-முனைவர் ஆறு. நாகப்பன், மார்ச் 18, 2014
இந்து சமயம் அல்லது சைவ சமயம் எதுவாக இருந்தாலும் தமிழர் சமயம் குறித்த சரியான பார்வை இக்காலம் வரை எங்கும் பார்க்கப்படவில்லை. சமய விளிம்புகளின் இரு கோடிகள் மட்டுமே இது வரை பேசப்பட்டுள்ளன. முரட்டுத் தனமான நம்பிக்கைகள் ஒரு பக்கமும் அதே முரட்டுத்தனமான மறுப்புகள் ஒரு பக்கமும் காணப்பட்டன. காட்டப்பட்டன.
ஏதோ சில நூல்களின் அடிப்படையில் கட்டமைக்கப்பட்ட நம்பிக்கைகளே சமயங்களுக்கான பொதுத் தளம் என்பது பிழையல்ல. ஆனால் இது எல்லாச் சமயங்களுக்கும் பொருந்தாது. பலவாகிய இந்திய சமயங்கள் அனைத்தையும் ஆராய்வது இந்த இடத்தில் வேண்டாம் என்பதால் இரண்டே இரண்டு சிந்தனைக் கட்டுமானங்களை மட்டும் தேவைப்பட்ட அளவுக்கு பார்த்துக் கொண்டால் சமயம் குறித்த சரியான பார்வை ஒன்று கிடைக்கும் என்பது என் கருத்து.
முதலாவது இந்து சமயம் என்ற பொதுப் பெயரில் வைதீகம் விரித்திருக்கும் அகன்ற வலை. இருக்கு முதலிய வேதங்களின் அடிப்படையில் அமைந்த வைதீகப் பண்பாடு வேள்வி, வருணாசிரமம், சமற்கிருதம் ஆகியவற்றை உள்ளடக்கிய பிராமணீய வாழ்க்கை முறையைக் குறிக்கிறது. பிறப்பால் வரும் சாதிமையைப் போற்றுவது வருணாசிரமம் . இதுவே பிராமணீயத்தின் அடித்தளம்.
பிராமணீயம் இந்தியப் பெருநிலம் முழுவதும் பரவியது. உலகியல் செல்வம் அனைத்தும் பெறலாம் என்னும் வேட்கையை முன்னிறுத்தியதால் வேத வேள்வி தமிழ் அரசர்களையும் செல்வந்தர்களையும் விரைந்து கவர்ந்தது. இதன் வழித் தமிழ் நாட்டு அரண்மனைகளின் செங்கோல்களை வைதீகம் கைப்பற்றியது.
மற்றொன்று தமிழர் உருவாக்கிய மெய்ப்பொருள் சிந்தனை. மரபு சார் ஊர்த்தெய்வங்கள் பலவும் நம்பிக்கைத் தளங்களில் ஊன்றி நின்றன. குல தெய்வம் அல்லது இல்லுறை தெய்வம், காவல் தெய்வங்கள், வீரர்களுக்கான நடுகல் வழிபாடு போன்றவை தமிழரின் மரபு சார் மதங்கள் ஆகும். தொல்காப்பியம் குறிக்கும் குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல், பாலை என்னும் ஐவகை நிலத்திணைகளுக்கும் முறையே முருகன், திருமால், இந்திரன், வருணன், கொற்றவை ஆகியவை தமிழரின் தொன்மைத் தெய்வங்கள். இவற்றுள் இந்திரன், வருணன் என்பவை வைதீகத்தின் சாயல் பெற்றுத் திரிந்த பெயர்கள்.
சங்க காலத்தில் மரபு சார் சிறுதெய்வங்கள் பலவும் வழக்கில் இருந்த போது சிவபெருமான் ‘பிறவா யாக்கை பெரியோன்’ என இளங்கோவடிகளால் குறிப்பிடப்பெற்றார். சிவபெருமானின் தோற்றப் பொலிவைக் குறிக்கும் தொடர்கள் பலவும் சங்க இலக்கியங்களில் காணப்படுகின்றன.
நம்பிக்கை சார்ந்த சிறுதெய்வங்களின் வழிபாடு மலிந்திருந்த காலத்தில் அறிவு சார்ந்த சிவ வழிபாடு சான்றோர் சிந்தனையில் வளர்ந்து சித்தாந்தம் என்ற மெய்யறிவுத் துறையாக அமைந்தது.
கடவுளுக்குக் கடவுள் தேவையில்லை, சடப் பொருள்களுக்கு அறிவும் உணர்வும் இன்மையால் அவற்றுக்கும் கடவுள் தேவையில்லை. ஆகவே சடப் பொருள்களைக் கருவி கரணங்களாகக் கொண்டு உலகைத் துய்க்கும் அறிவும் உணர்வும் உடைய உயிர் என்னும் பொருள் இருக்கத்தான் வேண்டும் என்பது உயிர் உண்மையை நிறுவும் வாதம். இல்லது தோன்றாது என்னும் வாதத்தால் உள்ளதாகிய மூலப் பொருள் ஒன்றிலிருந்தே உலகம் தோன்றியிருக்க வேண்டும் என்பது மாயையை நிறுவும் வாதம்.
உலகின் இருப்பை ஆராய்ந்து அவன், அவள், அது என்னும் அவயவப் பகுப்புடையதாய் இருக்கும் இவ்வுலகம் சடமாதலால் தானே தோன்றி, நின்று அழியாது என்றும் எல்லா உலகங்களையும் முற்றாக அழிக்கும் ஆற்றல் உள்ளவனே உலகைப் படைப்பவனாயும் உலகுக்கு ஆதியாயும் இருப்பான் என்றும் கடவுள் இருப்பைச் சைவம் நிறுவுகிறது.
உயிர், மாயை, கடவுள் தவிர வேறு இரண்டு பொருள்களும் கடவுளால் படைக்கப்படாமல் என்றும் உள்ள பொருள்களாக உள்ளன. என்றும் உள்ள உயிர்களின் இயல்பாகிய அறிவு, இச்சை, செயல் ஆகிய ஆற்றல்களை மறைத்து அவற்றுக்கு அறியாமையை ஏற்படுத்தியிருக்கும் ஆணவம் என்பது ஒன்று. ஆணவத்தை அகற்றுவதற்கு உயிர்களைச் செயல்படுத்திப் பக்குவப்படுத்தும் வினை மற்றொன்று.
அறிவு சார்ந்த இந்த வாதங்களால் உயிர், மாயை, கடவுள், ஆணவம், வினை ஆகிய பொருள்கள் தோற்றம் அழிவு இன்றி என்றும் இருப்பவை என்று கூறுவது சித்தாந்தம். கடவுளின் இருப்பைப் பதி உண்மை என்றும் கடவுளின் சிறப்பைப் பதி இலக்கணம் என்றும் சித்தாந்தம் விரித்துப் பேசியது.
என்றும் உள்ள உயிர்களுக்கு என்றும் உள்ள மாயையிலிருந்து உடல், உலகங்கள், உயிர்க்கான நுகர்ச்சிப் பொருள்களை இறைவன் படைத்துக் கொடுக்கிறான். படைத்தவற்றை உயிர்கள் நுகர்ந்து பக்குவப்படும் வரை காக்கின்றான். உயிர்கள் பிறந்தும் இறந்தும் பக்குவப்படும் வரை தன்னை மறைக்கின்றான். பிறப்பு இறப்பிலிருந்து இளைப்பாறும் பொருட்டு படைத்தவற்றை அழிக்கின்றான். பக்குவப்பட்ட உயிர்களை இடையறா இன்பத்தில் நிலைக்க அருளுகின்றான். இவ்வாறு படைத்தல், காத்தல், மறைத்தல், அழித்தல், அருளல் என்னும் ஐந்தொழிகளை உயிர்கள் பொருட்டு இறைவன் செய்தபடி இருக்கின்றான் என்பது சித்தாந்தம்.
இருபத்தெட்டு சைவ ஆகமங்களைத் தனக்கு வேதமாய்க் கொண்டது சிவனைப் போற்றும் சைவம். ஆகமங்களின் செயல்முறை நூலாக அமைவது பன்னிரு திருமுறைகள். இவ்விரண்டு நூல்களின் வழியில் அமைந்தவை பதினான்கு மெய்கண்ட சாத்திரங்கள். இவற்றுள் ஆகமம் விதி நூல், திருமுறை செயல் நூல், மெய்கண்ட சாத்திரங்கள் சைவத்தின் இலக்கண நூல்கள். மற்றோர் முறையில் கூறினால் சைவத்தின் வேதம் ஆகமம், மெய்யறிவு நூல் மெய்கண்ட சாத்திரங்கள், மெய்யுணர்வு (பத்தி) நூல் திருமுறைகள்.
சைவம் இமயம் முதல் குமரி வரை பல அடைமொழிகளைக் கொண்டு விரிந்தது. என்றாலும் தென் தமிழ் நாட்டில் நுண்ணிய தத்துவத் துறையாக செம்மைப்பட்டது. இதன் வளத்தை இந்தியச் சிறு மதங்கள் யாவும் பங்கிட்டுக் கொண்டன. கணபதியைப் போற்றும் காணாபத்தியம், முருகனைப் போற்றும் கெளமாரம், சக்தியைப் போற்றும் சாக்தம் ஆகிய மதங்கள் யாவும் முறையே சிவனின் பிள்ளைகள் என்றும் மனைவி என்றும் உறவு முறைகளால் தம் நிலையை உறுதிப்படுத்திக் கொண்டன.
உறவுமுறைகளை வலிமைப்படுத்த ஏராளமான புராணங்கள் உருவாக்கப்பட்டன. தமிழர் சமயக் கிரியைகளோடு வைதீக வேள்விக் கிரியைகள் கலந்தன. ஆரிய பிராமணர்களின் தொழில் வளம் கருதி உருவாக்கப்பட்ட கிரியைகள் அறிவுக்கு ஒவ்வா நம்பிக்கைகளை உருவாக்கின. இன்றும் உருவாக்கிக் கொண்டிருக்கின்றன.
தனிப்பெரும் சமயமான சைவம் தென்னிந்தியச் சிறு சமயங்கள் உயிர்த்து உறுதி பெற உதவிய காலத்தில் வைதீகம் சைவம் உட்பட அனைத்துச் சமயங்களையும் வாரி விழுங்கித் தன் வயிற்றில் அடக்கிக் கொண்டது. இதனால் வேதங்களை ஏற்காத சமணம், பெளத்தம் அவைதீகம் என்றும் மற்றவை அனைத்தும் வைதீகம் என்றும் ஆரிய மயப்பட்டன.
இக்காலத்தில் தமிழரின் பழஞ்சமயங்களான கிராமத்துத் தெய்வங்கள் வைதீகத்தின் கைகளுக்குத் தப்பித் தம் மரபுகளைக் காத்துக் கொண்டன. சிற்றூர்களைக் கடந்து விரிந்த சமயங்கள் வைதீகத்தில் கலந்து உரு மாறின. முருகன் சுப்ரமணியன், கந்தன் என்றும் திருமால் விஷ்ணு என்றும் மாற்றம் கண்டனர். நிலத்திணை கடந்து பொதுக் கடவுளாய் இருந்த சிவன் உருத்திரன் ஆனான். தமிழர் அமைத்த கோயில்களில் பிராமணர் பூசகராயும் சமற்கிருதம் பூசனை மொழியாகவும் ஆனது. சங்கம் வைத்துத் தமிழ் வளர்த்த அரசர்களே இதற்கெல்லாம் வழி கொடுத்து வணங்கி நின்றனர்.
ஆரிய மயப்பட்ட சைவ சமயத்தை மீட்டுப் புத்துருவாக்கம் செய்யும் முயற்சியில் திருஞானசம்பந்தர், திருநாவுக்கரசர், சுந்தரர், மாணிக்கவாசகர் என்னும் நால்வர் பெருமக்கள் அரும்பாடு பட்டனர். சமண, பெளத்த மதங்களின் வலிமையை எதிர்கொள்ள இயலாத நிலையில் வைதீகத்தைப் பகைத்துக் கொள்ளாமல் அதே வேளையில் சைவத்தையும் தமிழையும் மீட்கும் போராட்ட முறையை மேற்கொண்டனர்.
சமற்கிருத மொழியைத் தேவபாஷை என்று கூறும் பிராமண மரபில் வந்த திருஞானசம்பந்தர் தன்னைத் தமிழ்ஞானசம்பந்தர் என்று வலிந்து பல பாடல்களில் குறிப்பிட்டார். வைதீக நெறிக்கு ஒவ்வாத உருவ வழிபாட்டு மரபை மீட்டார். தமிழால் சிவபெருமானைப் பாடும் பதிகங்கள் இயற்றினார். இவர் வழியில் திருநாவுக்கரசர் மேலும் உறைத்தெழுந்தார்.
கிரியைகள் மட்டும் வழிபாடு ஆகிவிடாது, உண்மை அன்பே வழிபாடு என்றார். ‘ நெக்கு நெக்கு நினைபவர் நெஞ்சுளே புக்கு நிற்கும் பொன்னார் சடைப் புண்ணியன்’ (5.90.9) என்றார். ‘சாத்திரங்கள் பல பேசும் சழக்கர்காள், கோத்திரமும் குலமும் கொண்டு என்செய்வீர்’ (5.60.3)என்று சமூக நீதியுரைத்த திருநாவுக்கரசர் ‘நாமார்க்கும் குடியல்லோம் நமனை அஞ்சோம்’ (6.98.1)என்று முடியரசை எதிர்த்த முதல் குடியரசர் ஆனார்.
‘அங்கமெலாம் குறைந்தழுகு தொழுநோயராய்
ஆவுரித்துத் தின்றுழலும் புலையரேனும்
கங்கைவார் சடைக்கரந்தார்க்கு அன்பராகில்
அவர்கண்டீர் நாம்வணங்கும் கடவுளாரே (6.95.10)
என்று சாதிமை கடந்த பத்திமையை அப்பர் முன்னைலைப்படுத்தினார்.
இவர்கள் வழியில் வந்த சுந்தரர் இல்லறத்தினின்றும் இறைவன் திருவடியைச் சென்றடைய முடியும் என்று வாழ்ந்து காட்டினார்.
‘சாதி குலம் பிறப்பென்னும் சுழிப்பட்டுத் தடுமாறும்
ஆதம் இலி நாயேனை…’ (8.கண்டபத்து 5)
என்று சாதி, குலம், பிறப்பால் மக்களை உயர்ந்தோர் தாழ்ந்தோர் எனக் கூறுவதை இழிந்த பண்பு எனச் சாடினார் மாணிக்கவாசகர்.
இவ்வாறு நால்வர் பெருமக்களும் ஏனைய சைவச் சான்றோரும் ஆரிய வருணாச்சிரமத்தைக் கண்டிக்கும் போராட்டத்தின் மறுதலையாகச் சைவம் குறிக்கும் ‘ஒன்றே குலமும் ஒருவனே தேவனும்’ (10.2072) என்ற மனித குல ஒருமைப்பாட்டை வலியுறுத்தினர்.
ஆரிய மாயை என்று கூறி வைதீகம் கலந்த தமிழர் சமயங்களைப் புறக்கணிக்கும் தமிழ்ச் சிந்தனையாளர் ஆரியமும் வைதீகமும் நீங்கிய தமிழர் சமயங்களை அடையாளம் கண்டு மீட்டெடுக்கும் பணியை மேற்கொள்ள வேண்டும். இவற்றுள்ளும் சைவம் தமிழர் வளப்படுத்திய தத்துவக் களஞ்சியம் என்பதை உணர்ந்து அதனைப் போற்றிக் கைக்கொள்ள வேண்டும்.
‘தமிழருக்குச் சமயமே இல்லை’ என்ற முரட்டு வாதம் தமிழரின் சமயம் இருந்த இடத்தில் அந்நிய மதங்களுக்கு ஆட்சி பீடங்களை அமைத்திருக்கிறது. தமிழர் சமயங்களைச் சார்ந்தோரைப் பார்த்து ‘கடவுள் இல்லை, இல்லவே இல்லை’ என்போர் அந்நிய மதங்களைச் சார்ந்துவிட்ட தமிழரையும் தமிழரை மதம் மாற்றும் அந்நியரையும் பார்த்து அப்படிச் சொல்வதில்லை என்பதால் கடவுள் மறுப்பாளர் வந்தாரை வாழ வைப்பதை மறைமுகப் பணியாகச் செய்து கொண்டிருக்கின்றனர் என்பதை உணர்த்த வேண்டியுள்ளது.
தமிழரின் மரபு சார்ந்த சமயங்களை வைதீகப் பிடியிலிருந்து மீட்கும் முயற்சியில் தோற்றுப் போனவர்கள் தமிழருக்குச் சமயமே இல்லை என்று மறுதலிப்பது தமிழரின் பண்பாட்டு வரலாற்றை ஊனப்படுத்திவிடும். குறிப்பாகச் சைவ சமயத்தையும் சைவ சித்தாந்தத்தையும் மறுதலிப்பது ஆய கலைகள் அறுபத்து நான்கையும் அறிந்த தமிழனுக்குக் கடவுள் பற்றிய சிந்தனை மட்டும் இல்லை என்று கூறுவதாய் முடியும். இப்பார்வையினின்று மாறி வைதீகப் பிடியிலிருந்து சைவத்தை மீட்க வேண்டும். மீட்டால் சைவம் அறிவார்ந்த சமயமாகச் சமய உலகைத் தலைமை கொள்ளும் என்பது உறுதி.
கடவுள் என்பவர் “ஆண்” என்று சொன்ன kayee (kayu ) அவர்களுக்கு
நன்றி ! சந்தேகம் தீர்ந்தது.
பகுத்தறிவுடன் இறைவனைக் கண்டதே சித்தாந்தம். மூட நம்பிக்கையாலோ, பகுத்தறிவில்லாத பக்தியாலோ அல்ல.
சங்கா்,அப்படி ஏதும் தொியவில்லை வுங்கள் கை தொலைபேசியை சோதித்து பாா்கவும்,நாராயன சித்தம்.
kayee saar எழுத்து பிழை இல்லாமல் எழுதுங்கள்,
இவர்
சொல்வெதெல்லாம் இவருடைய பார்வைக்கு சரி…
மற்றவருடைய நம்பிக்கை பற்றி பேச இவருக்கு எந்த தகுதியும் கிடையாது. சைவ
சமயம் மட்டும் சரி..
மற்றவை யாவும் தவறு என சொல்வதற்கு இவர் யார்?
குறுகிய பார்வையில் அனைத்தும்
குறுகலாகவே தெரியும்..சும்மா நிறுத்து உன் பேச்சை
!!!!!!!!!!!
hiiiiiii
இவர் சொல்வதெல்லாம் சரி என்று நினைக்காதீர்…இவர் பார்வைக்கு அது சரி….மற்றவர
நம்பிக்கையை குறை சொல்ல இவருக்கு
என்த தகுதியும் இல்லை. இவர் ஒரு குறுகிய வட்டதுக்குள் இருக்கிறார்
. இவரை
போன்ற குழப்படிகாறர்களால்
சமயத்துக்கு கெட்ட
பெயர்தான். இவருக்கு தெரின்ததெல்லாம் நால்வர் மட்டுமே..
நால்வர் மட்டுமே சமயம் இல்லை
அதை
யும்
தாண்டி எவ்வளவோ உண்டு…அதையும்
தெரின்து
கொள்ள முயல்..எல்லாம் தெரின்தவன்
போல பேசாதே!!!!!!!!!!!
இவர் சொல்லவதெல்லாம் சரி இல்லை என்றால் நீங்கள் சரியானதைச் சொல்ல வேண்டும் அல்லவா ராஜ்? சரியானதைச் சொல்லத் தெரியாமலேயே, பிறர் சொன்னதை பிழை என்று சொல்ல உங்களயுடைய அருகதை என்னவென்று நாங்கள் அறிந்துக் கொள்ளாமா? மற்றவர் நம்பிக்கையை குறை சொல்ல கட்டுரையாளர் இங்கு வரவில்லை. எதை தமிழர் சமயம் என்று நால்வர் பெருமக்கள் நமக்கு அறிவுத் தெளிவை புகட்டினார்களோ அதையேதான் இவர் திருத்தமாக எடுத்துச் சொல்லி இருக்கின்றார். அதையும் தாண்டி மெய்கண்ட சாத்திரங்களும், சைவ ஆகமங்களும் நமக்கு சமய பிரமான ஆதாரங்களாக இருப்பதையும் எடுத்துரைத்துள்ளார். இதையும் தாண்டி தமிழர்களுக்கு சமய அறிவு நூல்களாக இருப்பதை நீங்கள் வாசக பெருமக்களுக்கு எடுத்துரைக்க வேண்டுமாய் அழைக்கின்றேன். எல்லாம் தெரிந்தவன் எம்பெருமான் ஒருவனே. ஒண்ணுமே தெரியாத நீர் இவ்வளவு சவடால் பேசினால், கொஞ்சமாவது தெரிந்த அவர் எவ்வளவு சவடால் பேச முடியும்? போரில் களமிறங்க வெற்றுக் கையுடன் வருபவன் போராளி அல்ல!
மருத்துவர்களும் சாமியார்கள் போலதான், ஒரு நோயை குண படுத்த முடியவில்லை என்றால், நாங்கள் எல்லாம் செய்து விட்டோம் எனவே நீங்கள் கடவுளை வேண்டி கொள்ளுங்கள் என்பார்,என்னால்முடியாது வேறு மருத்துவரை பாருங்கள் என்று சொல்ல மாட்டார்முடியவில்லை என்றால் நேராக சொல்லவேண்டியதுதானே,அதேபோலதான்,கடவுள் ஆணா,பெண்ணா என்று கேட்டால் தெரியாது
என்று சொல்லிவிட்டு போகவேண்டியது தானே,ஏன் உளரனும் ?
ஒரு பாலர் பள்ளி மாணவன், சிவன் உருவத்தைப் பார்த்த மாத்திரத்தில் அவர் ஆண் கடவுள் என்றும், சத்தியின் உருவத்தைப் பார்த்த மாத்திரத்தில் அவர் பெண் தெய்வம் என்று சொல்லிவிடுவார். காரணம் அம்மாணவனின் அறிவு பாலர் பள்ளி அளவே. தமிழ்நாடு, திருநெல்வேலி, மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைகழகத்தில் (வைதீக பாரம்பரியத்தைக் கொண்ட பல்கலைகழகம்) “தாயுமானவர் பாடல்களில் சைவ சித்தாந்த கோட்பாடுகள்” என்ற ஆய்வேடு எழுதி தேர்ச்சிப் பெற்று முனைவர் பட்டம் பெற்ற ஒரு சமய அறிஞரிடம் “கடவுள் ஆணா, பெண்ணா” என்று கேள்விக் கேட்டால், பாலர் பள்ளி மாணவனைப் போல் பதில் சொல்ல முடியுமா? அவ்வாறு சொன்னால் அது அவரின் சமய அறிவுக்கு இழுக்காக ஆகாதா?. ஆசாமியும், “kayee” – யும் சமயத்தில் பாலர் பள்ளி மாணவர்கள் என்பதற்காக இவ்விருவரின் நிலைக்கு கீழே இறங்கி வந்து ஆமாம் கடவுள் “ஆண்” என்று சொல்வதற்கு முனைவர் ஒன்றும் முட்டாள் அல்ல. உலறுகின்றவர் எல்லாம் எதையும் அறிவுக் கண்ணால் சீர்தூக்கிப் பார்க்க வேண்டிய அவசியமே இல்லை. சிந்திக்காமலே சிறு புத்தியைக் கொண்டு பதில் சொல்லி விட்டுப் போகலாம். “kayee”- யை போல். அவ்வாறே புத்தி கொண்டவர்கள் அதையும் கேட்டுக் கொண்டு ஆமாம் சாமி போடலாம். அதனால்தானே, இன்று தமிழரின் சமயம் எது என்று மன்றாடி மண்டியிட்டு தமிழர்களுக்கு உணர்த்த வேண்டியுள்ளது. மேலே கூறிய இருவர் தமிழர்களா என்ற சந்தேகமே எழுகின்றது!. இவர்கள் அவ்வாறானவர்கள் என்றால் இவர்களின் எழுத்துக்களில் தமிழர் உணர்வை காண முடிவதில்லையே!.
ஆசாமி, “மருத்துவர்களும் சாமியார்கள் போலத்தான்” என்பதை திருத்தி “மருத்துவர்களும் கடவுளைப் போலத்தான்” என்று எழுத பழகிக் கொள்ளுங்கள். “போலி மருத்துவர்களும், போலி சாமியார்களும் இன்று நிறையவே நம்மிடையே இருகின்றார்கள்.
மார்ச் 21 பதிவில் கடவுள் ஆணுமல்லன், பெண்ணுமல்லன், அலியுமல்லன் என்று கூறி அதற்கான காரணங்களையும் விளக்கியுள்ளேன். படிக்க வேண்டும், படித்தும் புரியவில்லையென்றால் தொடர்ந்து கேள்விகள் எழுப்பலாம். பதில் கிடைக்கும். நான் சைவ சித்தாந்த நூல்களின் அடிப்படையில் விளக்கம் தருகிறேன். பிற நூல்கள் இதைவிடச் சிறந்த அறிவார்ந்த பதிலைத் தந்தால். எழுதுங்கள். கருத்து கூறுகிறவர்கள் ஏதாவது ஒரு தத்துவத் துறை சார்ந்த நூல்களை மேற்கோள் காட்டுவது சிறப்பு. கருத்து எதுவாய் இருந்தாலும் எழுத்தில் நாகரீகம் வேண்டும். தருக்கவாதத்தில் உண்மை கிடைக்கும். குதர்க்கவாதத்தில் உண்மை கிடைக்காது.
நீ எப்படி உன் மனக்கண்ணில் பார்க்கிறாயோ அப்படியே இறைவன் தோற்றம்! இதில் என்ன குழப்பம்? ஆகாவேதான் அவன் பல ரூபங்களில், தோற்றங்களில் காட்சியளிக்கின்றான்!
பகவான்,இறைவன் ஆண் என்பதை வுனறும்,அவன் என்றால் ஆண்,அவல் என்றால் பெண்,காமடி பண்ணதீங்க நாராயண நாராயண.
வணக்கம் அய்யா ! சைவ சித்தாந்த நூல்களின் அடிப்படையில்
விளக்கம் தருகிறேன் என்று சொல்கிறீர்,அப்படியென்றால் உங்கள்
சொந்த கருத்து இல்லை என்பது தெளிவாகிறது. நான் அப்படியல்ல
என் சொந்த மூளையில் உருவான கேள்விதான் ஆணா,பெண்ணா
என்ற வாதம், இலக்கண பிழையுடன் தமிழ் எழுதும் kayee போல
நான் இல்லை அய்யா.
கடவுளை உருவத்தில் பார்த்து விட்டால் , எங்கேயோ கோளாறு ஏற்பட்டு விட்டது என்று பொருள் !
ஆரியன்,பிராமணா்,வைதீகம்,மற்றும் தமிழ் சைவம்.தமிழ்மக்கள்,அரசன் போன்ரோா் பிராமணரை வைதீகத்தை மதிப்பது ஒரு சுமாராண காாியமல்ல பெரியவரே.வாணிபநோக்கோடு சாங்கியம் சம்பிரதாயம் என்று பொய்யுரைத்து ஏமாற்றியதாக இருக்கிரது பெரியவர் கருத்து.அக்காலத்து மக்கள்,அரசர்கள் அவ்வளவு தெளிவில்லாதவா் போன்று கருத்து விளங்குகிறது.பிராமணன் அவன் வாழ்வே இறையோடு ஒன்றியது.பேசலாம் எவறும் ஆனால் அங்கே நிற்க முடியாது,இதை யாராலும் மறுக்க முடியாது,நீங்கள் பெரிவா் அரியாதது ஒன்றும் இல்லை.காலை துவங்கி தூங்கும் வரை கோயில் வேலை.திருமணம் முதல் சா்வ சுப காாியமும் செய்து வைக்கிராா்,யாறும் துன்புருத்திணலும் திருப்பி தண்டிக்க துணிவில்லாத அப்பாவிகளை இவ்வளவு அசிங்கபடுத்தகூடாது,பிர்மஹத்தி தோஷம் பற்றிக்கொள்ளம்.என் கருத்து பெரியவா் என்றும் நடுநிலை கொண்டு எழுத வேண்டும்.சிவனை பற்றி நீங்கள் எழுதியதில் யேமக்கும் ஆனந்தமே,இந்துக்களில் நிரைய கலாச்சாரம் வுண்டு ஆனால் மதம் ஒன்ரே இவை இங்கே விவாதிப்பதின் நோக்கம் ஒற்றுமை வேண்டும்.செம்பருத்தியில் கண்டேன் ராமாயணம்,சாஸ்திரம் போன்றையை படியுங்கள் என்று அன்வர் வலியுருத்தி இருந்தாா்.சிவபக்தரையும் வீனே இழிந்ததால் வம்சம் அழிவுக்கு இட்டுசெல்லுமாம்.நாராயண சித்தம்.
வைதீக மதத்தையோ, ஒரு பிராமணரையோ அவமதிக்கும் நோக்கம் உடையது அல்ல இக்கட்டுரை என்றே தோன்றுகின்றது. மெய்யறிவுக்கு முரணான, மனித நேயத்துக்கு எதிரான சமய சட்டங்களைக் கொண்டு பிறரை அடக்கி அடிமைகளாக நடத்திய காலம் நிவர்த்தி அடைய வேண்டும் என்பதே இக்கட்டுரையின் நோக்கம் என்று தெரிகின்றது. மேலும் தமிழர்களுக்குரிய சமயத்தை நிலைநிறுத்த வேண்டியதின் கட்டாயத்தை உணர்த்தும் கட்டுரை. இதற்காக பிரம்மஹஷ்தி குற்றம் ஏற்படும் என்ற பூச்சாண்டி எவ்வளவு நாளைக்குத்தான் செல்லுபடியாகும். அது காலாவதி ஆகிவிட்டது. நாங்களும் இறைவனை ஒவ்வொரு நாளும் இடைவிடாது வணங்குபர்வர்களே. அந்த சிவபிரானே எங்களை காத்தருள்வாராக, சிவ, சிவ.
அரசாங்க வூழியரை தாக்கி பாருங்கள்,எல்லா அரசாங்க ஏஜன்சிகளும் அவறுக்கு எதிராக செயல்படும்.6ல் 1 விலகிணல் மீதி 5ம் விளகிவிடும் அறிவீா்.நீதி,ஞாயம்,தர்மம் இவைகளை யாா் வேணுமானாலும் எடுத்தெரிந்து பேசலாம் ஆனால் தன்னையோ தன் பாசத்துக்குறியவரையோ தண்டித்துவிட்டால் பின் சைதான் வுதவியை நாடி நாளடைவில் தானே வுலகால் வெறுக்கபடுவீர் அறிக.இறை நீதியை காக்க அங்கேயும் காவலர் வுன்டு மரவாதீர்.நாராயன சித்தம்.
யாம் எழுதுவது அனுமானமில்லை அனுபவமே.மெடிடேஷன் ஈஸ் கொண்ஸர்டேஷன்,வித்தாவுட் கொன்ஸர்டேஷன் நோ மெடிடேஷன்.நாராயன சித்தம்.
இந்த கட்டுரையை முனைவர் அவர்கள் வரைவதற்கு முன்னர் ஒன்றல்ல குறைந்தது பத்து முறையாவது சிந்தித்துப் பார்த்து அதன் விளைவுகளையும் ஆராய்ந்து பார்த்து விட்டுதான் எழுதி இருப்பார். காரணம், பன்னெடுங்காலமாக ஒரு முறையில் ஊறிப்போன மனிதர்களை மடைமாற்றம் செய்வது என்பது இலகுவானா காரியமல்ல என்பதை அவர் அறிந்தே வைத்திருக்க வேண்டும். ஆயினும், நல்லது ஒன்றைச் சொல்வதர்க்கு முன், அதற்க்கு வரக்கூடிய எதிர்ப்பையும் கூட்டிக் கழித்தே முன் அடி எடுத்து வைக்க வேண்டும். 1,500 வருடங்களுக்கு முன் “animisme” எனப்படும் இயற்கை வழிபாட்டில் வாழ்ந்தவர்களே மெக்கா, மதினாவில் வாழ்ந்த அரேபிய மக்கள். அவர்களை இஸ்லாம் எனப்படும் ஒரு முறைபடுத்தப்பட்ட மத நெறியில் நிற்க வைக்கவில்லையா நபிகள் நாயகம் அவர்கள். அவர் படாத இன்னல்களா? எதையும் தாங்கும் இதயம் கொண்ட தமிழர்கள் தங்களை ஒரு நெறிப்படுத்திக் கொள்ள என்னென்ன இன்னல்கள் வந்தாலும், எத்துனை ஆரிய எதிர்ப்புக்கள் வந்தாலும், எதிர்கொள்ள வேண்டிய காலகட்டத்தில் தயாராகவே உள்ளோம். காய்த்த மரம் அடிபடுவதில் ஆச்சரியம் ஒன்றும் இல்லையே!
kayee மற்றும் theni இருவரும் மொக்க ரம்பம் வைத்துகொண்டு
அறுக்கிறார்கள். கடவுள் ஆணா,பெண்ணா என்று விடை அய்யாவுக்குதெரியும். அவருக்கு தெரியும் என்று எனக்கும் தெரியும்,சமயஅறிஞரான அவருக்கு தெரியாமலா இருக்கும்,சொல்லவும் முடியாது,சொல்லவும் கூடாது என்பது விதி. இனிமேல் நான் தொடர மாட்டேன் அய்யா.இங்கு மன்னிப்பு கேட்க ஒன்றும் கிடையாது.
முனைவரை யாம் குறைசொல்லவில்லை,ஆனால் நீர் கூறுவதுபோல் யாரும் வெல்லகூடாதென்பதற்கு மறைப்பதை மறைத்து எழுத பெரியவர் எண்ணியிருக்க மாட்டார் சிலரைப்போல.நடுநிலை கொள்ளாதது என் வருத்தம்,பிறரால் தான் கேட்டோம் என்று பிறர்மீது பழி சுமத்தி தன் குறையை மறைப்பது,யாவரும் யெற்றுகொள்ளமுடியாத பழி.யாம் பலமுறை வாசித்து பின் எழுதியும் பார்த்து பின் வுணர்ந்து பதில் எழுதினோம் வுனர்க,நாராயண சித்தம் சொல்க.
பல போதனை,பல பயிற்சி,பல சோதனை,தியாகங்கள் செய்து பெறவேண்டிய விசியத்தை செம்பருத்தியில் மட்டும் வாசித்து தெரிந்து கொள்ள நினைப்பது சாத்தியமில்லை தோழர்கலே.கிடைக்கும் ஆனா கிடைக்காது.நாராயன சித்தம்.
ஆசாமி & (Kayee) நீங்கள் இருவரும் இங்கு கூறும் கருத்துக்கள் உங்கள் சுய சிந்தனை மூலமாக இருந்தாலும் நீங்க நமது மதத்தை முறையாக கற்று பேசுவதாக தெரியவில்லை. அறையும் குறையும் தெரிந்தவந்தான் இப்படி குதர்க்கமான கருத்துக்கள் முன்வெயபான். கொஞ்சம் படித்து தெரிந்து பேசுங்கள். சும்மா நினைச்சதை பேசாதீர்கள்!!!
நெருப்பு அவர்களே ! நான் தண்ணீர்,ஊற்றினால் அணைந்து
விடுவீர்கள். நமது மதம் என்கிறீர் வெட்கமாக இல்லையா ?
அறிவு மழுங்கிய மதம் தான் …. மதம். முன்னுக்கு பின் முரணாக
பாடம் போதிப்பது,கேட்டால் எரிந்து விழுவது. எப்படி தமிழன்
உருப்படுவான் ? எனக்கு உன்
அப்பனால் கூட மதபோதனை ஏற்ற முடியாது.
வாதத்தால் வெற்றி தோல்வி காணலாமே தவிர மெய்ம்மையைக் காணமுடியாது! மொழி காலத்திற்கு உட்பட்டது! இறைமையோ (அதற்கு வேறு என்ன பெயரிட்டாலும்) காலத்தில் படாதது! மெய்ம்மை தெரிந்துகொள்ளவோ, அறிந்துகொள்ளவோ, புரிந்தகொள்ளவோ கூடியதன்று. வள்ளுவர் கூற்றுப்படி மெய்ம்மை என்பது காணப்பட வேண்டியது! அறிவின் தெளிவிற்கு அன்புகூர்ந்து ஜெ. கிருஷ்ணமூர்த்தி அவர்களின் நூல்களைப் படிக்கவும்!
சமய அறிவு வேண்டுவதும், வேண்டாம் என்பதும் அவரவர் ஊழ்வினைப் பயன். மெய்யறிவு வேண்டும் என நினைப்போர் அதனை ஒரு ஞான குருவிடமோ அல்லது கற்றறிந்த சமய ஆசிரியரிடமோ கற்றுக் கொள்வது அவசியம். இது இந்தியர்களுக்கு மட்டும் அல்ல வேறு எந்த இனத்தவருக்கும் தகும். மலேசிய வாழ் இந்தியர்களுக்கு, குறிப்பாக தென் இந்தியர்களுக்கு மெய்யறிவைப் பெற வசதி வாய்ப்புக்கள் இந்நாட்டில் மிகவும் குறைவு. இவ்விடையத்தில் ஆலயங்கள் சமயப் பணியைச் செய்யாமல் சமய வியாபாரத்திலேயே குறிக்கோளாக இருப்பதினால், நம் சமூகத்தினருக்கு பன்னெண்டுங்க்காலமாக தேவையான சமய அறிவு சென்று சேரவில்லை. இதற்க்கு நம் முன்னோரும் நாமுமே காரணம். இந்நாள் வரை நம்மில் பலர் முறையான சமய அறிவைப் பெறவில்லை மாறாக சமூக மூட பழக்க வழக்கங்களை சமயத்துடன் இணைத்து சமயத்தை உருப்படி இல்லாமல் ஆக்கி விட்டோம். இந்த வினையை நிவர்த்திச் செய்ய பெரும் பாடு பட வேண்டியுள்ளது. அதற்காகவே இந்நாட்டில் சமயத்தை ஒரு நெறிபடுத்த தற்சமயம் பலர் உருவாகிக் கொண்டிருக்கின்றனர். அதற்க்கு அறிவார்ந்த தமிழர்களின் ஒத்துழைப்பு மிக அவசியம். தொடரும்.
அறிவு மழுங்கிய மதம் என்று எந்த மதத்தை ஆசாமி கூறினாரோ எமக்குத் தெரியவில்லை. தங்களுக்கு தேவை பகுத்தறிவிற்கு ஏற்ற ஒரு சமயம். தர்கரீதியின் அடிப்படையில் தோன்றிய இறைவனைப் பற்றிய சைவ சித்தாந்த நெறிகள் (கோட்பாடுகள்) தங்களின் தேவையைப் பூர்த்தி செய்யும் என்பதில் எனக்கு சிறிதளவும் ஐயமில்லை. அதற்குதான் இயன்ற வரையில் தமிழ் பள்ளிகளில் சைவ சமய போதனையை புகட்ட வேண்டும் என்று சொன்னதற்கு தாங்கள் சமயத்தை ஆலயத்தில் வைத்துக் கொள்ளுங்கள் பள்ளியில் வேண்டாம் என்றீர்கள். ஆலயத்தில் தங்களுக்கு கிடைப்பது மூன்று வெள்ளிக்கு ஒரு தேங்காய் அருச்சனை அல்லது இரண்டும் வெள்ளிக்கு ஒரு பழ அருச்சனை. இதை தவிர்த்து தாங்கள் நம் ஆலயங்களில் கற்றுக் கொண்ட சமய அறிவுதான் என்ன?. ஆகவே சமய அறிவு பெற நமக்கு மாற்று வழிகள் தேவைப் படுகின்றன என்பதனை அறிந்து செயல் படுவோமாக. தொடரும்.
கடவுள் மனிதனைப் படைத்தானா, மனிதன் கடவுளைப் படைத்தானா? என்று செம்பருத்தி மையத்திலேயே பலமுறை வாசகர்கள் கேள்விக்கணையாக வைப்பதை பார்த்திருக்கின்றேன். இவ்வாறான கேள்விகளுக்கு சமயத்துறையில் உள்ளவர் ஒரு பதிலும், அறிவியல் துறையில் உள்ளவர் வேற்றொரு பதிலும், மொழியியல் துறையில் உள்ளவர் மற்றொருமொரு பதிலும் தரக்கூடும். ஆகையால் நான் விரும்பிய பதிலை நீங்கள் தரவில்லையே என்று ஆதங்கப் பட்டால் என்னே என்பது!. கொஞ்சம் முயற்சி செய்து தங்களுக்கு ஏற்படும் சந்தேகங்களுக்கு தகுந்த ஆசாமியிடம் சென்று பதிலைப் பெற முயற்ச்சியுங்கள். மருத்துவரிடம் கேட்க வேண்டிய கேள்வியை அவரிடம் கேளுங்கள். வழக்கறிஞரிடம் கேட்க வேண்டிய கேள்வியை அவரிடம் கேளுங்கள். பால் மரம் சீவும் தொழிலைப் பற்றி பால் மரத் தொழிலாளியிடம் கேளுங்கள் சரியான் பதில் கிடைக்கும். இந்த முறைமையை மாற்றி “ஈக்கு பூக்கா” கேள்விக் கணையைத் தொடுத்தால் அப்புறம் “குண்டக்க மண்டக்க” வாகத்தான் பதில் வரும். கோபப்பட்டு என்ன பயன்?. .
இனி வரும் காலங்களில் சமய அறிவை பெற மாற்று வழிகள் இணையத்தை ஒட்டியே நிலை பெரும். அவ்வகையில் சைவ சமய கோட்பாடுகளை அறிய விரும்புவோர் கீழ்காணும் இணையத்தளங்களைக் கொண்டு பயனடையலாம். (1) thevaaram. org 2) sivathamiloan.blogspot.com (3) saivaperavai.org. இப்பட்டியல் எதிர்காலத்தில் மேலும் கூட்டப்படும்.
,அறிவியல்,வரலாறு நன்னெறி நூல்கல் படித்தால் எதோ கொஞ்சம் அறிவாவது வளரும்.
கல்வி/அறிவு வேறு-வேறு.கல்வி வாழ்வுக்கு ஏற்ற மருந்து,கடவுள் ஆணா பெண்ணா இதன் பதில் கல்வியை அடிப்படையாய் அமைந்தவை.அறிவு,ஞான மாா்கத்தை போதிக்கின்றது.ஒரு மனிதன் இல்லறத்தை நடத்தும்போது அவனுக்கு கல்வி தேவைபடுகிறது,இல்லர முடிவில் அவனுக்கு அறிவு அதாவது ஞானம் தோன்றுகிறது.கடவுள் ஆணா,பெண்ணா என்ற கேள்விக்கு கல்வி தேவைபடுகிறது இங்கே ஞானம் தேவையில்லை.வாழும் காலத்தில் மனிதனிடம் பேசும்போது கல்வி மூலமே பேசமுடியும்,கல்வி அற்றவர் பிணத்துக்கு சமம்.கல்வி,கல்லாமை,கற்றோா் இயலபு பற்றி வளக்கியுல்லாா் ஒரு பெரியவா்,மற்றும் கேள்வி என்ற தலைப்பயும் விளக்கியுள்ளாா்.கடல்:சிலர் தூரமிறுந்து பாா்திருப்பா்,சிலர் கால் நினைத்திருபர்,சிலர் நீந்தியிறுப்பர்,சிலர் பிரயாணம் செய்திருப்பர்,சிலர் கடலில் தொழில் செய்திருப்பர்,சிலர் ஆழ் கடல் சென்று முத்தெடுத்திருப்பர் இவர்கள் அனைவரும் கடலை பாா்தவர்கள்.அதுபோல் தேவை படுவோா்க்கு தேவையானவற்றை விளக்கம் தருவது கற்றவர்க்கு சிறப்பு,பகவான் ஆணா,பெண்ணா என்றால் என் பதில் ஆண், காரணம் பகவான் ஆண்பாலை குறிக்கிறது நாராயண சித்தம்.
கல்வி அறிவு உலகியல் இன்பத்தை இம்மையில் நுகரத் தேவைப்படும். இது நிரந்தரமற்றது. மெய்யியல் அறிவு, உயிர் இம்மையிலும் மறுமையிலும் பேரின்பத்தை அடைவதற்குத் தேவைப் படும். இது நிரந்தரமானது. யார் யாருக்கு எது தேவையோ, எது கொடுத்து வைத்திருக்கின்றதோ அதைத்தானே பெற முடியும். கொஞ்சம் மாறித்தான் பாருங்களேன். இங்கிட்டு என்ன இருக்கிறது, இதிலிருந்து என்ன பெற முடியும்ன்னு ஆராய்ச்சி செய்துதான் பாருங்களேன். ஆசாமியின் கருத்துக்கு 30-3-2014 ஞாயிறு நன்பனில் வெளிவந்துள்ள “திருமுறை” பகுதி 1 என்ற தலைப்பில் ஐயா ந. தர்மலிங்கம் அவர்கள் வரைந்துள்ள கட்டுரை பதில் கொடுக்கும் கொஞ்சம் படித்துதான் பாருங்களேன். சைவ சமய நெறியை விளங்கிக் கொள்ள. சைவ சமய மேம்பாட்டில் மேலும் ஒரு இணையத்தளம் (1) saivanarpani.org
எனக்கு அதெல்லாம் படிக்க ஏது நேரம் ? நான் கேட்ட கேள்வி
கடவுள்,ஆணா பெண்ணா என்பதுதான், பழையபடி அதை படி,இதை படி
என்று சொல்லவேண்டாம். தேனீ அவர்களே !
ஆறிவு மலிந்கிய சமயம் என்ற குற்றச்சாட்டு இருக்கலாம். கடவுல் ஆணா, பெண்ணா என்ற கேள்விக்கான பதிலை புரிந்துகொள்ள முடியாதவர்களால் எப்படி சமயம் அறிவுபுர்வமனது என்று அரிதுகொல முடியும்? இறைவனை மனிதனுக்கு நிகராக பார்பவர்களின் அறிவு நிலைக்கு சமய அறிவு எததட்டில் ஆச்சரியம் ஒன்றும் இல்லை.
ஒரு தடவை நண்பர் சொல்லி நான் சுவைத்த ஒரு கதை. விவேகாணந்தர் அவர்கள் ஒரு தடவை ஆங்கிலேயே மன்னனை அவனுடைய அரன்மனையில் உரையாடிக்கொண்டிருக்கும் போது, பேச்சுக்கிடையில் மன்னன், அது என்ன களிமண்ணாலும், கல்லாலும் செய்த பொம்மையை கடவுளாக கும்பிடுகிறீர்கள். அதில் என்ன சக்தியா இருக்கிறது? ஏன் இந்த மூடத்தனம் என்றாரம். இதை கேட்ட விவேகாணந்தர் மன்னரிடம் ஒரு கோரிக்கை வைத்தாராம். அதாவது குறிப்பிட்ட அரண்மனை சேவகர்கள் சிலர், என் வார்த்தைக்கு கீழ் படிய மன்னர் அவர்களுக்கு உத்தரவு இட வேண்டும் என்பதே. மன்னர் உத்தரவு கொடுத்ததும். அரண்மனை ஓவியரை வரவழைத்து மன்னரை போன்ற உருவ படம் வரைய சொன்னாராம். படம் புர்த்தியானவுடன் மன்னரை பார்த்து, இந்த படம் உங்களைப் போல் இருக்கிறது ஆகையால் நீங்கள் வெளிபடுத்தும் உணர்ச்சிகளை அதாவது சிரிப்பு, சோகம், கோபம், துன்பம் மற்றும் பல வெளிபடுத்துமா? என்று கேட்டாராம். ஏளனமாக சிரித்துக் கொண்டே அதெப்படி முடியும் அது சாதாரண படமாய்ற்றே என்றாராம். சரி இந்த படத்தின் மீது என் கத்தியால் கீறுவேன் உங்களுக்கு வலிக்குமா? இந்த படத்தினை கத்தியால் குத்துவேன் உங்களுக்கு வலிக்குமா? என்றாராம். எல்லாவற்றிகும் இல்லை2 என்று பதில் சொல்லி விட்டு ஏளனமாக சிரித்தாராம். உடனே படத்தை தரையில் கிடத்தி அரண்மனை ஊழியர்கள் சிலரை அழைத்து, அவர்களுடைய சப்பாத்து காலால் படத்தை மிதிக்க சொன்னாராம். மற்றும் சிலரை அப்படத்தின் மேல் காரி உமிழ சொன்னாராம். இச் சம்பவங்களுக்கு பிறகு பெருஞ் சினம் கொண்டு துடிதுடித்துப்போன மன்னரை பார்த்து, எதற்காக ஆத்திரப்படுகிறீர்கள் உங்களுக்கும் இந்த படத்திற்கும் எள்ளலவு சிறிது கூட உணர்ச்சி என்ற சம்பந்தம் கிடையாது. அப்படி இருக்க எதற்காக கோபப்படுகிறீர்கள் என்று கேட்டாராம். சிந்தித்து பார்த்து தன் தவறை உணர்ந்து கொண்ட மன்னர், தானும் தன்னை சார்ந்தவர்களும் இனி சிலை வழிபாடு செய்பவர்களை இகழக்கூடாது என்று உத்தரவு போட்டாராம்.
————,தெற்கில் யம(எமன்) திசை சுடுகாடு மட்டும் இருக்கும் அங்கே பிணம் தான் இருக்கும். இது பிராமணர்கள் தமிழர்களிடையே குழப்பத்தை உண்டுபண்னுவதற்கு ஏற்படுத்திய தந்திரமான வார்த்தை இது. தமிழர்கள் சிவ பெருமானை (விவெகானந்தர் கதை) வணங்குவதால். இவர்கள் நம்மை பிளவு படுத்த கையாண்ட நரி தந்திரமே அது. சிவனை உருவத்திற்கும், அணு எல்லாவற்றையும் இழுத்து பிடிப்பதற்கு சக்தி என்றும், அதாவது உடலை சிவனுக்கும் உயிரை சக்திக்கும் ஒப்பிடுவது. உடலில் உயிர் போய்விட்டால், சக்தி போய்விட்டால், சத்து போய்விட்டால், செத்து போய்விட்டால் அந்த உருவம் பிணம். பிணம் என்பதை எடுத்து சொல்லி நம்மை குழப்புகின்றனர். நாம் குழப்பமடையாமல் இருக்க நாம்தான் தெளிவாய் இருக்க வேண்டும்.
—————-தமிழில் அர்ச்சனை, மன்னர்கள் காலம் தொட்டு இன்று வரை இந்த குழப்பம் நீடித்துக் கொண்டே வருகிறது. நம்முடைய முன்னோர்கள் பலர் மன்னரின் சபை சென்று, சமசுகிருதத்திற்கு ஈடானது தமிழ் என்று சான்றுகளுடன் வாதிட்டதால். தமிழை தவிர்க்க முடியாத காரணத்தால், கருவறைக்கு உள் சமசுகிருதமும், கருவறைக்கு வெளியே தமிழ் என்றும் முடிவெடுத்தனர். அதையும் பொருத்துக் கொள்ள முடியாத பிராமணர்கள், தமிழில் மந்திரம் பிணத்திற்கு பாடுவது என்று சொல்லி குழப்பி விட்டனர். இன்று நாம் தமிழில் பாலர் பள்ளி என்று கோரிக்கை வைக்கின்றோம். காரணம் ஒருவன் தாய் மொழியில் கல்வி கற்றாலே உண்மையும், உணர்வும் தெளிவாக கிடைக்கும் என்பதால். அது போல் தமிழில் அர்ச்சனை செய்தால் பக்தர்களுக்கு பரிபுரண மன நிம்மதியும், தெளிவான சிந்தனையும், தான் என்ற அகங்காரமும் குறையும் என்பதே என்னுடைய தாழ்மையான வேண்டுகோள்.
ஆசாமி அவர்களே, கடவுள் ஆணாக இருந்தால், அவருக்கு உங்கள் விட்டு பெண்ணை திருமணம் செய்துவைகபோறேர்களா? அல்லது பெண்ணாக இருந்தால் அவருக்கு மாப்பிள்ளை பர்கபோரிர்களா?
அகரம்,எழுத்துக்களுக்கு முதன்மை;ஆதிபகவன்,உலகில் வாழும் உயிர்களுக்கு முதன்மை என்கிறாா் பெரியவர்.அ’காரம் எப்படி எழுத்துக்கெல்லாம் முதல் எழுத்தோ அதுபோல பகவான் என்பவர் மனிதனுக்கு முன் என்று கூறுகிறாா்.நாராயண சித்தம்.
இன்று சமுகத்தில் சிவா வழிபாடு இறப்புகிரியைகான வழிபாடு என்று ஆகிவிட்டது. சவ கிரியை செய்யம்போது சிவபுராணம் பாடும் ஒரு மரபு உண்டு. நாமில் பலர், சிவபுராணம் என்பதே இறப்பு வித்தில் படகூடிய பாடல் என்று எண்ணுகிறார்கள். திருமறை பதிகங்களை பாடும் அவசியம் இன்று இறப்பு விதத்தில்தான் உள்ளது. சிவத்தை உணர்த்து, நால்வர் பாடிய இத்தகைய பாடல்களை பிரேதடின் முன்பு பாடும் பாடலாய சமுகம் அடையாளம் காணுவதில் மிகவும் வருத்தம். திருமுறை பாடல்கள் ஆலயங்களில் ஒத்தபட வேண்டிய பாடல்கள். நால்வர் நவிலிர்த்து எல்லுந்த மதிற சொர்கழந்து இந்த பன்னிரு திருமுறைகள். சைவ சமயத்தின் தோத்திர நுள்ளக விளங்குகிறது இந்த 12 திருமுறை நுள்கை. இதை அனைவரும் படித்து, ஓதபழக வேண்டும். சிவாய திருசிட்ட்ரம்பலம்.
நன்றாகச் சொன்னீர்கள் உழவரே. தமிழில் தட்டுத் தடுமாறி எழுதும் சிவராஜ் அவர்களுக்கு, தொடருங்கள் தங்கள் தமிழ் மேம்பாடு அடையும். “கடவுள் ஆணா, பெண்ணா என்ற கேள்விக்கான பதிலை புரிந்துக்கொள்ள முடியாதவர்களால், எப்படி சமயம் அறிவுப்பூர்வமானது என்று அறிந்துக்கொள்ள முடியும்?” சரியான கேள்விதான். இதை வெட்டிப் பேச ஆசாமி வருவாரா?.
எல்லா உயிர்களுக்கும் ஆதி முலனயகனாக நிற்பவன் இறைவன். திருவள்ளுவர் அவரது முதல் 10 குரலில் இறைவனை பற்றி குரிபிதுளர். பகவன் என்ற சொல் இறைவனை குறிக்க கூடிய சொல். வள்ளுவர் முன்னோர்கல்லை போற்றுகிறாறற் என்பது நச்திகர்களின் கற்றுதகவும் சங்கியர்களின் கருத்தாகவும் விளங்குகிறது. தமிழும் சைவமும் இரண்டு கண்கள். சைவத்தையும் தமிழையும் பிரிக்க முடியாது. திருவள்ளுவர் வாழ்த்த களம் செம்மையான தமிழும் சைவமும் தலைதுகிருந்த காலம். அக்காலத்தில் வாழ்த்த திருவள்ளுவர் எப்படி நாஸ்திக கருதும் சாங்கிய கருதும் சொல்லமுடியும்? திருவள்ளுவர் தனது ஒன்பதாவது குரலில் எண்குணத்தான் என்று இறைவனை கூறுகிறார். சைவ சித்தாந்ததில் எதுகுனம் உண்டு என்று குரிபிடபந்துளது.
இப்போதான் ஆண் ஆணையும்,பெண் பெண்ணையும் மணக்கின்றனரே,முடிந்தால் அடாவடி போக்கை கலைந்து நல்ல கருத்தை பேசினால் பலறும் பயனடைவர்.தெரிந்தால் பதில் கூறும் தெரியவில்லையேல் அமைதியாக கவணிக்கவும்.பெற்ற கல்வி அதன் அடிப்படையில் ஆதாரத்துடன் சபையில் மற்றவர்க்கு எழிய முறையில் புறிய வைப்பவரே கல்வி பெற்றவரின் அடையாலம்.எந்த கறுத்தாயினும் முன்னோர்கள் காட்டிய கடைபிடித்த கறுத்தை விளக்குவதே சரி என்று யாம் கறுதுகிரோம்.ஆலுக்கு ஒரு கறுத்தை கூரி இந்து மக்களை குழப்பதில் தல்லாதீர்.நாராயண சித்தம்.
ஆளுக்கு ஆள் ஒரு கருத்தை லோளுவதனால் மக்கள் குழப்பமடைகிறார்கள். மெய் அறிவான சித்தாந்த அறிவை பலர் பலமாதிரி கருது சொல்லி சமுதாயத்தை குழப்பிவித்தார்கள். இன்று மக்களும் குழம்பி பொய் சமய அறிவு இல்லாமல் மதமாரி செல்கிறார்கள். அதனால், சமுகத்தை சரியான பாதையில் கொண்டு செல்வதற்கு முனைவர் அவர்களின் சேவை இந்த நாடுக்கு தேவை.
இந்த கட்டுரையில் எழுதப்பட்ட விஷயங்கள் உங்களுக்கும் உங்கள் ஆதரவாளர்களுக்கும் ‘சரியான பார்வை’யாக இருக்கலாம். ஆனால் என்னை பொறுத்தவரையில் இந்த வேதங்கள், உலகத்தில் வாழும் ஒவ்வொரு மனிதனுக்கும் இறைவனால் கொடுக்கப்பட்ட ஒரு வரப்பிரசாதம். நீங்கள் சொன்னதுபோல் எந்த ஒரு பிராமனனாலும் அல்லது பாபனராலும் கொண்டுவரப்பட்டது அல்ல. வேள்வி, வருநாசரமம், சமஸ்கிருதம் ஆகியவற்றை பிராமணிய வாழ்கை முறையைக்குரிப்பது அல்ல. வருணாசிரமம் என்பது பிறப்பால் வரும் சாதியைப்போற்றுவது அல்ல.
நான் ஒரு தமிழன். அதனால் பெருமை அடைகிறேன். அதே நேரத்தில் நான் ஒரு ஹிந்து என்பதனாலும் நான் மிகப் பெருமைஅடைகிறேன். நான் அவ்வப்போது வேத நூலை தமிழில் புரட்டிப்பாற்பதுண்டு. அது எனக்கு அறிவும், ஆற்றலும், ஆனந்தத்தையும் கொடுத்தது. எந்த இடத்திலும் பிராமணர்களை போற்றியோ அல்லது மற்றவர்களை தாழ்த்தியோ கூரப்படவில்லை. பொதுவாக எடுத்துக்கொண்டால், அது ஒரு மனிதனுக்கும் அவனை சூழ்ந்திருக்கும் சமுதாயத்திற்கும் தேவைப்படும் விஷயங்களைப்பற்றி கூரப்பட்டிருக்கிரது.
வேதம், உபநிஷத், பகவத் கீதை ஆகிய இம்மூன்றும் மனிதனுக்கு இறைவனால் கொடுக்கப்பட்டது. ஒரு மனிதன் அன்றாட வாழ்க்கைக்கு நடைமுரைப்படுதக்கூடிய விஷயங்களை கற்பிக்கிறது
பகவத் கீதை. கீதை எத்தனையோ ஞானிகளை உருவாக்கிய
பொக்கிஷம் அது. உதாரனத்திற்க்கு மகாத்மா காந்தி, ரபிந்த்ரநாத் தாகூர், டாக்டர் ராதக்ரிஷ்ணன், பரமஹம்ச யோகானந்த, ரமணா மகாரிஷி, பாரதியார் ஆகியோர் அடங்குவர். மூட நம்பிக்கையில் மூழ்கியிருக்கும் தமிழர்களை பகவத் கீதையை படித்து தெளிவுப்பெற சொல்லியிருக்கிறார் பாரதியார். ஆனால் தமிழர்கள்தான் வேதம், உபநிஷத், கீதை ஆகியவைகளை படிப்பதில்லை. ஏன், குறிப்பாக நீங்களும் கீதை அல்லது வேதங்களையோ படித்திருக்க மாட்டீர்கள். வாருங்கள் கீதையை எல்லோரும் படிப்போம், தெழிவு பெறுவோம். அது ஒரு மனிதனை உயர்ந்த உணர்வு நிலைக்கு இட்டுச்செல்லும். காந்தியடிகளின் வழிகாட்டியே கீதைதானே.
என்னை மன்னிக்கவும். என் எழுத்தில் நிறைய பிழைகள் இருக்கும். நான் தமிழ் பள்ளிக்குசென்றதில்லை. தமிழ் சொந்தமாக படித்ததுதான்.
தமிழர் என்று சொல்லும்பொழுது, தமிழர்களுக்கு எம்பெருமான் சிவபெருமானால் வழங்கப்பட்ட சைவ ஆகமங்களைப் கற்று அறிந்திருக்கவேண்டும். இதுவே தமிழர்களின் வேத நூல். திருமுறைகளைப் பொருள் உணர்ந்து கற்று அதன் வழி சிவநெறியில் நின்றிருக்க வேண்டும். மெய்கண்ட சாத்திர நூல்களை கற்று உணர்ந்து இறைவன் சிவபெருமான் உயிர்களுக்கு அன்பில்பால் ஆற்றும் ஐந்தொழிலின் மேன்மையை அறிந்து மென்மேலும் பிறப்பெடுத்து சிற்றின்ப துன்பங்களில் கட்டுண்டு அல்லல் படாமல் பிறவாக்கடல் நீந்த தெரிந்திருக்க வேண்டும். இறைவன் சிவபெருமானின் பேரின்பத்தில் உயிர் சேர்ந்து இருக்க வேண்டிய முத்தி நிலையின் தத்துவத்தை உணர்ந்திருக்க வேண்டும். நால்வர் பெருமக்களுடன் மீதமுள்ள நாயன்மார்களின் வாழ்க்கை நெறி உணர்த்தும் தத்துவத்தை அறிந்து அதன் வழியில் நம் சமூக வாழ்வியலை முறைபடுத்தி வாழ்ந்திருக்க வேண்டும். இதை எல்லாம் அறியாமல், உணராமல் அவ் அற வழியில் நிற்காமல் நான் தமிழன் என்பதில் என்ன பெருமையோ? தொடரும்.
யாம் இப்பகுதியில் கருத்து எழுதுவது முனைவரின் ஆதரவாளர் என்று வெளிப்படுத்த அல்ல மாறாக சைவ சித்தாந்தத்தை முறையாக கற்றறிந்து அதன் வழி நிற்க வேண்டும் என்ற வேட்கையில் சித்தாந்தத்தில் ஒரு காத தூரம் கடந்துள்ளேன். இன்னும் கடக்க வேண்டிய தூரம் மிகவே. ஆகவே, சைவ சமய ஆதரவாளன் என்று சொன்னால் சரியே. வேதாந்தம், சித்தாந்தம் இவ்விரு இறை தத்துவ மரபுக்குள் வெவ்வேறு நிலைப்பாடுகளைக் காண முடியும். சித்தாந்தம் கற்று, உபநிடதங்களையும் (வேதாந்தம்) கற்று வேறுபாடுகளை (Comparative Studies) உணரும் முயற்ச்சியில் இருகின்றேன். ஆகையால் முனைவரின் கட்டுரைக்கு கருத்து எழுத எமக்கு சிறிதளவேனும் தகுதி உள்ளது. அதன் அடிப்படையிலேயே இங்கு யாம் கருத்து தெரிவித்து வருகின்றோம். குசேலன் அறிவாராக. மற்றவை நாளை.
நிலையாமை,துறவு,மெய்யுணர்தல்(அவாஅறுத்தல்).குடும்பத்தை சரியாக வழிநடத்தி எப்போது நிலையாமை/நிலைப்பது வுனறும் போது துறவு ஏற்படுகிறது,பின் ஆத்ம தரிசனம்.ஆனால் வாசண மலம் எனும் முன்னே பழகிய பழைய பழக்கம் சந்தா்பத்தில் திடீரென்று தலையை காட்டும் அதை அறுத்தெரிய வேண்டும்,விட்டதால் தான் பிரேமநந்தா வுருவானாா் அறிக.அவாவை அறுக்க வேண்டும்.நாராயண சித்தம்.
திரு.குசேலன்,நன்றிகள் பல நாராயண சித்தம்.
வைணவன் உண்டு,சைவன் உண்டு, கவுமாரன் உண்டு, பவுத்தன் உண்டு,சமணன் உண்டு,ஆனால் இந்து என்று எவனும் இல்லை. அதே போல்தான் தெலுங்கன் உண்டு,கன்னடன் உண்டு,மலையாளி உண்டு, தமிழன் உண்டு ,ஆனால் திராவிடன் என்று எவனும் இல்லை. இதிலிருந்தே புரிந்து கொள்ளலம் இந்தியத்தின். ஆரியத்தின் திணிப்புதான் திராவிடம் என்று.. எல்ல்லாம் மாய சாயா …கபாளிஷ்வர சிட்டம் .