இந்திய சூப்பர் ஸ்டார் நடிகரான அமிதாப்பச்சனுக்கு இன்னமும் தமிழில் ஒரு படத்தில்கூட தான் நடிக்காதது பெரிய மனக்குறையாக இருந்து வருகிறதாம். இதை சமீபத்தில் சென்னையில் நடைபெற்ற சினிமா நூற்றாண்டு விழாவின்போது தெரிவித்தார்.
அதுகுறித்து அவர் மேலும் கூறுகையில், தமிழ் சினிமாவில் எனக்கு நிறைய நண்பர்கள் இருக்கிறார்கள். சூப்பர் ஸ்டார் ரஜினிகூட எனது இனிய நண்பர்தான்.
அப்படி பலரும் இருக்கையில் எனக்கு ஒரு படத்தில்கூட இன்னமும் நடிக்க சான்ஸ் கிடைக்காதது வருத்தமாக உள்ளது. ஆனால் ஒருமுறை அந்த வாய்ப்பு ரஜினி நடித்த எந்திரன் படம் மூலம் என் வாசல் கதவை தட்டியது.
ஆனால், அது வில்லன் வேடம் என்பதால் நான் நடிப்பதற்கு ரஜினி அனுமதிக்கவில்லை. நீங்கள் போய் எனக்கு வில்லனாக நடிப்பதா? என்று தடுத்து விட்டார்.
அதேசமயம், கண்டிப்பாக உங்களுக்கு இதைவிட ஒரு நல்ல வாய்ப்பு தமிழில் கிடைக்கும் என்றும் சொன்னார். அதனால் அந்த நல்ல வாய்ப்பு எப்போது கிடைக்குமென்று ஆவலோடு காத்திருக்கிறேன் என்றார் அமிதாப்.
நல்ல மனித நேயம் கொண்டவர் ரஜினி
அப்படியானால் இந்த கன்னட நடிகனுக்கு மலேசியாவில் பல கோவில்கள் கட்டி கும்பாபிசேகம் செய்யலாம்
கடைசி காலத்தில் தமிழன் காசை பிடுங்கி தின்ன ஆசை என்று சொல்லுங்கள் ? உங்கள் கட் அவுட்டுக்கும் பாலை ஊற்றும் எங்கள் இனம் !
மலையாளத்தான்,தெலுங்கன் ,கன்னடக்காரன், எல்லா பயலும் தமிழன் காசை சாப்பிட்டு விட்டான், இன்னும் இருப்பது ஹிந்திகாரன் போலும்.