அஜீத், தமன்னா, விதார்த், பாலா உள்ளிட்ட நட்சத்திர பட்டாளங்கள் நடித்துள்ள படம் ‘வீரம்’. ‘சிறுத்தை’ சிவா டைரக்ட் செய்துள்ளார். படம் பொங்கல் ரிலீஸ். விஜயா புரொடக்ஷன் வெங்கட்ராம ரெட்டி தயாரித்துள்ளார்.
விஜய், காஜல் அகர்வால் மோகன்லால் நடித்துள்ள படம் ஜில்லா. எஸ்.டி.நேசன் டைரக்ட் செய்துள்ளார். சூப்பர்குட் பிலிம்ஸ் ஆர்.பி.சவுத்ரி தயாரித்துள்ளார். இரண்டுமே பெரிய பட்ஜெட்டில் தயாராகி உள்ள பெரிய ஹீரோ படங்கள். இரண்டும் பொங்கலுக்கு மோத உள்ளன. ஆனால் இரண்டு படத்தின் ஆடியோவும் சத்தமே இல்லாமல் ரிலீசாகிறது.
இப்போதெல்லாம் படத்தின் ஆடியோ வெளியீட்டு விழா என்பது படத்துக்கான ஒரு புரமோசனாகவே நடக்கிறது. அதனால் வீரம் ஆடியோ ரிலீசை பிரமாண்டமாக நடத்த தயாரிப்பாளர் தரப்பு விரும்பியது. ஆனால் அஜீத், படத்தின் புரமோசன்களில் கலந்து கொள்வதில்லை என்ற பாலிசி வைத்திருப்பதால் அதற்கு சாத்தியம் இல்லை. இருந்தாலும் அவரை ஒரு வார்த்தை கேட்டுப் பார்த்தனர். அவரும் என் பாலிசியில் எந்த மாற்றமும் இல்லை என்று கூறிவிட்டார். இதனால் பிரமாண்ட விழா திட்டத்தை கைவிட்டது தயாரிப்பு நிறுவனம்.
சாதாரண சிறிய படங்கள் கூட ஆடியோ ரிலீசை பிரமாண்டமாக செய்கிறபோது அஜீத்தின் வீரம் பாடல்கள் மட்டும் நாளை (டிசம்பர் 20) காலை ஒரு தனியார் எப்எம் ரேடியோவில் வெளியிடப்படுகிறது. காலை 8 மணிமுதல் 11 மணிவரை நடக்கும் இந்த நிகழ்ச்சியில் இசை அமைப்பாளர் தேவி ஸ்ரீபிரசாத்தும், இயக்குனர் சிவாவும் பாடல்கள் உருவான விதம் பற்றி இடையிடையே உரையாடுவார்கள்.
ஜில்லா படத்தின் ஆடியோ ரிலீஸ் கதை தனி. தற்போது அரசின் கோப பார்வையில் விஜய் இருப்பதால் ஆடியோ விழாவை தவிர்க்க சொல்லிவிட்டாராம் விஜய். விழாவில் யாராவது சவால் விட்டு பேசிவிட்டால் தலைவா பிரச்னை ஜில்லாவுக்கும் வர வாய்ப்பிருப்பதால் இந்த மவுனமாம். அதனால் ஜில்லா பாடல்களும் நாளை மறுநாள் (டிசம்பர் 21) ஒரு தனியார் எப்எம்மில் ரிலீசாகிறது.
அய்யையோ ரசிகர் தீ குளிக்க ஆரம்பித்து விடுவார்களே
பாவம் விஜய்! ஜெயலலிதாவின் தயவில் காலத்தைத் தள்ள வேண்டியிருக்கிறது! இனி உங்கள் படங்களில் ‘தலைவா’ என்னும் சொல்லை தப்பித்தவறி பயன் படுத்தாதீர்கள் தலைவா!
mugilan அவர்களே ரசிகர்கள் தீ குளித்தால் தான் நால்லது ,உலகில் தமிழன் இனம் குறைவாக இருக்கும் ,நம்மளை போன்றவர்களுக்கு கொண்டாடம்