-முனைவர் ஆறு. நாகப்பன், மார்ச் 18, 2014
இந்து சமயம் அல்லது சைவ சமயம் எதுவாக இருந்தாலும் தமிழர் சமயம் குறித்த சரியான பார்வை இக்காலம் வரை எங்கும் பார்க்கப்படவில்லை. சமய விளிம்புகளின் இரு கோடிகள் மட்டுமே இது வரை பேசப்பட்டுள்ளன. முரட்டுத் தனமான நம்பிக்கைகள் ஒரு பக்கமும் அதே முரட்டுத்தனமான மறுப்புகள் ஒரு பக்கமும் காணப்பட்டன. காட்டப்பட்டன.
ஏதோ சில நூல்களின் அடிப்படையில் கட்டமைக்கப்பட்ட நம்பிக்கைகளே சமயங்களுக்கான பொதுத் தளம் என்பது பிழையல்ல. ஆனால் இது எல்லாச் சமயங்களுக்கும் பொருந்தாது. பலவாகிய இந்திய சமயங்கள் அனைத்தையும் ஆராய்வது இந்த இடத்தில் வேண்டாம் என்பதால் இரண்டே இரண்டு சிந்தனைக் கட்டுமானங்களை மட்டும் தேவைப்பட்ட அளவுக்கு பார்த்துக் கொண்டால் சமயம் குறித்த சரியான பார்வை ஒன்று கிடைக்கும் என்பது என் கருத்து.
முதலாவது இந்து சமயம் என்ற பொதுப் பெயரில் வைதீகம் விரித்திருக்கும் அகன்ற வலை. இருக்கு முதலிய வேதங்களின் அடிப்படையில் அமைந்த வைதீகப் பண்பாடு வேள்வி, வருணாசிரமம், சமற்கிருதம் ஆகியவற்றை உள்ளடக்கிய பிராமணீய வாழ்க்கை முறையைக் குறிக்கிறது. பிறப்பால் வரும் சாதிமையைப் போற்றுவது வருணாசிரமம் . இதுவே பிராமணீயத்தின் அடித்தளம்.
பிராமணீயம் இந்தியப் பெருநிலம் முழுவதும் பரவியது. உலகியல் செல்வம் அனைத்தும் பெறலாம் என்னும் வேட்கையை முன்னிறுத்தியதால் வேத வேள்வி தமிழ் அரசர்களையும் செல்வந்தர்களையும் விரைந்து கவர்ந்தது. இதன் வழித் தமிழ் நாட்டு அரண்மனைகளின் செங்கோல்களை வைதீகம் கைப்பற்றியது.
மற்றொன்று தமிழர் உருவாக்கிய மெய்ப்பொருள் சிந்தனை. மரபு சார் ஊர்த்தெய்வங்கள் பலவும் நம்பிக்கைத் தளங்களில் ஊன்றி நின்றன. குல தெய்வம் அல்லது இல்லுறை தெய்வம், காவல் தெய்வங்கள், வீரர்களுக்கான நடுகல் வழிபாடு போன்றவை தமிழரின் மரபு சார் மதங்கள் ஆகும். தொல்காப்பியம் குறிக்கும் குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல், பாலை என்னும் ஐவகை நிலத்திணைகளுக்கும் முறையே முருகன், திருமால், இந்திரன், வருணன், கொற்றவை ஆகியவை தமிழரின் தொன்மைத் தெய்வங்கள். இவற்றுள் இந்திரன், வருணன் என்பவை வைதீகத்தின் சாயல் பெற்றுத் திரிந்த பெயர்கள்.
சங்க காலத்தில் மரபு சார் சிறுதெய்வங்கள் பலவும் வழக்கில் இருந்த போது சிவபெருமான் ‘பிறவா யாக்கை பெரியோன்’ என இளங்கோவடிகளால் குறிப்பிடப்பெற்றார். சிவபெருமானின் தோற்றப் பொலிவைக் குறிக்கும் தொடர்கள் பலவும் சங்க இலக்கியங்களில் காணப்படுகின்றன.
நம்பிக்கை சார்ந்த சிறுதெய்வங்களின் வழிபாடு மலிந்திருந்த காலத்தில் அறிவு சார்ந்த சிவ வழிபாடு சான்றோர் சிந்தனையில் வளர்ந்து சித்தாந்தம் என்ற மெய்யறிவுத் துறையாக அமைந்தது.
கடவுளுக்குக் கடவுள் தேவையில்லை, சடப் பொருள்களுக்கு அறிவும் உணர்வும் இன்மையால் அவற்றுக்கும் கடவுள் தேவையில்லை. ஆகவே சடப் பொருள்களைக் கருவி கரணங்களாகக் கொண்டு உலகைத் துய்க்கும் அறிவும் உணர்வும் உடைய உயிர் என்னும் பொருள் இருக்கத்தான் வேண்டும் என்பது உயிர் உண்மையை நிறுவும் வாதம். இல்லது தோன்றாது என்னும் வாதத்தால் உள்ளதாகிய மூலப் பொருள் ஒன்றிலிருந்தே உலகம் தோன்றியிருக்க வேண்டும் என்பது மாயையை நிறுவும் வாதம்.
உலகின் இருப்பை ஆராய்ந்து அவன், அவள், அது என்னும் அவயவப் பகுப்புடையதாய் இருக்கும் இவ்வுலகம் சடமாதலால் தானே தோன்றி, நின்று அழியாது என்றும் எல்லா உலகங்களையும் முற்றாக அழிக்கும் ஆற்றல் உள்ளவனே உலகைப் படைப்பவனாயும் உலகுக்கு ஆதியாயும் இருப்பான் என்றும் கடவுள் இருப்பைச் சைவம் நிறுவுகிறது.
உயிர், மாயை, கடவுள் தவிர வேறு இரண்டு பொருள்களும் கடவுளால் படைக்கப்படாமல் என்றும் உள்ள பொருள்களாக உள்ளன. என்றும் உள்ள உயிர்களின் இயல்பாகிய அறிவு, இச்சை, செயல் ஆகிய ஆற்றல்களை மறைத்து அவற்றுக்கு அறியாமையை ஏற்படுத்தியிருக்கும் ஆணவம் என்பது ஒன்று. ஆணவத்தை அகற்றுவதற்கு உயிர்களைச் செயல்படுத்திப் பக்குவப்படுத்தும் வினை மற்றொன்று.
அறிவு சார்ந்த இந்த வாதங்களால் உயிர், மாயை, கடவுள், ஆணவம், வினை ஆகிய பொருள்கள் தோற்றம் அழிவு இன்றி என்றும் இருப்பவை என்று கூறுவது சித்தாந்தம். கடவுளின் இருப்பைப் பதி உண்மை என்றும் கடவுளின் சிறப்பைப் பதி இலக்கணம் என்றும் சித்தாந்தம் விரித்துப் பேசியது.
என்றும் உள்ள உயிர்களுக்கு என்றும் உள்ள மாயையிலிருந்து உடல், உலகங்கள், உயிர்க்கான நுகர்ச்சிப் பொருள்களை இறைவன் படைத்துக் கொடுக்கிறான். படைத்தவற்றை உயிர்கள் நுகர்ந்து பக்குவப்படும் வரை காக்கின்றான். உயிர்கள் பிறந்தும் இறந்தும் பக்குவப்படும் வரை தன்னை மறைக்கின்றான். பிறப்பு இறப்பிலிருந்து இளைப்பாறும் பொருட்டு படைத்தவற்றை அழிக்கின்றான். பக்குவப்பட்ட உயிர்களை இடையறா இன்பத்தில் நிலைக்க அருளுகின்றான். இவ்வாறு படைத்தல், காத்தல், மறைத்தல், அழித்தல், அருளல் என்னும் ஐந்தொழிகளை உயிர்கள் பொருட்டு இறைவன் செய்தபடி இருக்கின்றான் என்பது சித்தாந்தம்.
இருபத்தெட்டு சைவ ஆகமங்களைத் தனக்கு வேதமாய்க் கொண்டது சிவனைப் போற்றும் சைவம். ஆகமங்களின் செயல்முறை நூலாக அமைவது பன்னிரு திருமுறைகள். இவ்விரண்டு நூல்களின் வழியில் அமைந்தவை பதினான்கு மெய்கண்ட சாத்திரங்கள். இவற்றுள் ஆகமம் விதி நூல், திருமுறை செயல் நூல், மெய்கண்ட சாத்திரங்கள் சைவத்தின் இலக்கண நூல்கள். மற்றோர் முறையில் கூறினால் சைவத்தின் வேதம் ஆகமம், மெய்யறிவு நூல் மெய்கண்ட சாத்திரங்கள், மெய்யுணர்வு (பத்தி) நூல் திருமுறைகள்.
சைவம் இமயம் முதல் குமரி வரை பல அடைமொழிகளைக் கொண்டு விரிந்தது. என்றாலும் தென் தமிழ் நாட்டில் நுண்ணிய தத்துவத் துறையாக செம்மைப்பட்டது. இதன் வளத்தை இந்தியச் சிறு மதங்கள் யாவும் பங்கிட்டுக் கொண்டன. கணபதியைப் போற்றும் காணாபத்தியம், முருகனைப் போற்றும் கெளமாரம், சக்தியைப் போற்றும் சாக்தம் ஆகிய மதங்கள் யாவும் முறையே சிவனின் பிள்ளைகள் என்றும் மனைவி என்றும் உறவு முறைகளால் தம் நிலையை உறுதிப்படுத்திக் கொண்டன.
உறவுமுறைகளை வலிமைப்படுத்த ஏராளமான புராணங்கள் உருவாக்கப்பட்டன. தமிழர் சமயக் கிரியைகளோடு வைதீக வேள்விக் கிரியைகள் கலந்தன. ஆரிய பிராமணர்களின் தொழில் வளம் கருதி உருவாக்கப்பட்ட கிரியைகள் அறிவுக்கு ஒவ்வா நம்பிக்கைகளை உருவாக்கின. இன்றும் உருவாக்கிக் கொண்டிருக்கின்றன.
தனிப்பெரும் சமயமான சைவம் தென்னிந்தியச் சிறு சமயங்கள் உயிர்த்து உறுதி பெற உதவிய காலத்தில் வைதீகம் சைவம் உட்பட அனைத்துச் சமயங்களையும் வாரி விழுங்கித் தன் வயிற்றில் அடக்கிக் கொண்டது. இதனால் வேதங்களை ஏற்காத சமணம், பெளத்தம் அவைதீகம் என்றும் மற்றவை அனைத்தும் வைதீகம் என்றும் ஆரிய மயப்பட்டன.
இக்காலத்தில் தமிழரின் பழஞ்சமயங்களான கிராமத்துத் தெய்வங்கள் வைதீகத்தின் கைகளுக்குத் தப்பித் தம் மரபுகளைக் காத்துக் கொண்டன. சிற்றூர்களைக் கடந்து விரிந்த சமயங்கள் வைதீகத்தில் கலந்து உரு மாறின. முருகன் சுப்ரமணியன், கந்தன் என்றும் திருமால் விஷ்ணு என்றும் மாற்றம் கண்டனர். நிலத்திணை கடந்து பொதுக் கடவுளாய் இருந்த சிவன் உருத்திரன் ஆனான். தமிழர் அமைத்த கோயில்களில் பிராமணர் பூசகராயும் சமற்கிருதம் பூசனை மொழியாகவும் ஆனது. சங்கம் வைத்துத் தமிழ் வளர்த்த அரசர்களே இதற்கெல்லாம் வழி கொடுத்து வணங்கி நின்றனர்.
ஆரிய மயப்பட்ட சைவ சமயத்தை மீட்டுப் புத்துருவாக்கம் செய்யும் முயற்சியில் திருஞானசம்பந்தர், திருநாவுக்கரசர், சுந்தரர், மாணிக்கவாசகர் என்னும் நால்வர் பெருமக்கள் அரும்பாடு பட்டனர். சமண, பெளத்த மதங்களின் வலிமையை எதிர்கொள்ள இயலாத நிலையில் வைதீகத்தைப் பகைத்துக் கொள்ளாமல் அதே வேளையில் சைவத்தையும் தமிழையும் மீட்கும் போராட்ட முறையை மேற்கொண்டனர்.
சமற்கிருத மொழியைத் தேவபாஷை என்று கூறும் பிராமண மரபில் வந்த திருஞானசம்பந்தர் தன்னைத் தமிழ்ஞானசம்பந்தர் என்று வலிந்து பல பாடல்களில் குறிப்பிட்டார். வைதீக நெறிக்கு ஒவ்வாத உருவ வழிபாட்டு மரபை மீட்டார். தமிழால் சிவபெருமானைப் பாடும் பதிகங்கள் இயற்றினார். இவர் வழியில் திருநாவுக்கரசர் மேலும் உறைத்தெழுந்தார்.
கிரியைகள் மட்டும் வழிபாடு ஆகிவிடாது, உண்மை அன்பே வழிபாடு என்றார். ‘ நெக்கு நெக்கு நினைபவர் நெஞ்சுளே புக்கு நிற்கும் பொன்னார் சடைப் புண்ணியன்’ (5.90.9) என்றார். ‘சாத்திரங்கள் பல பேசும் சழக்கர்காள், கோத்திரமும் குலமும் கொண்டு என்செய்வீர்’ (5.60.3)என்று சமூக நீதியுரைத்த திருநாவுக்கரசர் ‘நாமார்க்கும் குடியல்லோம் நமனை அஞ்சோம்’ (6.98.1)என்று முடியரசை எதிர்த்த முதல் குடியரசர் ஆனார்.
‘அங்கமெலாம் குறைந்தழுகு தொழுநோயராய்
ஆவுரித்துத் தின்றுழலும் புலையரேனும்
கங்கைவார் சடைக்கரந்தார்க்கு அன்பராகில்
அவர்கண்டீர் நாம்வணங்கும் கடவுளாரே (6.95.10)
என்று சாதிமை கடந்த பத்திமையை அப்பர் முன்னைலைப்படுத்தினார்.
இவர்கள் வழியில் வந்த சுந்தரர் இல்லறத்தினின்றும் இறைவன் திருவடியைச் சென்றடைய முடியும் என்று வாழ்ந்து காட்டினார்.
‘சாதி குலம் பிறப்பென்னும் சுழிப்பட்டுத் தடுமாறும்
ஆதம் இலி நாயேனை…’ (8.கண்டபத்து 5)
என்று சாதி, குலம், பிறப்பால் மக்களை உயர்ந்தோர் தாழ்ந்தோர் எனக் கூறுவதை இழிந்த பண்பு எனச் சாடினார் மாணிக்கவாசகர்.
இவ்வாறு நால்வர் பெருமக்களும் ஏனைய சைவச் சான்றோரும் ஆரிய வருணாச்சிரமத்தைக் கண்டிக்கும் போராட்டத்தின் மறுதலையாகச் சைவம் குறிக்கும் ‘ஒன்றே குலமும் ஒருவனே தேவனும்’ (10.2072) என்ற மனித குல ஒருமைப்பாட்டை வலியுறுத்தினர்.
ஆரிய மாயை என்று கூறி வைதீகம் கலந்த தமிழர் சமயங்களைப் புறக்கணிக்கும் தமிழ்ச் சிந்தனையாளர் ஆரியமும் வைதீகமும் நீங்கிய தமிழர் சமயங்களை அடையாளம் கண்டு மீட்டெடுக்கும் பணியை மேற்கொள்ள வேண்டும். இவற்றுள்ளும் சைவம் தமிழர் வளப்படுத்திய தத்துவக் களஞ்சியம் என்பதை உணர்ந்து அதனைப் போற்றிக் கைக்கொள்ள வேண்டும்.
‘தமிழருக்குச் சமயமே இல்லை’ என்ற முரட்டு வாதம் தமிழரின் சமயம் இருந்த இடத்தில் அந்நிய மதங்களுக்கு ஆட்சி பீடங்களை அமைத்திருக்கிறது. தமிழர் சமயங்களைச் சார்ந்தோரைப் பார்த்து ‘கடவுள் இல்லை, இல்லவே இல்லை’ என்போர் அந்நிய மதங்களைச் சார்ந்துவிட்ட தமிழரையும் தமிழரை மதம் மாற்றும் அந்நியரையும் பார்த்து அப்படிச் சொல்வதில்லை என்பதால் கடவுள் மறுப்பாளர் வந்தாரை வாழ வைப்பதை மறைமுகப் பணியாகச் செய்து கொண்டிருக்கின்றனர் என்பதை உணர்த்த வேண்டியுள்ளது.
தமிழரின் மரபு சார்ந்த சமயங்களை வைதீகப் பிடியிலிருந்து மீட்கும் முயற்சியில் தோற்றுப் போனவர்கள் தமிழருக்குச் சமயமே இல்லை என்று மறுதலிப்பது தமிழரின் பண்பாட்டு வரலாற்றை ஊனப்படுத்திவிடும். குறிப்பாகச் சைவ சமயத்தையும் சைவ சித்தாந்தத்தையும் மறுதலிப்பது ஆய கலைகள் அறுபத்து நான்கையும் அறிந்த தமிழனுக்குக் கடவுள் பற்றிய சிந்தனை மட்டும் இல்லை என்று கூறுவதாய் முடியும். இப்பார்வையினின்று மாறி வைதீகப் பிடியிலிருந்து சைவத்தை மீட்க வேண்டும். மீட்டால் சைவம் அறிவார்ந்த சமயமாகச் சமய உலகைத் தலைமை கொள்ளும் என்பது உறுதி.
“வைணவர்” என்று சொன்னால் புதுசா தெரியுமே!. எப்படி தமிழர் ஏற்றுக் கொள்வார்கள். “இந்து” என்ற புதிய குடத்தில் பழைய கஞ்சி என்பதை தெள்ளத் தெளிவாக சொல்லுங்கள். அப்பவும் தமிழர் அது பழைய கஞ்சிதான் என்று ஏற்றுக் கொள்ளார். காரணம் அந்த அளவுக்கு தமிழரின் மூளை சலவை செய்யப்பட்டு, புத்தி பேதலித்து, மதி கலங்கி நிற்கின்றோம். விடியல் வெகு தூரமில்லை.
இருக்கு, யசுர், சாம, அதர்வணவேதம் முறையே தெய்வங்களை வேண்டல், வேள்வி வழிபாடு செய்யும் முறைமை, இருக்கு மந்திரங்களை இசையுடன் பாடுவது மற்றும் வயப்படுத்தும் கிரியைகளையும், எதிரிகளை வெல்ல உபயோகிக்கும் மந்திரங்களையும் இதர வாழ்க்கையின் அம்சங்களை அடக்கியுள்ளது. இதில் அதர்வணவேதம் முன்னே கூறிய 3 வேதங்களுக்கு முரணாக அமைந்தது. இன்று சாக்தம் எனப்படும் “காளி” வழிபாட்டு முறையும், இவ்வழிபாட்டில் வரும் உயிர்பலி முறையும் இந்த அதர்வண வேதத்தில் இருந்து வந்ததுதான். ஆடு கோழி அடிச்சி காளிக்குப் படைப்பது இந்த அதர்வண வேதத்தில் ஏற்றுக் கொள்ளப் பட்டுள்ளது. இதைக் கற்று அறிந்து கொல்லுங்கள். தொடரும்.
இந்த வேதங்கள் இறைவனாகிய பிரம்மத்தால் ஆன்மாக்களுக்கு அளிக்கப் பட்டது என்பது வைணவர்களின் நம்பிக்கை. இதை தென்னாட்டில் கொண்டு வந்து “பரப்பியது” ஆரியர். தென்னாட்டில் இதற்க்கு முன் ஆதி சைவ அந்தணர்களே ஆலய வழிபாடு செய்து வந்தனர். இந்த ஆதி அந்தணர்களே பின்னாளில் ஆரிய மரபில் கலந்து தமிழ் பிராமணர், தெலுங்கு பிராமணர் மலையாளி பிராமணர் என்று தம்மைத்தாமே அழைத்துக் கொண்டனர். “தமிழ் பிராமணர்கள்” எனப்படும் இவரே தமிழரை மதம் மாற வழி கோளினர். சைவ சமியிகலாக இருந்த தமிழர்களில் ஒரு பகுதியினரை வைணவ மரபிற்கு கொண்டுச் சென்றனர். அவர்களே தமிழில் நாலாயிர திவ்ய பிரபந்தம் அருளிய ஆழ்வார்கள். இப்ப சொல்லுங்கள் வேத வழிபாட்டை தமிழர்களிடையே பரப்பியது பிராமணா?, ஷத்திரியனா?, வைசியனா? இல்லை சூத்திரனா?. எதையும் அறுதியிட்டு கூறும் முன் தென் இந்திய வரலாற்றை கொஞ்சம் படித்து வாருங்கள். வழக்காட வசதியாக இருக்கும். தொடரும்.
வைணவர்களுக்கு வழிபாட்டு முறையே, “வேள்வி” வழிபாடுதான். அவர்கள் கோவிலைக் கட்டி திருவிழா எடுத்தவர்கள் இல்லை. கோவிலைக் கட்டும் முறைமையும் இந்த வைணவர்களுக்கு கற்றுத் தந்தவர் தமிழர்தான். இல்லை என்று சொல்லாதீர்கள். அப்புறம் தங்களுக்கு தமிழர் வரலாறு தெரியாதவர் என்பதை நிரூபித்துக் காட்டுவேன். சிவ ஆகமத்தில்தான் கோவில் கட்டும் முறைமை வகுத்துக் கொடுக்கப் பட்டுள்ளது. குசேலன் திருமந்திரத்தை படித்தால் அறியலாம். உடனே ஓடிபோய் கடைத்தெருவில் திருமந்திரத்திற்கு விளக்க உரையுடன் கூடிய ஒரு புத்தகத்தை வாங்கி பகவத் கீதையுடன் வைத்துப் படியுங்கள். புண்ணியம் கிடைக்கும். கோவிலைக் கட்டும் முறைமையை மேலே கூறிய 4 வேதத்திலும் முழுமையாக காண இயலாது.
தேனீ… அற்புதமாக உங்கள் வாதத்தை முன் வைத்துள்ளீர்கள். சரித்திர சான்றுகளை நோக்கி உங்கள் பார்வை விரிகிறது.பாராட்டுக்கள்! வாதம் பொருளைத் தாங்கி முன்னெடெக்கப்படவேண்டும்.அதை சரியாகச் செய்திருக்கிறீர்கள். சிலருக்குத் திராவிடம் என்றாலே கசக்கிறது. (கலையை மனதில் வைத்துக் கூறவில்லை) கால்டுவெல்லின் மொழியியல் ஆய்வின்படி தமிழ்,தெலுங்கு,கன்னடம்,மலையாளம்,துளு ஆகியவை தமிழினின்று கிளைத்த கிளைமொழிகள் என்றும் பண்டைய தமிழினத்தின் பிரிவுகள் என்றும் வகைபடுத்துகின்றனர் ஆய்வாளர்கள். அப்படி அன்மையில் பிரிந்து சென்ற மொழிதான் மலயாளம். சேரனின் வழித்தோன்றல்களே மலையாளிகள். சங்க காலத்தில் தமிழராக இருந்தவர்கள். கேரளத்தமிழ் என்றே மலையால மொழியைக் குறித்துள்ளனர். தமிழகத்தில் எப்படி தமிழ்ப் பார்பணர் உள்ளனரோ அவ்வாறே மலையாலப் பார்ப்பணர்,தெலுங்கு பார்ப்பணர்,கன்னடப் பார்பணர் என்றும் உள்ளனர். இந்தப் பார்பணர்கள் எல்லோரும் வடமொழிதாசர்கள். வடமொழிச் சரக்குகளை இந்தத் திராவிட மக்களிடம் திணித்து ஆதித் தமிழர்களைப் பிரித்த ஆதிக்க சக்தியினர். அன்றும் இன்றும் அரசியலிலும் பொருளாதாரத்திலும் மற்ற கல்விசார்ந்த உயர் துறைகளிலும் ஆளுகை செய்கின்ற தனிப்பெரும் சக்தியாக உள்ளனர். இவர்களின் மத ஆதிக்கத்தின் விளைவுகளினால்தான் வடமொழிக் கலப்பும் ஆதிக்கமும் தென்னிந்தியாவில் கோலோச்சியது. அதன் வலிமையான தாக்கத்தினால்தான் திராவிட மொழிகளின் அன்னை மொழியும் தனிப்பெரும் புகழ்மிக்கத் தமிழ்மொழி சிதையவும் ,உடையவும் நேர்ந்து தமிழரில் பெரும் பகுதியினர் மலையாளிகளாகவும், தெலுங்கர்களாகவும், கன்னடர்களாகவும்,துளுவாகவும் பிரியவும், தங்களுக்கென்று தனி எழுத்துகளை உருவாக்கிக்கொண்டு தனி இனமாக்கப்பட்டனர். அல்லது தனித்தனி இனமாயினர். உண்மையில் இவர்கள் நம்முடைய இரத்தத்தின் இரத்தங்கள். இந்த உண்மையை அறியாமல் இன்று இந்த திராவிட மக்கள் தங்களுக்குள்ளேயே பகைமை பாராட்டி சீரழிகின்றனர். இவர்களால் அதிகமாக பாதிக்கப்பட்ட தமிழ்நாட்டுத் தமிழர்கள் இவர்களை வெறுக்கவும் தமிழ்தேசியம் பேசும் பரிதாப நிலைக்குத் தள்ளப்பட்டனர். ஆக, தமிழர்கள் எப்படி திராவிடர்கள் ஆனார்கள் என்பதும், அரசியல் அதிகாரத்தை , தமிழர் சமய அதிகாரத்தை இழந்தனர் என்பதும், இந்திய அளவில் எப்படி தமிழனின் எந்தப் போராட்டத்தையும் இன்னும் செயலிழக்கச்செய்யும் சக்தியாகப் பார்ப்பணர்களின் ஆரிய ஆதிக்க சக்தி விளங்குகிறது என்பது தெளிவாக விளங்கிக்கொள்ள முடியும். இன்று தமிழகத்தை ஆளுவது ஆரியம்!தமிழ் சினிமாவை ஆளுவது ஆரியம்! பொருளாதாரத்தை ஆளுவது ஆரியம்! எல்லா துறைகளின் நெட்வேர்க்குகளும் ஆரியனின் கைகளில், அவர்களின் ஆளுகையின் கீழ்! மலையாளத்தில் ஆட்சி அதிகாரங்கள் யாருடைய கைகளில்? ஆந்திராவில் ஆட்சி அதிகாரங்கள் யாருடைய கைகளில்? கன்னடத்தில் ஆட்சி அதிகாரங்கள் யாருடைய கைகளில்? இது ஏன் இன்று இந்தியாவின் ஆட்சி அதிகாரங்கள் யாருடைய கைகளில்? எல்லாம் ஆரிய பார்பணர்களின் கைகளில்! அந்தந்த திராவிட பெருநிலத்தில் ஏழைகளாகவும் பஞ்சை பராரிகளாகவும் இருப்பவரகள் யார்? தன்மானம் இழந்த, ஆதித்தமிழ் சமயத்தை இழந்த, மொழியை இழந்த, இன அடையாளத்தை இழந்த ஆதித் தமிழினமாகிய உண்மையானத் திராவிடத் தமிழனே! திராவிடத் தமிழனே! இன்று நம் நாட்டிலுள்ள மற்ற திராவிட இன இயக்கங்களில் ஆதிக்கம் செய்வது யார்? ஆரியத் தெலுங்கனும்,ஆரிய மலையாளியுமதான். இந்த சரித்திர உண்மைகளை அறியாது பிதற்றிக்கொண்டிருந்தால் நம்மை நாமே காப்பாற்றிக்கொள்ள இயலாது. அது சரி, ஆரியரோடு பகைமை பாரட்டத்தான் வேண்டுமா? என்றால் இல்லை என்பேன். அப்பாவி பார்ப்பணர்களும் உண்டுதான். என் விருப்பம் என்னவென்றால் ஆரியர்கள் தமிழர்மீது தங்களின் ஆதிக்கத்தைச் செலுத்தி அவர்களைக் கருவறுக்காமல் சாதி பாகுபாடின்றி சமத்தவமாக நடந்துகொள்ளவேண்டும் என்பதே.
நீங்கள் அருவ வழிபாடு வழி செல்பவா்,அருவ வழிபாடுடையவர்.உங்கள் இறைவனுக்கு உருவம் கிடையாது.சதா மாரி-மாரி பேசுவது வுன்மையில் மனசஞ்ஜலம் கொண்டுள்ளீா்.முதலில் நீங்கள் வுங்கள் நிலைபாட்டை வுருதி செய்யுங்கள் பின் வேதங்கள் பற்றி பேசுவோம்.உங்கள் வாதத்தில் விரிசல் வுன்டு,அதாவது ஆரியனால் ஏமாற்றப்பட்டோம்,மூளை சலவை,புத்தி பேதலிப்பு,போன்ற வாதங்கள் நீங்கள் கேலி கூத்துக்கு ஆலாக வேண்டிவறும்.அந்நால் மன்னர்,மக்கள் மனோனிலை இந்நாள் மக்கள் மநோனிலை வித்யாசம் கண்டு வாதிடவும்.அறியா வயது முதற்கொண்டு ஆலயம்,மந்திர பாராயணம்,பூனூல்,இப்படியே வாழ்ந்தவா நீங்கள் கூறுவதுபோல் கடையில் நூல் வாங்கி படித்து புரிந்து கொள்ள வேண்டிய நிலை நேற்று பெய்த மழையில் பூத்த காளானுக்குத் தான் அவசியம்.காலையில் டீ யோடு பழைய கஞ்சு,மதியம் உணவு,சாயும் காலம் டீ பிஸ்கட்,நாங்கள் 1/4 உப்பு தான் எடுப்போம்.இப்படி வாழ்ந்தவர்க்கும் மனம் போன போக்கில் வாழ்ந்தவர்க்கும் வித்யாசம் நிரைய வுன்டு.செம்பருத்திக்கு வந்தது ஆன்மீக பாடம் நடத்த அல்ல,பிரிந்து கிடக்கும் மக்களை ஒரு குடையின் கீழ் சேர்த்து எல்லோறும் நன்மை பெறவே வந்தோம்.எல்லோறும் மக்களுக்கு நன்மை கருதியே எலுதுகிரோம்,நாராயண சித்தம்.
kayee! நாராயண அப்படி சொல்லாலேயே! அவரே ஆடு, மாடு மேய்ச்சவருதானே! உன் பாசையில் இன்னும்சொல்ல போன; பரதன் அவரு கொடுத்த பதுகை தலைக்கு மேல சுமந்து நடந்தாரு,தெரியுமா எதேற்குன்னு? பாதத்தில் உள்ளவர்கள் சேற்றில் கை வைக்கலனா தலையில் உள்ளவர்கள் சோற்றில் கை வைக்க முடியாதுன்னு உங்களை போன்றவர்களுக்கு உணர்த்தவே! இறைவனை நினைக்க கோவில்தான் செல்லன்னும்னு எந்த சட்டமும் கிடையாது.தாயிற் சிறந்த கோயிலும் இல்லை தந்தை சொல் மிக்க மந்திரமும் இல்லை! இருந்த இடத்திலே இறைவனை மனதார வழிபாடு செய்ய முடியும்னு எல்லோருக்கும் நல்லாவே தெரியும்! ராமரும் 14 வருஷமா அதைதான் செய்தார்! யார் சொன்னது அருப வழிபாட்டில் உருவம் இல்லைன்னு? ஜோதி வடிவமே உன்னுள் இருக்கும் ஜீவன்(சிவன்).
அதைவிட ரூபம் உனக்கு வேறு என்ன வேண்டும்?
ஆசாமி போன்று ஒரு சில ஜென்மங்கள் இருபத்தால்தான் சமய வழிபாட்டில் நாம் பின் தங்கி உள்ளோம். கடவுள் ஆனா பெண்ணை என்று தெரிந்து கொண்டு என்ன செய்ய போகிறான் இவன்? முதலில் நீ ஏன் பிறந்தாய் என்று தெறித்து கொள் . எதகாக வாழ்கிறாய் என்று தெரிந்து கொள். உன் அப்பா அம்மாவிற்க்க நல்ல மகனாக இரு. அவர்கள் தன இவுலகில் வாழும் நடமாடும் தெய்வங்கள்.
சீக்கிய மதம் 300 வருடங்களுக்கு முன்புதான் தோன்றியது. இன்று அம்மதத்தைச் சார்ந்த சீக்கியர்கள் நாங்கள் இந்துவன் அல்ல, எங்களின் மதம் சீக்கிய மதம் என்று சொல்லி மத ரீதியில் பிரிந்து நின்றாலும், “இந்தியன்”, “இந்திய குடிமகன்”என்ற ரீதியில் ஒன்றாக இருந்து தில்லியில் ஆட்சி செய்கின்றான் அல்லவா?. அப்ப தமிழன் மட்டும் தன்னை சைவ சமயி என்று வலியுறுத்தி சிவநெறியில் நின்றால் நாம் எல்லாம் பிரிந்துப் போய் விடுவோம் என்று, புலி வருது, புலி வருது என்ற கரடி விடுவது ஏனோ? இப்ப மட்டும் நீர் என்ன தமிழர்களை ஒட்டியா நிற்கின்றாய்? எப்பவும் தமிழர்களை வெட்டி நிற்கும் நீர் தமிழர்களின் ஒற்றுமையைப் பேசுவதற்கு தகுதி உள்ளவரோ? வைணவராக இருந்தால் தங்கள் நலம் பேணுங்கள். சைவ சமயத்தவரை உசுப்பினால், சிறுபான்மையினாராக இருப்போர் இந்நாட்டில் கொஞ்ச நெஞ்ச மரியாதை இருப்பதையும் இழக்க வேண்டி வரும் என்பதை மறந்து விடாதீர்.
எந்த ம .ஆண்டியும் நம்பல(தமிழன) இந்து என்று சொல்லபுடாது …
அப்புறம் கடுபாய்டும் சொல்லிபுட்டம் .. சைவம் அறிவியல் சார்ந்தது …
ஆரிய இந்து மதம் பார்பனன் அடுத்தவன் உழைப்பில் வைறுவளர்க்க புகுத்தபட்டது …
வருணாசிரம கோட்பாடு இருக்கு வேதத்தில் 90 -வது அத்தியாயத்தில் “ஆதி புருஷன்” என்னும் தலைப்பில் 16 மந்திரங்களைக் கொண்டு வருகின்றது. இதனை 1896-ல் ‘Ralph T.H. Griffth’ என்பவர் சமஸ்கிருதத்தில் இருந்து ஆங்கிலத்தில் மொழியாக்கம் செய்யப்பட்டு கீழ்காணுமாறு கொடுத்துள்ளார்:
1. A THOUSAND heads hath Puruṣa, a thousand eyes, a thousand feet.
On every side pervading earth he fills a space ten fingers wide.
2 This Puruṣa is all that yet hath been and all that is to be;
The Lord of Immortality which waxes greater still by food.
3 So mighty is his greatness; yea, greater than this is Puruṣa.
All creatures are one-fourth of him, three-fourths eternal life in heaven.
4 With three-fourths Puruṣa went up: one-fourth of him again was here.
Thence he strode out to every side over what cats not and what cats.
5 From him Virāj was born; again Puruṣa from Virāj was born.
As soon as he was born he spread eastward and westward o’er the earth.
6 When Gods prepared the sacrifice with Puruṣa as their offering,
Its oil was spring, the holy gift was autumn; summer was the wood.
7 They balmed as victim on the grass Puruṣa born in earliest time.
With him the Deities and all Sādhyas and Ṛṣis sacrificed.
8 From that great general sacrifice the dripping fat was gathered up.
He formed the creatures of-the air, and animals both wild and tame.
9 From that great general sacrifice Ṛcas and Sāma-hymns were born:
Therefrom were spells and charms produced; the Yajus had its birth from it.
10 From it were horses born, from it all cattle with two rows of teeth:
From it were generated kine, from it the goats and sheep were born.
11 When they divided Puruṣa how many portions did they make?
What do they call his mouth, his arms? What do they call his thighs and feet?
12 The Brahman was his mouth, of both his arms was the Rājanya made.
His thighs became the Vaiśya, from his feet the Śūdra was produced.
13 The Moon was gendered from his mind, and from his eye the Sun had birth;
Indra and Agni from his mouth were born, and Vāyu from his breath.
14 Forth from his navel came mid-air the sky was fashioned from his head
Earth from his feet, and from his car the regions. Thus they formed the worlds.
15 Seven fencing-sticks had he, thrice seven layers of fuel were prepared,
When the Gods, offering sacrifice, bound, as their victim, Puruṣa.
16 Gods, sacrificing, sacrificed the victim these were the earliest holy ordinances.
The Mighty Ones attained the height of heaven, there where the Sādhyas, Gods of old, are dwelling.
தொடரும்.
தேவர்களும், ஞானிகளும் நடத்திய வேள்வியிலிருந்து “ஆதி புருஷனின்” (இறைவன்) வாய் வழியே பிராமணர்களும், தோள்படை வழியே ஷத்திரியர்களும், தொடையிலிருந்து வைசியர்களும், பாதங்களிலிருந்து சூத்திரர்கள் தோன்றினார்கள் என்று 12-வது மந்திரத்தில் குறிக்கப் பட்டுள்ளது. இறுதியாக 16-வது மந்திரத்தில் “these were the earliest holy ordinances.” அதாவது இதுவே பழங்காலத்தில் ஏற்படுத்தப் பட்ட சமூக கட்டமைப்பு என்ற குறிப்பும் உள்ளது. பின்னாளில் இந்த நான்கு வகை வருனாசிரம பிரிவினருக்கும் வெளியே “பஞ்சமர்” அல்லது “சண்டாளர்” என்னும் தீண்டத்தகாதோர் என்ற பிரிவும் ஏற்படுத்தப் பட்டு பன்னெண்டுங்காலமாக வைணவர் சமூக அமைப்பில் தனித்துவம் பெற்று நின்றது இந்த வருணாசிரம கோட்பாடு. குசேலரே இப்பொழுது சொல்லுங்கள் வருணாசிரம கோட்பாடு பிராமணிய வாழ்கை முறையைக் குறிப்பதா இல்லையா?. கொஞ்சம் படிங்கப்பா. யாரோ சொல்லிக் கொடுத்த கேள்வி ஞானத்தை அப்படியே கொண்டு எம்மிடம் ஒப்புவிக்காதீர். நாளை தொடரும்.
இன்று இந்தியர்களிடையே நடைமுறையில் உள்ள “சாதியம்” என்பது “பிறப்பால் வரும் சாதி” என்று குறித்ததைத் திருத்தி தொழிலால் வந்த தொழிர்ப்பெயர் என்று எழுதுங்கள். பிறப்புக்கும், தொழிலுக்கும் வேற்றுமை உள்ளது என்பதையாவது அறிந்து எழுதுங்கள் குசேலரே.
45 ஏக்கர் பரப்பளவில்1600ஆண்டுகள் பழமை வாயிந்த,மதுரை மீனாச்சி அம்மன் கோயிலை பல்வேறு தமிழ் பாண்டிய மன்னர்கள் காலங்களில் கட்டப்பட்டுள்ளது,நான்கு உயர்ந் கோபுரங்கள்,கருங்கல்லால் வேயப்பட்ட கூரைகள்,ஆயிரங்கால் மண்டபம்,அக்காலத்து தமிழர்களின் கட்டடக்கலையின் அறிவு கூர்மையை பறைசாற்றுகின்றன,தமிழர்களின் கடுமையான உழைப்பில் உருவான மதுரை மீனாச்சி அம்மன் கோயிலில் ஆரியன் புரியாத மொழியில் சமஸ்கிருதத்தில் ஊத தட்டில் காசு வாங்கி நோகாமல் நொங்கு திங்கிறான் !
தாய்,தந்தை தெரியும்,உன் குரு யாா்?,ஏட்டு சுரக்காய் கறிக்கு வுதவாது.யாறுக்கு சீடனாய் இருந்து வேதம் விவரிக்குறீர்.குரு அருள் இன்றி,ஆசியின்றி,கூறும் வேதம் சயித்தானுக்கு ஈடாகும்.அங்கீகரிக்கப் படாத சான்றிதழ்,படிப்பு சபை ஏறாது என்பது தாங்கள் அறியாததா.ஏ நீ கிழிச்சது போதும் மூடு.வயிற வலக்றதிலே கண்ணும் கருத்துமா இரும் போங்கடா நீங்களும் உ…. .அப்புரம் எதுக்குடா கோவில்க்கு வரீா்.இந்த பூச்சான்டி வேளை வேணாம் நம்மக்கிட்ட, உசுப்பி விடுற வேளைய முடிஞ்சா மலாய் காரன் கிட்டே காட்டு.இப்பவே நிரைய இந்து தமிழறை விட்டு தனியே போய்விட்டனா்.ஒரு காலத்தில் தமிழ்பள்ளியில் தமிழரை தவிர எவறும் இறுக்கமாட்டாா்.இன்று மாலை மணி 0700க்குஎப்.எம்மில் தமிழ்செய்தியில்,கலவி அமைச்சா் தெலுங்கா்களுக்கு ஒரு மில்லியன் ரிங்கிட் கொடுத்ததாகவும் அதில் ஒரு பகுதியை தெலுங்கு மொழி ஆசிரியர்களை வுருவாக்க வுத்தரவாம் மீண்டும் கூரியது அதாவது பள்ளியில் கட்டாய பாடமாக்க கோறியுள்ளனறாம்.நாளை மலையாளி மற்றும் சீக்கியர்.இந்து2 எடுத்து சொன்னோம் ஆனால் எடுத்தெரிந்து பேசினீர்,சமஸ்கிரத மொழியும் கட்டாய பாடமாக அறிவிப்பும் வரலாம்.நாளை இவர்கள் கட்டாயம் பி.என் பக்கம் இருப்பர் என்பது வுருதி.உம் ஆனவம் இதன் வழியாவது ஒடுங்கட்டும்.தெலிந்த சிந்தனை மலறட்டும்.வாழ்க நாராயண நாமம்.
இந்த மலேசிய நாட்டில் எல்லா கோபுரங்கள்,உயர்ந்த கட்டிடங்கள்,வீடுகள்.எல்லாம் இந்தோநேசியா் கட்டினா் ஆதலால் இந்த நாடு இந்தோநேசியா்க்கு சொந்தம் வுரிமை தரலாமா?நாராயண நாராயண.
அடேய் நீ எந்த பல்கலைகழகத்தில் வேதம் படித்து பட்டம் வாங்கினே சான்றிதழ் இருக்கா?குடுமியும் புனுளும் அடையாளம் குடுமியை எடுத்து கிராப்புவேட்டிக்கொண்டால் குருவா?உன் தாயி தமழச்சி என்கிறாய் அப்படியின்னா கலபௌ ஆளா ?நான் கோயிலுக்கு போககூடாது என்று சொல்ல நீயாரு?இந்த நாட்டில் கோயில் கோபுரங்களை கட்டியது இந்தொநிசியனா?அறிவு சூனியமே தமிழகத்து கட்டட கலைஞன் கட்டியது!நீர் சொல்வது கொட்டாய் கோயில்,பல ஆண்டுகளாக தெலுங்கர்கள் தமிழ் பள்ளியில் தெலுங்கு போதிக்கப்பட போராடிக் கொண்டிருக்கிறார்கள் இது புது செய்தி அல்ல !நீயெல்லாம் ஒருமொழியையே உருப்படியா பேச,எழுத தெரியல இதுல வேதம் படிச்சி கீச்சி புட்ட !மேலே படித்ததும் எலி தான் ஆசைதீர கொதறி வேச்சிரிச்சி மனம் போன போக்கிலே என்பது உனக்கே தெரிந்தால் சரி எலுன்ச்!
வேதத்தை வைத்து படம் காட்ட யாம் இங்கே அதை குறிப்பிடவில்லை. வேதத்தில் உள்ளது என்னவென்பதையும் அதை புரியாமல் பேசித் திரிவோருக்கு அறிவு புகட்டவும், அதை வைத்துக் கொண்டு ஒரு சிலர் அதைபற்றி தெரியாதவரிடம் படம் காட்டுவதை நிறுத்தவும் இங்கே திரை இடப்பட்டது. படம் பார்த்த மாத்திரத்தில் உண்மை வெளிப்படையாக அனைவருக்கும் தெரிந்ததால் எரிச்சல் எடுத்து உடம்பை எல்லாம் சொரிந்து மென்மேலும் புண்ணாக்கிக் கொள்ள வேண்டாம்! இதற்க்கு முன்னே பிச்சி, பிரித்து நார், நாராக உரிப்பேன் என்று சொன்னேன். அதில் ஒரு சிறிய பகுதிதான் இது. மேலும் உசுப்பினால் மேலும் மானம் கெட வேண்டி வரும். என் மாமன் மகள்கள் இருவரும் சம்ஸ்கிருத மொழியில் ஆரம்பப் பள்ளியில் இருந்து படித்து உயர்நிலைப் பள்ளியில் சிறப்புத் தேர்ச்சி பெற்றவர்கள். ஒருவர் ‘Seattle- லும் மற்றொருவர் இன்னும் சென்னையில்தான் இருகின்ரார். வேண்டுமென்றால் அவர்களிடம் சொல்லி தமிழில் மொழிபெயர்ப்பு செய்து இங்கே மென்மேலும் எம்மால் படம் காட்ட முடியும். விதண்டா வாதம் வேண்டாம் சொன்னால் கேட்டுக் கொண்டு அமைதியாக இருக்க கற்றுக் கொள்ள வேண்டும்.
வருணாசிரம கோட்பாடை முன்னெடுத்து பேசியதால்தான் பலர் இந்து என்று சொல்லப்படும் வைணவ மதத்தை விட்டு கிறிஸ்துவர்களாகவும், முஸ்லிம்களாகவும் மதம் மாறினார்கள். இதில் தமிழர்கள் மட்டும் அல்ல மாறாக மலையாளிகளும் தெலுங்கு வம்சாவளிகளும் தமிழர்களை விட அதிகமாகவே மதம் மாறினர். இன்றும் ஹைதராபாத்தில் அதிகமான தெலுங்கு வம்சாவளி மக்கள் முஸ்லிம்களாக வாழ்வதை கண்கூடாக காணலாம். கேரளாவுக்குச் சென்றால் மூலை முடுக்குகளில் எல்லாம் பள்ளிவாசல்களையும், தேவாலையங்களையும் காண்பது எளிது. யாம் தெலுங்கு வம்சாவளி மக்களுக்கு எதிரி அல்ல. எம் தகப்பனார் வழி பாட்டி தெலுங்கு மொழியில் சரளமாக பேசுவார். எம் தகப்பனாரும் அவர்தம் தெலுங்கு நண்பர்களிடம் சந்தோசத்தில் தெலுங்கில் பேசுவதை நான் சிறு பிள்ளையாக இருக்கும் பொழுது கண்டிருக்கின்றேன். எமக்கும் சிறு பிள்ளையில் தெலுங்கில் தங்கமான பெயர்தான். காலம் மாறும் பொழுது காட்சியும் மாறி விட்டது. இந்த மதம் மாறுதலை தடுத்து நிறுத்தவே யாம் தமிழர்களை சிவ நெறியிலும், சைவ சமயத்திலும் நிற்க கூவி அழைப்பது. சைவ சித்தாந்தம் (இறை கோட்பாடு) எல்லா உயிர்களையும் ஒரே நோக்கில் பார்ப்பது. அது மனிதனின் உயிராக இருக்கட்டும், விலங்கின் உயிராக இருக்கட்டும், பறவை, புழு, பூச்சி, தாவரங்களின் உயிராக இருக்கட்டும் அனைத்தும் சமமே. இங்கே சாதி சனத்துக்கு இடமில்லை. மேலோர், கீழோர் என்பதற்கு இடமில்லை. அப்படி எவனாவது சைவன் என்று சொல்லிக் கொண்டு மேலே கூறியவற்றை சீர் எடுத்துப் பார்ப்பானாகில் அவன் உண்மைச் சைவன் அல்ல. அவன் ஒரு போலியாகத்தான். இருக்க முடியும். இன்றைக்கு இது போதும்.
நீர் வேதம் கற்று கரைத்து குடித்ததுபோல் புலம்பி கொண்டிருக்காமல் கற்ற வேதங்களை கட்டுரையாக எழுத முடியுமா?அரைகுறையாக அங்கொன்றும் இங்கொன்றும் எடுத்து விடுவது தான் கற்ற வேதமா?
அய்யா தேனீ அவர்களே நம் நாட்டிலும் சமஸ்கிருத வேதம் கற்ற தமிழர் முத்துகுமார் கோயில் கும்பாவிசேகம் போன்ற முக்கிய நிகழ்ச்சிகளில் ஆயியர்களுக்கு தலைமையேற்று சிறப்பாக செயிவதை நான் பார்த்துள்ளேன்,அவர் பேரை சொன்னால் ஆயியர்களுக்கு தெரியும்! மினாச்சி அம்மன் கோயிலைப்பற்றி எழுதியதும் அறிவு புர்வமாக பதில் எழுத தெரியாமல் இரண்டு எழுத்துக்கிடையே எலி கண்ணை வரைந்து எங்கேங்கோபோயி கணமாக உங்களிடம் வாங்கிக்கொண்டார்,அவர் கருத்து கூறும்முன் யோசிக்க மாட்டார் என்று தெரியுது!மனம் போன போக்கில் கருத்து சொன்னால் அதற்கு வேறு ஒரு வார்த்தை உண்டு கி, அவர் சொன்னதையே பல முறை திரும்ப திரும்ப சொல்வதில் அவருக்கு இனிக்குதுபோலா உடும்பு பிடியாக குருஜியை பிடித்து விட்டார் !
“சிவாச்சாரியார்” என புகழ்மாலை சூட்டிக்கொள்வோர், சிவ வழிபாட்டில் நின்று தன் ஆத்மாத்த பூஜையிலும் சிவனையே வழிபடுவோர். சிவனேயே அன்றி வேறு சிறுதெய்வங்களை வேண்டுவோர் அல்லர். “சென்றுநாம் சிறுதெய்வம் சேரவோ மல்லோம் சிவபெருமான் திருவடியே சேரப் பெற்றோம்” (6.98.5) என்று அப்பர் பெருமான் சிவத்தோத்திரமாக பாடியதும் இந்த சிவாச்சாரியார் மறந்து போயிருக்கலாம். சிவ நிந்தனை குல நாசம். இதைநான் சொல்லவில்லை. பட்டுத் தெளிந்த “அவாக்களே” சொன்ன வார்த்தை. அதனால்தான் சிவநெறி என்ற உடனே “அவாக்கள்” கொஞ்சம் உஷாராகி விடுவர். இது. ஏணிக்கோடு வெட்டி பால் மரம் சீவி தற்செயலாக ஆலயப்பணியில் ஈடுபட்டு, சமஸ்கிருத மொழியில் மந்திரங்களை மனப்பாடம் செய்து மக்களுக்கு அறிவுபுகட்ட வந்த சிவாச்சாரியராக இருந்தால், இப்பொழுது எமக்குப் புரிகின்றது ஏன் தமிழ் ததிகினத்தோம் போடுகின்றது என்று. வாரும் வந்து கூறும் உமது வாதத்தை.
kayee! உன் கூற்றுப்படி இங்கு இந்தோனேசியர்களுக்கு எப்படி உரிமை கொடுக்க முடியாதோ.அதே போன்று உலகத்தின் முதல் நாகரிகமான தமிழர் நாகரிகத்தை இடையில் வந்த ஆரியர் ஆக்கிரமிப்பை எந்த விதத்திலும் ஏற்றுக்கொள்ளமுடியாது!
ஜெ.பாண்டி அவர்களுக்கு வணக்கம். சில தினங்களுக்கு முன் அறிவில் காயாக இருப்பவரின் கூறும் கருத்துக்களுக்கு கண்டனம் தெரிவிக்கும் படி அழைப்பு விடுத்தீர்கள். நான் அதை படித்துவிட்டு அமைதி காத்தேனே தவிர என் மனம் அமைதி யடையவில்லை. காரணம் புத்தி சுவாதீனமற்ற ஒருவரின் கருத்துக்கு பதில் கருத்து எழுதுவது நாகரீகம் இல்லை என்பதால். முன்பே ஒருமுறை தன்னிலை தெரியாத அவரின் நிலை கண்டு கோபப் படுவதா அல்லது அனுதாப்படுவதா என்று தெரியவில்லை. என்று எழுதியிருந்தேன். அவரின் கருத்துக்களை படிக்கும்போது என் மனதில் ஒரு கவிஞரின் பாடலே மனதிரையில் ஓடும். மாறாதயைய மாறாது மனமும் குனமும் மாறாது என்ற பாடலே அது. ———————————————————
இன்றைய விஞ்ஞான அறிவியலும் (மறபனுசோதனை), அன்றைய இந்திய வரலாறும் அருதியிட்டு கூறுவது ஆரியர்கள் குடியேற்றவாசிகள் (வந்தேரிகள்) என்றும், தமிழர்கள் புர்வீக வாசிகள் என்றும் கூறுகிறது. தமிழர்கள் குடிசை போட்டு நிலையாக தங்கி, சைவ உணவின் ஆரோக்கிய தன்மை உண்மைகளை கண்டு, விவசாயம் செய்து வாழ்ந்தவர்கள். ஆரியர்கள் மேற்கு திசையிலிருந்து கிழக்கு திசை நோக்கி பயணம் செய்தவர்கள். நாடோடிகள், இவர்களின் வருகை ஒரு குறிப்பிட்ட காலத்தோடோ, ஒரு குறிப்பிட்ட கூட்டத்தோடோ இருக்கவில்லை. தொடச்சியாக சிறு சிறு கூட்டமாக வந்து கொண்டிருந்தவர்கள். இவர்களின் இறை வழிபாட்டு முறையில் அவ்வப்போது கருத்துகள் மாறு படும். இவர்களுக்கிடையே சண்டை சச்சரவு உண்டானதும் உண்டு. அன்றைய சண்டை சச்சரவு எச்சங்கள் இன்றைய சில கோவில்களில் லிங்கம் மட்டுமே வீற்றிருக்கும், மற்றும் சில கோவில்களில் லிங்கமும், பீடமும் வீற்றிருக்கும். ஓர் இடத்தில் (நாடோடிகள்) நிலையாக தங்காதவர்கள். ஆகையால் அவர்கள் விவசாயம் செய்ய வாய்ப்பில்லை. அவர்கள் பயணம் செய்வதோ அடர்ந்த காடுகளின் நடுவில். உணவுக்காக எதிர் கொள்ளும் கடும் மிருகங்களையும் சமாளிக்க வேண்டும். இவர்களுக்கும் உண்ன உணவு வேண்டும். அதற்கு ஒரே வழி, தன்னுடன் ஆடு, மாடு, கோழிகளை கொண்டு வந்தனர். உணவுக்காக எதிர் கொள்ளும் கடும் மிருகங்களை சமாளிக்க ஆடு, மாடு தேவைபட்டது. இவர்களின் இன்னொரு ஆயுதம் நெருப்பு. அக்காலத்தில் நெருப்பை வளர்ப்பதும், அணையாமல் பாதுகாப்பதும் பெரும் சிரமமான காரியம். இதில் இவர்கள் கைதேர்ந்தவர்கள். இரவினில் மிருகங்களிடமிருந்து காப்பாற்றிக் கொள்ளவும், குளிர் காயவும் நெருப்பு தேவை பட்டது. பகலில் எதிர் கொள்ளும் மிருகங்களை விரட்டவும், கிழங்கு இறைச்சிகளை சூடு காட்டவும் நெருப்பு தேவை பட்டது. ஆக மொத்தத்தில் இவர்கள் பெரும்பாலும் அசைவ உணவுக்காரர்கள். இன்றைய சமய திருவிழா காலங்களில் யாகம் வளர்க்கும் போழுது அவர்களுடைய கையை நன்றாக உற்று கவனித்து பாருங்கள், கையாலேயே பறவை, மீன், விலங்கு போன்று ஜாடை செய்து, அக்கினிக்கு தானம் கொடுப்பதாக காட்டுவார்கள். அன்றைய இந்தியாவில் ஊடுருவும் காலத்தில், யாகம் வளர்க்கும் போழுது அக்கினியில் பசுவதை என்பது சர்வ சாதாரணம். இவர்கள் சைவமும், சாந்த குணமும் கொண்டவர்கள் என்றால், எதற்கு யாகத்தில் உயிரிணங்களை தானமாக கொடுக்க வேண்டும்? கை ஜாடை செய்ய வேண்டும். இவர்களின் ஒழுக்க நெறியும், கடவுள் வழிபாடும் கண் போன போக்கிலே இருக்கும். ஆண், பெண் கலவியிலேதான் கடவுள் இருக்கிறார் என்று தப்பான எண்னம் கொண்டவர்கள். இன்றும் இக்காரணத்தை சொல்லி போலி சாமியார்கள் தங்களிடம் வரும் பெண் பக்தர்களை கவர்ந்து கலவி செய்வதை இன்றும் காணலாம். கோவில்களில் எப்படி தேவதாசி முறை வந்தது என்று புரிந்து கொள்ளுங்கள். இவர்களின் ஆண், பெண் உறவு முறைகள் அபத்தமானது. சகோதரன், சகோதரி என்றும் பார்க்க மாட்டார்கள். உதாரணம் அன்றைய அவர்களுடைய பண்பாட்டின் எச்சம்தான் இன்றைய கிளியோபாட்ரா என்ற அரசி தன் சொந்த சகோதரனையே திருமணம் செய்தது. தமிழர்களின் வாழ்கை முறை ஒழுக்க நெறி கொண்டது, மெய்யறிவும், பகுத்தறிவும் கலந்தது. ஒரு பெண்ணிற்காக நாலைந்து பேர் போட்டி போடுவதை தவிர்ப்பதற்காக, தாலி கட்டும் முறை கொண்டு வரப்பட்டது. இன்னார் இன்னவருக்கு மனைவி என்று பன ஓலையில் எழுதி கழுத்தில் தொங்க விடுவார்கள். அதுவே நடமுறையில் பனஓலை, மஞ்சள், தங்க தாலி, தாலிக்கொடி என்று மாறிவிட்டது. ஆண்கள் நெஞ்சை நிமிர்த்தி, எதிரில் பார்த்து நடப்பவர்கள். எதிரில் வருபவள் தாலி அணிந்தவள் என்றால் பண்பாடாக ஒதுங்கி கொள்வார்கள். பெண்களும் ஆண்களை கண்டால் தலை குனிந்து தரையைப் பார்த்து நடப்பவர்கள். எதிரில் வருபவர் கல்யாணமானவரா? இல்லையா என்று காலில் மிஞ்சி அணிந்ததை வைத்து தெரிந்து கொள்வார்கள். இவர்களின் என்னமே அடுத்தவர்களின் உழைப்பில் உட்கார்ந்து சாப்பிடுபவர்கள். ஒரு குழந்தை பிறந்ததில் இருந்து வயதாகி இறக்கும் வரையில் எதாவது ஒரு காரணம் கண்டுபிடித்து, சாங்கியம் செய்து காசு பார்ப்பவர்கள். இறந்து மண்ணான பிறகும் திதி என்று சொல்லி வாரிசுதாரரிடம் காசு பறிப்பவர்கள். முன்பெல்லாம் இறந்தவருக்கு நல்ல நேரம் கெட்ட நேரம் என்று கிடையாது. இப்போது அதிலும் ஒரு காரணம் கண்டு பிடித்து காசு பார்க்கிறார்கள். புது தந்திரமாக கையிலே கை மணிக்கட்டில் ஒரு கயிறு கட்டி முடி கயிறு என்று சொல்கிறார்கள். ( இந்த முடி கயிறு முறை மன உளவியலை சார்ந்தது ஆதலால் சுலபமாக ஏமாந்து விடுகிறார்கள் நம்மவர்கள் ). நன்றி வணக்கம். ஒரிரு நாட்களில் தொடரும்.
அய்யா உழவர் அவர்களே,பலமுறை திரும்பத்திரும்ப படித்தேன்,அருமையான கருத்து என் கேமிராவில் பதிவு செய்து ஒளிக்காட்சி தட்டில் பதிவேற்றிக்கொண்டேன்,நன்றி வணக்கம் !
நன்றி வணக்கம். அலை ஓசை அவர்களே. தங்களின் அறிவு தேடலுக்கு பாராட்டுகள். தொடருங்கள் தங்கள் பயணத்தை. வாழ்த்துக்கள்.
எங்க போச்சு கொசமணி ????
நராயன சிட்டம் !!!
தன்மானா தமிழர்களே அனைவரும் சிறப்பாக பின்னுட்டம் எழுதியுள்ளிர்கள் …
எத்தனை நாளைக்குத்தான் இவாக்களின் நாத்தம் புடிச்ச கதபேசபோறோம்!!!!!!
நம் கலாசாரத்தை மொழியை காக்க விழிப்பாக இருக்கவேண்டும் …
வருட இறுதியில் நாட்காட்டி விற்கிறார்கள் அனைத்துமே ஒரு ஹிந்து சாமி … திட்டமிட்ட ஒரு பிரச்சாரம் .. சிவாலயத்தில் தமிழனுக்கு சம்பந்தமில்லாத ஒரு ஹிந்து கடவுள் !!!!!!!!!!!
தை திங்கள் தமிழ் புத்தாண்டு … சித்திரயல்ல … தலைநகரிலுள்ள சிவாலயத்தில் சித்திரை 14 தமிழ் புத்தாண்டு என்று கூறிபிட்டுளார்கள்!!!! தமிழ் அறின்சர் பெருமக்கள் விளக்கமளிக்கவும் ..நன்றி தேனீ ,உழவன் .அலையோசை .. தொடரட்டும் தங்கள் பணி
உழவரே, தங்களின் கருத்துக்களைப் படித்தேன். இத்தகைய உண்மைகளை எடுத்தச் சொன்னால் கசக்கும். “ஆரியர்களின் இறை வழிபாட்டு முறையில் அவ்வப்போது கருத்துகள் மாறு படும். இவர்களுக்கிடையே சண்டை சச்சரவு உண்டானதும் உண்டு” என்ற தங்களின் கருத்து உண்மையிலும் உண்மை. இருக்கு முதலாகிய நான்கு வேதங்களுக்கும் எதிர்ப்பாக அமைந்தவையே இன்று வேதாந்தமாக விளங்கும் “ஆரணிய காண்டமும்”, “உபநிடதங்களும்”. எப்பொழுது சமண, பௌத்தர்கள் ஆரிய உயிர்பலி வேள்விகளைக் கடுமையாக எதிர்த்து வைணவ மதத்தை வலுவிழக்கச் செய்தனரோ அன்றே வைணவ ஞானிகளும், முனிவர்களும் காடுகளில் முகாமிட்டு சீரிய சிந்தனையில் ஆழ்ந்து உயிர்பலி வேள்வியை புறந்தள்ளி, தானியங்களை வேள்வியில் இட்டு தங்கள் தேவாதி தேவனான இந்திரனுக்கு அவிர்பாகமாக அக்னியின் வழி அளிப்பதாக வழிபாட்டு நடைமுறைகளை மாற்றினர். இவை வேதத்தின் உயிர்பலி வேள்விக்கு முற்றிலும் முரணானது. அவர்களின் நம்பிக்கை அவர்களோடு இருக்கட்டும். அதை நம் மீது திணிக்க வேண்டாம். தமிழர்கள் இதை அறிந்து திருந்தி பகுத்தறிவுடைய சைவ நெறியில் நிற்க வேண்டும். மாற்றம் நிச்சயமாக வர வேண்டும். நல்லதுக்கே என்று நம்புவோம்.
குசேலன் இறுதியாக யாம் தங்களுக்கு ஒரு நன்றி கூற கடமைபட்டுள்ளேன். தன் சொந்த முயற்ச்சியில் தமிழைக் கற்று பிறருக்கு விளங்கும் வகையில் கருத்து வரைய தெரிந்த தங்களை மனதார பாராட்டுகின்றேன். வைணவ மத நூல்களை கற்று அறியும் தாங்கள், தமிழர்களுடைய மெய்யறிவு நூல்களையும் கற்று அறிந்தால் தங்களுடைய மெய்யறிவு மென்மேலும் பெருகும். வாழ்க வளமுடன்.
இறப்புக் காரியங்களில் சம்பந்தம், சம்பந்தம் இல்லாத திருமுறை தோத்திரங்களை சடங்கு செய்பவர் பாடிக் கொண்டிருந்தால் இறந்தவரின் குடும்ப உறுப்பினர்கள் அவரை நிறுத்தி இறப்பு சடங்குகளை மட்டும் செய்யச் சொல்லுங்கள். பின்பு இறந்தவருக்கு எந்தெந்த தோத்திரங்களைப் பாடலாம் என்று அறிந்து குடும்ப உறுப்பினர்களே பாடலாம். அதுவும் பாடத் தெரியவில்லை என்றால் ஏன் சிவதோத்திரங்களை பாடுகின்றீர்கள். டப்பாங் கூத்து பாட்டுப் போட்டு ஆடுங்கள் இலவு வீடு இன்னும் சிறப்பாகத் தோன்றும்.
கிழவன்,ஆதி குரங்கினத்தின் குணத்தை சொல்வதை மறந்துவிடாதே,குரங்குக்கு ஏது புத்தி அதற்கு தாய்,அக்கா,தங்கை என்று வித்யாசம் தெரியாது கன்டதே காட்சி கொண்டதே கோலம்,கண்போன போக்கில் வாழக்கூடிய விலங்கு அதைத்தான் நீர் வும்மை பற்றியே புலம்பிக் கொண்டிறுக்கின்றீர் என்று அறிக,நாராயண நாராயண.
கலை அவர்களே,எங்க போச்சி கொசமணி,குரு என்ற இரண்டு எழுத்துக்கு இடையே இரண்டு எலிக்கண்ணை வரைந்து பழகிக்கொண்டிருக்கிறார்,இனி இரண்டு எலி கண்ணை பார்த்தால் திருத்தி வாசித்துக்கொள்ளுங்கள்!நன்றி வணக்கம்,
Theni! செம்ம குத்து குத்திட்டிங்க….
வணக்கம் தேனி, கலை அவர்களே .தங்களின் பின்னோட்டத்திற்கு நன்றிகள் பல.
ஆரிய வந்தேறிகள் காட்டுக்குள் குரங்குகளோடு வாழ்ந்த இனம்,அதன் பழக்க வழக்கம் தாயி,அக்கா,தங்கை என்று தெரியாது அதன் குணம் ஆரியனையும் பற்றிக் கொண்டதில் வியப்பில்லையே தன் இனத்தையே விமர்ச்சித்ததுக்கு, நன்றி,நன்றிகள்
காயி! அதைதான் நானும் சொல்கிறேன்,தமிழர் பொற்காலத்தில் வாழ்ந்து கொன்டிருந்த பொது ஆரியன் கற்காலத்தின் மிருகங்களை வாழ்ந்ததை நீரே ஒப்புகொண்டீர்! ஏனெனில் உலகின் முதல் நாகரிகம் தமிழர் நாகரிகம்.உலகிற்கே வாழ கற்று கொடுத்த இனம்
எங்கள் இனம்.எங்கள் வளர்ச்சியில் குளிர்காய வந்த ஆரியன் கையாண்ட சூழ்ச்சிகள் பல,அதில் ஒன்றுதான் மதம் என்ற போர்வை. வந்தோரை வாழவைக்கும் எங்கள் மரபு எதிரியையும் வாழவைத்தது! அதன் விளைவு நாங்கள் எல்லாவற்றையும் இழந்தோம் எங்கள் நாட்டையும் சேர்த்து! இனி அதற்கு ஒரு முடிவு கட்ட நேரம் நெருங்கி விட்டது!
இரத்த அழுத்தம் தலைக்கேறி உம்முடைய குரு யார் என்று கேள்விக் கணைத் தொடுத்தவருக்குப் பதில். “இருக்கும் இடத்தை விட்டு இல்லாத இடம் தேடி எங்கெங்கோ அலைகின்றார்” குருவைத் தேடி. அப்படித் தேடிப் போகவேண்டியதில்லை என்பதே சிவநெறி. நெஞ்சினிலும், நாவினிலும் அன்பை வைத்து மனமுருகி வேண்ட, அந்த ஈசனே உமக்கு ஞான குருவாக வந்து ஞானப்பால் ஊட்டுவான் என்பதே திருஞானசம்பந்தரின் வாழ்க்கை வரலாறு நமக்கு காட்டிய வழி. அந்த திருஞானசம்பந்தன், அப்பர் பெருமான், சுந்தரர், மாணிக்கவாசகர், நால்வர் பெருமக்களே எமது குருமார்கள். எல்லா தமிழர்களுக்கும் அவர்களே குருமார்கள். எம் குருமார்களைத் திட்ட வேண்டியதில்லை. தவறு இருப்பின் என்னுடையதாகட்டும். நிறைகள் இருப்பின் எம் குருமார்களைச் சேரட்டும். எம் குருவான திருஞானசம்பந்தரே தமிழர்களிடையே வைணவ சமய பரப்பலை புறந்தள்ள வேண்டி ஒவ்வொரு பதிகத்திலும் 9-வது பாடலில் திருமால், பிரம்மனின் ஆணவச் செருக்கை எடுத்துச் சொல்லி தாம் செல்லும் திருத்தலங்களில் எல்லாம் தமிழர்களை சைவ சமயத்தில் நிற்க வேண்டி வலியுறுத்தினார். எம் குரு வழி எவ்வழியோ, அவ்வழியே எம் வழியும். எம்மைச் சாடினால் எம் குருவைச் சாடியதாகும். அதன் பலனை, அவரவர் அனுபவிக்க வேண்டிய “ஊழ்வினைப் பயனை” யாம் சொல்லியா தெளியவேண்டும். சிவ நிந்தனை வேண்டாமே.
குரு,ஆலயத்திலும் பூனூல் போட்ட அர்ச்சகர் சாதா மக்களின் நாம நட்சத்திரம் சொல்லி இறைவனிடம் நல் வாழ்வுக்கு அர்ச்சனை செய்வதும் மனித குருவின் துனையை நாடுவதற்கு சமம்.அந்தணர் என்பதற்கு பொருள் சான்றோர் என்பதால்,அறக்கடலாகவே விளங்கும் அந்தச் சான்றோரின் அடியோற்றி நடப்பவர்கேயன்றி,மற்றவர்களுக்கு பிற துன்பக்கடல்கலை கடப்பது என்பது எளிதான காரியமல்ல என்கிறது வல்லுவம்.கல்வியை கட்க மாணிட குரு தேவையே,கசடற கற்க.அங்கே என்னும் எழுத்தும் முக்கியம் அவசியம் மானிட குரு பின் அறிவு,அதற்கும வழிகாட்டி தேவை இல்லை.இங்கே தேடல் முக்கிய இடம் பெறும்.நீங்கள் மாண்ட குருவை ஏற்றாலும் அவர் கட்டாயம் தகுதியான மானுட குருவை அடயாலம் காட்டு,நிச்சயம் வுருதி,வாழ்க நாராயண நாமம்.
தற்போது குரு டத்தோ பாலகிறிஸ்ணனதான் கண்ணுக்கு தெரிகிறார்,
மாணிக்க வாசகர்,சம்பந்தர்,அப்பர்,சுந்தரர் இவர்கள் எல்லாம்
பழையவர்கள். புதிய ரத்தம் பாய்ச்சுமாறு கேட்டு கொள்கிறேன்.
கடவுள் வாழ்த்தில் “அறவாழி அந்நதணன்…” குறள் 08 ன் படி அறக்கடலாகிய இறைவனின்… என்றுதான் பொருள் கொள்ள வேண்டுமே அன்றி “சாண்றோர்” என பொருள் கொள்வதும் அல்லது குரு என்று பொருள் கொள்வதும் இந்த அதிகாரத்தின்படி தவறு. எனவே, காயீ அவர்களே தயவுசெய்து குறளுக்குத் தவறாகப் பொருள் கூறும் முன்பு குறளைக் கசடறக் கற்க வேண்டுகிறேன். நாராயண நாமாம் பாடும் காயீ… தயவு செய்து வள்ளுவரின் நாமத்தைக் கெடுத்துவிடாதீர்கள்.
எல்லாம் அறிந்த இறைவனுக்கு ஏன் நம் ராசி நட்சத்திர விபரங்கள்?
இதுவரை நடந்த கருத்துபரிமாற்றங்களை ஊர்ந்து கவனித்ததில் நான் ஒன்றை தெள்ளதெளிவாக அறிந்துகொண்டேன் . முனைவர் அய்யா அவர்களின் வகுப்புக்களில் தெளிவு பெற்ற மாணவர்களின் அறிவார்ந்த சிந்தனைதிரனுக்கு ஈடுகொடுக்க மற்றவர்களால் முடியாது. அது மலைக்கும் மடுவுக்கும் உள்ள இடைவெளி .அய்யா, தொடருங்கள் உங்கள் சிந்தனை களத்தை . விரைவில் சைவ சமயத்தை மலேசிய மண்ணில் நிலை நிறுத்தஉங்கள் மாணவர்களாகிய நாங்கள் உங்களுக்கு உறுதுணையாக இருப்போம்
நாம,நட்சத்திரம்,அர்ச்சனை கூட தேவை இல்லை,சொந்தமாக இறைவனிடம் பிரார்தனை செய்வதே மேல்.ஆலயம் சென்றாலே போதும் நம் தீய பலன் குறைய துவங்கும்,வாழ் நாராயண நாமம்.
காயீ சொல்வதுபோல், இனி கோவிலில் அர்ச்சனையோ,உண்டியலில் அல்லது தட்டில் பணம் போடுவதை நிறுத்தினால் நடராஜா போன்ற கொள்ளையர்களை முற்றாக அழிக்க முடியும்.அண்மையில் காதுகேட்டிய ஒரு தகவல்; இறைவனுக்கு செலுத்தும் பட்டு ஆடைகள் தாமாகவே நடந்து மீண்டும் கடைகளுக்கு போய் சேர்ந்து
விடுகிறதாம்,இப்படியும் சில அதிசயங்கள் ஆலயங்கள் இந்நாட்டில்.
திருக்குறளில் நிறைய வாழ்வாங்கு வாழ்வதற்கான உண்மைகள் புதைப் பொருளாக இருக்கிறது என்பதை எத்தனையோ தமிழ்ச் சாண்றோர்கள் விளம்பி இருக்கின்றனர். அந்த உண்மைகள் தமிழினத்தைப் பொருளாதாரத்திலும்,குடும்ப, சமூக வாழ்க்கையிலும் உயரிய நிலைக்குக் கொண்டுசெல்லக்கூடியவை என்றும் உலகப் பார்வையில் தமிழினத்தை உயர்வாக்கக்கூடியவை என்பதும் ஏன்தான் இந்தத் தமிழச்சாதிக்கு புரியாமல் இருக்கிறது? கடவுளைப் பற்றி எவ்வளவு தெளிவாக எழுதப்பட்டுள்ளது.இதைவிட சிறப்பாக ,சுறுக்கமாக எந்தப் புத்தகத்திலாவது அல்லது வேதத்திலாவது சொல்லப்பட்டுள்ளதா? அப்படி இருக்க ஏன் தமிழரிடை இவ்வளவு மத தர்கங்கள்? இவ்வளவு இறைவாதங்கள்? இறைவனைக் குறித்து வள்ளுவனைப்போல் எல்லோராலும் ஏற்றுக்கொள்ளும் வண்ணம் சொல்லிவிட முடியுமா? வள்ளுவனின் இறைவனுக்குச் சடங்குகள் உண்டா? சம்பிரதாயங்கள் உள்ளனவா? அநாகரிகத்தைக் காணமுடியுமா? அல்லது பணச்செலவுகள்தான் உண்டா? எத்துனைத் தெளிவு ! எத்துனை எளிமை! எங்காவது கற்பனைகள் நிரம்பிய இறைவாதம் திருக்குறளில் காண முடியுமா? வள்ளுவன் ஒரு பச்சைத் தமிழன்தானே… தன் இனம் நன்றாக வாழத்தானே 2000 ஆண்டுகளுக்கு முன்னமேயே தவமிருந்து உயரிய கருத்துக்களை இந்த இனத்திற்காக விட்டுச் சென்றுள்ளார். இந்தத் தமிழினம் எவன் எவன் சொன்ன சொல்லுக்கெல்லாம் தலையாட்டிக்கொண்டு , அவர்கள் வழிகளில் சென்று சீரழிகிறதே வள்ளுவனை மட்டும் அவர் குறளைமட்டும் ஏன் ஒதுக்கிவைத்து அழிவை நோக்கி விரைகிறது? வந்தவன் போனவனையெல்லாம் நம்பி மோசம்போனாலும் வள்ளுவனை மாத்திரம் நம்ப மறுப்பது ஏன்?ஏன்? ஏன்? ஓஓஓ… நாம்தான் உண்மையான தமிழன் சொல்லை கேட்கமாட்டோமே!
“மானிட குரு”. இன்றைய நிலையில் உயிரோடு இருந்து தனது மாணவனுக்கு ஞான (அறிவு) உபதேசம் செய்பவர். இந்த குரு நாளையே இறந்து விட்டால் அவர் “மாண்ட குரு” -வாகி விடுவார் அல்லவா அப்பொழுது எந்த குருவை நாடுவீர்? மீண்டும் ஒரு 730 குருவை நாடுவீரா? இப்படியே போனால் அது தொடர்கதையாகி விடாதா?. ஆக “மானிட குரு”, “மாண்ட குரு” என்பது அவசியமல்ல. தேவை என்ன?. உள்ளத்துக்கு விளக்கொளியாகி வழிகாட்டவே ஒரு குரு அவசியம். அங்கே குருவின் வேலை மாணவனை முதற்படியை தாண்ட வைப்பதே. அதற்க்கு பின் இராஜச குணமுடைய மாணவர் இருளிலும் அந்த சிறிய விளக்கொளியை பற்றிக் கொண்டே சேர வேண்டிய இடத்தை சென்று சேருவர். தொடரும்.
அணைந்தோர் நம்மிடையே வாழ்வது உயிர் அளவில் அல்ல மாறாக அவர் காட்டிய நெறியின் அளவில். அவ்வாறே நமக்கு குருவாகவும், மகான்களாகவும் நிற்பவர் திருவள்ளுவர், நால்வர் பெருமக்கள் போன்றோர். அவர்களே சான்றோர். இத்தைகைய சான்றோரை “மாண்டோர்” என்பது அறிவிலித்தனம் அல்லவா. “குரு” என்பவர் நம் உள்ளத்தில் இருக்க வேண்டியவர். அவரை அவ்வாரேக் காண வேண்டும். அதுதான் குரு சிஷியன் உறவு. RM730/= கொடுத்து பார்த்து விட்டு வருவதில்லை குரு சிஷியன் உறவு. நிற்க.
திருக்குறளை,மறந்நுப்போன இந்தியர்களுக்கு நினைவூட்டிய கையீ க்கு சொல்ல வேண்டியது நன்றிய,கருத்து சொல்லுமுன் குறலை எழுதி விமர்ச்சனம் எழுதினால் வாசிப்பவர் திருக்குறலை புரட்டவேண்டி வரும் இதன் மூலம் மக்கள் நாகறீகம் பெற்றவராக திகழ்வர்.அந்தனர்=கடவுலுக்கு நிகர் ஒப்பிடுவது சிரப்பு.அந்தனர்,பிராமணர்,புராணத்தை எடுத்து ஓதுபவர்,புரோகிதர்,அர்சகர் மற்றும்2.வாழ்க நாராயண நாமம்.
ஜெகவீரபாண்டியரே, வருத்தம் வேண்டாம். வள்ளுவத்தின் அருமையைப் புரிந்துக் கொண்ட தமிழர்கள், நான் வாழும் பட்டணத்தில் ஓய்வுபெற்ற தமிழ் ஆசிரியர்களைக் கொண்டு திருக்குறள் வகுப்பு நடத்துகின்றனர். பெரியோரும், சிறியோரும் அவ்வகுப்புகளில் கலந்துக் கொள்கின்றனர். தமிழ் மறை சிறப்பு மேலோங்குகின்றது. மேலும் நம் முயற்ச்சியினை இருமடங்காக்கினால் இன்னும் அதி விரைவில் வள்ளுவனின் நிழற்படமும் அவரின் குறள்களும் அனைத்து தமிழரின் வீட்டிலும் நிலைபெறும். கவலையை விடுங்கள் காரியத்தைப் பாருங்கள்.
அன்பர் தேனீ அவர்களின் செய்திகண்டு உண்மையிலேயே மனம் பேருவகை கொள்கிறேன். என் உள்ளத்தில் தேனள்ளி ஊற்றிவிட்டீர் தேனீ. இப்படியெல்லாம்கூட நடக்கிறதா!!? என்ன ஆச்சரியம். நல்லதை நாடும் மானத்தமிழர்கள் இன்னும் இருப்பதால்தான் தமிழ் இன்னும் வாழ்ந்துகொண்டிருக்கிறது. நன்றி தேனீ! திருக்குறள் வகுப்பிற்குப் பொருளுதவி தேவைபடுவதாக இருந்தால் சொல்லுங்கள் என்னால் முடிந்ததைத் தந்து உதவுகிறேன். வாழ்க வள்ளுவம்! வாழ்க தமிழ்!