‘செல்லமே’ படத்தில் அறிமுகமான விஷால், அதைத் தொடர்ந்து ‘காலேஜ் ஸ்டூடன்ட்’ என்றொரு அடையாளத்தை உருவாக்கி வைத்து இருந்தார்.
ஆனால், பாலாவின், ‘அவன் இவன்’ அவருக்குள் கொட்டிக்கிடந்த திறமையை வெளிப்படுத்த, விஷாலும் குறிப்பிடத்தக்க நடிகரானார்.
அதன் பின், அவர் நடித்த படங்கள் வெற்றி பெறாததால், தடுமாறி நின்றார். தற்போது, ‘பாண்டியநாடு’ படத்தின் ஹிட்டைத் தொடர்ந்து, கோலிவுட்டின் சில ஆக் ஷன் பட இயக்குனர்கள், விஷால் பக்கம் திரும்பியுள்ளனர்.
குறிப்பாக, விஷாலை வைத்து ஏற்கனவே, ‘தாமிர பரணி’ என்ற படத்தை இயக்கிய ஹரி, அடுத்து அவருக்கு ஒரு கதை தயார் செய்து வருகிறாராம்.