இயக்குநர் களஞ்சியத்தின் “தமிழ்” எனும் குறும்படம் நேற்று(15-0-2013) ஆர்.கே.வி. பிரிவியூ தியேட்டரில் வெளியிடப்பட்டது. இதில் கலந்து கொண்ட ஆர்.கே.செல்வமணி நிருபர்களை தரகுறைவாக விமர்சித்திருக்கிறார்.
விழாவில் செல்வமணி பேசியதாவது:
தமிழ் உணர்வு கொண்ட குறும்படம் என்பதால் எந்த பத்திரிக்கை நாய்களும் வரவில்லை இதுவே சினிமா நிகழ்ச்சி
என்றால் முன்வரிசையில் பத்து,பதினைந்து நாய்கள் புகைப்படம் எடுத்துக் கொண்டிருக்கும், இருபது, முப்பது நாய்கள் பின்வரிசையில் நின்று வீடியோ எடுத்துக் கொண்டிருக்கும். ஜம்பது,அறுபது நாய்கள் நடுவில் பேனா ஒன்றை வைத்துக்கொண்டு கிறுக்கிக் கொண்டிருப்பார்கள். அதே மேடையில் மு.களஞ்சியம், மற்ற வி.ஐ.பிகளும் அமர்ந்து செல்வமணியின் பேச்சை ரசித்துக் கொண்டிருந்தனர்.
இவர்களது தமிழ் உணர்வு நாடறிந்த விஷயம் தானே..! ஏறி வந்த ஏணியை(பத்திரிக்கையாளர்களை) எட்டி உதைக்காதீங்க…!!
இங்க மட்டும் என்ன நடக்குது ? தமிழ் பள்ளியில் பேச்சி போட்டி நடக்குதுன்னு பத்திரிக்கை நிருபரை அழைத்தால் ! அரசியல் வாதியின் நிகழ்ச்சிக்கும் ,கோவில் அடிகள் நாட்டு விழாவுக்கு செய்தி சேகரிக்க நிருபர்கள் ஓடோ என்று ஓடுகிறார்கள் பட்டிகள் ! அங்குபோனால் கையில் கொஞ்சம் காசு பார்க்கலாமோ ?