அரசியல் பிரவேசம் குறித்த கேள்விகளுக்கு பதிலளித்துள்ளார் சின்னக்கலைவாணர் விவேக்.
ஈரோட்டில் திரைப்பட நடிகர் விவேக் நிரூபர்களுக்கு அளித்த பேட்டியில், நான் தான் பாலா என்ற திரைப்படத்தில் கொமடி இல்லாத மிகவும் சீரியசான கதாபாத்திரத்தில் நடித்துள்ளேன்.
இதுவரை எந்த கொமடி நடிகரும் இதுபோன்று நடித்தது இல்லை. இதில் கூலிப்படை கலாச்சாரத்தை ஒழிக்க வேண்டும் என்ற கருத்தினை வலியுறுத்தி உள்ளேன்.
இந்த திரைப்படம் ஏப்ரல் மாதம் திரைக்கு வர இருக்கிறது. மேலும் பாலக்காட்டு மாதவன், வைராஜா வை, அஞ்சான் போன்ற படங்களில் நடித்து வருகிறேன் என்று கூறியுள்ளார்.
இதனைத் தொடர்ந்து நீங்கள் அரசியலுக்கு வருவீர்களா? என்று கேட்டதற்கு, சினிமாவில் நல்ல பல கருத்துக்களை மக்களிடம் சொல்கிறேன். இதுவும் ஒருவகை அரசியல்தான். எல்லோருக்கும் பிடித்தவனாக இருக்க விரும்புகிறேன் என்றார்.
ஆம் ஆத்மி கட்சியில் மகாத்மா காந்தியின் பேரனே இணைந்திருக்கிறாரே என்ற கேள்விக்கு, நான் ஒன்றும் காந்தி பேரன் இல்லை என்று பதிலளித்துள்ளார்.