இனிமே என் படங்களில் தம்மடிக்கிற சீன்கள் இருக்காது என்று இயக்குனர் ராஜேஷ் தெரிவித்துள்ளார்.
தொடர்ந்து காமெடி படங்களை இயக்கி ஹாட்ரிக் வெற்றியை கொடுத்தவர்தான் ராஜேஷ். இதுவரை இவர் இயக்கிய மூன்று படங்களிலும் பார் சீன்கள் முக்கிய பங்கு வகிக்கும். காரணம், இவருடைய படங்கள் அனைத்தும் இளைஞர்களை குறிவைத்து எடுக்கப்படுவதால் தண்ணி, தம்மு இவை இரண்டிற்கும் அதிக முக்கியத்துவம் கொடுக்கப்படுகின்றன.
இதனிடையே தீபாவளியை முன்னிட்டு ராஜேஷ் இயக்கிய ஆல் இன் ஆல் அழகுராஜா படம் திரைக்கு வரவிருக்கிறது. ஆனால் இந்தப் படத்துல தம்மடிக்கிற சீன் கிடையாதாம். இது குறித்து படத்தின் ஆடியோ வெளியீட்டு விழாவில் பேசிய இயக்குனர் ராஜேஷ் கூறியதாவது: ” இந்தப்படத்துலேயும் தம்மடிக்கிற, தண்ணியடிக்கிற சீன்ஸ் இருக்குமா?ன்னு நெறைய பேர் கேட்டாங்க, அந்தளவுக்கு என்னோட படம்னாலே அதுல இந்த ரெண்டுமே இருக்கும்னு முடிவு பண்ணிடுறாங்க.
ஆனா நல்லவேளையா இந்தப்படத்துல தம்மடிக்கிற சீன்ஸ் ஒண்ணு கூட இல்ல, ஏன்னா கதைப்படி அந்தக்காட்சி தேவைப்படல. அதுமட்டுமில்லாமல் இனிமே என்னோட படங்கள்ல தம்மடிக்கிற சீன்களே இருக்காது” என்றார் அவர்.
சீன்கள் மட்டுமே இருக்கும்
அதேபோல தண்ணி போடற சீனு இருக்கக்கூடாது மாப்ளே.