நூற்றி என்பது படம் மூலம் தமிழில் நாயகியாக அறிமுகமானவர் நித்யா மேனன். ‘வெப்பம்’ படத்திலும் நடித்தார்.
தற்போது சேரன் இயக்கும் ஜே.கே. எனும் நண்பனின் வாழ்க்கை, நடிகை ஸ்ரீபிரியா, இயக்கும் மாலினி 22 பாளையங்கோட்டை படங்களில் நடித்து வருகிறார்.
நித்யாமேனன் சொல்கிறார். கவர்ச்சியாக நடிப்பது எனக்கு பிடிக்காது. நடிப்பின் மீது நம்பிக்கை இருக்கிறது. நடிப்பு திறமையால் வளர்வதையே விரும்புகிறேன். டைரக்டர் சொல்வதை கேட்டு அப்படியே நான் நடிப்பது இல்லை. அதை இன்னும் எப்படி மெருகேற்றலாம் என்று யோசித்து கூடுதல் திறமை காட்டி நடிக்கிறேன்.
இதற்காக பலரும் என்னை பாராட்டுகின்றனர். எனக்கு சம்பளம் முக்கியம் அல்ல. நல்ல கேரக்டரை தான் எதிர்பார்க்கிறேன்.
சினிமாவை பொறுத்த வரை கதாநாயகர்களுக்கு தான் முக்கியத்துவம் கொடுக்கின்றனர். என்னோடு நடிக்கும் ஹீரோக்கள் பற்றி நான் விசாரிப்பது இல்லை. என் வேடங்களில் மட்டுமே கவனம் செலுத்துகிறேன். எல்லா வேடங்களிலும் என்னால் நடிக்க முடியும் என்ற பெயர் வாங்க வேண்டும் அதுவே என் ஆசை.