அனைத்துலக விசாரணையில் இருந்து மகிந்தவைக் காப்பாற்றினோம் – மங்கள சமரவீர

அனைத்துலக குற்றவாளியாவதில் இருந்து சிறிலங்காவின் முன்னாள் அதிபர் மகிந்த ராஜபக்சவை, சிறிலங்கா பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவே காப்பாற்றினார், என நிதியமைச்சர் மங்கள சமரவீர தெரிவித்துள்ளார். மாத்தறையில் நடந்த ஐக்கிய தேசியக் கட்சியின் கூட்டத்தில் உரையாற்றிய அவர், “முன்னாள் அதிபர் மகிந்த ராஜபக்சவினால் இப்போது, அனைத்துலக  சமூகத்தின் முன் சென்று…

வவுனியா மக்களுக்கு பகிரங்க எச்சரிக்கை விடுத்துள்ள ஆவா குழு..

வவுனியாவில் இன்று காலை முதல் பல இடங்களில் ஆவா குழுவினரின் துண்டுப்பிரசுரங்கள் வீதிகளில் வீசப்பட்ட நிலையில் பொலிசாரல் மீட்கப்பட்டுள்ளன. இவ் விடயம் குறித்து மேலும் தெரியவருகையில், இன்று காலை வவுனியா குருமன்காடு, வைரவப்புளியங்குளம், புகையிரத நிலைய வீதி, கண்டி வீதிகள் போன்ற பகுதிகளில் வீதிகளில் வீசப்பட்ட நிலையில் ஆவா…

விடுதலைப் புலிகளின் காலத்தில் புனித பிரதேசமாக இருந்த யாழ் வடமராட்சிப்…

யாழ்ப்பாணத்தின் வடமராட்சிப் பிரதேசம் விடுதலைப் புலிகளின் காலத்தில் புனிதமாக இருந்ததாக யாழ் மாவட்ட மீனவர் ஒத்துழைப்பு இயக்கத்தின் தலைவர் இ.முரளிதரன் தெரிவித்துள்ளார். ஆனால் இன்று வடமராட்சி கிழக்குப் பகுதியே போதைப் பொருட்கள் தரையிறக்கப்படும் முக்கிய தளமாக இருப்பதாகவும் இதனை கட்டுப்படுத்த அரசாங்கம் தவறிவிட்டதாகவும் அவர் குற்றம் சாட்டியுள்ளார். நேற்று…

தொடரும் ஆவா குழுவினரின் அட்டகாசம்! இன்றும் யாழில் பதற்றம்

யாழ். மானிப்பாய் பகுதியில், செல்லமுத்து விளையாட்டு மைதானத்துக்கு அருகாமையில் உள்ள வீடு ஒன்றிற்குள் புகுந்து ஆவா வாள்வெட்டுக் கும்பல் இன்று மதியம் நடத்திய தாக்குதலில் ஒருவர் படுகாயமடைந்துள்ளார். படுகாயமடைந்தவர் யாழ். போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. 3 மோட்டார் சைக்கிள்களில் இலக்கத் தகடுகளை மறைத்தும் முகங்களை மூடியும் வந்த…

இசைப்பிரியா, பாலச்சந்திரன் கொலைகளின் சூத்திரதாரி மைத்திரிதான்!

ஸ்ரீலங்கா ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, வெளிநாடு சென்றுள்ள நிலையில் அங்கு அவர் தெரிவித்த கருத்துக்கள் பெரும் அரசியல் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன. ஐக்கிய நாடுகள் சபையில் பேசுவதற்காக சென்றுள்ள மைத்திரி, வெளிநாடுகள் ஸ்ரீலங்கா அரசுமீது தலையீட்டையோ, அழுத்தத்தையோ பிரயோகிக்க வேண்டாம் என்று கூறியுள்ளார். மகிந்த ராஜபக்சக்களின் குழந்தை மைத்திரிபால இப்போதுதான்…

‘எமக்காக இந்தியா தொடரந்தும் குரல் கொடுக்க வேண்டும்’

இலங்கைத் தமிழர் பிரச்சினையில், இந்திய அரசாங்கம், இலங்கை அரசாங்கத்துக்கு அழுத்தம் கொடுக்க வேண்டுமென, இலங்கைத் தமிழரசுக் கட்சியின் தலைவரும் யாழ். மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான மாவை சேனாதிராஜா தெரிவித்தார். திருகோணமலையில் அமைந்துள்ள இலங்கைத் தமிழரசுக் கட்சியின் அலுவலகத்தில், நேற்று (28) மாலை நடைபெற்ற சிநேகபூர்வக் கலந்துரையாடலில் உரையாற்றும் போதே,…

கூட்டமைப்பு சார்பில் முதலமைச்சர் பதவிக்கு புதிய வேட்பாளர் – சுமந்திரன்

வடக்கு மாகாணசபைக்கான அடுத்த தேர்தலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு புதிய முதலமைச்சர் வேட்பாளர் ஒருவரை நிறுத்த திட்டமிட்டுள்ளதாக, கூட்டமைப்பின் பேச்சாளர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார். கொழும்பு ஆங்கில வாரஇதழ் ஒன்றுக்கு கருத்து வெளியிட்டுள்ள அவர், ”தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் யாப்பை விக்னேஸ்வரன் மீறிவிட்டார். மக்களுக்கு வழங்கிய வாக்குறுதிகளை நிறைவேற்றத் தவறி…

புதிய முன்னணியில் விக்னேஸ்வரன் போட்டி – கொழும்பு வாரஇதழுக்கு செவ்வி

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தம்முடன் மகிழ்ச்சியாக இல்லை என்றால், அடுத்த மாகாணசபைத் தேர்தலில், புதிய அரசியல் முன்னணி ஒன்றின் மூலம் போட்டியிடப் போவதாகத் தெரிவித்துள்ளார் வடக்கு மாகாண முதுலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன். கொழும்பு ஆங்கில வாரஇதழ் ஒன்றுக்கு அவர் அளித்துள்ள செவ்வியில், “எனது செயற்பாடுகள் தொடர்பாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில்…

புதிய அரசியலமைப்பு தாமதமடைவதற்கு ஜனாதிபதியே காரணம்: எம்.ஏ.சுமந்திரன்

புதிய அரசியலமைப்பு உருவாக்கத்திற்கான முன்னெடுப்புக்கள் இடம்பெற்ற போதும், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அதற்கான சரியான அரசியல் தலைமைத்துவத்தை கொடுத்து நகர்த்தாமல் இருப்பதே இழுத்தடிப்பிற்கு காரணம் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினரும் பேச்சாளருமான எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார். பொறுப்புக்கூறல் விடயத்திலும் இதே இழுத்தடிப்புக் காணப்படுவதாகவும் அவர் குற்றஞ்சாட்டியுள்ளார். ஐக்கிய…

இறுதி யுத்தத்தை வழிநடத்தியது நானே! நியூயோர்க்கில் மைத்திரி!

போரின் இறுதி இரண்டு வாரங்களில், விடுதலைப் புலிகள் கொழும்பில் கொத்தணிக் குண்டுத் தாக்குதலை நடத்த திட்டமிட்டிருந்ததால், மகிந்த ராஜபக்ச, கோத்தாபய ராஜபக்ச, ரட்ணசிறி விக்கிரமநாயக்க, சரத் பொன்சேகா போன்றவர்கள் நாட்டை விட்டு வெளியேறியிருந்தனர் என்று போட்டுடைத்துள்ளார் சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன. அமெரிக்கா சென்றுள்ள சிறிலங்கா அதிபர் மைத்திரிபால…

தமி­ழர்­கள் நம்பி ஏமாந்த கடைசி சிங்­க­ளத் தலை­வர் மைத்­தி­ரியாக இருக்கட்டும்!…

தமிழ் பேசும் மக்­கள் நம்பி ஏமாந்த கடை­சிச் சிங்­க­ளத் தலை­வ­ராக மைத்­தி­ரி­பா­லவே இருப்­பார் என்­பதை வர­லாறு சுட்­டிக்காட்­டும், இவ்­வாறு வடக்கு மாகாண சபை உறுப்­பி­னர் எம்.கே.சிவா­ஜி­லிங் கம் தெரி­வித்­துள்­ளார். ஐக்­கிய நாடு­கள் சபை­யில் அரச தலை­வர் மைத்­தி­ரி­பால சிறி­சேன ஆற்­றிய உரை தொட­ரில் அவர் அனுப்­பி­யுள்ள ஊடக அறிக்­கை­யி­லேயே…

முல்லை குருந்தூர்மலையில் விகாரை இருந்தது சிங்களப் பிக்குவின் புரளி!

முல்லைத்தீவு குமுழமுனை குருந்தூர் மலை தொடர்பில் ஒட்டுசுட்டான் பொலீசார் முன்வைத்த வழக்கு தொடர்பில் விடயம் இன்று 27.09.18 தொல்பொருள் திணைக்களத்தின் சட்டவாளர்கள் ஊடாக முல்லைத்தீவு மாவட்ட நீதவான் நீதிமன்றில் நகர்த்தல் பத்திரம்(மோசன்)தாக்கல் செய்யப்பட்டு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டுள்ளது. முல்லைத்தீவு மாவட்ட நீதவான் நீதிமன்ற நீதிபதி எஸ்.லெனின்குமார் முன்னிலையில் இந்த வழக்கு…

ஜனாதிபதி இராணுவத்தை காட்டிக்கொடுக்கவில்லை என இப்போது புரிகிறதா? மகிந்த சமரசிங்க

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நாட்டையும், இராணுவத்தையும் காட்டிக் கொடுத்தார் என்ற குற்றச்சாட்டு தற்போது பொய்யாக்கப்பட்டுள்ளதாக, அமைச்சர் மஹிந்த சமரசிங்க தெரிவித்துள்ளார். கொழும்பில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து வெளியிடுகையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டார். ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நாட்டை சர்வதேச அரங்கில் காட்டிக் கொடுத்துவிட்டார்…

இலங்கையில் பெருகும் யானை-மனித மோதல்: அரசே கிராமங்களில் யானைகளை விடுகிறதா?

இலங்கையில் இவ்வருடத்தில் இதுவரை மட்டும் யானைகள் தாக்கி 75 பேர் கொல்லப்பட்டுள்ளதாக வனவிலங்குத்துறை அமைச்சர் பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா தெரிவித்திருக்கிறார். அதேவேளை, 150 யானைகள் இதுவரை இறந்துள்ளதாகவும் அவர் கூறியுள்ளார். யானை - மனித மோதல் இலங்கையில் தற்போது அதிகரித்துள்ளதாகத் தெரியவருகிறது. யானை - மனித மோதலின்போது,…

’எமது பிரச்சினையை நாமே தீர்த்துக்கொள்வோம்; எவரும் தலையிட வேண்டாம்’

இலங்கையில், நிரந்தர சமாதானத்தை ஏற்படுத்துவதற்கு, இலங்கை இராணுவத்தினர், அர்ப்பணிப்புடன் செயற்பட்டுள்ளனர். யுத்தம் முடிவுக்குக் கொண்டுவரப்பட்டு 10 வருடங்களாகியுள்ள நிலையில், இலங்கையில் பல மாற்றங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளனவெனக் கூறிய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, மாற்றங்களுடன் கூடிய இலங்கையை, புதிய கண்ணோட்டத்துடனும் புதிய சிந்தனையுடனும் பார்வையிடுமாறு, சர்வதேசத்திடம் கோரினார். அத்துடன், இலங்கையின் உள்நாட்டுப்…

பாரத தேசத்தை தலைகுனிய செய்த அகிம்சையின் கதாநாயகன் தியாகி திலீபனின்…

22 ஆண்டுகளாய் புலிகளால் பேணிப் பாதுகாக்கப்பட்டுவந்த திலீபனின் திருவுடல் இறுதியாய் எங்கே விதைக்கப்பட்டது? தியாகி திலீபன் அவர்கள் நல்லூர் முன்றலில் உண்ணா நோன்பிருந்ததும் 12 நாட்களின் பின் உயிர் துறந்ததும் அதன் பின் அவர் உடல் அவரின் இறுதி ஆசையின் பிரகாரம் யாழ் பல்கலைக்கழகத்தின் மருத்துவ பீடத்திற்கு மருத்துவ…

சிங்களத்தின் நயவஞ்சகத்தால் கோழைத்தனமாக வீழ்த்தப்பட்ட தமிழீழ வான்படையின் தந்தை கேணல்…

சிங்களத்தின் நயவஞ்சகத்தால் கோழைத்தனமாக வீழ்த்தப்பட்ட தமிழர் சேனையின் வான்படை தளபதி கேணல் சங்கர் அவர்களின் 17ஆம் ஆண்டு வீரவணக்க நாள் இன்றாகும்!. தமிழர்களின் வான்படை வரலாறு ஆனது கேணல் சங்கர் அவர்களின் பெயருடன் ஒட்டி இணைந்தது. விடுதலைப்புலிகள் விமானப் படையணி ஒன்றைத் தொடங்கியபோது அதன் தளபதியாக கேணல் சங்கர்…

‘சி.வி எதிர்பார்ப்பது ந​டைபெறாது’

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை, வெறுமனே தேர்தலில் வாக்குப் பெறுவதற்கான இயந்திரமாகப் பயன்படுத்துவதையே, தமிழரசு கட்சி விரும்புவதாக, ஈ.பீ.ஆர்.எல்.எப் அமைப்பின் தலைவர் சுரேஷ் பிரேமசந்திரன் தெரிவித்தார். அத்துடன், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கட்சியாகப் பதிவு செய்யப்படும் என முதலமைச்சர் விக்னேஸ்வரன் எதிர்பார்ப்பது, உருபோதும் நடைபெறபோவது இல்லையெனவும் ​அவர் குறிப்பிட்டார். வடக்கு…

திலீபன் நினைவேந்தல் நிகழ்வுக்கு தடை கோரிய மனு நீதிமன்றினால் நிராகரிப்பு

தியாகதீபம் திலீபன் நினைவேந்தல் நிகழ்வைத் தடை செய்து, உத்தரவிடக் கோரி சிறிலங்கா காவல்துறையினர் தாக்கல் செய்திருந்த மனுவை, யாழ். நீதிவான் நீதிமன்றம் நிராகரித்துள்ளது. நாளை நல்லூரில் நடைபெற ஏற்பாடாகியுள்ள திலீபன் நினைவேந்தல் நிகழ்வைத் தடை செய்யுமாறு கோரி, சிறிலங்கா காவல்துறையினர் யாழ். நீதிவான் நீதிமன்றில் கடந்த வெள்ளிக்கிழமை மனுவொன்றைத்…

தியாகி திலீபனின் நினைவேந்தலை அனுஷ்டிக்க இராணுவம் பொலிஸ் தடை ஏற்படுத்த…

தியாகி திலீபனின் நினைவு நிகழ்வுகளை எதுவிதமான தடையுமின்றி நாளை 27/09/2018 நடாத்துவதற்கு நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது. யாழ்ப்பாணம் மாநகரசபையால் நாளையதினம் தியாகி லெப்.கேணல் திலீபன் அவர்களின் நினைவேந்தலை நடத்துவதற்கு ஏற்பாடுகளை செய்திருந்த நிலையில் அதற்கு தடை விதிக்குமாறு கோரி பொலிஸார் நீதிமன்றில் வழக்கு பதிவு செய்தனர் .இந்த வழக்கு…

இலங்கை இராணுவத்திடம் ஒப்படைக்கப்பட்ட எனது மகன் எங்கே? ஜ.நாவில் தாய்…

ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையில் இலங்கை தொடர்பான யோசனை நிறைவேற்றப்பட்டு மூன்று ஆண்டுகள் கடந்துள்ள போதிலும் பாதிக்கப்பட்டவர்களுக்கு எந்த நீதியும் இதுவரை வழங்கப்படவில்லை என காணாமல் போனோர் சம்பந்தமான அமைப்பின் செயலாளர் லீலா தேவி ஆனந்தராஜா தெரிவித்துள்ளார். ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையில் இன்று உரையாற்றும்…

இலங்கை: சிறையில் உள்ள தமிழ் அரசியல் கைதிகளை விடுதலை செய்ய…

இலங்கை சிறைச்சாலைகளில் தடுத்து வைக்கப்பட்டிருக்கும் தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலையை வலியுறுத்தி யாழ்ப்பாணத்தில் அடையாள உண்ணாவிரதப் போராட்டம் நடைபெற்று வருகிறது. வெகுஐன அமைப்புக்களின் ஒன்றிய ஏற்பாட்டில் யாழ் மாவட்டச் செயலகத்திற்கு முன் காலை 9 மணிக்கு இப்போராட்டம் தொடங்கி தொடர்ந்து ஐந்து மணி வரை நடைபெறவுள்ளது. இலங்கையின் அனுராதபுரம்…

இந்திய வம்சாவளியைச் சேர்ந்த மலையகத் தமிழர்களின் இன்றைய நிலை என்ன?

இலங்கையின் மத்திய மலையகத்தில் உள்ள தோட்டத் தொழிலாளர்களுக்கு நியாயமான சம்பள உயர்வு கோரி தலவாக்கலை நகரில் ஞாயிறன்று ஆர்ப்பாட்டமொன்று நடத்தப்பட்டது. மலையக அரசியல் கட்சிகளின் கூட்டணியான தமிழ் முற்போக்கு கூட்டணி இந்த ஆர்ப்பாட்டத்தை ஏற்பாடு செய்திருந்தது. மலைநாட்டு புதிய கிராமங்கள், உட்கட்டமைப்பு சமுதாய அபிவிருத்தி அமைச்சர் பழனி திகாம்பரம்,…