் இன்று இந்த அறிக்கை வெளியீட்டு நிகழ்வு நடைபெறவுள்ளது. படைவீரர்களின் சாட்சியம் என்ற பெயரில் இந்த அறிக்கை வெளியிடப்படவுள்ளது. கொழும்பு தும்முல்லவில் அமைந்துள்ள சம்புத்த மந்திரயவில் இன்று…

பிரித்தானிய அரசே இலங்கைக்கு துணைபோகாதே..! லண்டனில் வெடித்தது போராட்டம்

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் கூட்ட தொடரில் இலங்கைக்கு பிரித்தானியா ஆதரவு வழங்க கூடாது என தெரிவித்து இன்று லண்டன் நகரில் சிலுவைப்போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது. கடந்த மாதம் 26 திகதி தொடங்கிய இந்த உணவு தவிர்ப்பு போராட்டம், இன்று பாரிய எழுச்சி போராட்டமாக உருவெடுத்துள்ளது. குறித்த போராட்டம் 10…

கேப்பாபுலவில் பெரும் பதற்றம்..! மயங்கி விழுந்த பெண் – போராட்டத்தில்…

காணி விடுவிப்பை வலியுறுத்தி இன்று இரண்டாவது நாளாக உணவு தவிர்ப்பு போராட்டத்தில் கேப்பாபுலவு மக்கள் ஈடுபட்டுள்ள நிலையில், அந்த பகுதியில் பெரும் பதற்றம் ஏற்பட்டுள்ளது. தமது காணிகளை விடுவிக்குமாறு வலியுறுத்தி முல்லைத்தீவு இராணுவ தலைமையகத்தின் பிராதான நுழைவாயில் முன்பாக இன்று இரண்டாவது நாளாகவும் உணவு தவிர்ப்பு போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.…