யுத்த காலத்தில் மாத்திரமின்றி, அதற்கு முன்னரும் பின்னரும் காணாமற்போனவர்கள் தொடர்பிலும்…

புதிதாக அமைக்கப்பட்டுள்ள காணாமற்போனோர் தொடர்பான அலுவலகத்தின் ஊடாக எத்தகைய காலத்திலும் இடம்பெற்ற நபர்கள் காணாமற்போனமை தொடர்பான விடயங்களை கண்டறிய முடியும் என்று அலுவலகத்தின் தலைவர் ஜனாதிபதி சட்டத்தரணி சாலிய பீரீஸ் தெரிவித்துள்ளார். வடக்கு- கிழக்கு மாத்திரமன்றி நாட்டின் ஏனைய பிரதேசங்களிலும் இடம்பெற்ற காணாமற்போனோர் தொடர்பாக இந்த அலுவலகத்தின் ஊடாக…

’சர்வதேசத்துக்கு அடிப்பணிந்துவிட்டது அரசாங்கம்’ என்கிறார் பீரிஸ்

சர்வதேச சக்திகளின் அச்சுறுத்தல்களுக்கு அடிப்பணிந்து, பாதுபாப்புப் படையினரை வெளிநாட்டு நீதிபதிகளைக் கொண்டு விசாரணை செய்ய, தற்போதைய அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கும் முன்னாள் அமைச்சரும் பேரராசிரியருமான ஜு.எல்.பீரிஸ், அரசாங்கம் ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் வழங்கிய வாக்குறுதிகளை நிறைவேற்றுவதற்கு நடவடிக்கைகளை முன்னெடுத்து வருவதாகவும்  குற்றம் சாட்டினார். பத்தரமுல்லையில், இன்று இடம்பெற்ற…

மட்டக்களப்பு விமான நிலையம் திறப்பு – பெரும்பகுதி நிலம் சிறிலங்கா…

மட்டக்களப்பு விமான நிலையம் இன்று சிவில் விமானப் போக்குவரத்துக்காக இன்று திறந்து வைக்கப்பட்ட போதிலும், அதன் பெரும் பகுதி நிலம், சிறிலங்கா விமானப்படையின் கட்டுப்பாட்டிலேயே இருந்து வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. மூன்று பத்தாண்டுகளாக சிறிலங்கா விமானப்படையின் கட்டுப்பாட்டில் இருந்த மட்டக்களப்பு விமான நிலையம், இன்று சிவில் விமானப் போக்குவரத்துக்காக…

வடக்கில் இராணுவத்தை வைத்துக் கொண்டு அரசாங்கம் நல்லிணக்கம் பற்றி பேசுவது…

“இராணுவத்தை வடக்கில் வைத்துக்கொண்டும், அதிகாரங்களைத் தம்வசம் வைத்துக்கொண்டும் பொருளாதார விருத்தி பற்றியும் நல்லிணக்கம் பற்றியும் அரசாங்கம் பிரஸ்தாபிக்கும் போது நுண்ணறிவுள்ள தமிழர்கள் யாவரும் அதன் அர்த்தத்தைச் சரியாகப் புரிந்து கொள்ள வேண்டும். இல்லை என்றால் ‘சத்திரசிகிச்சை வெற்றி, ஆனால் நோயாளி இறந்துவிட்டார்’ என்று ஆகிவிடும்.” என்று வடக்கு மாகாண…

“பிரபாகரன் புத்திசாலி அல்ல” – என்கிறார் கோத்தா

விடுதலைப் புலிகளுடனான பேச்சுக்களின் தனக்கு நம்பிக்கை இருக்கவில்லை என்றும், அது நேரத்தை வீணடிக்கும் செயல் என்று தான் கருதியதாகவும், சிறிலங்காவின் முன்னாள் பாதுகாப்புச் செயலர் கோத்தாபய ராஜபக்ச தெரிவித்துள்ளார். இந்திய ஊடகம் ஒன்றுக்கு வழங்கியுள்ள செவ்வியில் அவரிடம், போர் முடிவுக்கு வருவதற்கு முன்னர், விடுதலைப் புலிகளுடன் கடைசி நேரப்…

வட மாகாண ஆளுனராக கே.சி.லோகேஸ்வரன் – “முதல் தமிழர்”

மேல் மாகாண ஆளுனராகப் பணியாற்றும், கே.சி.லோகேஸ்வரன் வடக்கு மாகாண ஆளுனராக, நியமிக்கப்படவுள்ளார் என்று கொழும்பு ஆங்கில வாரஇதழ் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது. சிறிலங்காவின் எட்டு மாகாணங்களின் ஆளுனர்களுக்கு, விருப்ப அடிப்படையில், இடமாற்றங்களை வழங்க சிறிலங்கா அரசாங்கம் திட்டமிட்டுள்ளது. ஆளுனர் பதவியில் மூன்று ஆண்டுகள் பணியாற்றிய எட்டு மாகாணங்களின் ஆளுனர்களை,…

ஈழத் தமிழர்களின் எதிர்காலம் சர்வதேசத்தின் கைகளில் உள்ளது

போருக்குப் பின்பான ஈழத் தமிழர்களின் எதிர்காலம் சர்வதேசத்தின் கைகளில் உள்ளது என்பது மறுக்க முடியாத உண்மை. விடுதலைப் புலிகள் இருந்த காலத்தில் இனப்பிரச்சினைக்கு உயர்ந்த பட்ச தீர்வுத் திட்டங்களை முன்வைத்த இலங்கை ஆட்சியாளர்களும் சிங்களத் தரப்புக்களும் இப்போது இனப்பிரச்சினை என ஒன்று இல்லை என்கிறார்கள். இன்னும் சிலர் விடுதலைப்…

குற்றவியல் பொறுப்புக் கூறலை உண்மையாக நிலைநிறுத்த வலியுறுத்த வேண்டும்: ஜெனீவாவில்…

‘குற்றவியல் பொறுப்புக் கூறலை உண்மையாக நிலைநிறுத்துவதற்காக அதனை சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்திடம் அல்லது அதற்கான விசேட சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தை அமைத்து, அதனிடம் ஒப்படைக்க வேண்டும் என்ற எமது நிலைப்பாட்டை மீளவும் வலியுறுத்துகின்றோம்’ என்று தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்துள்ளார். தமிழ்த் தேசிய…

சிறிலங்காவில் பொறுப்புக்கூறல் அரசியல்மயப்படுத்தப்பட்டுள்ளது – ஐ.நா நிபுணர்

சிறிலங்காவில் பொறுப்புக்கூறல் பொறிமுறை அரசியல் மயப்படுத்தப்பட்டுள்ளது  என்று  உண்மை, நீதி, இழப்பீடு மற்றும்  மீள நிகழாமையை உறுதிப்படுத்துவதற்கான ஐ.நா சிறப்பு அறிக்கையாளர்  பப்லோ டி கிரெய்ப் தெரிவித்துள்ளார். ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் நேற்றுமுன்தினம் உரையாற்றிய அவர், “ 2015 ஆம் ஆண்டிலிருந்து நான் சிறிலங்காவுடன் தொடர்ந்து செயற்பட்டு…

சிறுபான்மையினருக்கு எதிரான தாக்குதல்கள் குறித்து அதிருப்தி

இலங்கை அரசாங்கம் மனித உரிமைகள் பேரவை அலுவலகத்துடன் ஒத்துழைத்துச் செயற்படுவதை வரவேற்றுள்ள ஐக்கிய நாடுகள் சபை, அதேநேரம், நிலைமாறுகால நீதிவழங்கல் பொறிமுறைகளின் அமுலாக்கத்தில் காட்டுகின்ற தாமதத்துக்கு கடும் கண்டனத்தை வெளிப்படுத்தி இருக்கிறது. இலங்கையில் மறுசீரமைப்பை விரிவாக்கல், பொறுப்புக்கூறுதல் மற்றும் மனித உரிமை பாதுகாப்பு ஆகிய விடயங்களில் ஏற்பட்டுள்ள முன்னேற்றங்கள்…

உள்நாட்டு சட்டத்தால் நீதி வழங்க முடியும்!- ஜெனிவாவில் இலங்கை திட்டவட்டம்

சம்பந்தப்பட்ட அனைத்து தரப்பினருக்கும் மேம்படுத்தப்பட்ட நீதியை வழங்குவதற்கு இலங்கையில் காணப்படும் நீதி மற்றும் சட்ட அமுலாக்க பொறிமுறைகள் முழுமையாகஇயலுமானதாகவும், ஈடுபாடானதாகவும் உள்ளது என ஜெனிவாவில் இலங்கை அறிவித்துள்ளது. அத்துடன், அனைத்து நல்லிணக்க பொறிமுறைகளும் எமது அரசியலமைப்பிற்கு இயைபாகவே நடைமுறைப்படுத்தப்படும் என்றும் இலங்கை திட்டவட்டமாக தெரிவித்துள்ளது. ஐக்கிய நாடுகள் மனித…

யாழ்ப்பாணத்தில் போராட்டம் நடத்தியோரின் குற்றச்சாட்டை மறுக்கிறது சிறிலங்கா அதிபரின் ஊடகப்…

யாழ்ப்பாணத்துக்குப் பயணம் மேற்கொண்டிருந்த போது, சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன, காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்களைச் சந்திக்க மறுத்து விட்டார் என்று வெளியான செய்திகளை சிறிலங்கா அதிபரின் ஊடகப் பிரிவு ஆதாரங்களுடன் மறுத்துள்ளது. கடந்த 19ஆம் நாள், யாழ். புனித பத்திரிசியார் கல்லூரியில் நடந்த விழாவில் சிறிலங்கா அதிபர் பங்கேற்றிருந்த…

சிறிலங்கா பொறுப்புக்கூறல் வாக்குறுதியை நிறைவேற்றுவது சந்தேகமே – ஐ.நா மனித…

சிறிலங்காவில் நிலைமாறுகால நீதிப் பொறிமுறைகளை உருவாக்கும் விடயத்தில் மெதுவான முன்னேற்றங்களே இடம்பெறுவது குறித்து ஆழ்ந்த கவலையை வெளியிட்டுள்ளார் ஐ.நா மனித உரிமை ஆணையாளர் செயிட் ராட் அல் ஹுசேன். சிறிலங்கா தொடர்பாக 2015ஆம் ஆண்டு நிறைவேற்றப்பட்டு, 2017ஆம் ஆண்டு மீள உறுதிப்படுத்தப்பட்ட 30/1 தீர்மானத்தை நடைமுறைப்படுத்தப்படுவதில் உள்ள முன்னேற்றங்கள்…

26 சிங்களப் படையினரை கொன்றார்கள்: 3 முன் நாள் விடுதலைப்…

26 படையினர் கொலை.. 3 முன்னாள் புலி உறுப்பினர்களின் வழக்கு பதிவு வவுனியாவில் முன்னாள் விடுதலைப்புலி உறுப்பினர்கள் 3 பேரின் வழக்கு விசாரணை அனுராதபுரம் மேல் நீதிமன்றத்தில் இருந்து வவுனியா மேல் நீதிமன்றத்திற்கு மாற்றப்பட்டுள்ளது. 2009ம் ஆண்டு 18 கடற்படை வீரர்கள் மற்றும் 8 இராணுவ வீரர்கள் வவுனியாவில்…

சவால்களைச் சமாளித்து தமிழ் மக்களுக்கான தீர்வினைப் பெற்றுத்தர வேண்டும்; மைத்திரியிடம்…

“தமிழ் மக்களின் பிரச்சினைகளுக்கு தீர்வுகாணும் ஆர்வம் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு உள்ளது என்பதை நன்றாக அறிவோம். ஆனால் தமிழ் மக்களின் பிரச்சினைகளில் தீர்வுகளை பெற்றுக்கொடுப்பதில் இருக்கும் சவால்களை சமாளிக்க வேண்டியுள்ளது. எனினும் சவால்களை சமாளித்து தமிழ் மக்களின் பிரச்சினைகளுக்கு நிரந்தர தீர்வுகளை பெற்றுகொடுக்க வேண்டும்.” என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின்…

காணாமற்போனோர் தொடர்பில் குழு அமைக்கப்பட்டுள்ளது; அந்தக் குழுவே விடயங்களைக் கையாளும்:…

“காணாமற்போனோர் தொடர்பில் சட்டத்தினை உருவாக்கி, குழுவொன்றை நியமித்துள்ளோம். காணாமற்போனோர் தொடர்பிலான விடயத்தை அந்தக் குழுவே கையாளும்.” என்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். புனித பத்திரிசியார் கல்லூரியின் தொழில்நுட்ப ஆய்வுகூட கட்டட திறப்பு விழா நேற்று திங்கட்கிழமை நடைபெற்றது. அந்த நிகழ்வில் பிரதம விருந்தினராக கலந்துகொண்டு உரையாற்றும்போதே ஜனாதிபதி இவ்வாறு…

பிரித்தானிய நாடாளுமன்றத்தில் சிறிலங்காவுக்கு அழுத்தம்

தென்னாபிரிக்க பாணியிலான உண்மை கண்டறியும் ஆணைக்குழுவை அமைப்பதாக அளித்த வாக்குறுதிகளை சிறிலங்கா அரசாங்கம் நிறைவேற்ற வேண்டும் என்று பிரித்தானிய நாடாளுமன்றத்தில் வலியுறுத்தப்பட்டுள்ளது. பிரித்தானிய நாடாளுமன்றத்தில் நேற்று நடந்த விவாதத்தின் போது, உரையாற்றிய உறுப்பினர்கள், முட்டுக்கட்டைகள் இன்றி பரிந்துரைகளை நடைமுறைப்படுத்துவதற்கான காலவரம்பு ஒன்றை சிறிலங்கா அரசாங்கம் அறிவிக்க வேண்டும் என்றும்…

பூகோள மாற்றங்களுக்கேற்ப தமிழ் மக்களின் அரசியல் முன்னெடுக்கப்பட வேண்டும்- விக்னேஸ்வரன்

தமிழர்களைப் பொறுத்தவரையில் உலகளாவிய அரசியல் சிந்தனைகள் அல்லது அரசியல் ஆய்வறிவு ஆகியன மிகக் குறைவாகவே கணக்கில் எடுக்கப்படுகின்றன என்று முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். திருகோணமலையில், கடந்த மார்ச் 17ஆம் நாள்,  மூலோபாய கற்கை நிலையம்  ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது. வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் பிரதம விருந்தினராக கலந்து கொண்டு,…

நியூயோர்க்கில் ஐ.நா, அமெரிக்க உயர் அதிகாரிகளுடன் சுமந்திரன் பேச்சு

அமெரிக்காவுக்குச் சென்றுள்ள தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன், உலகத் தமிழர் பேரவையி்னருடன் இணைந்து, ஐ.நா மற்றும் அமெரிக்க அதிகாரிகளைச் சந்தித்துப் பேச்சு நடத்தி வருகிறார். சிறிலங்கா தொடர்பான விவாதம் நாளை ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் இடம்பெறவுள்ள நிலையில், இந்தச் சந்திப்புகள் இடம்பெற்றுள்ளன. ஜெனிவா வாக்குறுதிகளை…

மேலதிக நகர்வுகளை எடுக்குமாறு சிறிலங்காவிடம் வலியுறுத்துகிறது அமெரிக்கா

ஜெனிவா வாக்குறுதிகளை நிறைவேற்றுவதற்கு சிறிலங்கா மேலதிக நகர்வுகளை முன்னெடுக்க வேண்டும் என்று அமெரிக்கா வலியுறுத்தியுள்ளது. ஐ.நா மனித உரிமைகள் பேரவையில், நேற்று நடந்த சிறிலங்கா தொடர்பான பூகோள கால மீளாய்வு அறிக்கை குறித்த விவாதத்தில் உரையாற்றிய போதே அமெரிக்கப் பிரதிநிதி இதனை வலியுறுத்தியுள்ளார். “மனித உரிமை மீறல்களுக்கு பொறுப்புக்கூறுவது…

சிங்கள இனம்: உலகின் குற்றச்சாட்டை எதிர்கொள்ளுமா?

இந்தியாவுக்கு பிரித்தானியரால் சுதந்திரம் வழங்கப்பட்ட வேளையில், காந்தியைப் பார்த்து, கேள்வி ஒன்றைக் கேட்டார் பிரித்தானியர் ஒருவர். “எம்மவர்களால் (பிரித்தானியரால்) உங்கள் நாட்டின் அனைத்துச் சொத்துகளும் சூறையாடப்பட்டு விட்டன. இனி எப்படி, ஒன்றுமே இல்லாத உங்கள் நாட்டைக் கட்டி எழுப்பப் போகின்றீர்கள்” என்பதே அந்த வினா ஆகும். “எமது நாட்டின்,…

அனைத்துலக சமூகம் எம்மைக் கைவிட முடியாது – சம்பந்தன்

ஜெனிவா தீர்மானத்தை சிறிலங்கா அரசு நிறைவேற்றாவிடின், அனைத்துலக சமூகம்  என்ன செய்யப்போகின்றது என்று சொல்ல வேண்டும்.  எமது மக்களை அனைத்துலக சமூகம் கைவிட்டு விட முடியாது என்று தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் தலைவருமான இரா.சம்பந்தன்  தெரிவித்தார்.  சுழிபுரத்தில் உள்ள வலி.மேற்கு பிரதேசசபை வளாகத்தில், அப்பாப்பிள்ளை அமிர்தலிங்கத்தின் உருவச் சிலையை நேற்று…

சர்வதேச சட்டத்தின் பிரகாரம் தமிழ் மக்களுக்கு உள்ளக சுயநிர்ணயத்துக்கான உரித்துண்டு:…

சர்வதேச சட்டத்தின் பிரகாரம் தமிழ் மக்களுக்கு உள்ளக சுயநிர்ணயத்துக்கான உரித்துண்டு என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும், எதிர்க்கட்சித் தலைவருமான இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார். “சர்வதேச சட்டத்தின் பிரகாரம், எமது உரித்து, எமது உரிமை, சிவில் - அரசியல் உரிமைகள் சம்பந்தமான சர்வதேச ஒப்பந்தம் மற்றும் பொருளாதார சமூக கலாசார…