நாள்தோறும் 15 நிமிடங்கள் எளிய உடற்பயிற்சி செய்தால் வாழ்நாளை 14 சதவீதம் அல்லது 3 ஆண்டுகள் நீடிக்க செய்ய முடியும் என்கிறது தைவான் ஆராய்ச்சி மையம்.
நிமிடங்கள் அதிகரிப்புக்கு ஏற்ப வாழ்நாளும் அதிகரிக்கும் என்கின்றனர் நிபுணர்கள். உடற்பயிற்சிக்கும் ஆயுள் நீள்வதற்கும் உள்ள தொடர்பு பற்றி தைவானின் ‘லான்செட்’ பல்கலைக்கழக விஞ்ஞானிகள் ஆய்வு நடத்தினர். தைவானை சேர்ந்த 4 லட்சம் பேரின் வாழ்க்கை முறை ஆராயப்பட்டது.
நாள்தோறும் அதிக நடைபயிற்சி, கால் மணி நேர எளிய உடற்பயிற்சி செய்வோரின் வாழ்நாள் 14 சதவீதம் அதிகரிக்கும் என தெரிவித்தனர். அதற்கு மேல் உடற்பயிற்சி நேரம் அதிகரிக்கும் ஒவ்வொரு 15 நிமிடத்துக்கும் வாழ்நாள் 4 சதவீதம் கூடும் என்றனர்.
அதன்படி, வாரத்துக்கு குறைந்தபட்சம் ஒன்றரை மணி நேரம் (90 நிமிடங்கள்) உடற்பயிற்சி செய்வதன் மூலம் செல்கள் புத்துயிர் பெற்று நோயெதிர்ப்பு திறன் அதிகம் பெறுகின்றன. அதன்மூலம் வயதாகும் நடைமுறை தாமதமாக வாழ்நாள் நீடிக்கும் என்று விஞ்ஞானிகள் தெரிவித்தனர்.