சமீபத்தில் வெளியாகி அனைத்து திரையரங்குகளிலும் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் படம் கோலி சோடா.
இதில் பசங்க திரைப்படத்தில் நடித்த கிஷோர், ஸ்ரீராம், பாண்டி, முருகேஷ் ஆகியோர் நடித்துள்ளனர். இந்தப் படத்திற்கு மக்கள் மத்தியிலும் விமர்சக ரீதியாகவும் நல்ல வரவேற்ப்பு கிடைத்துள்ளது.
விறுவிறுப்பான திரைக்கதையில் காமெடி, காதல், இசை, ஆக்சன் என்று சரிவிகிதமாகக் கலந்து படமாக்கி வெற்றி இலக்கை அடைந்திருக்கிறார் இயக்குனர் விஜய் மில்டன். தற்போது வெளிவந்திருக்கும் புதிய செய்தி என்னவென்றால் ‘கோலி சோடா’ படத்தின் இரண்டாம் பாகம் விரைவில் எடுக்கப்பட உள்ளதாம். படத்தில் நடித்த நான்கு சிறுவர்களும் ‘கோலி சோடா 2′ படத்திலும் இருப்பார்களாம்.
மேலும், ஒரு முன்னணி நடிகை நாயகி கதாபாத்திரத்தில் நடிப்பார் என்றும் சொல்கிறார்கள். லிங்குசாமியின் திருப்பதி பிரதர்ஸ் நிறுவனம் இதனை தயாரிக்கலாம் என்று கூறப்படுகிறது. மற்றபடி தொழில்நுட்பக் கலைஞர்களில் எந்த மாற்றமும் இல்லாமல் விரைவில் தொடங்கப்படும் என்கிறார்கள்.