போரின் போது தமிழ்ப் பெண்கள் மீது பாலியல் வன்முறை! இலங்கை…

இலங்கையில் இறுதிப் போரின் போது தமிழ்ப் பெண்கள் மீது மேற்கொள்ளப்பட்ட பாலியல் வன்முறைகள் தொடர்பில் ஐக்கிய நாடுகள் சபை தீவிரமான அவதானத்தை செலுத்தி வருகிறது. இந்த விடயத்தில் இலங்கை தமது பொறுப்புக்கூறலை உறுதிப்படுத்த வேண்டும் என்று ஐக்கிய நாடுகள் சபை எதிர்ப்பார்ப்பதாக போரின் போது பெண்களுக்கு எதிராக மேற்கொள்ளப்படும்…

வடக்கில் புலிகளை உயிர்ப்பிக்க சந்தோசம் மாஸ்டர் என்பவர் முயற்சி!

வடக்கில் தமிழீழ விடுதலைப் புலிகளை உயிர்ப்பிக்க சந்தோசம் மாஸ்டர் என்பவர் முயற்சித்து வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது. சந்தோசம் மாஸ்டர் எனப்படும் பரமநாதன் சுவிட்சர்லாந்தில் வாழ்ந்து வருகின்றார் என திவயின செய்தி வெளியிட்டுள்ளது. அரசாங்கத்தினால் புனர்வாழ்வு அளிக்கப்பட்டதன் பின்னர் சந்தோசம் மாஸ்டர் சுவிட்சர்லாந்து சென்று தஞ்சமடைந்துள்ளார். சுவிட்சர்லாந்தின் இரண்டு வங்கிகளில் வங்கிக்…

யாழ். சிறைச்சாலையில் தொடரும் மர்மமான மரணங்கள் – கேட்பாரின்றி மரணமடையும்…

யாழ். சிறைச்சாலையில் தொடரும் மர்ம மரணங்களால் அங்கு அச்சமானதொரு சூழல் காணப்படுகின்றது. சிறைச்சாலை உத்தியோகத்தர்களால் தாக்கப்பட்டு காயமடைந்த நிலையில் யாழ். போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த கைதியொருவர் சிகிச்சை பலனின்றி நேற்று இரவு உயிரிழந்துள்ளார். குறித்த கொலை சம்பவத்துடன் தொடர்புடையசிறைச்சாலை உத்தியோகத்தரை கைது செய்ய நீதிமன்று உத்தரவிட்டிருந்த நிலையில் அவர்;…

தமிழ் மக்களின் பிரச்சினைகள் குறித்து விக்னேஸ்வரனுடன் இந்தியா பேச்சுவார்த்தை!

தமிழ் மக்களின் பிரச்சினைகள் குறித்து வட மாகாணசபையின் முதலமைச்சர் சீ.வீ. விக்னேஸ்வரனுடன் இந்தியா பேச்சுவார்த்தை நடாத்தவுள்ளது. காங்கிரஸ் அரசாங்கம் இந்தத் தீர்மானத்தை எடுத்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. தேர்தல்கள் நிறைவடைவதற்கு முன்னதாக இந்த சந்திப்பு அழைப்பட உள்ளது. முதலமைச்சர் விக்னேஸ்வரனை அழைத்து இவ்வாறு பேச்சுவார்த்தை நடத்தப்பட உள்ளது. விக்னேஸ்வரனின் இந்திய விஜயம்…

இனி என்ன நடக்கும் இலங்கையில்?- விளக்குகிறார் சென்னை பல்கலைக்கழக பேராசிரியர்…

ஐ.நா. மனித உரிமை கவுன்சிலில், இலங்கை தொடர்பான அமெரிக்கத் தீர்மானம் நிறைவேறிவிட்ட சூழலில், உலகெங்கிலும் உள்ள முக்கியமான 16 தமிழ் அமைப்புகளைப் பயங்கரவாத அமைப்புகளாக அறிவித்து, உலக நாடுகளிடம் அவை மீதான தடையையும் கோரியிருக்கிறது இலங்கை அரசாங்கம்! அத்துடன், இலங்கைக்குள் புலிகள் அமைப்பை மீண்டும் கட்டியெழுப்ப முயன்றதாக நெடுங்கேணி…

ராஜபக்ஷக்களுக்கு எதிராக சர்வதேச விசாரணைகளின் போது சாட்சியமளிக்கத் தயார் –…

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ மற்றும் அவரது குடும்ப உறுப்பினர்களினால் மேற்கொள்ளப்பட்ட மனித உரிமை மீறல்கள் தொடர்பில் சர்வதேச விசாரணைகளின் போது சாட்சியமளிக்கத் தயார் என ஜனநாயகக் கட்சியின் தலைவர் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார்.பிடகோட்டே பிரதேசத்தில் அமைந்துள்ள கட்சித் தலைமையகத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்ட போது அவர் இதனைத்…

விக்னேஸ்வரனுக்கு நம்பிக்கை தரும் செய்தியை மேல்மாகாணசபை அனுப்ப வேண்டும்!- மனோ…

13ம் திருத்தச் சட்டத்தின் மீதே இந்த சபை நடைபெறுகிறது. தேசிய இனப்பிரச்சினை தீர்வின் முதற்புள்ளியாக, மாகாணசபை முறைமையின் மீது நம்பிக்கை தரும் செய்தியை மேல்மாகாணசபை, வடமாகாணசபை முதல்வர் சீ.வி.விக்னேஸ்வரனுக்கு அனுப்ப வேண்டும் என ஜனநாயக மக்கள் முன்னணியின் தலைவர் மனோ கணேசன் தெரிவித்தார். பத்தரமுல்லை மேல்மாகாணசபை மண்டபத்தில் நேற்று…

ஆனையிறவுப் படைத்தளம் வெற்றி கொள்ளப்பட்ட நாள் இன்று

ஓயாத அலைகள் மூன்று என்ற நடவடிக்கை மூலம் இராணுவத்தினரின் ஆனையிறவுப் படைத்தளம் தமிழீழ விடுதலைப் புலிகளால் கைப்பற்றப்பட்டது இன்றைய தினத்திலாகும். சிறிலங்கா அரசதரப்பால் மட்டுமன்றி உலக இராணுவ வல்லுநர்களாலும் “வீழ்த்தப்பட முடியாத தளம்” என்று கருதப்பட்டதே ஆனையிறவு இராணுவப் படைத்தளம். அதேநேரம் அத்தளம் விடுதலைப்புலிகளால் தாக்குதலுக்குள்ளாகுமென்று அனைவராலும் எதிர்பார்க்கப்பட்டே…

வறணி படைத்தளத்திலிருந்த பாரிய மனித புதைகுழிகளது எச்சங்கள் இரவோடிரவாக அகற்றப்பட்டனவா?

இலங்கை இராணுவத்தின் தென்மராட்சியின் முக்கிய படைத்தளமாகவும், முன்னைய முன்னரங்க நிலையான முகமாலைக்கான விநியோக தளமாகவும் இருந்த வறணி படைத்தளத்திலிருந்த பாரிய மனித புதைகுழிகளது எச்சங்கள் இரவோடிரவாக அகற்றப்பட்டமை தொடர்பான முக்கிய தகவல் கிடைத்துள்ளது. குறிப்பாக 1996ம் ஆண்டு யாழ்.குடாநாடு படையினரால் கைப்பற்றப்பட்ட வேளையில் பருத்தித்துறை – கொடிகாமம் வீதியில்…

தொடர்ந்தும், நீதி மறுக்கப்பட்டால், தமிழர்களுக்கான போர்க் களம் மீண்டும் திறக்கப்படும்!

பாண்டவர்களுக்கு ஆட்சி உரிமை கிடையாது என்றார்கள் கௌரவர்கள். நூற்றுவர்களான தங்களுக்கு அடிபணிந்து வாழ்வதே அவர்களது விதி என்றுரைத்தார்கள். கௌரவர்களது ராஜ்ஜியம் பெரியது, அதன் சேனை பெரியது. எனவே, கௌரவர்களுடன் மோதி, பாண்டவர்களால் வெற்றி பெற முடியாது என்றார்கள். நாடு கேட்டு முழக்கமிட்ட பாண்டவர்கள், தமக்கான நிலத்தையாவது தரும்படி கேட்டார்கள்.…

இலங்கைத் தமிழர் பிரச்சினை தமிழகத்தில் தேர்தலில் தாக்கத்தை ஏற்படுத்துமா?

இந்தியாவில் கடந்த நாடாளுமன்றத் தேர்தல் 2009ஆம் ஆண்டில் நடைபெற்றபோது, இலங்கையில் நடைபெற்ற உள்நாட்டு யுத்தம் உச்சகட்டத்தில் இருந்தது. பல தமிழ் தேசிய அமைப்புகள், ஈழ ஆதரவு அமைப்புகள் மிகத் தீவிரமாக இது குறித்த பிரச்சாரங்களை முன்வைத்தனர். காங்கிரஸின் முக்கியத் தலைவர்கள் போட்டியிடும் தொகுதிகளில் போட்டி வேட்பாளர்கள்கூட நிறுத்தப்பட்டனர். அந்தத்…

தமிழ் மக்களின் பிரச்சினைக்கு தீர்வு வழங்க அரசுக்கு காலஅவகாசம் உள்ளது!-…

தமிழ் மக்களின் பிரச்சினைகளுக்கு தீர்வை காண அரசாங்கத்திற்கு மேலும் காலஅவகாசம் இருப்பதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது. ஐக்கியமான நாட்டிற்குள் பிரச்சினைக்கு தீர்வுகாண தாம் இணங்குவதாக கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தன் கூறியுள்ளார். அரசாங்கத்திடம் அதற்கான விரிவான வேலைத்திட்டங்கள் இல்லாததன் காரணமாக பிரச்சினை சர்வதேசம் வரை சென்றுள்ளது எனவும்…

ஐ.நா விசாரணைக் குழுவை நியமிக்க முன்னர் நவிபிள்ளை, பான் கீ…

இலங்கையில் இடம்பெற்ற மனிதஉரிமை மீறல்கள் மற்றும் போர்க்குற்றங்கள் குறித்து விசாரிப்பதற்கான ஐ.நா விசாரணைக் குழுவின் நியமனத்தை அதிகாரபூர்வமாக அறிவிப்பதற்கு முன்னதாக, ஐ.நா பொதுச்செயலர் பான் கீ மூனை, ஐ.நா மனிதஉரிமை ஆணையாளர் நவநீதம்பிள்ளை சந்தித்து ஆலோசிக்கவுள்ளார். ஜெனிவாவில் உள்ள இராஜதந்திரிகளை மேற்கோள்காட்டி கொழும்பு ஆங்கில வார இதழ் ஒன்று…

விசாரணைகளைக் குழப்பும் முயற்சிகள் பலிக்குமா?

இலங்கையில் நடந்த மனித உரிமை மீறல்கள் குறித்து விசாரணைகளை முன்னெடுக்கப்படுவதற்கான நடவடிக்கைகளை ஐநா மனித உரிமைகள் ஆணையாளர் பணியகம் மேற்கொண்டுள்ளது. இதற்கென துறைசார் நிபுணர்களைத் தெரிவு செய்யும், அவர்களுக்கான வசதிகளைச் செய்து கொடுக்கும், ஏனைய விசாரணை நெறிமுறைகளை வகுக்கும் பணிகளில் நவநீதம்பிள்ளையின் பணியகம் தீவிரமாக ஈடுபட்டுள்ளது. அடுத்த மாதம்…

ஈழ மக்களுக்குப் படிப்படியாகவே நீதி கிடைக்கும்! மர்சூக்கி தருமான்

ஈழ மக்களுக்கு படிப்படியாக நீதி கிடைக்கும் என்று, இறுதி யுத்தம் தொடர்பில் ஐக்கிய நாடுகளின் பொது செயலாளருக்காக விசாரணை நடத்திய நிபுணர்கள் குழுவின் தலைவர் மர்சூக்கி தருமான் தெரிவித்துள்ளார். அமெரிக்காவின் - நியுயோர்க் நகரில் உள்ள ஐக்கிய நாடுகள் சபையின் தலைமையகத்தில் நேற்றையதினம் இடம்பெற்ற ஊடக சந்திப்பில், தருஸ்மன்…

பேச்சுவார்த்தைக்கு முன்னர் தமிழ் மக்களின் பிரச்சினைகள் தீர்க்கப்பட வேண்டும்!- தமிழ்…

அரசாங்கத்துடனான பேச்சுவார்த்தை நடத்துவதற்கு முதல் வடக்கு கிழக்கில் உள்ள தமிழ் மக்கள் தற்போது அனுபவித்து வருகின்ற பிரச்சினைக்கு தீர்வு வழங்கப்பட வேண்டும் என்று தமிழ் தேசிய கூட்டமைப்பு வலியுறுத்தியுள்ளது. கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் உள்நாட்டு ஊடகம் ஒன்றுக்கு இந்த கருத்தை வெளியிட்டுள்ளார். வடக்கு கிழக்கில் இராணுவ…

அரசின் சதிவலைக்குள் சிக்காது தமிழ் இளையோர்கள் விழிப்புடன் செயற்படவேண்டிய நேரமிது!…

தாயக தமிழ் இளையோர்களுக்கு வேலை, வசதி வாய்ப்புகள் அனைத்தும் வழங்கப்படும் என்பதான மாயைக்குள் அவர்களைத் தள்ளி, இன்றைய ஆளும் மத்திய அரசு, அவர்களின் வறுமை நிலையைப் பயன்படுத்தி...... மூளைச்சலவை செய்து வேறு சிவில் வேலை வாய்ப்புக்களை வழங்காமல், இராணுவத்திற்கு உள்ளீர்க்கும் படுபயங்கரமான ஒரு நிகழ்ச்சி நிரலை, திட்டமிட்ட ரீதியில்,…

இன்டர்போலினால் தேடப்பட்டு வரும் புலி உறுப்பினர்களுக்கு 11 நாடுகள் அடைக்கலம்!-சிங்கள…

சர்வதேச பொலிஸாரான இன்டர் போலினால் தேடப்பட்டு வரும் தமிழீழ விடுதலைப் புலி உறுப்பினர்களுக்கு 11 நாடுகள் அடைக்கலம் வழங்கி வருவதாக சிங்கள பத்திரிகையொன்று செய்தி வெளியிட்டுள்ளது. இன்டர் போலினால் 299 தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு எதிராக சிகப்பு சமிக்ஞை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. இதில் அதிகளவான புலி உறுப்பினர்களுக்கு…

யாழ்.இந்துக் கல்லூரிக்கு அருகில் தமிழீழம் மலரும் என்ற போஸ்டர்: விவகாரமானது…

யாழ்.இந்துக் கல்லூரிக்கு அருகில் தமிழீழம் மலரும் என்ற போஸ்டர் ஒட்டிய விவகாரம், பெரிய விவகாரம் ஆகியுள்ளது. யாழ்.கொக்குவில் பகுதியினைச் சேர்ந்த ஜெயதாஸன் கஜானன் (24) என்ற இளைஞன் கடந்த 17ம் திகதி கைது செய்யப்பட்டிருந்தார். துண்டுப் பிரசுரம் ஒட்டப்பட்டபோது, அதனை ஒட்டியவர்கள் வந்த மோட்டார் சைக்கிளை பொதுமக்களில் ஒருவர்…

எமக்கான பேரம் பேசும் ஆற்றலை தமிழ் நாட்டு மக்கள் உருவாக்கித்தர…

ஈழத்தமிழரின் நீண்ட கால உரிமைப்போராட்டத்தின் இன்றைய இக்கட்டான சூழ்நிலையில் எமக்கான பேரம் பேசும் ஆற்றலை தமிழ் நாட்டு மக்கள் உருவாக்கித்தர வேண்டும் என்று வடமாகாணசபை உறுப்பினர் துரைராசா ரவிகரன் கோரிக்கை விடுத்துள்ளார். அவர் மேலும் தெரிவிக்கையில், ஈழத் தமிழர்களுக்கும் தமிழ்நாட்டு மக்களுக்குமான தொடர்பு வரலாற்றுக்கு முற்பட்ட காலத்திலிருந்தே நிலவி…

தெரிவுக்குழுவில் பங்கேற்க மாட்டோம்! சர்வதேச அனுசரணையுடன் பேசத் தயார்! கூட்டமைப்பு…

இலங்கையின் இனப்பிரச்சினை தொடர்பில் தீர்வு காண்பதற்கு சர்வதேச அனுசரணையுடன் பேசுவதற்கு நாம் எப்போதும் தயாராகவே இருக்கின்றோம். ஆனால் அரசு நியமித்துள்ள நாடாளுமன்றத் தெரிவுக் குழுவில் பங்கெடுக்க மாட்டோம் என்று தமிழ் தேசியக் கூட்டமைப்பு திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளது. தேசிய பிரச்சினைக்குத் தீர்வு காண்பதற்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் கலந்துரையாட தயாராக…

கே.பிக்கு எதிரான சர்வதேச பிடிவிராந்து நீக்கம்- 96 இலங்கையர்களுக்கு எதிராக…

விடுதலைப் புலிகளின் முன்னாள் சர்வதேச ஆயுத விநியோகஸ்தர் கே.பி. என்ற குமரன் பத்மநாதனுக்கு எதிராக இண்டர்போல் பொலிஸார் வெளியிட்டிருந்த சிகப்பு பிடிவிராந்து நீக்கப்பட்டுள்ளது. இதனை இலங்கை பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அஜித் ரோஹன தெரிவித்தார். 2009 ஆம் ஆண்டுக்கு பின்னர் கே.பி பயங்கரவாத செயல்களில் ஈடுபடாத காரணத்தினால் அவருக்கு…

திருகோணமலையிலும் பல்லாயிரம் ஏக்கர் நிலத்தை கையகப்படுத்தியது இராணுவம்

இலங்கை ராணுவம் கையகப்படுத்தியுள்ள காணி இலங்கையின் கிழக்கு மாகாணத்திலுள்ள திருகோணமலை மாவட்டம் சீனன்குடாவை அண்மித்த வெள்ளைமணல் கடலோர பகுதியில் பொதுமக்கள் தேவைகளுக்காக பயன்படுத்தப்பட்டுவந்த ஆயிரக்கணக்கான ஏக்கர் காணி விமானப்படையினரால் திடீரென கையகப்படுத்தப்படுவதாக உள்ளுர் மக்கள் கவலை வெளியிட்டுள்ளனர். மபுள்பீச் தொடக்கம் கருமலையூற்று வரையிலான நிலப்பகுதியை விமானப்படை சுவீகரிப்பதற்கான எல்லைகள்…