கொச்சி விமான நிலையம் வழியாக தங்க பிஸ்கட்டுகள் கடத்தப்பட்ட சம்பவம் தொடர்பாக பிரபல மலையாள நடிகை மைதிலிக்கு சுங்கத்துறை நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
கொச்சி விமானத்தில் கடந்த மாதம் 20 கிலோ தங்க பிஸ்கட்டுகள் கைப்பற்றப்பட்டன. இதுதொடர்பாக, குவைத்தில் இருந்து தங்கத்தை கடத்தி வந்த இரண்டு பெண்கள் கைது செய்யப்பட்டனர்.
அவர்களிடம் சுங்கத்துறையினர் விசாரணை நடத்தியபோது, தங்கம் கடத்தலில் கோழிக்கோ ட்டை சேர் ந்த பயாஸ் என்பவருக்கு தொடர்பு இருப்பது தெரியவந்தது.
இவரது தலைமையில் தான் குவைத், துபாய் உள்ளிட்ட வளைகுடா நாடுகளில் இருந்து, கேரளாவுக்கு தங்கம் கடத்தப்பட்டு வருவது விசாரணையில் கண்டுபிடிக்கப்பட்டது.
இதனைத் தொடர்ந்து பயாசை பொலிசார் கைது செய்தனர். அவரிடம் நடத்திய விசாரணையில், பயாசுக்கும் முன்னாள் தென்னிந்திய அழகி ஸ்ரவ்யா சுதாகருக்கும் தொடர்பு இருப்பது தெரியவந்தது.
இதையடுத்து, சுங்கத்துறை அதிகாரிகள் ஸ்ரவ்யா சுதாகரை நேரில் வரவழைத்து விசாரித்தனர். அப்போது தனக்கும், பயாசுக்கும் தொடர்பு இருப்பதை அவர் ஒப்புக்கொண்டார். பயாசை நடிகை மைதிலி தான் தனக்கு அறிமுகம் செய்து வைத்ததாகவும் கூறியுள்ளார்.
இந்த தங்கம் கடத்தல் தொடர்பாக நேரில் ஆஜராகி விளக் கம் அளிக்குமாறு நடிகை மைதிலிக்கு சுங்கத்துறை அதிகாரிகள் நோட்டீஸ் அனுப்பி உள்ளனர்.
இவர் கடந்த 2009ம் ஆண்டு மம்மூட்டி நடித்த, ‘பாலேறி மாணிக்கம்’ என்ற படத் தில் அறிமுகமானார். அதன்பின் ‘கேரள கபே’‘நல்லவன்’ ‘மாயாமோகினி’ உள்ளிட்ட 20க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளனர்.