சூது கவ்வும் திரைப்படத்தின் மாபெரும் வெற்றிக்குப் பிறகு விஜய சேதுபதியின் நடிப்பில் வெளிவரும் திரைப்படம் இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா.
தொடர்ந்து ஒவ்வொரு திரைப்படத்திலும் வித்தியாசமான கதாபாத்திரத்தில் நடித்துவரும் விஜய சேதுபதி சூது கவ்வும் திரைப்படத்தில் வெள்ளைமுடியுடன் நடித்தது குறித்து “சூது கவ்வும் திரைப்படத்தில் இருந்தது என் ஒரிஜினல் முடி தான். சில நாட்கள் டை அடிக்காமல் விட்டுவிட்டேன்” என கூறியிருந்தார்.
இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா திரைப்படத்திற்கான பேட்டியில் ‘வயது ஏறுவது தெரியாமல் மறைக்கும் ஹீரோக்களுக்கு மத்தியில் வயதானதை ஓபனாக சொல்கிறீர்களே?’ என்று கேட்டபோது ’முடி வெள்ளையா கருப்பா என்பது முக்கியமல்ல. கதை எப்படி இருக்கிறது என்பது தான் முக்கியம்” என்று கூறினார்.
மேலும் “நான் நடித்த ஒவ்வொரு திரைப்படமும் வித்தியாசமானவை. நானாக வித்தியாசமான கதையை தேடிப் போவதில்லை, எனக்கு வரும் கதைகள் வித்தியாசமான கதைகளாகவே அமைகின்றன” என்றும் கூறினார்.
இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா திரைப்படத்தில் நடித்துவிட்டு ரிலீசுக்காக காத்திருக்கும் விஜய சேதுபதி ரம்மி, பண்ணையாரும் பத்மினியும், சங்குதேவன், இடம் பொருள் ஏவல் ஆகிய திரைப்படங்களை கையில் வைத்திருக்கிறார். தற்போது சங்குதேவன் திரைப்படத்திற்காக தடியாக மீசை வைத்து ஒரு முரட்டு லுக்குடன் வலம் வருகிறார் விஜயசேதுபதி.