பள்ளிக்கூட ஒன்று கூடல் நிகழ்வின் போது தாம் இந்திய, சீன மாணவர்களிடம் 'balik India, China' (இந்தியாவுக்கும் சீனாவுக்கும் திரும்பிச் செல்லுங்கள்) எனச் சொன்னதை ஷா அலாமில் உள்ள அலாம் மெகா தேசிய இடைநிலைப்பள்ளியின் தலைமை ஆசிரியை ஒப்புக் கொண்டுள்ளதாகச் சொல்லப்படுகின்றது. அந்தத் தகவலைத் தெரிவித்த மஇகா ஷா…
போரில் இந்தியப்படைகள் பங்கேற்கவில்லை – மறுக்கிறார் சரத் பொன்சேகா
விடுதலைப் புலிகளுக்கு எதிரான இறுதிக்கட்டப் போரில், சிறிலங்கா படையினருக்கு இந்திய இராணுவத்தினர் நேரடியாக உதவி வழங்கியதாகக் கூறப்படுவதை, போருக்குத் தலைமை தாங்கிய சிறிலங்கா இராணுவத்தின் முன்னாள் தளபதி சரத் பொன்சேகா நிராகரித்துள்ளார். “இது உண்மையல்ல. வேண்டுமென்றே கூறப்பட்ட பொய்போலத் தோன்றுகிறது. அங்கு எவரது படையினரும் எம்முடன் செயற்படவில்லை. தரைப்…
இலங்கை தொடர்பான விசாரணைகளை மேற்கொள்வதில் நவனீதம்பிள்ளைக்கு நெருக்கடி
இலங்கை தொடர்பான விசாரணைகளை மேற்கொள்வதில் ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையின் ஆணையாளர் நவனீதம்பிள்ளைக்கு நெருக்கடி நிலைமை ஏற்பட்டுள்ளது. இலங்கை அரசாங்கத்தினால் தடை செய்யப்பட்ட 15 புலி ஆதரவு அமைப்புக்களின் உறுப்பினர்களை விசாரணைகளில் பங்கேற்கச் செய்வதா இல்லையா என்பது தொடர்பில் நவனீதம்பிள்ளை நெருக்கடிகளை எதிர்நோக்கி வருகின்றார். ஐக்கிய நாடுகள்…
சர்வதேச விசாரணைக்கான சாட்சியப்பதிவு செயற்திட்டம் ஆரம்பம்!- பிரித்தானியா
ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் ஆணையாளர் நவநீதம்பிள்ளை இலங்கையின் மனித உரிமை மீறல்களுக்கு எதிரான சர்வதேச விசாரணையை ஆரம்பிக்கும் முகமான சாட்சியப்பதிவு செயற்திட்டங்களை முன்னெடுத்து வருகிறார். இந்த தகவலை பிரித்தானிய வெளியுறவு அமைசசர் வில்லியம் ஹேக் அந்த நாட்டின் நாடாளுமன்றத்தில் நேற்று தெரிவித்துள்ளார். நவநீதம்பிள்ளையின் விசாரணையை பொறுத்தவரை, அதில்,…
கோத்தபாய ராஜபக்ச மலேசியப் பிரதமரைச் சந்தித்து கலந்துரையாடல்
மலேசியாவிற்கு விஜயம் செய்துள்ள பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ச, அந்நாட்டுப் பிரதமர் நஜீப் ரசாக்கைச் சந்தித்து கலந்துரையாடியுள்ளார். இந்தப் பேச்சுவார்த்தை கோலாலம்பூர் உலக வர்த்தக மையத்தில் ஆசியா பாதுகாப்பு சேவைகள்- 2014 மாநாட்டின்போது நடைபெற்றதாக மலேசியப் பிரதமர் அலுவலகம் தெரிவிக்கின்றது. பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய மற்றும் அவரது குழுவினருடன்…
வடக்குக்கு வருகிறாராம் தென்னாபிரிக்காவின் ராமபோச!
தென்னாபிரிக்க அரசின் விசேட பிரதிநிதி சிறில் ராமபோச எதிர்வரும் மே மாத இறுதியில் இலங்கையின் வடக்கு - கிழக்குப் பகுதிகளுக்கு வருகை தரவுள்ளார். இவர் தென்னாபிரிக்க அரசால் இலங்கை இனப்பிரச்சினை தொடர்பான விவகாரங்களைக் கையாள்வதற்காக நியமிக்கப்பட்டுள்ள விசேட பிரதிநிதியாவார். இங்கு வரும் சிறில் ராமபோச கள நிலைமைகளை நேரடியாக…
டக்ளஸ், கருணா, பிள்ளையான் ஆகியோர் மீது விசாரணை நடத்த ஜனாதிபதி…
அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, பிரதியமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரன், முன்னாள் கிழக்கு மாகாண முதலமைச்சர் சிவநேசதுரை சந்திகாந்தன் ஆகியோரை காணாமல் போனவர்களை தேடியறியும் ஜனாதிபதி ஆணைக்குழுவின் முன்னிலையில் அழைத்து விசாரணை செய்வதற்கு ஆணைக்குழு முடிவெடுத்துள்ளதாகத் தெரியவருகின்றது. காணாமல் போனவர்கள் தொடர்பில் விசாரணை நடத்த ஜனாதிபதியினால் நியமிக்கப்பட்ட ஆணைக்குழு வடக்கிலும் கிழக்கிலும்…
குற்றச் செயல்கள் தொடர்பிலான விசாரணைகளில் திருப்தியில்லை: பிரிட்டன்
இலங்கையில் இடம்பெற்ற குற்றச் செயல்கள் தொடர்பிலான விசாரணைகள் குறித்து திருப்தியடைய முடியாது என பிரிட்டன் அமைச்சர் ஷுகோ ஸ்வாயர் தெரிவித்துள்ளார். போர் நிறைவடைந்து ஐந்து ஆண்டுகள் கடந்துள்ள நிலையில், குற்றச் செயல்கள் தொடர்பிலான விசாரணைகளில் சிறிதளவு முன்னேற்றமே ஏற்பட்டுள்ளது. எனினும் உரிய முறையில் விசாரணைகள் நடத்தப்படவில்லை. ஐக்கிய நாடுகள்…
சர்வதேச விசாரணை வரும் ஜூன் மாதமே நடைபெறும்!- கொழும்பு ஆங்கில…
இலங்கையில் போரின் போது இடம்பெற்ற போர்க்குற்றச்சாட்டுகள் மற்றும் மனிதஉரிமை மீறல்கள் தொடர்பில் விசாரணை நடத்துவதற்காக ஐ.நா வில் முன்மொழியப்பட்டுள்ள சர்வதேச விசாரணைகள் வரும் ஜூன் மாதம் ஆரம்பிக்க உள்ளதாக ஐ.நா உயர்அதிகாரி ஒருவரை மேற்கோள்காட்டி கொழும்பு ஆங்கில வாரஇதழ் ஒன்று தெரிவித்துள்ளது. இந்த விசாரணையை மேற்கொள்வதற்குத் தேவையான பொறிமுறை…
சர்வதேச பொலிஸ்காரனாக அமெரிக்கா செயற்படுவதை இலங்கை அனுமதிக்காது: கெஹலிய
சர்வதேச பொலிஸ்காரனாக அமெரிக்கா செயற்படுவதை இலங்கை அனுமதிக்காது என்று அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல தெரிவித்துள்ளார். இலங்கைக்கு எதிராக ஜெனீவாவில் அமெரிக்கா கொண்டு வந்த யோசனை நிறைவேற்றப்பட்டதன் பின்னர், ஐக்கிய நாடுகளின் நிபுணர் குழு ஒன்று இலங்கைக்கு சென்று விசாரணைகளை நடத்த எதிர்பார்த்துள்ளது. எனினும் இந்த நிபுணர் குழுவின் நியமனம்…
நெடியவன், விநாயகம் பற்றி சர்வதேச பொலிஸில் இலங்கை புகார்
இலங்கையில் மீண்டும் விடுதலைப் புலிகளுக்கு உயிரூட்டுவதற்கு முயற்சிப்பதாக அரசாங்கத்தினால் தெரிவிக்கப்படுகின்ற நெடியவன், விநாயகம் ஆகிய இருவரையும் கைதுசெய்வதற்காக இன்டர்போல் - சர்வதேச பொலிசாரிடம் உஷார்ப்படுத்தியிருப்பதாக காவல்துறை பேச்சாளர் அஜித் ரோகண தெரிவித்திருக்கின்றார். விடுதலைப்புலிகளின் நடவடிக்கைளை மீண்டும் உருவாக்குவதற்கு உதவுபவர்கள் தொடர்பில் மேற்கொள்ளப்படும் விசாரணைகளை விரிபடுத்துவது பற்றி வெளியாகியுள்ள தகவல்…
ஐ.நா விசாரணைக்குழுவில் புலி ஆதரவாளர்கள்?
ஐக்கிய நாடுகள் விசாரணைக் குழுவில் தமிழீழ விடுதலைப் புலி ஆதரவாளர்கள் உள்ளடக்கப்பட உள்ளதாக சிங்கள ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது. போர்க்குற்றச் செயல்கள் தொடர்பில் விசாரணை நடாத்த ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவை ஆணையாளரினால் விசேட நிபுணர் குழு ஒன்று நியமிக்கப்பட உள்ளது. இந்தக் குழுவில் அங்கம் வகிக்கும்…
மனித உரிமை மீறல்கள் குறித்து தகவல் வழங்கக் கூடாதா? -அப்படியொரு…
ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பணியகத்தினால் மேற்கொள்ளப்படவுள்ள விசாரணை செயற்பாடுகளுக்கு தகவல் வழங்கும் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என அரசாங்கம் தெரிவித்துள்ளமையானது. அவர்களை அச்சுறுத்தும் செயற்பாடாகும். அப்படியொரு சட்டம் நாட்டில் இல்லையென ஐக்கிய தேசிய கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் லக்ஷ்மன் கிரியெல்ல தெரிவித்தார். ஐக்கிய…
பயங்கரவாதிகளுடன் தொடர்புகளைப் பேணிவோரின் சொத்துக்கள் அரசுடமையாக்கப்படும்: கோத்தபாய
பயங்கரவாத அமைப்புக்களுடன் தொடர்புகளைப் பேணிவொரின் சொத்துக்கள் அரசுடமையாக்கப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதி விசேட வர்த்தமானி அறிவித்தல் ஒன்றின் ஊடாக இவ்வாறு சொத்துக்கள் அரசுடமையாக்கப்பட உள்ளது. பயங்கரவாதிகளுடன் தொடர்புகளைப் பேணி வரும் நபர்களின் தராதரத்தைப் பாராது சொத்துக்களை அரசுடமையாக்க நடவடிக்கை எடுக்கப்படும் என பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ச தெரிவித்துள்ளார்.…
சிறிலங்காவை கவலைக்குரிய நாடாக பிரித்தானியா அறிவிப்பு
சிறிலங்காவை கவலைக்குரிய நாடாக பிரித்தானிய வெளிவிவகார அமைச்சு பிரகடனம் செய்திருக்கிறது. பிரித்தானிய வெளிவிவகார அமைச்சினால், 2013ம் ஆண்டுக்கான மனிதஉரிமைகள் நிலை பற்றிய அறிக்கை நேற்று வெளியிடப்பட்டுள்ளது. இந்த அறிக்கையில், சிறிலங்காவில், கடந்த ஆண்டு சிறிலங்காவின் மனிதஉரிமைகள் நிலை கவலைக்குரியதாக இருந்தது என்று குறிப்பிடப்பட்டுள்ளது. போருக்குப் பின்னர், உட்கட்டமைப்பு வசதிகளை மீள…
மான் வேட்டையை, புலி வேட்டையாகக் காண்பிக்கின்றது சிங்கள அரசு!
இப்போது, இலங்கைத் தீவில் சிங்கள ஆட்சியாளர்களால் நிகழ்த்தப்படும் தமிழர் விரோத நடவடிக்கைகளுக்காக அழுவதா? அல்லது ஆத்திரம் கொள்வதா? என்ற அங்கலாய்ப்பு மட்டுமே ஒவ்வொரு தமிழனிடமும் எஞ்சி இருக்க முடியும். கடத்தல்கள், காணாமல் ஆக்குதல், ஆதாரமற்ற வகையிலான படுகொலைகள், பாலியல் வன்கொடுமைகள், தற்கொலைகளாக ஆக்கப்படும் தமிழ்ப் பெண்களது மரணங்கள், கலாச்சாரச்…
கோபி, தேவியன் அப்பன் ஆகியோர் இராணுவ உளவாளிகளே!
விடுதலைப் புலிகளின் புதிய தலைவர் என அரசாங்கம் கூறும் கோபி, அப்பன், தேவியன் ஆகியோர் புளியங்குளம் இராணுவ முகாமில் பல காலமாக இராணுவ உளவாளிகளாக செயற்பட்டு வந்தவர்கள் என சிங்கள இணையத்தளம் ஒன்று தெரிவித்துள்ளது. இவர்கள் இராணுவப் புலனாய்வுப் பிரிவின் வீரரான செல்வராஜா கமலராஜா ( இலக்கம் 776927)…
ருத்திரகுமாரனின் தலையை கொண்டு வரும் நபருக்கு ஒரு கோடி ரூபா…
சர்வதேச நாடுகளில் இருக்கும் விடுதலைப் புலித் தலைவர்களை உயிருடனோ பிணமாகவே இலங்கைக்கு கொண்டு வர வேண்டும் என ஜாதிக ஹெல உறுமயவின் மேல் மாகாண சபையின் உறுப்பினரும் அந்த கட்சியின் ஊடகப் பேச்சாளருமான நிஷாந்த ஸ்ரீ வர்ணசிங்க தெரிவித்துள்ளார். கொழும்பில் நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் மேலும்…
புலிகளுக்கும் இராணுவத்தினருக்கும் மோதல்! கோபி உட்பட மூவரும் சுட்டுக் கொலை?
நெடுங்கேணி பிரதேசத்தில் தமிழீழ விடுதலைப் புலிச் சந்தேக நபர்களுக்கும், இராணுவத்தினருக்கும் இடையில் மோதல் சம்பவமொன்று இடம்பெற்றுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. இந்த சம்பவத்தில் இரண்டு தரப்பினருக்கும் சேதங்கள் ஏற்பட்டுள்ளதாக சிங்கள ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது. தமிழீழ விடுதலைப் புலிச் சந்தேக நபர்களில் மூன்று பேர் கொல்லப்பட்டதுடன், ஒரு இராணுவ படைவீரர் கொல்லப்பட்டுள்ளதாக…
வடக்கில் தொடரும் சுற்றி வளைப்புக்கள் – 65 பேர் கைது
வட,கிழக்கு மாகாணங்களில் தமிழீழ விடுதலைப் புலிகள் மீள் உருவாக்கம் பெறுவதற்கான முனைப்புக்கள் உள்ளதாக இலங்கையின் பொலிஸ் பேச்சாளர் குற்றம் சாட்டியுள்ளார். இதன்படி இரு மாகாணங்களிலும் இதுவரை 65 இளைஞர்கள் பயங்கரவாத குற்றத்தடுப்பு பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் சுட்டிக்காட்டியிருக்கின்றார். கடந்த மாதத்தின் முற்பகுதியில் கிளிநொச்சி- தர்மபுரம் கிராமத்தில் விடுதலைப் புலிகளின் உறுப்பினர்கள்…
சுண்டிக்குளமும் பறிபோகின்றது! துரோகத்தின் கூட்டுகளவாணிகளாக அரச அதிகாரிகள்!!
வடமராட்சி கிழக்கின் சுண்டிக்குளம் பகுதியினில் பெருமெடுப்பிலான சிங்கள குடியேற்றம் மற்றும் சுற்றுலா விடுதிகளை அமைக்கும் முயற்சிகள் ஆரம்பமாகியுள்ளது.வடக்கினில் கோத்தா மற்றும் நாமல் ராஜபக்ஸ தரப்புக்கள் தமது முதலீடுகளை விஸ்தரித்துவருகின்ற நிலையினில் தற்போது ஓட்டப்பந்தயத்தினில் பிந்தி ஓடி வந்து பஸில்ராஜபக்சவும் இணைந்துள்ளார். இதன் பிரகாரம் சுண்டிக்குளம் பகுதியினில் சுமார் பத்து…
சர்வதேசத்தின் கோரிக்கைகளை இலங்கை செவிமடுக்க வேண்டும்: பிரித்தானியா
சர்வதேச சமூகத்தின் கோரிக்கைகளை இலங்கை செவிமடுக்க வேண்டும் என்று பிரித்தானிய வெளியுறவு அலுவலக அமைச்சர் ஹுகோ ஸ்வைரி தெரிவித்துள்ளார். சர்வதேச சமூகம் ஐக்கிய நாடுகள் சபையின் ஊடாக இலங்கைக்கு செய்தியை அனுப்பியிருக்கிறது. இந்தநிலையில் அந்த சர்வதேச சமூகம் எதனை எதிர்ப்பார்க்கிறது, எதனை கேட்கிறது என்று இலங்கை ஆராய வேண்டும்…
சிங்கள தேசம் இன்னொரு போர்க்களத்தை நோக்கியே தமிழர்களை நகர்த்துகின்றது!
முள்ளிவாய்க்கால் பேரழிவு நிகழ்த்தப்பட்டு ஐந்து வருடங்கள் நிறைவுக்கு வரும் நாட்களில், மீண்டும் வன்முறைப் பாதை ஒன்றைத் தெரிவு செய்ய வேண்டிய நிர்ப்பந்தத்தை தமிழ் மக்கள் மீது சிங்கள ஆட்சியாளர்கள் வலிந்து திணித்து வருகின்றார்கள். வரைமுறையற்ற சிங்கள அரச பயங்கரவாதத்தால், தமிழீழம் மீண்டும் அதி உச்சபட்ச அச்சுறுத்தலை எதிர்கொண்டுள்ளது. வாழ்வதற்கான…
பசில் ராஜபக்சவை சந்திக்க மறுத்தார் முதலமைச்சர் விக்னேஸ்வரன் – மத்திய…
சிறிலங்காவின் பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பசில் ராஜபக்சவை சந்தித்துப் பேசுவதற்கு, வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் மறுப்புத் தெரிவித்துள்ளதாக, யாழ்ப்பாண ஊடகத் தகவல் ஒன்று கூறுகிறது. வடக்கு முதலமைச்சர் சி.வி. விக்னேஸ்வரனை நேரில் சந்தித்துப் பேசுவதற்கு, சிறிலங்காவின் பொருளாதார அபிவிருத்தி அமைச்சர், பசில் ராஜபக் ச விருப்பம்…
