கிட்டத்தட்ட 8 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் ஒரு புதிய படத்தை இயக்குகிறார் மகேந்திரன். இந்தப் படத்துக்கு இளையராஜா இசையமைக்கிறார்.
நீண்ட இடைவெளிக்குப் பிறகு தனது ஆஸ்தான இசையமைப்பாளர் இளையராஜாவுடன் கை கோர்த்து களமிறங்குகிறார் இயக்குனர் மகேந்திரன். ஆனால் மகேந்திரன் கடைசியாக இயக்கிய சாசனம் படத்துக்கு இளையராஜா இசையமைக்கவில்லை. நடிகர் நடிகையர் தேர்வு மட்டும் இன்னும் முடியவில்லை. படப்பிடிப்பு மார்ச் மாதம் தொடங்கவிருக்கிறது.
இதனிடையே படத்திற்கான பிரஸ்மீட் சென்னையில் உள்ள பிரசாத் ஸ்டுடியோவில் நேற்று நடைபெற்றது. இந்த பிரஸ்மீட்டில் இளையராஜாவும், மகேந்திரனும் கலந்து கொண்டனர். ஆனால் பிரஸ்மீட்டை ஏற்பாடு செய்த பி.ஆர்.ஓ., முகத்தில் ஒரே டென்ஷன் காணப்பட்டிருக்கிறது. காரணம், இரண்டு பிரபலங்கள் கலந்துகொள்கிறார்கள் என்று கிடையாது.
சில வாரங்களுககு முன் இஸ்லாமியராக மதம் மாறிய யுவன் சங்கர் ராஜா பற்றி பத்திரிகையாளர்கள் அவரின் தந்தை இளையராஜாவிடம் ஏடாகூடமாக எதுவும் கேட்டுவிடக் கூடாது என்றுதான். இது குறித்து முன்னதாகவே சுதாரித்துக் கொண்ட பி.ஆர்.ஓ., பிரஸ்மீட்டில் கேள்வி கேட்கும் வழக்கமுடைய முக்கிய பத்திரிகையாளர்களை அழைத்து மதம் மாறிய யுவன் சங்கர் ராஜா பற்றி எதுவும் கேட்காதீர்கள் என்று கெஞ்சிக் கேட்டுக் கொண்டாராம்.
அவருடைய இந்த பரிதாப நிலைமையை உணந்த பத்திரிகையாளர்கள் இளையராஜாவிடம் யுவன் பற்றி எந்த கேள்வியும் கேட்கவில்லையாம். இதன்பிறகே சம்மந்தப்பட்ட அந்த பி.ஆர்.ஓ., நிம்மதி பெருமூச்சிவிட்டிருக்கிறார்.
விளங்கிடும்…… இப்படி ஒரு பிள்ளையை பெற்றதற்கு வெட்கி தலை குனிந்தே தீர வேண்டும். ” உலை வாயை மூடலாம் ஊர் வாயை எதனை நாளைக்குதான் மூட முடியும். ????? “
மதம் மாறுவதற்கு ,ஒரு தடைவைக்கு ஒன்பது தடவை யோசிக்கணும்.
உன் ரசிகர்கள் உன்னுடன் வந்தால் இந்து மதம் என்னாவது.?
ஒரு பெண்ணுக்காக மதம் மாறும் தமிழர்கள் ஏராளம் — இவன்களை ஏசுவது தரக்குறைவாக இருந்தாலும் – இந்த கேடு கெட்ட ஜென்மங்களை தள்ளி வைப்பதே சரி.
வரும் காலங்களில் ,எந்த ஊர்கரனும் சமய பொழிவு,,ஆன்மீகம் என்று இந்த நாட்டிற்கு வர அனுமதிக்ககூடாது….அதிக மனோர் எதற்காக மதம் மாறுகிறார்கள் ?காரணம்என்ன ? தீர்வு என்ன? என்று ஆராச்சி செய்து சரி பண்ணட்டும் ,,,,,,,,,,,நமது நாட்டில் இனி எந்த தலைவனோ? பொறுப்பில் உள்ளவனோ? மதம் மாறுவதற்கு ஒரு காரணமாக இருக்கும் ஜாதியை பற்றி பேசுவதை நிறுத்தவேண்டும்.
திரு சாமினாதரே! சரியாக சொன்னினீர்! மதம் மாறுவதற்கும், சமுதாயத்தில் ஒருமைப்பாடு குழைவதட்கும் பொருளாதார ஏற்றத்தாழ்வு காரணமல்ல, சதிக்கு கால் முளைத்த சாதிதான் அடிப்படைக் காரணம். இதை, சுவாமி விவேகானந்தரே சொல்லியுள்ளார். “சாதியை வளர்ப்பது பெரிய பெரிய பணக்காரர்களோ, செல்வந்தர்களோ அல்லர். சமயவாதிகளும், சமயம் சார்ந்த அமைப்புக்களும்தான்”. சுவாமிகள் சொன்னார் என்பதற்கு என்னிடம் ஆதாரம் உண்டு. சாதியால் பாதிக்கப்பட்டவர்கள், “முடை நாற்றமெடுக்கும் சாதியை நீயே கட்டி அழு” என்று முடிவெடுத்து, ஒரே இரவில், மதம் மாறினால் மதவாதிகளால் என்ன செய்ய முடியும்? இந்து சமயத்தால் தடுத்து நிறுத்த முடியுமா? ஒன்னும் கிழிக்க முடியாது. ஒருநாள், இது நடந்தே தீரும். இது அந்த ஸ்ரீ மாரியம்மால்மீது சத்தியம். நால்வகை வருணங்களை பிராமணன் பிரித்து விட்டான் என்று காலங்காலமாக பிராமணனை குறை சொல்லியது போதும். சாதி பேசுவதை “சழுக்கர்கள்” நிறுத்தினாலே வள்ளல்பெருமான் கண்ட “ஒருமைப்பாடு” சமுதாயத்தில் நிலவும். இன்று பள்ளிகளிலும் சாதி சவடால் பண்ணுகிறது. “சாதிகள் இல்லையடி பாப்பா” என்று பாடம் சொல்லித்தந்து, ஒருமைப்பாட்டை வளர்க்க வேண்டிய ஆசிரியர்கள், அதுவும் “பொட்டச்சி” ஆசிரியர்கள் சம்மணம் போட்டுக்கொண்டு, கேவலம் சாதிக்கு வக்காலத்து வாங்குகிறார்கள். இதைவிட அவலம் வேறு உண்டோ? யுவன் சங்கர் ராஜா மதம் மாறியதில் சங்கடப்ப ஒன்றுமில்லை. இன்னும் பல ராஜாக்கள் மதம் மாறாமல் இருக்க, சாதி பற்றி பேசாமல் இருப்போம். முடியுமா? முடியும் என்று அவரவர் முடிவெடுத்தல் முடியாதது ஒன்றுமில்லை. மனமிருந்த மார்கமுண்டு. சமத்துவம் நோக்கி பயணிப்போம்! ஒருமைப்பாட்டுக்கு வித்திடுவோம் வாரீர்! `
அண்மையில் என் நண்பரிடம் யுவன் இஸ்லாத்திற்கு மாறியதை பற்றி கேட்டேன், அந்த ஜாதி காரன்கள் அப்படித்தான் என்று ரொம்ப மட்டகரமா பேசினார், இப்படி ஒரு மனிதனை இவ்வளவு கீழ் தரமா பேசினால் அவர்கள் எப்படி மாறாமல் இருப்பார்கள்.