சினிமாவில் பட வாய்ப்புகள் இல்லை என்ற போதும், ஓய்ந்திருக்கவில்லை நமீதா. சமூக சேவைகளில், தன் கவனத்தை திருப்பி விட்டு, புதிய பரபரப்பை ஏற்படுத்தி வருகிறார்.
கண்தானம், ரத்த தானம் ஆகியவற்றை வலியுறுத்தி நடத்தப்படும், விழிப்புணர்வு பிரசாரங்களில் பங்கேற்று வரும் நமீதா, சமூக சேவை நிறுவனங்கள் சார்பில் நடத்தப்படும் நிகழ்ச்சிகளிலும், எந்தவித பிரதிபலனையும் எதிர்பார்க்காமல், தன் பங்களிப்பை வெளிப்படுத்தி வருகிறார்.
அதோடு நில்லாமல், ‘அயல்நாடுகளைப் போன்று, நம் நகரமும் சுத்தமாக இருக்க சென்னை நகரத்தில், ஆங்காங்கே, கழிப்பறை வசதிகளையும் செய்து கொடுக்க வேண்டும்’ என்றும், தன்னார்வ தொண்டு நிறுவனங்களை கேட்டுக் கொண்டு வருகிறார் நமீதா. சமூக சேவையில் இறங்கி விட்ட சேதியறிந்து, மூக்கின் மேல் விரல் வைக்கிறார்கள் சினிமாக்காரர்கள்.