பள்ளிக்கூட ஒன்று கூடல் நிகழ்வின் போது தாம் இந்திய, சீன மாணவர்களிடம் 'balik India, China' (இந்தியாவுக்கும் சீனாவுக்கும் திரும்பிச் செல்லுங்கள்) எனச் சொன்னதை ஷா அலாமில் உள்ள அலாம் மெகா தேசிய இடைநிலைப்பள்ளியின் தலைமை ஆசிரியை ஒப்புக் கொண்டுள்ளதாகச் சொல்லப்படுகின்றது. அந்தத் தகவலைத் தெரிவித்த மஇகா ஷா…
சக மாணவர்களின் பகிடிவதையினால் உயிரை விட்ட முல்லை மாணவன்…!! மட்டு…
மட்டக்களப்பு – கல்வியற் கல்லூரியில் முல்லைத்தீவைச் சேர்ந்த மாணவன் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.குறித்த மாணவனின் சடலம் ஆரையம்பதியில் உள்ள கல்வியற் கல்லூரி விடுதியிலிருந்து நேற்று மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இதில், கல்வியற் கல்லூரியின் முதலாம் ஆண்டு மாணவனான முல்லைத்தீவை சேர்ந்த 23 வயதுடைய மனுவேல்பிள்ளை பிரதீபன் என்ற…
இலங்கை தமிழ் கைதிகள் போராட்டம்: விடுதலை எப்போது சாத்தியமாகும்?
இலங்கையில் அனுராதபுரம் சிறையில் உள்ள தமிழ் கைதிகள் செப்டம்பர் 14ஆம் தேதி முதல் உண்ணாவிரதப்போராட்டமொன்றை முன்னெடுத்து வருகின்றனர். இதற்கு ஆதரவு தெரிவித்து கொழும்பு மெகசின் சிறையில் உள்ள தமிழ் கைதிகள் 43 பேரும் அக்டோபர் 3 ஆம் தேதி முதல் உண்ணாவிரதப் போராட்டத்தை ஆரம்பித்தனர். இலங்கையில் தற்போது தமிழ்…
ஆவா குழுவை அடக்க யாழில் களமிறங்கியது எஸ்.ரி.எவ் (STF).!
யாழ்ப்பாணம், கொக்குவில் பகுதியில் கடந்த சில நாட்களாகத் தொடர்ந்த ஆவா குழுவின் வாள்வெட்டுச் சம்பவங்களை அடுத்து அங்கு விசேட அதிரடிப் படையினர் (எஸ்.ரி.எவ்.) பாதுகாப்புக் கடமைகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். யாழ்ப்பாணத்தில் கடந்த சில தினங்களாக வாள்வெட்டுச் சம்பவங்கள் அதிகரித்திருந்தன. கொக்குவில் பகுதியிலேயே அதிகளவு வாள்வெட்டுச் சம்பவங்கள் பதிவாகியுள்ளன. கடந்த வெள்ளிக்கிழமையும்…
காளிகோயிலை காசு கொடுத்து வாங்கிய முஸ்லீம் நபர்; இடிக்கப்போவதாக பல…
மட்டக்களப்பு மாவட்டத்தின் தளவாய் பிரதேசத்தி 100 வருடங்கள் பலமை வாய்ந்த காளிகோயிலை ஏறாவூரைச் சேர்ந்த முஸ்லீம் காணி உத்தியோகத்தர் ஒருவர் பணம் கொடுத்து வாங்கியுள்ளதாக கோயில் நிர்வாகத்தினர் தெரிவித்துள்ளனர். இது குறித்து கோயில் நிர்வாகத்தினர் தெரிவிக்கும் போது தளவாய் பிரதேசத்தி உள்ள தமிழர்களின் காணிகள் மற்றும் அரச காணிகளுக்கு…
ரணிலின் உரையும்… கதாநாயகியாக காத்திருக்கும் விஜயகலாவும்
இலங்கைத்தீவின் இன்றைய கடும் காலநிலை சீர்கேட்டு மத்தியில் தெரிந்த ஊடககுவிய மையம் எதுவென வினவினால் அது நிச்சயமாக கொழும்பு நீதிமன்றமாகவே இருக்கும். அரபிக்கடலின் உருவாகிய வளிமண்டல தாழழுக்க மண்டலம் சாம்பிராணி என அர்த்தப்படும் அரபிமொழி சொல்லான லூபனில் அச்சுறுத்தினாலும் இந்த அச்சுறுத்தலுக்கும் மத்தியில் பரபரப்புக்குரிய இடமாக இந்த நீதிமன்ற…
விஜயகலா மகேஸ்வரன் கைதாகி பிணையில் விடுவிப்பு
முன்னாள் இராஜாங்க அமைச்சரும், ஐதேகவின் நாடாளுமன்ற உறுப்பினருமான விஜயகலா மகேஸ்வரன் இன்று காலை சிறிலங்கா காவல்துறையினரால் கைது செய்யப்பட்டு, நீதிமன்றினால் பிணையில் செல்ல அனுமதிக்கப்பட்டார். விடுதலைப் புலிகள் மீண்டும் வர வேண்டும் என்று யாழ்ப்பாணத்தில் நடந்த நிகழ்வு ஒன்றில் இராஜாங்க அமைச்சராக இருந்த போது விஜயகலா மகேஸ்வரன் உரையாற்றியிருந்தார். அந்தச்…
புலிகள் பற்றிப் பேசி அரசியல் செய்வதைவிட, புலிகள் மீதான தடைக்கு…
‘தமிழீழ விடுதலைப் புலிகள் பற்றிப் பேசி அரசியல் செய்வதைவிட, புலிகள் மீதான தடைக்கு எதிராக நீதிமன்றத்தின் வழக்குத் தொடரலாம்’ என்று தேசிய ஒருமைப்பாடு, நல்லிணக்க, அரசகரும மொழிகள் அமைச்சர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார். கொழும்பில் நேற்றுமுன்தினம் சனிக்கிழமை இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு பேசும் போதே அவர் இவ்வாறு…
ஐக்கியத் தீர்வா அல்லது தனிநாடா? – வடக்கு – கிழக்கில்…
ஐக்கிய இலங்கைக்குள் தீர்வா அல்லது தனிநாடா வேண்டும்? என்பது குறித்து வடக்கு, கிழக்கில் வாழும் மக்களிடையே கருத்துக்கணிப்பு நடத்தப்படவேண்டும் என வலியுறுத்தி தென்னிலங்கையிலுள்ள இடதுசாரி கட்சியொன்று தீர்மானம் நிறைவேற்றவுள்ளது. சிரேஷ்ட இடதுசாரி தலைவர்களில் ஒருவரான சிறிதுங்க ஜயசூரிய தலைமையிலான ஐக்கிய தேசியக் கட்சியின் வருடாந்த மாநாடு எதிர்வரும் 13,14…
அரசியல் கைதிகளை விடுதலை செய்யாவிட்டால் கொழும்பில் பாரிய போராட்டம்: மாவை…
சிறைகளில் பல ஆண்டுகளாக தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகளை விடுதலை செய்யாவிட்டால், பாரிய போராட்டமொன்றை கொழும்பில் முன்னெடுக்கப்போவதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் செயலாளரும், பாராளுமன்ற உறுப்பினருமான மாவை சேனாதிராஜா தெரிவித்துள்ளார். முல்லைத்தீவில் நேற்றுமுன்தினம் வெள்ளிக்கிழமை நடைபெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார். மாவை…
அரசியல் கைதிகளா? எவரும் இந்த நாட்டில் இல்லை! – அமைச்சர்…
அரசியல் கைதிகள் என்று எவரும் இந்த நாட்டில் இல்லை ஆனால் பயங்கரவாத தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்ட சந்தேக நபர்களுக்கு எதிராக வழக்குத் தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக நீதி மற்றும் சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு அமைச்சர் தலதா அத்துகோரல தெரிவித்துள்ளார். அண்மையில் கண்டி சட்டத்தரணிகள் சங்கத்துடன் நடைபெற்ற ஒரு கூட்டத்திற்குப்…
யாழில் இயங்கும் ஆவா குழு இளைஞர்களால் பொலிஸாருக்கு ஏற்பட்டுள்ள நெருக்கடி!
வடக்கு மாகாண மூத்த பிரதிப் பொலிஸ் மா அதிபர் ரொஷான் பெர்ணான்டோ வாள்வெட்டு கலாசரம் கட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளது, வடபகுதியில் குறிப்பாக யாழ்ப்பாணத்தில் வாள்வெட்டு சம்வங்கள் மற்றும் வேறு வன்முறைகள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டதாக அறிவித்திருந்தார். அந்த அறிவிப்புக்கள் அனைத்தும் வெறும் வாய்வார்த்தைகளே என மக்கள் நினைக்கும் வகையில் வாள்வெட்டுக்…
அரசியல் கைதிகள் விடயத்தில் ஜனாதிபதி நலுவல்போக்கு! அரியநேத்திரன்
உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டுவரும் தமிழ் அரசியல் கைதிகளின் உயிருக்கு ஏதாவது ஆபத்து நேருமானால் அது வடகிழக்கில் பெரும் யுத்தமாக வெடிக்குமென மட்டக்களப்பு மாவட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் பா.அரியநேத்திரன் தெரிவித்தார். தமிழ் அரசியல் கைதிகளை நிபந்தனையின்றி விடுதலை செய்யக்கோரி மட்டக்களப்பு நகரில் கவனயீர்ப்பு போராட்டமொன்று நேற்று (வெள்ளிக்கிழமை) முன்னெடுக்கப்பட்டது.…
யுத்தத்தில் அங்கம் இழந்த நிலையிலும் சாதித்து காட்டிய ஈழத்து மாணவி..
இலங்கையில் தரம் 5 புலமைபரிசில் பரீட்சை பெறுபேறுகள் இன்றைய தினம் இணையத்தளத்தில் வெளியாகியுள்ள நிலையில், குறித்த பரீட்சையில் மாவட்டத்தில் முன்னிலை பெற்ற, சித்தியடைந்த மாணவிகளுக்கு சமூக வலைத்தளங்களில் வாழ்த்துக்கள் குவிந்து வருகின்றனர். இந்நிலையில் யுத்த பூமியில் இருந்து அங்கம் இழந்தாலும் மனவுறுதி தளராமல் தரம் 5 புலமைபரிசில் பரீட்சையில்…
டிசெம்பர் 31இற்கு முன் காணிகளை விடுவிக்க சிறிலங்கா அதிபர் உத்தரவு
வடக்கு, கிழக்கில் இராணுவத்தினர் வசமுள்ள பொதுமக்களின் காணிகளை, எதிர்வரும் டிசெம்பர் 31ஆம் நாளுக்கு முன்னர் ஒப்படைக்க நடவடிக்கை எடுக்குமாறு, சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன உத்தரவிட்டுள்ளார். வடக்கு, கிழக்கு அபிவிருத்தியை துரிதப்படுத்துவதற்கான அதிபர் செயலணியின் மூன்றாவது கூட்டம் நேற்று முன்தினம், சிறிலங்கா நாடாளுமன்ற வளாகத்தில் நடைபெற்றது.…
புலிகள் போன்ற ஒரு அமைப்பு 100 ஆண்டுகளில் உருவாக முடியாது…
விடுதலைப் புலிகளைப் போன்று ஒரு அமைப்பு வடக்கில் எழுச்சி பெறுவதற்கு 100 ஆண்டுகளில் வாய்ப்பே இல்லை என்று சிறிலங்காவின் சட்டம், ஒழுங்கு பிரதி அமைச்சர் நளின் பண்டார தெரிவித்துள்ளார். கொழும்பில் நேற்று சட்டம், ஒழுங்கு அமைச்சில் நடந்த செய்தியாளர் சந்திப்பின் போதே இவ்வாறு தெரிவித்தார். இந்தச் செய்தியாளர் சந்திப்பில்…
அரசியல் கைதிகளுக்கு கட்டங்கட்டமாக புனர்வாழ்வளித்து விடுவிக்க சட்டமா அதிபர் இணக்கம்:…
அநுராதபுரம் சிறைச்சாலையில் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுவரும் அரசியல் கைதிகளில் முதலில் உண்ணாவிரதத்தை ஆரம்பித்த 8 பேரையும், வெவ்வேறு கட்டங்களில் புனர்வாழ்வுக்கு அனுப்பி, அவர்களை விடுதலை செய்வதற்கான சம்மதத்தை சட்டமா அதிபர் வெளியிட்டுள்ளதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளரும் பாராளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார். இதன் மூலமாக, அரசியல் கைதிகளின்…
இலங்கையிலிருந்து படகு மூலம் பிரான்ஸ் செல்லும் இலங்கையர்கள்..
மீனவர்கள், மீன்பிடிப் படகுகள் மூலம் பிரான்ஸிற்குள் சட்டவிரோதமாக பிரவேசிக்கும் முனைப்புக்களில் ஈடுபட்டுள்ளதாக மீன்பிடிப் படகு உரிமையாளர்கள் தெரிவிக்கின்றனர். பலநாட்கள் கடலில் தங்கியிருந்து மீன்பிடிக்கக் கூடிய வசதியுடைய படகுகள் மூலம் மீன்பிடிக்கச் செல்லும் சில மீனவர்கள் அரசியல்வாதிகளின் ஒத்துழைப்புடன் பிரான்ஸின் தீவு ஒன்றில் குடியேறும் புதிய முயற்சியொன்றில் ஈடுபட்டுள்ளனர். பல…
“பிரபாகரனை முடித்துவிடுமாறே தமிழ்நாடு வலியுறுத்தியது” -பாட்டலி சம்பிக்க கூறுகிறார்
“இன்று, வேலுப்பிள்ளை பிரபாகரன் பற்றி, பலரும் பரிதாபமாகப் பேசிக்கொண்டிருக்கிறார்கள். ஆனால், பாதுகாப்புப் படையினரால், இறுதி யுத்தத்தில் பிரபாகரன் சுற்றிவளைக்கப்பட்ட போது, தமிழ் நாட்டின் அனைத்து அரசியல் தலைமைகளிடமும், இந்திய அரசாங்கத்தால் அது குறித்து அறிவிக்கப்பட்டிருந்தது. இன்னும் சில நாள்களில், பிரபாகரன் கொல்லப்பட்டு விடலாம். அதனால், சர்வதேசத் தலையீடு அவசியமா…
இறுதி போர் தொடர்பான உண்மை ஜனாதிபதியே வெளிப்படுத்த வேண்டும்: சுமந்திரன்
இலங்கையில் இடம்பெற்ற இறுதி கட்ட போர் தொடர்பான உண்மைகள் தமக்கு தான் தெரியும் என ஜனாதிபதி மைத்திரபால சிறிசேன தெரிவித்திருந்தார். அவ்வாறாயின் உண்மை கண்டறியப்பட வேண்டிய பொறிமுறையில் முதலாவதாக ஜனாதிபதியே சாட்சியமளிக்க வேண்டும் என தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார். இலங்கையில் இடம்பெற்ற போர்…
‘ஆவா’வை அடக்க இராணுவமா? – சிறிலங்கா இராணுவத் தளபதியின் கோரிக்கை…
வடக்கு மாகாணத்தில் செயற்படும் ஆவா குழு போன்ற ஆயுதக் குழுக்களை அடங்குவதற்கு, சிறிலங்கா இராணுவத்தின் தலையீடு தேவையில்லை என்றும், காவல்துறையே அதனை கையாளும் என்றும் சிறிலங்காவின் சட்டம், ஒழுங்கு அமைச்சர் ரஞ்சித் மத்தும பண்டார தெரிவித்துள்ளார். அரசாங்கம் அனுமதித்தால், வடக்கில் குற்றவியல் செயற்பாடுகளில் ஈடுபடும் குழுக்களை அடக்குவதற்கு இராணுவம்…
மன்னாரில் 30 வீதம் தோண்டப்பட்ட மனிதப் புதைகுழியில் 148 எலும்புக்கூடுகள்
மன்னார் சதொச வளாகத்தில் கண்டுபிடிக்கப்பட்ட மனிதப் புதைகுழியில் 30 வீதமான பகுதியே தோண்டப்பட்டுள்ளதாகவும், இதுவரை அங்கிருந்து 148 மனித எலும்புக்கூடுகள் மீட்கப்பட்டுள்ளதாகவும் பேராசிரியர் ராஜ் சோமதேவ தெரிவித்துள்ளார். மன்னார் மனிதப் புதைகுழி அகழ்வுப் பணிகளுக்குப் பொறுப்பான பேராசிரியர் ராஜ் சோமதேவ இதுபற்றிக் கருத்து வெளியிடுகையில், “இதுவரையில் புதைகுழியில் 30…
‘பேரினவாதமும் தேசியவாதமும்’ – லோகன் பரமசாமி
உலகிலேயே மிகவும் வலிமைமிக்க அரசியல் சக்தி எது என்ற கேள்வியுடன் சர்வதேச உறவுகள் குறித்து தலைசிறந்த மேலைத்தேய ஆய்வாளர்களில் ஒருவராகப் போற்றப்படும் ஸ்டீபன் வோல்ற் என்பவர் 2011ஆண்டில் Foreign Policy என்ற சஞ்சிகையில் கட்டுரை ஒன்றை எழுதி இருந்தார். அந்த கட்டுரையிலே உலகில் தற்போது அரசியல் செல்வாக்குமிகுந்த அம்சங்கள்…
இலங்கை இறுதிப்போர்: சாட்சியமளிப்பாரா அதிபர் சிறிசேன?
இலங்கையில் இடம்பெற்ற இறுதி கட்ட போர் தொடர்பான உண்மைகள் தமக்கு தான் தெரியும் என ஜனாதிபதி மைத்திரபால சிறிசேன தெரிவித்துள்ள நிலையில், அவ்வாறாயின் உண்மை கண்டறியப்பட வேண்டிய பொறிமுறையில் முதலாவதாக ஜனாதிபதியே சாட்சியமளிக்க வேண்டும் என தமிழ் தேசிய கூட்டமைப்பு தெரிவித்துள்ளது. மேலும் இலங்கையில் இடம்பெற்ற போர் குற்றங்கள்…