இந்திய சினிமா நூற்றாண்டு விழாவை ஒட்டி, தமிழக அரசின் பங்களிப்பாக ரூ.10 கோடிக்கான காசோலையை முதல்வர் ஜெயலலிதா வழங்கினார். இந்திய சினிமாவின் நூற்றாண்டு விழா சென்னையில் வரும் சனிக்கிழமை தொடங்குகிறது. வரும் 24 ஆம் தேதி நிறைவு விழா நடைபெறுகிறது.
நூற்றாண்டு விழாவினை தொடங்கி வைத்து விருதுகள் வழங்கவும், நிறைவு விழாவில் தலைமையேற்கவும் முதல்வர் ஜெயலலிதா ஒப்புதல் அளித்துள்ளார். இந்த விழாவுக்கான அழைப்பிதழ்களை முதல்வரிடம் விழாக் குழுவினர் தலைமைச் செயலகத்தில் புதன்கிழமை அளித்தனர்.
ரூ.10 கோடி பங்களிப்பு: நூற்றாண்டு விழாவில் தமிழக அரசின் பங்களிப்பாக ரூ.10 கோடிக்கான காசோலையை தென்னிந்திய திரைப்பட வர்த்தக சங்கத்தின் தலைவர் கல்யாணிடம் முதல்வர் ஜெயலலிதா வழங்கினார். அப்போது, திரைப்படத் துறையின் பல்வேறு சங்கங்களைச் சேர்ந்த முக்கிய பிரமுகர்கள் உடனிருந்தனர்.
தமிழ் நாட்டில் ஏழை மக்கள் சொத்துக்கு ஸ்ஸ்ஸ்7787&&$%# கிட்டு இருக்காங்க இந்த லேட்ச்சனதிலே கூத்தாடி பயல்களுக்கு 10 கோடி வெள்ளி ,,,
தமிழ் நாட்டில் ஒருவேளை சாப்பாட்டுக்கு வழியில்லாமல் மக்கள் அவதி படுகிறார்கள் அதை கவனிப்பதை விடுத்து, இந்த கூத்தாடிகலுக்கு 10 கோடியாம்.
நாம் தமிழ் நாட்டு மக்களை நம்மவர்களோடு ஒப்பிட்டு பார்ப்பது தவறு. அவர்கள் துன்ன துட்டு இல்லனாலும் காசு கொடுத்து சினிமா பார்க்காமல் இருக்கமாட்டார்கள். அவர்கள் வழியே வேறு. விட்டுவிடுங்கள்.