கா. ஆறுமுகம். பகுதி 2. பலமொழி தெரிந்த மூளை தான் சிறந்தது என்று கூற இயலாது. ஆனால், அது நெகிழ்வானது (flexible), சமயோசிதமானது என்பது நிருபிக்கப்பட்டுள்ளது. பலமொழி உலகம் கற்றுக் கொடுத்த மிகப் பெரிய பாடம் அது தான்.
ஆனால் அதன் ஆபத்தை அறியாமல் அமெரிக்கா போன்ற ஒற்றை மொழி பேசும் நாடுகள் அதை அலட்சியம் செய்து வருகிறது. ஒற்றை மொழிப் புழக்கம் என்பது ‘21-ஆம் நூற்றாண்டின் கல்வி அறியாமையாகும்’ என்கிறார் யூட்டா மாநிலத்தில் மாநில கல்வி துறையில் மொழி அமிழ்தல் நிபுணரான கிரேக் ரோபட்ஸ் கூறுகிறார்.
குழந்தை கருப்பப்பையிலேயே மொழியை உணர்கிறது
மொழியைக் கற்றுக் கொள்வதில் மிகவும் துரித நிலை என்பது எதுவும் இல்லை. பிறக்கும் முன்பே ஒருவருடைய மூளை பல மொழிகளை அறிந்திருக்க முடியும். மனிதனின் கேட்கும் திறன் கருப்ப காலத்தின் 6-ஆம் மாத்திலிருந்தே செயல்பட தொடங்குகிறது. கருவில் இருக்கும் குழந்தைக்கு அதிகமாக கேட்பது அதனுடைய அன்னையின் குரல் தான். அந்த குரலின் சிறப்பியல்புகள், தாளங்கள், ஒலிகள் போன்றவை நேராக அந்த குழந்தையின் மூளைக்கு சென்று பதிவாகிவிடுகிறது. தாய் பேசும் மொழிகள் யாவுமே குழந்தைக்கும் பரிட்சியமாகி விடுகிறது.
புதியதாக பிறந்த சிசுவின் மூளையினுள் ஊடுருவி அதற்கு என்ன பிடிக்கும் எது பிடிக்காது என்பதை அறிய முடியாது தான். ஆனால், அவர்களுக்கு பரிட்சியமான மொழியைப் பற்றி ஆராய்ந்து அறியலாம் என்கிறனர் ஆய்வாளர்கள். வசதியான, நன்றான உணவருந்திய குழந்தைகள் சுற்று சூழலால் ஈர்க்கப்பட்டே வேகமாக பால் குடிக்கின்றன. இதை மையமாக வைத்து மாண்டரீலில் உள்ள கிரிஷ்த பையர்ஸ்- ஹென்லென் சொன்சொர்டியா பல்கலைகழக முன்னேற்ற உளவியலாளர் 3 நாட்கள் வயதான குழந்தைகளையும் அதைவிட குறைவான வயதுடைய குழந்தைகளையும் ஆய்வு செய்தனர்.
சில குழந்தைகளில் அன்னைமார்கள் ஆங்கிலம் மட்டுமே பேசக்கூடியவர்கள், மற்றும் சிலரோ ஆங்கிலம் மற்றும் தகலாக் எனும் பெரும்பான்மையான கனடாவில் வாழும் பிலிப்பான்ஸ் மக்களிடையே வழக்கில் உள்ள மொழியைப் பேசுபவர்கள்.
பால் குடிக்கும் பிள்ளை மொழியை உணர்கிறது
ஆய்வுக்குட்படுத்தப்பட்ட குழந்தைகளுக்கு பல மொழிகள் அடங்கிய ஒலிப்பதிவுகளை ஒலிக்கவிட்டு பாலூட்டிய போது, ஒரு மொழியை மட்டுமே பேசும் வழக்கம் உள்ள தாயைக் கொண்ட குழந்தைகள் ஆங்கிலத்தில் பேசுவதை கேட்கும் போது வேகமாக பால் குடித்தன, இரு மொழி பேசும் அன்னைமார்களின் குழந்தைகள், ஆங்கிலம் மற்றும் தகலாக் மொழியைக் கேட்கும் போது விரைவாக பால் குடித்தன. புதியதாக பிறந்த சிசுக்கள் எப்படி பன்மொழியாளர்களாக முடியும் என்று நீங்கள் நினைக்கலாம்? ஆனால், அவர்களுடைய தாய்மார்களின் குரல் அக்குழந்தைகளுக்கு அந்த மொழியை முக்கியமானதாக்குகிறது என்கிறார் பையர்ஸ் ஹெய்ன்லின்.
இது குழந்தைகளிடையே மொழி வளர்ச்சியின் ஆரம்பக் கட்டம் தான் நாட்கள் செல்ல செல்ல தான் இந்த வளர்ச்சி துரிதப்படுகிறது. பிரிட்டிஷ் கொலம்பியா பல்கலைகழகத்தைச் சேர்ந்த புலனுணர்வு சார்ந்த நரம்பியல் துறை நிபுணர் ஜனட் வியர்க்ரா வேறு சில நிபுணர்களுடன் இணைந்து பையர்ஸ் ஹெய்ன்லின் ஆய்வை விரிவாக தொடர்ந்தார். இந்த முறை பிறந்து சில மாதங்கள் ஆன குழந்தைகளின் மேல் அவர்களால் மொழியை பிரித்தறிய முடிகிறதா என்று ஆய்வு நடத்தினர். ‘குட்டி இராணி’ என்ற கதையிலிருந்து சில வரிகளை ஆங்கிலத்திலும், பிராஞ்சிலும் பெரியவர்கள் ஒப்பிக்கும் காணொளியை குழந்தைகளுக்கு திரையிட்டனர். குழந்தைகள் எவ்வளவு நேரத்தை அந்த காணொளியைப் பார்ப்பதில் செலவிடுகின்றனர் என்பதை கருத்தில் கொண்டு அவர்களுடைய ஆர்வமும், மொழியறிதலும் கணிக்கப்பட்டது.
பிறந்த 8 மாதம் முதல் என்ன நடக்கிறது?
4 முதல் 6 மாதம் வரை வயதான குழந்தைகளிடம் நடத்தப்பட்ட ஆய்வில் ஆங்கிலம் மட்டுமே பேசும் குடும்பதிலிருந்து வந்த குழந்தைகளுக்கும், ஆங்கிலம் மற்றும் பிரஞ்சு பேசும் குடும்பத்திலிருந்து வந்த குழந்தைக்கும் ஆய்வின் முடிவில் வித்தியாசப்படுத்த முடிந்தது. ஆனால், 8 மாத ஒருமொழி பேசும் குடும்பத்திலுள்ள குழந்தைகளால் இந்த ஆய்வை மேற்கொள்ள முடியவில்லை, இருமொழி பேசும் குடும்பத்திலுள்ள குழந்தைகள் மட்டுமே இந்த ஆய்வில் வெற்றிகரமாக பங்கேற்றனர்.
சால் லேக் செட்டியில் உள்ள ஸ்ப்ரிங்க் லேன் ஆரம்ப பள்ளியில் பயிலும் 8 மாதத்திற்கு அதிகமான குழந்தைகள் இன்னமும் இலகுவாக புது புது மொழிகளைக் கற்றுக் கொள்கின்றனர்.
இவர்களுடைய மூளை அதற்கு ஒத்துழைக்கின்றது. அந்த பள்ளியில் சமீபத்தில் ஒரு நாள் காலையில் ஒன்றாம் ஆண்டு மாணவர்களுக்கு மண்டரின் சீன மொழி வகுப்பு நடந்துக் கொண்டிருந்தது. மாணவர்கள் சிறு சிறு குழுக்களாக பிரிந்து வேவ்வேறு முறையில் பாடங்களைச் செய்துக் கொண்டிருந்தனர். ஐந்து மாணவர்கள் ஒரு குழுவாக அமர்ந்து தலையணி கேட்பொறிகளின் மூலம் மண்டரின் மொழியில் கதைகளைக் கேட்டு புத்தகங்களின் துணையுடன் அதை வாசித்துக் கொன்டிருந்தனர்.
மற்ற சிறுவர்கள் சீன மொழியில் பாடங்களை எழுதி கொண்டிருந்தனர். அவர்களுடைய ஆசிரியர் ஏப்ரல் ரிட்ஜ் (30 வயது) தனது 21வது வயதில் மண்டரின் மொழியைக் கற்றுக் கொண்டு, 2 வருடங்கள் தைவானில் உள்ள மர்மன் மிஸ்சனரியில் தயாரான பிறகு இப்போது இங்கு மாணவர்களுக்கு மண்டரீன் மொழியைக் கற்பித்து வருகிறார்.
அன்று அவர் ஒரு மாணவிக்கு மண்டரீன் மொழியை கையாளுவதற்கு உதவிக் கொண்டிருந்த போதுதான் பள்ளியில் அபாய மணி ஒலித்தது. உடனே அவர் சரளமான மண்டரீன் மொழியில் மாணவர்களுக்க அபாயக் கால கட்டளைகளைப் பிறப்பிக்க தொடங்கினார். தனது கட்டளையில் கோர்ட் அணிதல், மதிய உணவுக்கு கை கழுவுதல் போன்ற விசயங்களை கூறினார். அவர் கூறியது ஒரு மொழி மட்டுமே புரியும் பிள்ளைகளுக்கு அர்த்தமற்றதாக இருக்கும், ஆனால், தனது மாணவர்கள் அதை புரிந்துக் கொண்டு கட்டளைக்கேற்ப நடந்ததாக அவர் கூறினார்.
ஆறு மாதத்தில் மொழியை உணரும் தன்மை
அவர்களிடையே தொடர்ந்து முன்னேற்றம் தெரிவதாக கூறிய ரிட்ஜ், “ ஆகஸ்ட் மாதம் பள்ளி தொடங்கிய போது இந்த மாணவர்களுக்கு ஆங்கிலம் மட்டுமே தெரியும், ஆனால் ஜனவரி மாதத்திற்குள் அவர்கள் சீன மொழியில் கொடுக்கப்படும் கட்டளைகளைப் புரிந்து செயல்படும் அளவுக்கு முன்னேறிவிட்டனர். பிறகு சீன மொழியை பேச, படிக்க, தொடர்ந்து எழுதவும் பழகினர். இப்பொது பள்ளி இடைவேளைகளில் மாணவர்கள் ஆங்கிலமும், சீன மொழியும் கலந்து பேசுவதை கேட்கிறேன். ஓரிரு சீன வார்த்தைகளை ஞாபகப்படுத்திக் கொள்ளவும் ஒருவருக்கு ஒருவர் உதவிக் கொள்கின்றனர்” என்றார்.
இத்தகைய ஒத்துழைப்பு சதாரணமாகவே கற்றல் கற்பித்தல் நடவடிக்கையில் ஆதரிக்கப்படிகிறது. மாணவர்களை சிறு சிறு குழுக்களாக சேர்த்து ஒருவருக்கொருவர் மறந்த சொற்களையோ அல்லது கருத்துகளையோ கண்டுபிடிப்பதில் தொடங்கி நெருங்கிய நண்பர்களாவதை ஆசிரியர்கள் “நட்பு- பகிர்தல்” என்றழைக்கின்றனர்.
[மூளைத் திறன் வளர்ச்சிக்கும் பல மொழிகளில் கல்வி பயில்வதற்கும் உள்ளத் தொடர்பை அறிவியல் சார்பில் ஆய்வு செய்து ‘டைம்’ என்ற உலக பிரசித்தி பெற்ற வார இதழ் ஒரு கட்டுரையை கடந்த ஜூலை மாதம் வெளியிட்டது. அதனை ஜெப்ரி குலுகர் என்பவர் எழுதியிருந்தார். வாசகர்கள் நலன் கருதி செம்பருத்தி.காம் அதனை மொழியாக்கம் செய்துள்ளது.]
தொடரும்….
ஆங்கிலத்தில் இருக்கும் கட்டுரையை அப்படியே இந்நாட்டு கல்வி அமைச்சின் தலைமை அதிகாரிகளுக்கும், அரை வேக்காடு மந்திரிகளுக்கும் அனுப்பி வையுங்கள். அப்படியாவது “பன்மொழிக் கல்வியின்” மகத்துவத்தை அறிந்து செயல் படுவார்களா என்று பார்ப்போம். மேலும் இனவாதமாக பேசித் திரியும் மதிகெட்ட கல்விமான்களுக்கும் அனுப்பி வைக்கவும். புத்தி இருந்தால் புரிந்து நடக்கட்டும்.
தேனி சொல்வதுதான் சரி !
யார் ஒரு மொழி கொள்கையை அறிவித்தது. கல்வி பெருந்திட்டத்தில் கூட அரசு பன்மொழி கொள்கையைதானே வலியுறுத்தி உள்ளது. ஏன் இந்த குழப்பம்?
அமுதன், பன்மொழிக் கொள்கை, கொள்கை அளவில்தான் நிற்கும். செயல்பாட்டில், படிப்படியாக ஒரு மொழிக் கொள்கைக்கு தங்களை அறியாமலே வந்து விட வேண்டும் என்பதுதான் அந்த பெருந்திட்டத்தின் மறைமுக நோக்கம். சரித்ரிரத்தை கொஞ்சம் திரும்பிப் பாருங்கள். உண்மை சரித்திரம் என்பது போய். அம்னோ சரித்திரம் மெய் என்பதை கண்கூடாக பார்க்கவில்லையா? இதற்கும் மேலுமா, நீங்கள் அந்த கல்வி பெருந்திட்டத்தை நம்புகின்றீர்கள்? நம்பினார் கை விடப்படார் என்று சொல்லாதீர்கள். நம்பிக்கை நாயகன் தேர்தல் முடிந்ததும் கை விட்டு விட்டாரே!
இந்நாட்டில் சீனர், இபான், கடாசான், முருட் இப்படி பல இனங்கள் மொழி பற்றோடு இருப்பதால் அரசின் பன்மொழி கொள்கை மாறாது. வெறும் 51% தமிழன் மட்டுமே படிக்கும் தமிழ்ப்பள்ளிகளை வைத்து நாம ஒரு முடிவுக்கும் வர முடியாது.
http://youtu.be/Se_OiONBZqY
http://youtu.be/Utqcir_Mzzc