பாரதிராஜா, இளையாராஜா, வைரமுத்து மூவர் கூட்டணி 80களில் வெற்றிக்கூட்டணியாக பவனி வந்தது. மூவரும் ஒரே காலகட்டத்தில் ஒரே மண்ணில் இருந்து சினிமாவுக்கு வந்தவர்கள் என்பது ஒரு காரணம். காலப்போக்கில் பணமும், புகழும் சேர சின்ன சின்ன ஈகோ பிரச்னைகள் பெரிதாகி பிரிந்தார்கள். நேரம் கிடைக்கும்போதெல்லாம் ஒருவரை ஒரு மறைமுகமாக தாக்கி கொள்வார்கள்.
இந்த நிலையில் சமீபத்தில் இளையராஜா இருதய கோளாரு காரணமாக மருத்துவனையில் அனுமதிக்கப்பட்டு வீடு திரும்பியிருக்கிறார். அவரைப்போய் பாரதிராஜாவோ, வைரமுத்துவோ பார்க்கவில்லை. நேற்று நடந்த கங்காரு பட ஆடியோ வெளியீட்டு விழாவில் வைரமுத்து தன் திடீர் பாசத்தை வெளியிட்டார்.
“நம் மண்வாசனை இசையை சினிமாவுக்கு கொண்டு வந்தவர். நம் கலாச்சாரத்தை வெள்ளை மாளிகைகளுக்கும் அப்பால் கொண்டு சேர்த்தவர். நம் தமிழ் இசையின் அடையாளம் என் ஆருயிர் நண்பன் இளையராஜா உடல் நலமில்லாமல் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கிறார். அவர் பூரண உடல் நலம் பெற்று இன்னும் 30 ஆண்டுகள் தன் இசையை மண்ணுக்கு தரவேண்டும் என்ற வாழ்த்துகிறேன்” என்றார்.
இன்று நடை பெறவிருக்கும் KING OF THE POP நிகழ்ச்சியில் இளையராஜா கலந்துக்கொள்ள வில்லை என்றால் ,நடக்க விருக்கும் இந்த நிகழ்ச்சியை உடனடியாக ரத்து செய்ய வேண்டும் ! அல்லது கட்டன விலையை முக்கால் வாசிக்கு குறைக்க வேண்டும் ! இது இரண்டையும் செய்ய தவறினால் !? ஏற்ப்பட்டு குழுவினருடன் மொத தாயார் ! எது நடந்தாலும் சந்திக்க தயார் ! KING OF THE POP பின் கதாநாயகன் இளையராஜா வரவில்லை என்றால் எதற்க்காக RM 500,400,300,200,100 ,70 பணத்தை செலவிடவேண்டும் ? இளையராவின் பெயரை சொல்லி கொள்ளை அடிக்கும் இந்த ஏற்பாட்டாளர்களுக்கு எச்சரிக்கை ,நல்ல முடிவாக எடுங்கள் !
எப்பொழுதுமே பகைவனாக இருக்க வேண்டும் என்பதில்லையே. இரு இமயங்கள் மீண்டும் இணைவது நல்லதுதானே. இது ஒன்றும் தீடிர் பாசம் அன்று.. மனதினுள் புதைந்து இருந்தது தானே.
வைரமுத்து பல சந்தர்ப்பங்களில் இளையராஜா பெருமைப்படுத்தி பேசியுள்ளதை பார்த்துள்ளேன்.அதோடு மட்டுமின்றி தனது புத்தகங்களில் இளைஞானிக்கு உரிய மரியாதையையும் கொடுத்துள்ளார்
ரெண்டு தமிழன் சேர்ந்தால் அடித்துக்கொள்வது சகஜம் ! நாம்தான் எட்ஜஸ் பண்ணிக்கிட்டு போகணும் !
என்க்கு என்னமோ ஒரு டௌடு. .
KINGOFKING = ROBBERY OF ROBBERY !
நேற்று 28/12/2013 நடந்து முடிந்த இளையராவின் இசை நிகழிச்சியில் ஏற்றப்பாட்டு குழுவினர்( MY EVENT INTERNATIONAL ,MOJO )) கலந்து கொண்ட ரசிகர்களை மிகவும் கேவலமாக நடத்தப்பட்டனர் ! வரிசையில் நின்று கொண்டு இருந்த ராசிகளை மரியாதை குறைவாகவும் பேசி,திட்டி அவர்களை வரிசையாக நிற்கும் படி செய்தனர் .இந்த இளையராஜாவுக்காக அதிக விலை கொடுத்து வாங்கி வந்த ரசிகர்களுக்கு பெரிய ஏமாற்றம்தான் மிஞ்சியது .உட்கார்ந்து நிகழ்ச்சியை கண்டு கழிக்க,அமர்வதற்கு போதுமான வசதிகளை இந்த ஏற்ர்ப்பாட்டாளர்கள் செய்து கொடுக்க வில்லை .திறந்த திடலில் ஒரு கூண்டு இரும்பு கம்பிக்குள் அடைத்து வத்து போல் ரசிகர்களை படு கேவல படுத்தி அகதி மாதிரி நடத்தினர்.பணம் கொடுத்த இன்னும் சிலருக்கு அமர இடம் KOODA கிடைக்க வில்லை . .மிகவும் மலிவான வாடகை குறைவான நாறிப்போன மெர்டேகா அரங்கில் இந்த இளையராஜா நிகழ்ச்சியை நடத்தி மக்களிடம் அதிவிலையில் இந்த ( MY EVENT INTERNATIONAL ,MOJO )) ஏற்பாட்டாளர்கள் பணத்தை கொள்ளை அடித்து விட்டனர்! மலை வந்தால் மக்கள் மலையில் நனைவார்கள் என்று கூட கவலை படாமல் ,பணம் கைக்கு வந்தால் போதும் என்று கேட்ட எண்ணத்தில் மக்களை மன உளைச்சலுக்கு ஆளாக்கினர் இந்த கேடுகெட்ட ஏற்பாட்டாளர்கள் .மக்கள் கொடுத்த பணத்துக்கு அழகான உல் அரங்கில்தான் இந்த நிகழ்ச்சியை நடத்தி இருக்க வேண்டும் .ஆனால் இவனுங்களோ ( MY EVENT INTERNATIONAL ,MOJO ) மக்களை ஏமாற்றி ,அவன் வரான் இவன் வரான் என்று சொல்லி ,வருவான் ஆனால் வரமாட்டான் என்று சொல்லி மக்களுக்கு அல்வா கொடுத்ததுதான் மிச்சம் .
KINGOFKING = ROBBERY OF ROBBERY !
சரி யார் இந்த KINGOFKING கின் கதா நாயகன் ? இந்த இளையராஜா தானே ? இந்த ஆளுக்கு என்னா ஆச்சி ? மாரடைப்பா ? முச்சி திணறலா ? இல்ல டிங்கி காயச்சல ? மருத்துவமனையில் இருந்து வெளியாகி ஒரு வாரம் ஆகியும் உடல் குனமடையவில்லையா ?மருத்துவர்கள் இவரை விமானத்தில் பிரயாணம் செய்ய கூடா என்று சொல்லி விட்டார்களா ? சூப் ஸ்டார் ரஜினிகாந்த் சிகிச்சைக்காக சிங்கபூர் வரையிலும் உயிருக்கு பயப்படாமல் பிரயாணம் செய்தாரே ! ஏன் இந்த இளைய ராஜ வில் நாள் முடிய வில்லை ? முருக பக்தர் கிருவானந்த வாரியார் தன் உறையை கேட்டக வெளிநாட்டில் இருந்து அழைப்பு வந்ததும் ,உடல் நிலை பாதிக்க படும் தைரியமா விமானத்தில் பறந்து கொண்டு இருக்கும் போதே உயிர் பிரிந்ததே ! இதில் இருந்து என்ன தெரிகிறது டான் கொடுத்த வாக்கை காப்பாற்ற வேண்டும் என்று ,தமக்கு எது வந்தாலும் சரி நிகழ்சியை நடத்தியே தீருவேன் என்று தைரியமாக விமானத்தில் பக்தர்களை பார்க்க சென்றாரே ,,இவர் ஞானியா? அல்லது இளைய ராஜா ஞானியா !? மருத்துவர் போக வேண்டாம் என்று சொன்னால் நீர் வரவேண்டியதுதானே ? உமக்கு அதிகாரம் உள்ளதே அதை பயன் படுத்தி இருக்கலாமே ?அப்படியே நீர் மருத்துவர் அறிவுரையை மீறி மலேசியாவுக்கு நிகழ்ச்சி படைக்க வந்து ,அந்த மேடையிலே உன் பிரிந்து இருந்தால் உன் புகல் மேலும் புகழ் உச்சிக்கு போயி இருக்குமே ,அப்படியே உன் உயிர் போகா விட்டாலும் நீர் உடல் நலம் சரி இல்லை என்று தெரிந்தும் நிகழ்ச்சிக்கு வந்து நகழ்ச்சியை படைத்தது இருந்தால் இந்த மலேயா தமிழர்கள் உன்னை இசை தெய்வமாக வணங்கி இருப்பார்கள் .உம்மை இசைஞானியா ஆக்கிய ரசிகர்களை உமக்கு மதிக்க தெரியவில்லை .28/12/2013 ,இந்த திகதியிலிருந்து உம்முடைய இசைஞானி என்ற பட்டத்தை ரசிகர்களாகிய நாங்கள் மீட்டுக்கொல்கிறோம் ,,இன்று முதல் நீ வெறும் ராஜா தான் .மொத்தத்தில் நீங்களும் MY EVENT INTERNATIONAL ,MOJO செய்த சதிதான் .
KINGOFKING = ROBBERY OF ROBBERY !
நிகழ்ச்சி எப்படி வழிநடத்தப்பட்டது ? நல்ல வேலை SP பாலசுப்ரமணியம் வந்தார் ,இவர் இந்த நிகழ்ச்சிக்கு வரவில்லை என்று சொன்னால் டப்பா டான்சே இருக்கிறதும் நக்கி கிட்டு போயிருக்கும் .SP பாடி முடிந்த வுடன் கூத்தாடி பட்டாளத்தை யார் மேடைக்கு அழைத்தது ? இசை கருவி வாசிப்பவர்களை அறிமுகம் செய்ய வேண்டிய அவசியம் இல்லை. இறந்தவர்களை மீண்டும் எதற்கு கல்லறையில் இருந்து எழுப்பி வரவேண்டும். இந்த நிகழ்ச்சியை வழி நடத்திய இந்த சுஹாசினி யார் நிகழ்ச்சியை வழி நடத்த சொன்னது ? இந்த சுஹாசினியால் 1 மணி நேரம் வினாகிவிட்டது! அறிமுகம் செய்வதிலும், இறந்தவர்களுக்கு இரங்கல் செய்தே நேரத்தை வீணடித்து விட்டார்கள் .
KINGOFKING = ROBBERY OF ROBBERY !
மொத்தத்தில் மலேசிய ரசிகர்கள் ஏமாற்ற பட்டு விட்டனர். இது இன்று நேற்று நடக்க வில்லை கால காலமாக நடந்து கொண்டு தான் இருக்கிறது. ஏமாறுபவன் இருக்கும் வரையிலும் ஏமாற்றுபன் இருந்து கொண்டேதான் இருக்கிறான் .நாமே பணம் கொடுத்து இது போன்ற கொள்ளையர்களை ( MY EVENT INTERNATIONAL ,MOJO )KOLLAI ADIKKA பழகி கொடுக்கிறோம் . மலேசிய தமிழர்களே, இது போன்ற நிகழ்சிகளுக்கு போக ஆசையாக இருந்தால் போங்கள் தப்பில்லை, ஆனால் நீங்கள் கொடுக்கும் பணத்திற்கு தகுந்த படி உங்களுக்கு போதுமான வசதி ஏற்பாடு செய்து கொடுக்க வில்லை என்றால் அந்த ஏற்பாட்டாளர்களை செருப்பால அடிங்க, பயப்பட வேண்டாம். இனி வரும் காலங்களில் இது போன்ற ஏமாற்று வேலை நடந்தால், ஏற்பாடு செய்யும் நா….டம் ஜாக்கிரதையாக இருங்கள் .
ஆழ்ந்த அனுதாபங்கள்!!!
தமிழனடா …..
கூத்தாடிக்கு கும்மாளம் போடும் குருவிக் குஞ்சுகளா, இதுவும் வேணும், இன்னமும். வேணும். இந்நாட்டு இந்தியர்கள் நலம் பேணி உண்மையானவர்களால் நடத்தப்படும் எத்தனையோ நிகழ்வுகள் ஆதரவு அன்றி வெறிச்சோடி கிடக்கும். இப்பொழுதான் மலேசியா தமிழ் அறவாரியம் நடத்திய, “பெற்றோரும் மாணவரின் வெற்றியை உறுதி செய்யலாம்” (PASS programme) நிகழ்ச்சிக்குச் சென்று வந்தேன். அங்கே செம்பருத்தி ஆசிரியர், க. ஆறுமுகம் நிகழ்த்திய சிறப்புரையில் கூறினார். இந்தியர்கள் RM700.00 வரை கொடுத்து இளையராஜாவின் இசை நிகழ்ச்சியை பார்க்கப் போவார்கள் ஆனால் அந்த பணத்தை தமிழ் அறவாரியத்தைப் போன்ற உண்மையாக மக்கள் தொண்டு தொண்டு செய்யும் நிறுவனங்களுக்கு கொடுக்க மனம் வராது என்றார். இது நூற்றுக்கு நூறு உண்மை என்பதை மோகன் கூறிய நிகழ்ச்சியின் அங்கலாய்ப்பில் இருந்து தெரிகின்றது. “நெஞ்சம் பொறுக்குதில்லையே, இந்த நிலை கெட்ட தமிழரை நினைத்தால் நெஞ்சம் பொறுக்குதில்லையே”!