தமிழர்களின் இனப்பிரச்சினைகளின் முக்கிய ஆய்வு

தமிழர் அவலங்கள் என்ற வகையிலே ஆயிரக்கணக்கான அவலங்களையும் இன்னல்களையும் தழிழர்கள் பல்வேறுபட்ட ரீதியல் அனுபவித்து வருகின்றனர். இலங்கை சுதந்திரத்திற்கு முன்னரும் பின்னரும் தமிழன் ஏதோவொரு வகையில் அவலங்களை சந்தித்துக் கொண்டிருக்கின்றான். அது இறந்தகாலம் தொட்டு நிகழ்காலம் வரையும் நடந்து கொண்டிருக்கின்றது. குறிப்பாக 1983ம் ஆண்டு மற்றும் அதன் பின்னர்…

மைத்திரியின் சொல்லை நிறைவேற்றிய இலங்கை கடற்படை! 33 இந்திய மீனவர்கள்…

இலங்கை கடற்பரப்பில் எல்லை தாண்டி வந்து மீன்பிடியில் ஈடுபட்ட இந்திய மீனவர்கள் 33 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இது தொடர்பாக தெரியவருவதாவது, நெடுந்தீவுக் கடற்பரப்பில் எல்லைதாண்டி மீன்பிடியில் ஈடுபட்டுக்கொண்டிருந்த 33 தமிழக மீனவர்களை இலங்கை கடற்படையினர் இன்று வியாழக்கிழமை இரவு கைது செய்துள்ளனர். நாகை மாவட்டத்தைச் சேர்ந்த 33…

இலங்கை தொடர்பில் மோடி. பாரதீய ஜனதாக் கட்சி மகிழ்ச்சி!

இலங்கை தொடர்பில் இந்திய பாரதீய ஜனதாக் கட்சி தீர்மானம் ஒன்றை நிறைவேற்றியுள்ளது. பெங்களுரில் நடைபெறும் இரண்டு நாள் தேசிய மாநாட்டின் போது இந்த தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. இலங்கையில் போரின் காரணமாக பாதிப்புக்கு உள்ளாகியுள்ள மக்கள் தொடர்பில் உள்நாட்டு அரசியல் கருதி முன்னைய அரசாங்கம் உரிய நடவடிக்கைகளை எடுக்கவில்லை. இதன்…

இலங்கையில் தொழிற்சாலைகள் அமைப்போம்!- அழைக்கிறார் தமிழ்நாடு ஈஸ்வரன்

இலங்கையில் தொழில் தொடங்க தமிழகத் தொழில் அதிபர்கள் தயாராகி வருகிறார்கள். இலங்கை வடக்கு மாகாண முதல்வர் விக்னேஸ்வரன் இதில் ஆர்வம் காட்டிவருகிறாராம்.  அந்தவகையில், பி.ஜே.பியுடன் தமிழகத்தில் கூட்டணியில் உள்ள கொங்கு நாடு மக்கள் தேசியக் கட்சியின் 19 பேர் கொண்ட குழுவினர், போரினால் பாதிக்கப்பட்ட இலங்கைத் தமிழர்கள் பகுதிக்குச்…

வடக்கில் இருந்து இராணுவத்தை விலக்கினால் ரணிலுடன் கைகுலுக்கத் தயார்: விக்னேஸ்வரன்

கிளிநொச்சி மாவட்ட பொது வைத்தியசாலையில் நெதர்லாந்து அரசின் நிதியுதவியுடன் அமைக்கப்பட்ட பிராந்திய இரத்த வழங்கல் சேவை நிலையமானது இன்று மதியம் திறந்து வைக்கப்பட்டுள்ளது. சுகாதார மற்றும் சுதேச வைத்திய அமைச்சரும், அமைச்சரவை பேச்சாளருமான ராஜித சேனாரட்ன, வடக்கு மாகாண முதலமைச்சர் சீ.வி விக்னேஸ்வரன், பாராளுமன்ற பிரதிக்குழுக்களின் தவிசாளர் முருகேசு…

இலங்கையில் ஏற்பட்ட அநீதிகளுக்கு பரிகாரம்: மங்கள உறுதி

இலங்கையில் ஏற்பட்ட அநீதிகளுக்கு காரணங்களை கண்டறிந்து, அதற்கு பரிகாரம் காணத் தயார் என்று இலங்கை அரசாங்கம் ஐரோப்பிய ஒன்றியத்திடம் உறுதியளித்துள்ளது. இலங்கையின் வெளியுறவு அமைச்சர் மங்கள சமரவீர இந்த உறுதிமொழியை அளித்துள்ளார். இலங்கையின் பல்கலாச்சார, பல்லின அடிப்படையில் அனைவருக்கும் நீதிகிடைக்க அரசாங்கம் தீவிரமாக செயற்படும் என்று அமைச்சர் குறிப்பிட்டார்.…

போருக்கு பின்னர் 5வருடங்களில் நல்லிணக்கத்தை ஏற்படுத்துவதில் இலங்கை அரசு தோல்வி!-…

2009 போருக்கு பின்னர் நல்லிணக்கத்தை ஏற்படுத்துவதில் இலங்கை அரசாங்கம் தோல்வி கண்டுள்ளது என்று அமெரிக்கா தெரிவித்துள்ளது. போருக்கு பின்னரான 5 வருடங்களில் அந்த நல்லிணக்கத்தை அரசாங்கத்தினால் எட்டமுடியவில்லை. எனினும் அந்த நல்லிணக்கத்தை ஏற்படுத்தும் வாய்ப்பு புதிய அரசாங்கத்துக்கு கிடைத்துள்ளது என்று அமெரிக்காவின் ஜனநாயக மற்றும் மனித உரிமைகளுக்கான உதவிச்செயலாளர்…

வடக்கு-கிழக்கில் வாழும் தமிழனின் திறந்த மடல்!

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பதிவு தொடர்பில் இரா.சம்பந்தன் அவர்கள் திருகோணமலையில் தெரிவித்துள்ள கருத்து சர்ச்சைக்கு உரியதாகியிருக்கின்றது. அது மட்டுமல்லாமல், தமிரசுக் கட்சி தொடர்பிலும், தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தன் தொடர்பிலும் பல்வேறு கேள்விகளையும் எழுப்பச் செய்திருக்கின்றது. தமிழ் கட்சிகள் அனைத்தும் ஒருமித்த கருத்து கொண்டிருந்தால் மட்டுமே பதிவு சாத்தியம்…

உள்ளக விசாரணை தேவையில்லை! தமிழ் சிவில் சமூக அமையம்!!

வடக்கிற்கான விஜயம் மற்றும் அவதானிப்புக்கள் தொடர்பினில் வாய் திறக்க மறுத்த பப்லோ டி கிரெய்ப் வாய் திறக்க மறுத்துள்ள நிலையினில் இன்று காலை கிளிநொச்சியில் சிவில் சமூக உறுப்பினர்களுடன் நடத்திய சந்திப்பில் தமிழ் சிவில் சமூக அமையமும் கலந்து கொண்டுள்ளது. அக்கூட்டத்தில் கலந்து கொண்டு ஐ. நா சிறப்பு…

தொடர்ந்தும் அநீதி இழைத்ததால் மஹிந்தவை வீட்டுக்கு அனுப்பி மைத்திரியை ஆட்சிப்…

மஹிந்த அரசின் ஆட்சிக்காலத்தில் தமிழ் மக்களுக்கு எதிராக அநீதிகள் இழைக்கப்பட்டன. இதனால் எமது மக்கள் பல்வேறு இன்னல்களை அனுபவித்தனர். கொடூர ஆட்சியால் தமிழ் மக்கள் தமது உறவுகளை இழந்தனர்; உறவுகளைத் தொலைத்தனர்; உறவுகளைப் பிரிந்தனர். சொந்த மண்ணை இழந்து அகதிகளாகினர். இந்தத் துயரங்களுக்கு முடிவுகட்டவேண்டும் என்ற நோக்கில்தான் கடந்த…

ஆமை வேகத்தில் புதிய அரசும்! முதலமைச்சர் சுட்டிக்காட்டினார்!!

தமிழ் மக்களிடம் பெரும் எதிர் பார்ப்பு இருக்கின்ற நிலையில், புதிய அரசு மெத்தனமாகச் செயற்படுகின்றது. காணிகள் விடுவிப்பு, தமிழ் அரசியல் கைதிகள் விடுவிப்புப் போன்றவற்றில் புதிய அரசு எடுத்துவரும் நடவடிக்கைகளில் வேகம் போதாதென வடக்கு முதலமைச்சர் தெரிவித்துள்ளார். யாழ்ப்பாணத்திற்கு நேற்று வந்திருந்த அமெரிக்க செனட் குழு உறுப்பினர்கள், வடக்கு…

ஐ.நா.வின் சிறப்பு நிபுணர் இன்று வடபகுதிக்கு விஜயம்! முதலமைச்சரை சந்தித்து…

பொறுப்புக் கூறல், நல்லிணக்கம் தொடர்பில் இலங்கை கொண்டுள்ள முன்னேற்றங்களை ஆராயும் பொருட்டு கொழும்பு வந்துள்ள ஐ.நா.வின் சிறப்பு நிபுணர் பப்லோ டி கிரெய்ப் இன்று புதன்கிழமை வடக்கிற்கு செல்கின்றார். அவர் அங்கு வடக்கு மாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன் மற்றும் மன்னார் மறைமாவட்ட ஆயர் இராயப்பு ஜோசப் உள்ளிட்ட பலருடன் வடக்கின்…

மலையக, தெற்கு தமிழ் அரசியல் கட்சிகள் ஒன்றிணைந்து செயற்படத் தீர்மானம்!

மலையகம் மற்றும் தெற்கு தமிழ் அரசியல் கட்சிகள் ஒன்றிணைந்து செயற்படத் தீர்மானித்துள்ளன. வடக்கு கிழக்கு தவிர்ந்த நாட்டின் ஏனைய பகுதி தமிழ் வாக்காளர்களை இலக்கு வைத்து இந்த கூட்டணி அமைக்கப்படவுள்ளது. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வடக்கில் செயற்படுவதனைப் போன்றே நாட்டின் ஏனைய பகுதிகளில் இந்த கூட்டணி செயற்படத் திட்டமிட்டுள்ளது.…

சந்திரிகா ஆணைக்குழு தமிழ் மக்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைக்கு தீர்வு காணும்!–…

முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்க தலைமையில் அமைக்கப்படவுள்ள ஆணைக்குழு, இந்த ஆண்டு இறுதிக்குள், தமிழ் மக்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளுக்கு தீர்வு காணும் ஆற்றலைக் கொண்டிருக்கும் என்று நம்புவதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார். வடக்கு, கிழக்கிலுள்ள தமிழ் மக்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் தொடர்பான எல்லா விபரங்களையும்…

புலம்பெயர் தமிழர்களின் பினாமி என்று விக்கினேஸ்வரனை அழைக்க ஆரம்பித்துள்ளது சிங்களம்…

சமீபகாலமாக இலங்கையில் உள்ள சிங்களப் பேரினவாதிகள் , வடமாகாண முதலமைச்சர் விக்கினேஸ்வரனை குறிவைக்க ஆரம்பித்துள்ளாகள் என்று கூறப்படுகிறது. புலம்பெயர் நாடுகளில் உள்ள , ஈழத் தமிழர்களின் பினாமி தான் விக்கினேஸ்வரன் என்றும் , புலிகள் ஆதரவாளர்கள் கூறும் விடையங்களையே அவர் தனது கருத்தாக தெரிவித்து வருவதாகவும் அவர்கள் மேலும்…

விடுதலைப் புலிகள் இயக்கத்தினை உடைத்தது போன்று கூட்டமைப்பினையும் உடைப்பதற்க்கு ஐ.தே.க…

விடுதலைப் புலிகள் இயக்கத்தினை உடைத்தது போன்று தமிழ் தேசிய கூட்டமைப்பினையும் உடைப்பதற்கான நகர்வினை ஐக்கிய தேசிய கட்சி மேற்கொண்டு வருவதாக பாராளுமன்ற உறுப்பினர் பா.அரியநேந்திரன் தெரிவித்தார். மட்டக்களப்பு தேர்தல் தொகுதி தமிழரசுக்கட்சி கிளையின் கூட்டம் மட்டக்களப்பு நல்லை வீதியில் உள்ள தமிழரசுக்கட்சியின் தலைமையகத்தில் நேற்று மாலை நடைபெற்றது. இங்கு…

இந்திய மீனவர்களின் இழுவை மீன்பிடியை நிறுத்தும் பிரதமரின் தீர்மானம் வரவேற்கத்தக்கது!…

இந்திய மீனவர்களின் அத்துமீறியதும் எல்லைதாண்டியதுமான இழுவைப்படகுத் தொழில்முறையை வடபகுதியில் முற்றாக நிறுத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக பிரதமர் ரணில் விக்கிரமசிங்க அவர்கள் தெரிவித்துள்ளமையை எமது கடற்றொழிலாளர்கள் சார்பில் வரவேற்பதாக ஈழ மக்கள் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் தெரிவித்துள்ளார். அவர் மேலும் தெரிவிக்கையில், நாட்டின் ஏனைய மாவட்டங்களை விடவும் வடபகுதிக்…

விடுதலைப் புலிகளைகளை முடக்கிவிட்டதாக சிறிலங்கா தெரிவிப்பு

தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தை சர்வதேச ரீதியாக முடக்கியுள்ளதாக சிறிலங்கா அரசாங்கம் தெரிவித்துள்ளது. சிறிலங்காவின் வெளிவிவகார பிரதி அமைச்சர் அஜித் பீ பெரேரா இதனைத் தெரிவித்துள்ளார். கொழும்பில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் வைத்து அவர் இதனைக் கூறியுள்ளார். சிறிலங்காவின் பிரதமர் அனுப்பி கடிதத்தின் அடிப்படையில் ஐரோப்பிய ஒன்றியம் தமிழீழ…

தினமும் படையினரால் அச்சுறுத்தப்படுகிறோம்: ரணிலிடம் முன்னாள் போராளிகள் தெரிவிப்பு

2009ம் ஆண்டு யுத்தம் நிறைவடைந்து 5வருடங்கள் முடிந்திருக்கின்றன. ஆனாலும் எங்களுடைய வீடுகளுக்குள் படையினர் வருகிறார்கள். எங்களை அச்சுறுத்துகிறார்கள், நாங்கள் தினசரி துன்புறுத்தப்பட்டுக் கொண்டிருக்கின்றோம் என விடுதலைப் புலிகளின் முன்னாள் போராளிகள் இன்றைய தினம் பிரதமர் ரணிலிடம் சுட்டிக்காட்டியிருக்கின்றனர். வடபகுதிக்கு 3 நாள் விஜயமாக கடந்த வெள்ளிக்கிழமை யாழ்.வந்திருந்த பிரதமர்…

இலங்கையின் ஸ்திரப்பாட்டுக்கு இனப்பிரச்சினைக்கான தீர்வு அவசியம்: ரணில்

இலங்கையை ஸ்திரமான நாடாக உருவாக்க வேண்டுமானால் இனப்பிரச்சினை தீர்க்கப்பட வேண்டும் என்று பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். வடக்குக்கு மூன்று நாள் விஜயத்தை மேற்கொண்ட அவர், இந்த கருத்தை வெளியிட்டதாக அவரின் ஊடகப்பிரிவு அறிவித்துள்ளது. நாடு ஸ்திரப்பட தமிழர்களுடன் இணைந்து பிரச்சினையை தீர்ப்பதுடன், அதனை முன்கொண்டு செல்லவேண்டும் என்று…

சென்னையிலும் வெளியான இனவழிப்பு ஆவணப்படம்! கண்ணீரில் மூழ்கிய அரங்கம்

இயக்குனர் கௌதமனின் இயக்கத்தில் இலங்கையில் நடந்த இன அழிப்பு மற்றும் 2009 இன் பின்னர் இரகசியமாக தொடரப்படும் கட்டமைக்கப்பட்ட இன அழிப்பை சர்வதேச சமூகத்தின் பார்வைக்கு கொண்டு செல்லும் வகையில் உருவான ''Pursuit of Justice'' என்கிற ஆவணப்படமானது கடந்த 25ம் திகதி ஐ.நா அவையின் 24வது அரங்கிலும்…

தமிழ் பொலிஸ் தரப்போகின்றாராம் ரணில்!

யாழ் மாவட்டத்தில் 200 இளைஞர்களையும் 200 யுவதிகளையும் பொலிஸில் இணைத்துக் கொள்ளவதன் மூலம் உங்களுடைய பிரச்சினைகளை நீங்களே தீர்த்துக் கொள்ளுங்களெனத்தெரிவித்துள்ளார்  பிரதமர் ரணில் விக்கிரமசிங்க. இரண்டு நாள் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு யாழ்ப்பாணத்துக்கு சென்றுள்ள பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, யாழ். மாவட்ட சிவில் சமூக பிரதிநிதிகளை யாழ். மாவட்ட…

விடுதலைப் புலிகளின் 2000 போராளிகள் இன்னும் மறைந்து வாழ்கின்றனர்: புனர்வாழ்வு…

இறுதிப் போரின்போது சரணடைந்த 12,346 விடுதலைப் புலிகளில் 6 முதல் 7 வீதமானவர்கள், கரும்புலிகள் என்ற தற்கொலை பிரிவைச் சேர்ந்தவர்கள் என்று தகவல் வெளியிடப்பட்டுள்ளது. இலங்கையின் புனர்வாழ்வு ஆணையாளர் மேஜர் ஜெனரல் ஜெகத் விஜேயதிலக்க இந்த தகவலை வெளியிட்டுள்ளார். சரணடைந்தவர்களில் எவ்வித குற்றங்களையும் மேற்கொள்ளாத தற்கொலை போராளிகள் விடுவிக்கப்பட்டதாகவும்…