முத்தழகு பிரியா மணி, போதிய பட வாய்ப்புகள் இல்லாததால், தான், திரையுலகிற்கு அடி எடுத்து வைத்த, ஆரம்ப கால நாட்களை, அமைதியாக அசை போட்டு கொண்டிருக்கிறார்.
அவர் அளித்துள்ள ஒரு பேட்டியில், இப்போதெல்லாம், நடிகைகள், முதல் படத்திலேயே, ஆயிரம், லட்சம் என, சம்பளம் வாங்குகின்றனர். ஆனால், நான் நடித்த முதல் படத்தில், எனக்கு, 500 ரூபாய் தான், சம்பளம். அதை பத்திரமாக வங்கியில் போட்டு விட்டேன்.
எனக்கு, ஒரு படத்திலாவது பின்னணி பாடி, நானே, அதற்கு நடிக்க வேண்டும் என்ற ஆசை உள்ளது. இதுவரை அந்த ஆசை நிறைவேறவில்லை.
அதேபோல், மேக்–அப் இல்லாமல் ஒரு படத்தில் நடிக்க வேண்டும் என்ற ஆசையும் உள்ளது என, கூறியுள்ளார். பிரியா மணிக்கு, சற்று கர கரப்பான குரல். அதனால்,சொந்த குரலில் பாடுவது, விஷப் பரீட்சை தான் என்கின்றன, கோலிவுட் வட்டாரங்கள்.
சொந்த குரலில் பாட ரொம்ப நாளாக ஆசை!