மிரு­க­வ­தைக்கு எதி­ராககுரல் கொடுக்கும் ஏமி

amy-jacksonஇது­வரை, ஏமி­ஜாக்­சனைப் பற்றி காதல் செய்­திகள், கவர்ச்சி செய்­திகள் தான், வெளி­யாகிக் கொண்­டி­ருந்­தன. ஆனால், இப்­போது, அவ­ரது இமேஜை உயர்த்தும், ஒரு புதிய செய்தி வெளி­யா­கி­யுள்­ளது.

மிரு­கங்கள் மீது அதிக பாசம் கொண்ட ஏமி, ‘டஸ்க் ட்ரஸ்ட்’ என்ற பிரா­ணிகள் விழிப்­பு­ணர்வு அமைப்பில் இணைந்து, மிரு­க­வ­தைக்கு எதி­ராக குரல் கொடுத்து வரு­கி­றாராம்.

இது­வரை, அமெ­ரிக்­காவில் நடை­பெற்ற மிரு­க­வ­தைக்கு எதி­ரான விழிப்­பு­ணர்வு பிர­சா­ரங்­களில் மட்­டுமே கலந்து கொண்ட ஏமி, சமீ­பத்தில், இந்­தி­யாவில் நடந்த, ஒரு பேர­ணி­யிலும் கலந்துகொண்­டாராம்.

அப்­போது, ‘தந்­தங்­க­ளுக்­காக யானைகள் கொல்­லப்­ப­டு­வது ஆப்­பி­ரிக்கா, இந்­தி­யாவில் தான் அதி­க­மாக நடக்­கி­றது. ‘வாயில்­லாத ஜீவ­ரா­சி­களை தந்­தத்­துக்­காக கொல்­வது பெரிய பாவச்­செயல். இனிமேல், இது­­­போன்ற செயல்­களில், யாரும் ஈடு­ப­டா­தீர்கள். அவற்­றையும் வாழ விடுங்கள்’ என்று இள­கிய மன­தோடு  பேசி­னாராம், ஏமி ­ஜாக்சன்.