-முனைவர் ஆறு. நாகப்பன், மார்ச் 18, 2014
இந்து சமயம் அல்லது சைவ சமயம் எதுவாக இருந்தாலும் தமிழர் சமயம் குறித்த சரியான பார்வை இக்காலம் வரை எங்கும் பார்க்கப்படவில்லை. சமய விளிம்புகளின் இரு கோடிகள் மட்டுமே இது வரை பேசப்பட்டுள்ளன. முரட்டுத் தனமான நம்பிக்கைகள் ஒரு பக்கமும் அதே முரட்டுத்தனமான மறுப்புகள் ஒரு பக்கமும் காணப்பட்டன. காட்டப்பட்டன.
ஏதோ சில நூல்களின் அடிப்படையில் கட்டமைக்கப்பட்ட நம்பிக்கைகளே சமயங்களுக்கான பொதுத் தளம் என்பது பிழையல்ல. ஆனால் இது எல்லாச் சமயங்களுக்கும் பொருந்தாது. பலவாகிய இந்திய சமயங்கள் அனைத்தையும் ஆராய்வது இந்த இடத்தில் வேண்டாம் என்பதால் இரண்டே இரண்டு சிந்தனைக் கட்டுமானங்களை மட்டும் தேவைப்பட்ட அளவுக்கு பார்த்துக் கொண்டால் சமயம் குறித்த சரியான பார்வை ஒன்று கிடைக்கும் என்பது என் கருத்து.
முதலாவது இந்து சமயம் என்ற பொதுப் பெயரில் வைதீகம் விரித்திருக்கும் அகன்ற வலை. இருக்கு முதலிய வேதங்களின் அடிப்படையில் அமைந்த வைதீகப் பண்பாடு வேள்வி, வருணாசிரமம், சமற்கிருதம் ஆகியவற்றை உள்ளடக்கிய பிராமணீய வாழ்க்கை முறையைக் குறிக்கிறது. பிறப்பால் வரும் சாதிமையைப் போற்றுவது வருணாசிரமம் . இதுவே பிராமணீயத்தின் அடித்தளம்.
பிராமணீயம் இந்தியப் பெருநிலம் முழுவதும் பரவியது. உலகியல் செல்வம் அனைத்தும் பெறலாம் என்னும் வேட்கையை முன்னிறுத்தியதால் வேத வேள்வி தமிழ் அரசர்களையும் செல்வந்தர்களையும் விரைந்து கவர்ந்தது. இதன் வழித் தமிழ் நாட்டு அரண்மனைகளின் செங்கோல்களை வைதீகம் கைப்பற்றியது.
மற்றொன்று தமிழர் உருவாக்கிய மெய்ப்பொருள் சிந்தனை. மரபு சார் ஊர்த்தெய்வங்கள் பலவும் நம்பிக்கைத் தளங்களில் ஊன்றி நின்றன. குல தெய்வம் அல்லது இல்லுறை தெய்வம், காவல் தெய்வங்கள், வீரர்களுக்கான நடுகல் வழிபாடு போன்றவை தமிழரின் மரபு சார் மதங்கள் ஆகும். தொல்காப்பியம் குறிக்கும் குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல், பாலை என்னும் ஐவகை நிலத்திணைகளுக்கும் முறையே முருகன், திருமால், இந்திரன், வருணன், கொற்றவை ஆகியவை தமிழரின் தொன்மைத் தெய்வங்கள். இவற்றுள் இந்திரன், வருணன் என்பவை வைதீகத்தின் சாயல் பெற்றுத் திரிந்த பெயர்கள்.
சங்க காலத்தில் மரபு சார் சிறுதெய்வங்கள் பலவும் வழக்கில் இருந்த போது சிவபெருமான் ‘பிறவா யாக்கை பெரியோன்’ என இளங்கோவடிகளால் குறிப்பிடப்பெற்றார். சிவபெருமானின் தோற்றப் பொலிவைக் குறிக்கும் தொடர்கள் பலவும் சங்க இலக்கியங்களில் காணப்படுகின்றன.
நம்பிக்கை சார்ந்த சிறுதெய்வங்களின் வழிபாடு மலிந்திருந்த காலத்தில் அறிவு சார்ந்த சிவ வழிபாடு சான்றோர் சிந்தனையில் வளர்ந்து சித்தாந்தம் என்ற மெய்யறிவுத் துறையாக அமைந்தது.
கடவுளுக்குக் கடவுள் தேவையில்லை, சடப் பொருள்களுக்கு அறிவும் உணர்வும் இன்மையால் அவற்றுக்கும் கடவுள் தேவையில்லை. ஆகவே சடப் பொருள்களைக் கருவி கரணங்களாகக் கொண்டு உலகைத் துய்க்கும் அறிவும் உணர்வும் உடைய உயிர் என்னும் பொருள் இருக்கத்தான் வேண்டும் என்பது உயிர் உண்மையை நிறுவும் வாதம். இல்லது தோன்றாது என்னும் வாதத்தால் உள்ளதாகிய மூலப் பொருள் ஒன்றிலிருந்தே உலகம் தோன்றியிருக்க வேண்டும் என்பது மாயையை நிறுவும் வாதம்.
உலகின் இருப்பை ஆராய்ந்து அவன், அவள், அது என்னும் அவயவப் பகுப்புடையதாய் இருக்கும் இவ்வுலகம் சடமாதலால் தானே தோன்றி, நின்று அழியாது என்றும் எல்லா உலகங்களையும் முற்றாக அழிக்கும் ஆற்றல் உள்ளவனே உலகைப் படைப்பவனாயும் உலகுக்கு ஆதியாயும் இருப்பான் என்றும் கடவுள் இருப்பைச் சைவம் நிறுவுகிறது.
உயிர், மாயை, கடவுள் தவிர வேறு இரண்டு பொருள்களும் கடவுளால் படைக்கப்படாமல் என்றும் உள்ள பொருள்களாக உள்ளன. என்றும் உள்ள உயிர்களின் இயல்பாகிய அறிவு, இச்சை, செயல் ஆகிய ஆற்றல்களை மறைத்து அவற்றுக்கு அறியாமையை ஏற்படுத்தியிருக்கும் ஆணவம் என்பது ஒன்று. ஆணவத்தை அகற்றுவதற்கு உயிர்களைச் செயல்படுத்திப் பக்குவப்படுத்தும் வினை மற்றொன்று.
அறிவு சார்ந்த இந்த வாதங்களால் உயிர், மாயை, கடவுள், ஆணவம், வினை ஆகிய பொருள்கள் தோற்றம் அழிவு இன்றி என்றும் இருப்பவை என்று கூறுவது சித்தாந்தம். கடவுளின் இருப்பைப் பதி உண்மை என்றும் கடவுளின் சிறப்பைப் பதி இலக்கணம் என்றும் சித்தாந்தம் விரித்துப் பேசியது.
என்றும் உள்ள உயிர்களுக்கு என்றும் உள்ள மாயையிலிருந்து உடல், உலகங்கள், உயிர்க்கான நுகர்ச்சிப் பொருள்களை இறைவன் படைத்துக் கொடுக்கிறான். படைத்தவற்றை உயிர்கள் நுகர்ந்து பக்குவப்படும் வரை காக்கின்றான். உயிர்கள் பிறந்தும் இறந்தும் பக்குவப்படும் வரை தன்னை மறைக்கின்றான். பிறப்பு இறப்பிலிருந்து இளைப்பாறும் பொருட்டு படைத்தவற்றை அழிக்கின்றான். பக்குவப்பட்ட உயிர்களை இடையறா இன்பத்தில் நிலைக்க அருளுகின்றான். இவ்வாறு படைத்தல், காத்தல், மறைத்தல், அழித்தல், அருளல் என்னும் ஐந்தொழிகளை உயிர்கள் பொருட்டு இறைவன் செய்தபடி இருக்கின்றான் என்பது சித்தாந்தம்.
இருபத்தெட்டு சைவ ஆகமங்களைத் தனக்கு வேதமாய்க் கொண்டது சிவனைப் போற்றும் சைவம். ஆகமங்களின் செயல்முறை நூலாக அமைவது பன்னிரு திருமுறைகள். இவ்விரண்டு நூல்களின் வழியில் அமைந்தவை பதினான்கு மெய்கண்ட சாத்திரங்கள். இவற்றுள் ஆகமம் விதி நூல், திருமுறை செயல் நூல், மெய்கண்ட சாத்திரங்கள் சைவத்தின் இலக்கண நூல்கள். மற்றோர் முறையில் கூறினால் சைவத்தின் வேதம் ஆகமம், மெய்யறிவு நூல் மெய்கண்ட சாத்திரங்கள், மெய்யுணர்வு (பத்தி) நூல் திருமுறைகள்.
சைவம் இமயம் முதல் குமரி வரை பல அடைமொழிகளைக் கொண்டு விரிந்தது. என்றாலும் தென் தமிழ் நாட்டில் நுண்ணிய தத்துவத் துறையாக செம்மைப்பட்டது. இதன் வளத்தை இந்தியச் சிறு மதங்கள் யாவும் பங்கிட்டுக் கொண்டன. கணபதியைப் போற்றும் காணாபத்தியம், முருகனைப் போற்றும் கெளமாரம், சக்தியைப் போற்றும் சாக்தம் ஆகிய மதங்கள் யாவும் முறையே சிவனின் பிள்ளைகள் என்றும் மனைவி என்றும் உறவு முறைகளால் தம் நிலையை உறுதிப்படுத்திக் கொண்டன.
உறவுமுறைகளை வலிமைப்படுத்த ஏராளமான புராணங்கள் உருவாக்கப்பட்டன. தமிழர் சமயக் கிரியைகளோடு வைதீக வேள்விக் கிரியைகள் கலந்தன. ஆரிய பிராமணர்களின் தொழில் வளம் கருதி உருவாக்கப்பட்ட கிரியைகள் அறிவுக்கு ஒவ்வா நம்பிக்கைகளை உருவாக்கின. இன்றும் உருவாக்கிக் கொண்டிருக்கின்றன.
தனிப்பெரும் சமயமான சைவம் தென்னிந்தியச் சிறு சமயங்கள் உயிர்த்து உறுதி பெற உதவிய காலத்தில் வைதீகம் சைவம் உட்பட அனைத்துச் சமயங்களையும் வாரி விழுங்கித் தன் வயிற்றில் அடக்கிக் கொண்டது. இதனால் வேதங்களை ஏற்காத சமணம், பெளத்தம் அவைதீகம் என்றும் மற்றவை அனைத்தும் வைதீகம் என்றும் ஆரிய மயப்பட்டன.
இக்காலத்தில் தமிழரின் பழஞ்சமயங்களான கிராமத்துத் தெய்வங்கள் வைதீகத்தின் கைகளுக்குத் தப்பித் தம் மரபுகளைக் காத்துக் கொண்டன. சிற்றூர்களைக் கடந்து விரிந்த சமயங்கள் வைதீகத்தில் கலந்து உரு மாறின. முருகன் சுப்ரமணியன், கந்தன் என்றும் திருமால் விஷ்ணு என்றும் மாற்றம் கண்டனர். நிலத்திணை கடந்து பொதுக் கடவுளாய் இருந்த சிவன் உருத்திரன் ஆனான். தமிழர் அமைத்த கோயில்களில் பிராமணர் பூசகராயும் சமற்கிருதம் பூசனை மொழியாகவும் ஆனது. சங்கம் வைத்துத் தமிழ் வளர்த்த அரசர்களே இதற்கெல்லாம் வழி கொடுத்து வணங்கி நின்றனர்.
ஆரிய மயப்பட்ட சைவ சமயத்தை மீட்டுப் புத்துருவாக்கம் செய்யும் முயற்சியில் திருஞானசம்பந்தர், திருநாவுக்கரசர், சுந்தரர், மாணிக்கவாசகர் என்னும் நால்வர் பெருமக்கள் அரும்பாடு பட்டனர். சமண, பெளத்த மதங்களின் வலிமையை எதிர்கொள்ள இயலாத நிலையில் வைதீகத்தைப் பகைத்துக் கொள்ளாமல் அதே வேளையில் சைவத்தையும் தமிழையும் மீட்கும் போராட்ட முறையை மேற்கொண்டனர்.
சமற்கிருத மொழியைத் தேவபாஷை என்று கூறும் பிராமண மரபில் வந்த திருஞானசம்பந்தர் தன்னைத் தமிழ்ஞானசம்பந்தர் என்று வலிந்து பல பாடல்களில் குறிப்பிட்டார். வைதீக நெறிக்கு ஒவ்வாத உருவ வழிபாட்டு மரபை மீட்டார். தமிழால் சிவபெருமானைப் பாடும் பதிகங்கள் இயற்றினார். இவர் வழியில் திருநாவுக்கரசர் மேலும் உறைத்தெழுந்தார்.
கிரியைகள் மட்டும் வழிபாடு ஆகிவிடாது, உண்மை அன்பே வழிபாடு என்றார். ‘ நெக்கு நெக்கு நினைபவர் நெஞ்சுளே புக்கு நிற்கும் பொன்னார் சடைப் புண்ணியன்’ (5.90.9) என்றார். ‘சாத்திரங்கள் பல பேசும் சழக்கர்காள், கோத்திரமும் குலமும் கொண்டு என்செய்வீர்’ (5.60.3)என்று சமூக நீதியுரைத்த திருநாவுக்கரசர் ‘நாமார்க்கும் குடியல்லோம் நமனை அஞ்சோம்’ (6.98.1)என்று முடியரசை எதிர்த்த முதல் குடியரசர் ஆனார்.
‘அங்கமெலாம் குறைந்தழுகு தொழுநோயராய்
ஆவுரித்துத் தின்றுழலும் புலையரேனும்
கங்கைவார் சடைக்கரந்தார்க்கு அன்பராகில்
அவர்கண்டீர் நாம்வணங்கும் கடவுளாரே (6.95.10)
என்று சாதிமை கடந்த பத்திமையை அப்பர் முன்னைலைப்படுத்தினார்.
இவர்கள் வழியில் வந்த சுந்தரர் இல்லறத்தினின்றும் இறைவன் திருவடியைச் சென்றடைய முடியும் என்று வாழ்ந்து காட்டினார்.
‘சாதி குலம் பிறப்பென்னும் சுழிப்பட்டுத் தடுமாறும்
ஆதம் இலி நாயேனை…’ (8.கண்டபத்து 5)
என்று சாதி, குலம், பிறப்பால் மக்களை உயர்ந்தோர் தாழ்ந்தோர் எனக் கூறுவதை இழிந்த பண்பு எனச் சாடினார் மாணிக்கவாசகர்.
இவ்வாறு நால்வர் பெருமக்களும் ஏனைய சைவச் சான்றோரும் ஆரிய வருணாச்சிரமத்தைக் கண்டிக்கும் போராட்டத்தின் மறுதலையாகச் சைவம் குறிக்கும் ‘ஒன்றே குலமும் ஒருவனே தேவனும்’ (10.2072) என்ற மனித குல ஒருமைப்பாட்டை வலியுறுத்தினர்.
ஆரிய மாயை என்று கூறி வைதீகம் கலந்த தமிழர் சமயங்களைப் புறக்கணிக்கும் தமிழ்ச் சிந்தனையாளர் ஆரியமும் வைதீகமும் நீங்கிய தமிழர் சமயங்களை அடையாளம் கண்டு மீட்டெடுக்கும் பணியை மேற்கொள்ள வேண்டும். இவற்றுள்ளும் சைவம் தமிழர் வளப்படுத்திய தத்துவக் களஞ்சியம் என்பதை உணர்ந்து அதனைப் போற்றிக் கைக்கொள்ள வேண்டும்.
‘தமிழருக்குச் சமயமே இல்லை’ என்ற முரட்டு வாதம் தமிழரின் சமயம் இருந்த இடத்தில் அந்நிய மதங்களுக்கு ஆட்சி பீடங்களை அமைத்திருக்கிறது. தமிழர் சமயங்களைச் சார்ந்தோரைப் பார்த்து ‘கடவுள் இல்லை, இல்லவே இல்லை’ என்போர் அந்நிய மதங்களைச் சார்ந்துவிட்ட தமிழரையும் தமிழரை மதம் மாற்றும் அந்நியரையும் பார்த்து அப்படிச் சொல்வதில்லை என்பதால் கடவுள் மறுப்பாளர் வந்தாரை வாழ வைப்பதை மறைமுகப் பணியாகச் செய்து கொண்டிருக்கின்றனர் என்பதை உணர்த்த வேண்டியுள்ளது.
தமிழரின் மரபு சார்ந்த சமயங்களை வைதீகப் பிடியிலிருந்து மீட்கும் முயற்சியில் தோற்றுப் போனவர்கள் தமிழருக்குச் சமயமே இல்லை என்று மறுதலிப்பது தமிழரின் பண்பாட்டு வரலாற்றை ஊனப்படுத்திவிடும். குறிப்பாகச் சைவ சமயத்தையும் சைவ சித்தாந்தத்தையும் மறுதலிப்பது ஆய கலைகள் அறுபத்து நான்கையும் அறிந்த தமிழனுக்குக் கடவுள் பற்றிய சிந்தனை மட்டும் இல்லை என்று கூறுவதாய் முடியும். இப்பார்வையினின்று மாறி வைதீகப் பிடியிலிருந்து சைவத்தை மீட்க வேண்டும். மீட்டால் சைவம் அறிவார்ந்த சமயமாகச் சமய உலகைத் தலைமை கொள்ளும் என்பது உறுதி.
சைவ சித்தாந்தம் என்றால் ஏதோ இதுவும் மற்றொரு கிரியைகளுடைய இறை வழியை வேண்டுவதாகும் என்ற மயக்கம் வேண்டாம். சித்தாந்தம் என்பது அறிவுக்கு அந்தமாகி நிற்கும் தத்துவ நியதி. அனைத்தையும் தர்க்க ரீதியாக கேள்விக் கேட்டு அக்கேள்விகளுக்கு இறுதி பதிலாக தத்துவ ஞானிகள் வகுத்த நியதி. இதை வெறும் இறை கோட்பாடு என்று தூக்கிப் போட்டு விடலாகாது. பதி (இறை) இலக்கணத்தைச் சொல்லும் சித்தாந்தம், பசு (உயிர்) இலக்கணத்தையும் சொல்லி, இவ்விரண்டுக்கும் இடையே சடமாகிய பாசம் (உலகியல்) வாழ்க்கையின் நோக்கத்தையும் விவரிக்கின்றது. இதை அறிந்தோர், அதன் வழி நின்றோர் வாழ்கையின் நியதியை உணர்ந்துக் கொள்வர். இதுவே இவர்களின் வாழ்வை ஒரு நெறிப்படுத்தி சிற்றின்பத் துன்பமில்லாத வாழ்வுக்கு வழி வகுக்கும். சித்தாந்தம், மற்றவற்றிற்க்கிடையில், உயிர்களின் செயல்பாட்டிற்கான காரணக் காரியங்களை எடுத்து உரைக்கின்றது. அதுவே 24 ஆன்ம தத்துவங்களாக அறியப் படுகின்றன. இந்த உயிரின் இயக்கங்களை கற்றறிந்து புரிந்துக் கொண்டால் அதன் வழி உயிர்களை (மாந்தர்களையும் சேர்த்து) இயக்கும் முறைமையும், பக்குவபடுத்தும் முறைமையும் கையகப்படும். இதைக் கொண்டு என்ன செய்யப் போகின்றீர்கள் என்ற கேள்வி வருமே!. பக்குவப்பட்ட உயிர்கள் திருவருளின் உதவியுடன் வினைப்பயனில் இருந்து விடுபட்டு இறைவனின் பேரின்பத்தில் துயித்தவாறு இருக்குமே. இதற்குத்தானே இப்பிறப்பு. இந்த மாந்தர் பிறப்பில் கிடைத்த வாய்ப்பை நழுவ விட்டு விடாதீர்கள். உணர்ந்து செயல்படுங்கள்.
குருவை தவிர யாறாலும் இறைவனை காட்ட முடியாது.குருவற்றவர் கல்லாதவர்க்கு சமம்.என்னும் எழுத்தும் கசடற கற்க குரு தேவைஅதற்கு ஏன் ஞானிகள்.நல்லா வாழ்ந்தவர் திடீரேன்று இல்லற வாழ்வை துரப்பவர்கள் விதியால் தண்டிக்கபட்டவர்கள்.ஒவ்வொறு மனிதனும் தனக்கு தோன்றியதை தெருவில் சொல்லி திரிவதும் மக்களை திருத்துவதாக சொல்லி சமுதாயத்தை கெடுத்து சின்னாப் பின்னாமாக்கி வருகின்றனா்.வாழ்க நாராயண நாமம்.
கடவுள் இருக்கிறது என்று சொல்ல யாருக்கும் தகுதியில்லை
ஏன் என்றால் யாரும் இது வரை பார்க்கவில்லை ,1000அல்லது 2000 வருடம் முன்பு தோன்றினார் என்று அந்த
கால அறிவு இல்லாத மக்களிடம் கூறி நம்ப வைத்தார்கள் ,கடவுளை மனிதன் தான் உருவாக்கினான் , மனிதனையும்
மனிதன் தான் உருவாக்கினான் ,இல்லை கடவுள் தான் முதலில் ஆதாம் ஏவாளை படைத்தான் என்றால் அவர்கள்
இருவரும் ஒன்றிணைந்து அவர்களுது பிள்ளைகளை படைத்தார்கள் என்றால் இவ்வளவு பெரிய ஜனத்தொகை
பரவ அண்ணனும் தங்கையும் இணைத்து பெற்ற வர்களா ,
அப்படி என்றால் மனித பிறவி கேவலமா பிரவியாகுமே
டார்வின் கண்டுபிடிப்பு தான் உண்மை ,மனிதன் குரங்கில்
இருந்து பிறந்து பரிணாம வளர்சிகண்டு மனிதனாக உருவெடுத்தான் , அதனால் தான் பல மொழிகள் உருவாகின . இதில் ஆரிய நாடோடி கூறுகிறான் ,கடவுள் மந்திரத்திற்கு
கட்டுப்பட்டவர் ,மந்திரம் பிரமனனுக்கு கட்டு பட்டது , நாங்கள் பிரமாவின் நெற்றியில் இருந்து பிறந்தவர்கள் தமிழர்கள் சூத்திரர்கள் பிரமாவின் காலில் இருந்து பிறந்தவர்கள் என்று நம்மை கூறும் மதம் நமக்கு தேவை இல்லை , பலா மரத்தில் வேரில் காய்த்தாலும் ,மரத்தில் காய்தாலும் பல என்று தானே பேர். , நாம் நமக்குள் பல ஜாதி உருவாக்கி நான் அவனைவிட உயர்ந்த ஜாதிக்காரன் அவன் என்னைவிட கீழ் ஜாதிக்காரன் என்று கூறி பெருமை படுகிறோம் ஆனால் ஒன்று நமக்கு ஆக உயர்ந்த ஜாதிக்காரன் என்று கூறி பிராமணன் நம் தலை மேலே உட்கார்ந்து கொண்டு நம்மை மட்டம் தட்டுகிறான் . எதிர்க்கு நைனா சமயம் நமக்கு எவனாவது சமயம் கூறும் வழியில் முழுமையாக நடக்கிறானா , வாழ்கையில் முன்னேற நமக்கு இல்லாத கடவுள் நம்பிக்கை தேவையில்லை ,நமக்கு தேவை தன்னம்பிக்கை நைனா , புரிஞ்சுகோ நைனா .
தமிழ் பித்தரே தங்களுக்கு பித்தம் தலைக்கு ஏறிவிட்டது போலும். கடவுள் இல்லை என்று நாத்திகம் பேசும் தங்களுக்கு இங்கு என்ன வேலையோ? எம்பெருமான் சிவபெருமானை, அம்மை அப்பனாக நேரில் கண்டவர் திருஞானசம்பந்தர் இருக்க, யாரும் இதுவரை கடவுளைப் பார்த்ததில்லை என்று அறியாமையில் உலருவதேனோ? ஆதாம் ஏவாளுக்கு இங்கே என்ன வேலை. நாம் என்ன இந்த நம்பிக்கையை ஏற்றுக் கொண்டோமா? யாரோ ஏற்றுக் கொண்டார்கள் எனில் அவர்களிடம் போய் முறையிடுவதுதானே! வருணாசிரம கோட்பாடுகளைக் கூறும் இந்து எனப்படும் வைணவ மதம் தங்களுக்குத் தேவை இல்லை என்பதனால் மதம் மாறி சைவ சமயத்துக்கு வந்து விடுங்கள். தீர்ந்தது பிரச்சனை. இதற்குப் போய் சும்மா கடவுளை நோண்டிக் கொண்டிருக்காதீர்கள். நாளை வருகின்றேன். சைவ சித்தாந்தத்தின் அடிப்படையில் கடவுள் உண்மையை உணர்த்த.
இறைவனே குருவாக வந்துவிட்டால் அப்புறம் 730 குரு எதற்க்கப்பா?
தேனீ நைனா ,எனக்கு தமிழ் மீது தான் பித்தம் உங்களுக்கோ
மதம் மீது பித்தம் பிடித்து விட்டது அதனால் தான் திருஞான
சம்பந்தர் சிவபெருமானை அம்மை அப்பனாக கண்டதாக உங்களிடம் கூறினார , அவர் சொன்னார் இவர் சொன்னார் என்று எதையும் ஆராயாமல் நம்பும் உன் போன்றவர்களை
விட நாத்திக வாதிகள் எவ்வளவோ மேல் ,காரணம் அவர்கள்
எதையும் சிந்தனைக்கு எடுத்து கொண்டு சிந்தித்து ஒரு முடிவுக்கு வருவார்கள் . ஆமாம் theni திருஞான சம்பந்தர்
சிவபெருமானை அம்மை அப்பனாக என்றால் சம்பந்தர்
தன்னை பெற்று வளர்த்து பேணி காத்த பெற்றோரை
என்ன வென்று கண்டார் ,அறிவுக்கு வேலை கொடு பகுத்தறிவுக்கு வேலை கொடு இல்லை என்றால் தேனீ யின்
தேன் கசக்கும் நைனா .
தேனீ நைனா ,எனக்கு தமிழ் மீது தான் பித்தம் உங்களுக்கோ
மதம் மீது பித்தம் பிடித்து விட்டது அதனால் தான் திருஞான
சம்பந்தர் சிவபெருமானை அம்மை அப்பனாக கண்டதாக உங்களிடம் கூறினார , அவர் சொன்னார் இவர் சொன்னார் என்று எதையும் ஆராயாமல் நம்பும் உன் போன்றவர்களை
விட நாத்திக வாதிகள் எவ்வளவோ மேல் ,காரணம் அவர்கள்
எதையும் சிந்தனைக்கு எடுத்து கொண்டு சிந்தித்து ஒரு முடிவுக்கு வருவார்கள் .
தமிழ் பித்தரே, திருஞானசம்பந்தர்
பாடிய முதல் சிவதோத்திரத்தில் வரும் “பீடுடைய பிரமாபுர மேவிய பெம்மான் “இவனன்றே” என்று சுட்டிப் பாடியதின் நிலை என்ன? யார் ஒருவரை நம் கண் அருகில் பார்க்கின்றோமோ அவரையே “இவன்” என்று சொல்வோம். இப்படி சுட்டி அறியபட்டது என்பது அவர் எம்பெருமான் சிவ பெருமானையே நேரில் கண்டதற்கு அத்தாட்சி. இதை நான் நம்பிக்கையின் அடிப்படையில் சொல்லவில்லை. நீங்கள் பித்தனாகி இருக்கும் “தமிழ் மொழியின் வழி” சொல்ல சைவ சமயிகள் அறிந்தோம். தூங்கிகிட்டு இருப்பவர்களை எழுப்பி விடலாம். ஆனால் தூங்குவது போல் பாசாங்கு செய்பவர்களை எழுப்ப முடியாது. இதில் பித்தனாகி நிற்கும் நீங்கள் இரண்டாம் கட்சி. நாத்திகவாதிகளின் சிந்தனைக்கு ஒரு சவால். நீங்கள் சிந்தித்து, தன்னைத்தானே சுற்றித் திரியும் உலகை நாளை மூன்று நாழிகைக்கு நிறுத்தி வையுங்களேன். எனக்கு ஏராளமான நிகழ்வுகளில் கலந்து கொள்ள வேண்டியுள்ளது. ஆதலால் ஒரு மணிநேரம் மேற்கொண்டு தேவைப்படுகின்றது. சிந்தித்து செய்து விட்டு மறு கருத்து எழுதுங்கள்.
திருஞானசம்பந்தர் தன்னை பெற்றவர்களையும் பெற்றோராகவே கண்டார். அத்தையும், மாமாகவும் காணவில்லை. இப்ப திருப்தியா, பித்தரே.
எந்த ஒரு சமய கோட்பாடுகளைப் பற்றி ஒன்றுமே அறிந்துக் கொள்ளாமல் நாத்திகம் பேசுவதால் என்னப் பயன் பித்தரே? நாத்திகத்திற்கு அப்பாலும் விஷயம் இருக்கின்றது. என்பதனை அறிந்ததால் சொல்லுகின்றேன். பகுத்தறிவைக் கொண்டு கற்ற சித்தாந்தமே எம்மை தெளிந்த ஆஸ்திகனாக்கியது.
தேனியின் தேன் முத்தியாகிவிட்டது. அதனால் சிறுங்கசப்பு இருக்கத்தான் செய்யும்.
தேனீ அவர்களே திருஞானசம்பந்தர் மனிதரா, கடவுளா
விளக்கவும்,பிறகு பேசுவோம்.
திருஞானசம்பந்தர் யாரென்று தெரியாத ஒரு ஞானசூன்யத்திர்க்கு நான் விளக்கம் சொல்ல வேண்டிய கட்டாயம் என்ன இருக்கு?. இதற்க்கு முதலில் பதில் சொல்லுங்கள்!.
வணக்கம். திராவிடம் என்ற சொல் உண்மை தமிழன் என்ற சொல். இன்றைய தமிழர்கள், மலையாளிகள், தெலுகர்கள், கனடதினர்கள் ஒரு காலத்தில் தமிழர்கள் தன என்று திரு உழவர் அவர்களும் தேனீ அவர்களும் தெளிவாக குறிப்பித்தார்கல். ஆரியர்கள் மெல்ல மெல்ல படை எடுத்து வைத்தபோது, அவர்கள் தமிழர்களை ‘திரம்லர்’ என்று உச்சரித்தார்கள். இது காலபோக்கில் திராவதர் என்று மாரிவிதடு. ஆரம்பத்தில் வடநாடில் வாழத பிராமணர்கள் தென்னதில் வாழத பிராமணரை திராவிடன் என்று அழைத்தார்கள். பிறகு அதவர்தை தென் இந்தியர்கள் குறிக்கம் பொது வார்த்தையாக மாரிவிதது. எப்பொழு தந்தை பெரியார் அவர்கள் ஜஸ்டிச் கதியின் பெயரை திரவடர் கழகம் என்று மெட்ரினாரோ அப்பொழுது முதல் அந்த வார்த்தை பயன்பாதுகு அதிகம் வந்துவித்தடு.
ஒரு காலத்தில், இந்தியா பெருநிலம் முழுவதும் தமிழர்கள் தன் வாழர்கள். ஆரிய படைஎடுகளால் அவர்கள் மெல்ல மெல்ல தெற்குக்கு ஒடுங்கி விதர்கள். மிஞ்சியவர்கள் அங்கேயே இருந்து ஆரிய பன்பதை கடைபிதிதனர். அதற்கு அதரம் நாம் சில வந்கலதேசாது மக்களை பார்க்கும்போது அவர்கள் தமிழர்கள் போல் இருப்பார்கள்.
சாதி வேத்ருமை, வர்ணச்தரம் போன்றவை கேறேலவிலும் அதிகம் இருந்தது. அங்கே அதிகமான கொடுமைகளும் இந்த சாதி வேத்ருமை, உயர்வு தாழ்வு எனும் பகுபாடால் நடத்து இருகின்றனர். ஒரு சாதிக்காரன் பிராமணன் வரும்போது எதனை அடி தள்ளி நிற்க வேண்டும் என்ற அளவுகோல் இருந்தது. அதை மீறி வதால் கத்திவைத்து சாதியால் அடித்து தந்தானை முறைகளும் இருந்தனர். இது மனித குலமே வேர்கபதேண்டிய விஷயங்கள். ஒரு மதிதனை சமயத்தின் பெயரை சொல்லி இப்படியா தண்டிப்பது?!!!!!!!!!!!!!!! ஒரு மனிதன் உயர்தவன் இன்னொர்வன் தல்தவன் என்று பாகுபாடை அமைத்துக்கொண்டு, பிறரை இல்லிவு படுத்தும் செயல் ஒருகாலமும் சரியானவையாக இருக்கமுடியாது!!!!!!!!!!!!!! இறைவனே கதி என்று இருக்கிறார்கள் பிராமணர்கள். உயரிய வாழையில், தலல்தா எண்ணங்களோடு வாழும் பிராமணர்கள் உயர்தவர்கலாக இருக்க முடியும்? அதனால் தமிழர்கள் அனைவரும் சமம் என்ற சைவ நெறியை ஏற்கவேண்டும். உயர்த்த என்னகளோடு நாம் வாழவேண்டு. சிவாய திருச்சிற்றம்பலம்.
ஒருவன் எந்நேரமும் இறைவன் நாமத்தை சொல்லிக்கொண்டு இருதுதன் இறைவனை அடையவேண்டும் எனும் கதையாம் இல்லை. அவர் அவர் வாழும் வாழும் வாழைலிர்த்து, செய்யும் தொளிலிர்த்து இறைவனை நினைத்தாள் போதுமானது. மகாபாரதத போரில் கண்ணன் அர்ஜுனனுக்கு தேர் ஓடி. அவர் ஒரு தேரோடி என்ன செஎவேண்டுமோ அதை குறைவின்த்ரி சரியாக செய்தற். இதை கிதையில் கர்ம யோகம் எனும் அத்தியாயம் விவரித்து கூறுகின்றது. இதை போன்றே கர்ம யோகிகலகதான் ந்யன்மர்கள் வழ்டனர். இத கர்ம யோகத்தை பத்ரி கிடை பயின்ற வைணவர்கள் அறிததுதான். இதை அறிதும் பிராமணன் வாழ்கள் முறைதான் சரி என்று வாதிப்பது ஏன்?
பொதுவாக மனித மனம் நமக்கு தெரியாத ஒன்றை உயர்வாக நினைக்கும் இயேல்பு உடையது. உதாரணம், அங்கிலம் பிடிக்காத ஒருவர் முன்பு யாரவது ஆங்கிலமொழியில் பேசினால் அவர் மிகையும் அறிவ்வாளி என்று கற்பனை செய்து கொள்வதுபோலதான். இப்போக்கை வேதகால தமிழர்களும் கடைபிதனர். எதோ புரியாத மொழியில் ஓதும் சமஸ்க்ரத மாத்திரம் உயர்தவை என்று மம்பி ஏமாந்தார்கள். இப்போக்கை இன்றைய தமிழர்களும் கொண்டுஇருகின்றர்கல். இப்போக்கை தமிழன் மத்ரிகொள்ளவேண்டும். தொடரும்.
சைவ சமய வழிபாடு அறியாமை இருல்லில் சூழ்து, அனவ மறைப்பில் இருந்த உயிர்களான நமக்கு தாணு, கரணம், புவனம், போகம் ஆகியவத்ரை படைத்தது கொடுத்த இறைவனுக்கு நான்றி சொல்லும் வகையில் அமைகின்றனர். அனால் வேத வேள்வியோ உலகியல் வழக்கு தேவையனவத்ரை கேற்கும் வகையில் அமைகின்றனர். இதை, திருஞானசம்பந்தர் அவர்கள் ‘கதறக கரியோம்பி’ எனும் பாதில் குரிபிதுளர். பொதுவாக மனிதர்கள் பணத்தின் மீதும், வசதியான வாழ்கையின் மீதும் அதிகம் மோகம் உடையவர்கள். அதனாலதான் அதகளது மன்னர்கள் வேள்வி செய்ய தொடங்கினர். இதனால்தான் வேதா கலாச்சாரம் தமிழர்கள் இடையே ஆழமாக பரவியது. சமயம் என்பது நாமை பிறவி பிநியிளுருந்து நிக்க வேண்டும். அதனாலதான் கரிகால் அமையார் இறைவநிதிலே ‘இறைவ பிறவாத வரம் வேந்தும்’ என்று கேதனர்.ஆகவே தமிழர்கள் நால்வர் உணர்த்திய சிவநெறியை பின்பற்றவேன்டியது வேண்டியது அவசியம்.
நால்வர் பெரும்மக்கள் மனித பிறவியில் இருந்த காலத்தில், அவர்கள் இறைவனை அடைவதுற்குகான பக்தி தோற்றங்களை படைத்தது வைத்தனர். அதை பொருள் உணர்த்து பாடி இறைவனடி சேரலாம். இத பிறவி பிநியிளுர்த்து மம்மை விடுவிக்க வலிகதுபவன் தன் சரியான சமய குருவாக இருக்க முடுயும். பணதுர்ககவும், வசதிக்காகவும் இறைவளிபாடை வலியுருதுகின்றவன் எப்படி சரியான சமய குருவாக இருக்க முடுயும்?
ஆதம் ஏவாள் என்ற பைபலிய கருது தவறானது. இறவன் முழுமையாக மனிதனை படைத்தார் என்ற கதருடை சார்லஸ் டார்வின் முறியடித்தார். பரிணாம வளர்ச்சியில் குரங்கிலிருந்து மந்தன் தோன்றினான் என்பது உண்மைதான். சிவபுரனபதிகத்தில் மனிகவசகர் பாடுகிறார் ‘புல்லாகிப் பூடாய்ப் புழுவாய் மரமாகிப் பல்விருகம் ஆகிப் பறவையாய்ப் பாம்பாகிக் கல்லாய் மனிதராய்ப் பேயாய்க் கணங்களாய் வல்லசுர ராகி முனிவராய்த் தேவராய்ச் செல்லாஅ நின்ற இத் தாவர சங்கமத்துள் எல்லாப் பிறப்பும் பிறந்திளைத்தேன் எம்பெருமான்’. ஓர் உயிர் மனித பிரவிஎடுக்கும் முன் பல்ல மிருகங்கலாகயும் தவரங்கலாகவும் பிறது இருக்கின்றனர். அது மெல்ல மெல்ல பக்குவ பட பட இன்னும் மெல்லன உடல் தேவை படுகின்றனர். அதனாலதான் இறைவன் மேல மேல பரிணாம மாத்ரடை ஏற்படுத்துகின்றார். பரிணாம மற்றம் என்பது இறைவன் திருவருளின்றி நடைபெறாது. ஏன் என்றல் அவனின்றி ஓர் அணுவும் அசையாது.
சைவமும் தமிழும் இரண்டு கண்கள். சங்க கல தமிழ் இலக்கியங்கள் அனைத்தும் சமயம் சரத்து. சங்க கால தமிழர்கள் அழமான சமய அரியொடு வழ்டனர். அந்த இலகிரங்களில் இறைவனின் பெயரை குறிப்பிட மாதர்கள், அவரது அடையாளத்தை மாதும் குறிபிடுவார்கள். உதாரணம் ஒன்பதவுது திருக்குறளில் எண்குணத்தான் என்று இறைவனை குரிபிடுவர் திருவள்ளுவர். எண்குணத்தான் என்றல் எட்டு குணங்களை உடையவன் என்று பொருள். சைவ சித்தடடில் இறைவனுக்கு எட்டு குணங்கள் என்று குறிப்பிடத்தக்கது. சைவத்தையும் தமிழையும் பிரிக்க முடுயதது. சைவ சமயம் என்பது நம்பிதை சரத சமயம் அல்லே. அறிவு சரத்து.
இந்த தேனீக்கள் போல ஒரு சிலர் மற்றவர்களை துதி
பாடியதால் தான் ஆரியன் வந்து நமது சமயத்தில் நுழைந்து
அவனின் வம்சாவளியியை நாம் போற்ற திருஞான சம்பந்தர் கதைகள் ,தேநி உமக்கு அறிவு தீனி அதிகம் தேவை ,நீ வேண்டுமானால் உன் அப்பனையும் அம்மாவையும் கும்பிடாமல் கண்டவனை கும்பிடு ,எனக்கு என் சமுதாயம் பொருளாதாராத்தில் முன்னேற வேண்டும் அதுதான என் கவலை .உன்னை பெற்று வளர்க்கும் போது கட்டிலில் வெளிக்கு இரவு 12.00 இருந்த போது உன் உடம்பை சுத்தம் செய்து உனக்கு பால்லூட்டி சீராட்டி வளர்த்த தாய் தந்தை விட ஆரியன் திரு ஞாசம்பந்தர்
பெரியவனாகி விட்டான , தாயை சிறந்தது கோயில்
இல்லை என்று சொன்னவன் தமிழன் , சாமியை கும்பிடு என்று சொன்னவன் ஆரியன் ,முதலில் theni நீ,தமிழச்சியா அல்லது தமிழனா அல்லது மற்றவனா ,ஒரு மூணு நிடம சிந்தித்து பார் உண்மை புரியும் ,நான் என் 17வது வயதிலேயே சிந்து பெற்றவர்களை மட்டும் வணங்கி வருகிறேன் , இப்போது அன்பான அழகான மாணவி ,பிள்ளைகள் உண்டு , உழைப்பால் முன்னேறி ஒரு இப்போது ஒரு லட்சாதிபதியாகிவிட்டேன் ,என்னை போல என் தமிழர்களும் முன்னுக்கு வர வேண்டும் என்று நினைத்து
வாழ்கிறேன் .பித்தன் என்றால் பைத்தியக்கரான் என்று அர்த்தம் அல்ல ,தாசன் அல்லது அடிமை ,நான் தமிழுக்கு அடிமையாக அல்லது தாசனாக அல்லது பித்தனாக இருப்பிடத்தில் பெருமை படுகிறேன் ,theni உன்னை போல கண்ட ஆரியர்களுக்கு எல்லாம் அடிமையாக இருக்க விரும்ப வில்லை ,theni உன் வேலை தேனை தேடி சேர்த்து வைக்கிற வேலை முதலில் அதை ஒழுங்காக செய் ,அதன் பிறகு மதத்தின் மீது கவனம் செலுத்து ,சரியா நைனா ,தேனீ கண்டதையெல்லாம் கொட்டினால் அப்புறம் முள்ளு உடைத்திடும் .
aasami யின் கேள்வி க்கு திருஞான சம்பதர் யார் என்று கேள்விக்கு அவரை தெரியாதவர் ஞான சூனியர் என்று
கூறும் theni உங்கள் பதில் அகங்காரம் பிடித்து ,சரி நைனா
திருஞான சம்பந்தர் இந்த சமூதாய முன்னேற்றத்திற்கு என்ன செய்தார் , வெறும் சமய பாடல்கள் போதுமா , எங்கள் தமிழ் தாய் பெற்ற திருவள்ளுவரின் குரல் உலக பல மொழிகள் மொழிபெயர்கப்பட்டுள்ளது ,அதனால் தான் aasami கேட்கிறார் , அவர் என்ன கடவுளா என்று தப்பு ஏதும் உண்டோ நைனா.
Sevaraj Kesavan பிச்சி உதறிட்டிங்க போங்க, அருமை அருமை. தமிழன் எப்படி ஆங்கில , சமசுகிருத மொழிக்கு போனான் என்று விளக்கமாக சொல்லி விட்டீர்கள். என் பாராட்டுக்கள் பல. நன்றி வணக்கம்.————- இன்னிக்கு என்னமோ தெரியல நம்ம ஆளுங்க ஆங்கங்கே (கருத்து களத்தினுள்) பிச்சி உதறிக்கிட்டு இருக்காங்க . மூட நம்பிக்கை ஒழிந்து முன்னேற்றமடைந்தால் சரி. அனைவருக்கும் பாராட்டுக்கள், நன்றிகள் பல. வணக்கம்.
அப்படி இல நைனா, ‘பிள்ளைக்கு தந்தை ஒருவன், நம் எல்லோருக்கும் தந்தை இறைவன். அவன் ஒருனை நம்பி வனையா இல்லை இறைவனை நம்பி வந்தியோ’. பகுத்தறிவுக்கு வெள்ளை கொடு.
ஆரியனை கண்டால் இவ்வளவு பயமா?,மாதா பிதாவை எங்கே சென்று வணங்குவீர்,முதியோர் இல்லத்திலா?,அனாதை ஆஸ்ரமத்திலா?,திருமணம் ஆகும் வரை மாதா பிதா குருவாகவும் தெய்வமாகவும் தெரியும்,திருமணத்திற்கு பின் மாதா பிதா சுமையாக மாறும் விதமும்,ஒண்ட வந்த பிடாரி வூர் பிடாரியை விரட்டிய கதயும்.நாஸ்தீகரே நீர் எக்கேடு கெட்டால் யாறுக்கென்ன பயன்,கோடீஸ்வரன்,லட்சாதிபதி,என்ன பயன் சந்ததிகளுக்கு குருவாயிறுந்து நிலயாமை நிலையானதை வுனர்த்த தவரியிறுப்பின் கடமை தவறிய பெற்றோர்க்கு சமம்.பகவான் வுலகுக்கு முதல் ஆதலால் ஆதியை மரப்பது மடமை என்று அறிக,வல்லுவம்.இல்வாழ்க்கை துறவறத்துக்கு முதல் படி என்று அறிக.பணம்,வீரம் நிர்வகிக்க தகுதியான கல்வியாலர்கள் தேவை.கல்வியே வுயர்ந்தது என்று வாழ்க நாராயண நாமம்.
தமிழ் பித்தரே, தங்களுக்கு ஆசாமியின் கேள்வியில் மறைந்திருக்கும் உண்மை புரியாமல் பேசுகின்றீர்கள். யாம் அந்த கேள்விக்கு பதில் சொன்னவுடன், அந்த பதிலை வைத்தே மறு கேள்வி கேட்க அவர் தயாராக இருக்கின்றார் என்பதை நீங்கள் அறியவில்லை. நான் புரிந்துக் கொண்டேன். ஆதலால்தான், கேள்வி கேட்டவருக்கு பதில் மறு கேள்வியானது. சில வேளைகளில் குதர்க்கமான கேள்வி கேட்பவரிடம் அந்த கேள்வியை வைத்தே நாம் பதில் கேள்வி போட்டால், முதல் கேள்வி கேட்டவரின் பதிலைக் கொண்டே அவரின் கேள்விக்கு பதில் சொல்லிவிடலாம். இந்த யுக்தி பட்டிமன்றத்தில் நன்றாக உதவும். அதையே இங்கே உபயோகித்தேன்.
தமிழ் பித்தரே, தங்களுக்கு சமயத்தைக் கண்டால் வெறுப்பு என்று எனக்கு நன்றாகத் தெரிகின்றது. இதற்க்கு முதல் காரணமே படித்தரிந்தவர்களிடம் ஆலயங்களில் செய்யப்படும் கிரியைகளில் நம்பிக்கை இழந்து வெகு நாளாகிவிட்டது. இங்கே ஆரம்பத்தில் பிராமணின் ஆதிக்கம். இப்பொழுதோ, பிராமணிடம் கற்றறிந்த தென்னிந்திய அர்ச்சகர்கள் அவனுக்கு சரி நிகராக பணம் சம்பாதிக்கும் நோக்கில் தெய்வத்தையே ஒரு விலை பேசி விற்று விட்டான். இந்திந்த பூஜைக்கு இவ்வளவு கட்டணம். இந்திந்த பூஜை செய்தால் இன்னின்ன பலன் கிடைக்கும் என்று மாக்களை மயக்கி வைத்துள்ளனர். இத்துடன் சமயத்தில் பல்வேறு மூட நம்பிக்கைகளை இணைத்து ஒரு “Rojak” கலவையாக்கி கொடுத்தால் இன்னும் நன்றாக வியாபாரமாகும், நன்றாக பணம் சம்பாதிக்கலாம் என்று பிராமணர், அதற்க்கு அடுத்து நிற்கும் பிராமணர் அல்லாத தென்னிந்திய அர்ச்சர்ககள் (தமிழர், தெலுங்கர், மலையாளிகள்), இவர்களுடன் ஆலய நிர்வாகங்கள் ஒன்று கூடி கூட்டுக் களவானி திட்டம் போட்டு செயல்பட்டதாலே அறிவார்ந்த தமிழர்க்கு சமயத்தின் மீது வெறுப்பேறி நாத்திக வாதிகளானார்கள். இதில் தமிழ் நாட்டில் தோன்றிய திராவிட இயக்கத்தினர், ஆரிய எதிர்ப்பு என்ற போர்வையில் தமிழர்களுக்கு சமயமோ, கடவுளோ இல்லை என்று வாதாடினர். இவர்களின் உண்மையான நோக்கம் கடவுள் இல்லை என்பதில்லை. அன்றைய காலக் கட்டத்தில் இவர்களுக்கு ஆரியரியரை எதிர்க்க வலுவில்லாத காரணத்தினால். அவர்களின் கட்டுபாட்டுக்குள் இருந்து தமிழர்களை மீட்க ஆலயக் கிரியைகளையும் சமய நம்பிக்கையையும் புறந்தள்ள வேண்டி வலியுறுத்தினர். மூட்டைப்பூச்சிக்கு பயந்து வீட்டைக் கொளுத்தினர். கட்டுரையாளரின் கடைசி இரண்டு பத்திகளைப் படித்து அதில் இருக்கும் கருத்துக்களை உள்வாங்கினால் தங்களின் நாத்திகவாதத்தில் இருக்கும் தவற்றை உணருவீர்கள். திருஞானசம்பந்தரைப் பற்றி தாங்கள் கேட்ட கேள்விகளுக்கு இன்றிரவு பதில் எழுதுகின்றேன்.
“எங்கள் பகைவர் எங்கோ மறைந்தார் இங்குள்ள தமிழர்கள் ஒன்றாதல் கண்டே…” எனும் பாரதிதாசனின் வைர வரிகளுக்கொப்ப தமிழ்பித்தரே… தாங்களும் தேனீயும் உணர்வாலும் மொழியாலும் ஒன்றுபடுங்களேன். உங்களைப்போலவே தேனீயும் நல்ல இனமானமிக்க தமிழுணர்வுள்ள தமிழர். சாதிய உணர்வே இல்லாதவர். சமயப் பற்றாளர்களில் இவரைப்போல பகுத்தறிவு சிந்தனை உள்ளவரை காண்பது அரிது. சமயத்தோடு தமிழையும் உயர்த்வேண்டும் எனும் கொள்கையாளர். ஆக, நமக்குள்ளே வெறுப்பு வேண்டாமே. அடுத்து , எல்லா பார்ப்பணரும் பொல்லாதவர்கள் அல்லர். மதவெறி பிடித்த பார்ப்பணரும், பார்ப்பணியமுமே தமிழரின் பகைவர்.
ஆஸ்தீகர்கு, புதிய தமிழ் வருட பிறப்பு வாழ்த்துக்கள்,எல்லாம் வல்ல இறைவன் நம்மை காப்பாராக,வாழ்க நாராயண நாமம்.ஆதிகாலையில் ஆலயம் சென்று மருந்து நீர் பெற்று வீடுவந்து குடும்ப வுருப்பினர் அனைவரும் பகிர்ந்து நீராடி,வாசனை திரவியம்,தூய்மையான ஆடை வுடுத்தி தாய் தந்தை,பிதுர்கள்,குருவை வணங்கி ஆலயம் சென்று ஆதியை போற்றி,இனிப்பு வகை வுண்டு புது வருட பிறப்பில் சாதி சனத்துடன் கூடி மகிழவும்,வாழ்க நாராயண நாமம்.
தமிழ் பித்தரே, கடவுள் என்று ஒரு சக்தி உங்கள் உயிர்க்கும் மேலாக இருக்கின்றது என்று கூறினேன். ஆனால், தாய் தந்தையரை பேணாதே என்று எங்காவது சொன்னேனா?. தாய் தந்தையரை வணங்கு. அவர்கள் உமக்கு தாய் தந்தையராக வர வாய்ப்பளித்த அந்த இறைவனையும் வணங்கு. பணத்தை தேடு, அந்த பணத்தைக் கொண்டு உமது வாழ்க்கை வசதிகளை தேவைக்கேற்றவாறு பெருக்கிக் கொள். இது உலகியல் இன்பம். இதை இப்பிறவியில் அனுபவிப்பது உன் உடம்பு எனப்படும் சடப் பொருள். உம் உயிர் உடலை விட்டுப் பிரியும்போது அந்த உடம்புக்கு எவ்வொரு மரியாதையும் கிடையாது. நான் சொல்வதை நீங்கள் நம்பவில்லை என்றால், இறந்த ஒருவரின் சடலத்தை / சவத்தை (பேரும் மாறிவிட்டது பாருங்கள்) 24 மணி நேரத்திற்கு மேல் வைத்திருந்தால் இலவு வீட்டிற்கு வந்தவர்கள் எல்லாம் எப்பதான் இந்த சடலத்தை / சவத்தை எடுக்கப் போகின்றார்களோ என்று அங்கலாய்ப்பார்கள். அந்த அளவே இந்த உடம்புக்கு உள்ள மரியாதை. தொடரும்.
காயீக்கு… எனது பார்ப்பண சித்திரைப் புத்தாண்டு வாழ்துக்கள். நாரதனும் பகவானும்போல இந்த உங்கள் புத்தாண்டில் ஒருமனம் ஒத்து இன்பமாக வாழ வாழ்த்துகிறேன்.
சிவநெறியில் இறை வழிப்பாடு என்பது உங்களின் உயிர் அனுபவிக்க வேண்டிய இன்பத்தைக் குறிப்பது. பிறவாக் கடல் நீந்துவது என்பது உங்கள் உயிர் மென்மேலும் பிறந்து, பிணி மூப்பு (சாவு) என்ற வினைபயனில் உழன்று நிற்காமல் முத்தி என்னும் பேரின்பத்தில் இறைவனடி சேர்ந்து நிற்பது. இது தாங்கள் சம்பாரித்து சேர்த்து வைத்த பணத்தால் விலை கொடுத்து பெற இயலாதது. சிவத்தை உணர்ந்து, சிவ உணர்வில் நிற்பவர்களும் இதை நன்கு அறிவார்கள். யாமும் சிவ உணர்வில் நின்று அதன் இன்பத்தை படிப்படியாக உணர ஆரம்பித்து விட்டேன். நீங்கள் சொல்லும் பணம் எம்மிடமும் தேவைக்கேற்ற அளவில் உள்ளது. நீங்கள் சொல்லும் மனைவி மக்களும் ஒருங்கே பெற்று நிம்மதியான வாழ்க்கை எமக்கும் உள்ளது. ஆனால் உங்களுக்கும் எமக்கும் என்ன வித்தியாசம்?. சிவத்தை உணர்ந்து எமது ஐம்பொறிகளை அடக்கி ஆள கற்றுக்கொண்டு இன்பத்தையும் துன்பத்தையும் சரிசமமாக நோக்க கற்று வருகின்றேன். எல்லாம் வல்ல எம்பெருமானின் கருணையால் இது இப்பிறவியில் சாத்தியமாகுமானால், எம் உயிர் அச்சிவபெருமானின் பாதத்தை சென்றடைய பாக்கியம் கொண்டதே. “வீடு வரை உறவு, காடு வரை பிள்ளை, கடைசி வரை யாரோ” என்று கண்ணதாசன் சொன்னது உங்கள் உடம்புக்காக அல்ல மாறாக உங்கள் உயிரை நோக்கி சொன்னது. நான் சொன்னாதான் கேட்க மாட்டேன் என்கிறீர்கள். கண்ணதாசன் சொன்னதையாவது கேளுங்கள் தமிழ் பித்தரே!. .
ஜே.வி.பி. தமிழ் பித்தரிடம் யாம் கருத்து பரிமாற்றம் செய்து கொள்வது எந்த ஒரு காள்புணர்ச்சியும் இல்லாமல் செய்வது. எழுதியது எவ்வாறானாலும் யாம் அவரை நண்பராகவே பார்க்கின்றேன். எப்படி தாங்கள் முன்பொருமுறை தமிழன்பால் சீர்தூக்கி எம்மை மன்னித்தீர்களோ, அதைப்போலவே எங்கள் உரையாடலும் என்று கொள்க.
இன்பமே சூழ்க, எல்லோரும் வாழ்க.
என்னை இப்படியெல்லாம் எழுத வைத்த (படைத்த ) சிவனும்
…………….கதான் இருக்கணும்.
திருஞானசம்பந்தர் கடவுள் அல்ல மாந்தாராக பிறந்து அவர்தம் உயிர் முத்திபேறு கிடைக்கப் பேறு பெற்றவர். சிவபெருமானே தம் திருவிளையாடலின் வழி 63 நாயன்மார்களை நாம் அறிய வழிவகுத்தார். உடளவில் ஒரு பிராமணரின் வம்சாவளியில் பிறந்தவராயினும், உயிர் அளவில் அவர் நின்றது சிவநெறியில். “ஒருநெறிய மனம் வைத்துனர் ஞானசம்பந்தன் (1.1.11) என்று தன்னை சிவநெறியாளராக வெளிப்படுத்தியதே அதற்குச் சான்று. தொடரும்.
திருஞானசம்பந்தர் இந்த சமுதாய முன்னேற்றத்திற்கு என்ன செய்தார்?. வெறும் சிவ தோத்திரங்களை அளித்ததுதான் அவரது சமுதாய தொண்டா என்ற கேள்விக்குப் பதில். குறித்துக் கொள்ளுங்கள். (1) எவ்வொருவரும் அறிவுச் செருக்கால் அகந்தைக் கொள்ளக் கூடாது என்பதற்கு தமது பதிகத்தின் 9-வது பாடலில் பிரம்மனும் திருமாலும் அடி முடி தேடி ஓய்ந்ததை உணத்தினார். (2) நேரம் காலம் (சோதிடம்) பார்த்து செயல்படுவோர்க்கும், மூட பழக்கத்தை விட்டொழிக்கவும் “வேயுறு தோளி பங்கன்” என்ற கோளறு பதிகத்தைப் பாடினார் (3) அன்பே அறவழி என்பதனை மாந்தர்களுக்கு உணர்த்த அகத்திணையில் அவர் பாடிய பாடல்கள் ஏராளம் (4) சமண பௌத்த மதங்கள் துறவி வாழ்க்கைதான் வினைபயனை அறுக்க வல்லமை பெற்றது என்று வாதிட இல்லற வாழ்க்கையிலேயே வீடு பேற்றை பெற முடியும் என்பதனை “மன்னில நல்ல வண்ணம் வாழலாம்” என்ற பதிகத்தின் வழி உணத்தினார். இறைவன் இருக்கின்றான் என்று மட்டும் சமயம் உணர்த்துவதில்லை மாறாக வாழ்க்கையில் நம்பிக்கையும் பிடிப்பும் இருக்க வேண்டும் என்பதனையும் உணர்த்துவது இப்பாடல் (5) தனி மனித வாழ்வில் ஏற்பட்ட துன்பங்களை நீக்கிட அவர் ஆற்றிய சமூகத் தொண்டு. அவ்வறாரே மற்ற சிவனடியார்களும் இருக்கத் தூண்டியது (பூம்பாவையை உயிர்பித்தது, அரவம் தீண்டிய வணிகனை உயிர்பித்தது etc) (6) சமணர்களை ஒடுக்கி, சிவநெறி பாண்டிய மண்ணில் வாழ்வாங்கு வாழச் செய்து தமிழரின் சைவ சமயத்தை ஓங்கச் செய்தது (7) கடைச் சங்கத்திற்கு பிறகு பக்திநெறியில் தமிழை வளர்த்தது, அதன்பால் சோழ, பாண்டிய நாட்டின் இயற்க்கை வளத்தை நாம் அறிந்துக் கொள்ள வழி வகுத்தது (8) சாதி குலம் கோத்திரம் காணாமல் “ஆஉரித்துத் தின்றுழலும் புலையரும்” சிவனடியார் என்றால் அவர்கள் நாம் வணங்கும் நடமாடும் தெய்வங்கள் என்றார் (9) தன்னை “தமிழ்ஞான சம்பந்தன்” என்று பல்லிடங்களில் பாட, தான் பிறப்பால் தமிழனே என்று அஞ்சாமல் தமிழினத்தை உயர்த்தி வாழ வைத்தது (10) மெய்யறிவே முத்தி நெறிக்கு வழிகாட்டுவது என்று சிவதோத்திரங்களில் முழங்கியது. இப்படி பல்வேறு செய்திகளைத் தாங்கி நிற்பது சம்பந்தனின் தேவாரம். “சொல்லிய பாட்டின் பொருள் உணர்ந்து” என்று மாணிக்கவாசகர் சொல்லியதை கேட்காமால், தேவாரங்களைப் பொருள் உணர்ந்து படிக்காமல் எப்படி வரும் இறை நம்பிக்கை? எப்படித் தெரியும் தமிழர்க்கு உரிய சமயம் “சைவ சமயம்” என்று? இக்கருத்துக்களை சேகரிக்க உதவிய “சைவம் வளர்த்த தமிழ்” பேராசிரியர் பானுமதி ரமேஷ் எழுதியது மற்றும் பேராசிரியர் தி. லீலாவதி எழுதி அண்ணாமலை பல்கலைக்கழகம் வெளியீடு செய்த (1987) “திருஞானசம்பந்தர் திருப்பாடல்கள்” என்ற நூல்களின் ஆசிரியர்களுக்கு எமது நன்றி உரித்தாகுக. சித்தாந்தப் பள்ளியில் தேவாரங்களின் பொருளை பிழையற உணர்த்திய வித்தியா குருவுக்கும் எமது நன்றி உரித்தாகுக.
இறைவனை வழி படுவது சைவ நெறி என்று சொனால் தாய் தந்தையை அம்போன்னு விதுவிடுவது எற்று பொருள் படுத்துவது தவறு. ஒரு தாயும் தகப்பனும் ஒரு குழந்தையை வளர்பதற்கு எவலோவு பாடுகிறார்கள் என்பது அனைவரும் அறிந்தவை. இறைவனை வலிப்பதால் தாய் தகப்பனை மறந்து விட உலகத்தில் எந்த சமயயமும் கற்று தரவில்லை. தை தன்டயரை முதுயோர் இல்லத்தில் விடும் மக்கள் சமய இடுபாடு உடையவர்கள் அல்ல. அப்படியே அவர்கள் சமய இடுபாடு உடையவர்களாக இருந்தால் அவர்கள் பண்பற்ற நாளையில் இறை வழிபாடு செய்கிறார்கள் என்று பொருள். அது அவர்களுக்கு எதவித பயனும் அல்லிகது. சமயத்தை மறுப்பவர்கள் சமயவாதிகள் செய்யும் சில தவறுகளை வைத்துகொண்டு சமயத்தை குறை சொல்லாதிர்கள். தேனீ அவர்கள் குறிப்பித்தது போலே, இன்று பலே ஆன்மிக வாதிகள் முதைபூசிக்கு பயந்து கொண்டு விட்டை கொழுதுகிரர்கள்.
திருவள்ளுவர் முதல் பாத்து குரலில் இறைவனை பற்றி குரிபிதுளர். ஆய்தம் குரல்: இருள்சேர் இருவினையும் சேரா இறைவன் பொருள்சேர் புகழ்புரிந்தார் மாட்டு. இத குரலில் வள்ளுவர் இறைவனை பற்றி குரபதுள்ளது. இதற்கு என்ன சொல்கிறீர் தமிழ் பித்தரே?
பான்டி,மனிதர்களுக்கும் விலங்குகளுக்குமிடையே என்ன வேற்றுமையோ,அதே அளவு வேற்றுமை அறிவு நூல்களை படித்தவர்களுக்கும்,அந்த நூல்களை படிக்காதவர்ளுக்கும் இடையே உண்டு,வல்லுவம்.
// ஆரிய மயப்பட்ட சைவ சமயத்தை மீட்டுப் புத்துருவாக்கம் செய்யும் முயற்சியில் திருஞானசம்பந்தர், திருநாவுக்கரசர், சுந்தரர், மாணிக்கவாசகர் என்னும் நால்வர் பெருமக்கள் அரும்பாடு பட்டனர். சமண, பெளத்த மதங்களின் வலிமையை எதிர்கொள்ள இயலாத நிலையில் வைதீகத்தைப் பகைத்துக் கொள்ளாமல் அதே வேளையில் சைவத்தையும் தமிழையும் மீட்கும் போராட்ட முறையை மேற்கொண்டனர்// முனைவர் எவ்வளவு திறமையாக சமாளிக்கிறார். வரலாற்றை திசை திருப்புகிறார். நால்வருக்கு முன் தமிழர்கள் வசம் இருந்த அனைத்து சமய ஞான செல்வங்களையும் பார்ப்பணர்களிடம் தாரை வார்த்துக் கொடுத்ததே இந்த பிள்ளையவர்களும் அப்பரரும்தானே. அவர்களுக்கு பிறகுதான் தமிழகம் ஆரிய வசம் ஆனது. தமிழ் தேசம் ஆண்ட மன்னர்கள் ஆரிய அடிமைகள் ஆக சைவம் போற்றும் இந்த நாள்வர்தான் முழு முதல் காரணம். தங்கள் பதிகங்களில் தில்லை வாழ் அந்தனர்களை போற்றியும் நான்மறை ஓங்குக என்று முழங்கியும் ஆரிய உபதேசம் செய்த இவர்கள்தான் சைவ குருமார்களாக இருக்கும் போது , சைவ சமயம் வைதீகத்திர்க்கு எதிரானது என்பதெல்லாம் சூழலுக்கு ஏற்ப இட்டுக் கட்டும் கருத்துகள் ஆகும். தமிழனுக்கு தெய்வ சிந்தனை இருந்தது உண்மை. ஆனால் அது சைவம் அல்ல.
பினாங்குகாரரே தங்களின் கருத்துலேயே உள்ளது தங்களின் குற்றச்சாட்டுக்குப் பதில். “அவர்களுக்கு பிறகுதான் தமிழகம் ஆரிய வசம் ஆனது” என்பது இந்த நால்வர் பெருமக்களின் காலத்துக்குப் பிறகு தமிழர்கள் சிவநெறியில் தொடர்ந்து நிற்கத் தவறியதால் அங்கே ஏற்பட்ட சமய குறைபாட்டை ஆரியர்கள் நிரப்பினார்கள் என்பதே உண்மையாகும். தங்களின் மற்ற கருத்துக்களுக்கு இன்றிரவு பதில் அளிக்கப்படும்.
“தமிழர்களுக்கு தெய்வ சிந்தனை இருந்தது உண்மை. ஆனால் அது சைவம் அல்ல” என்ற பினாங்குகாரரின் கூற்றில் இருந்து தெரிகின்றது அவர் சைவ சமயத்தை முழுமையாக அறியாமல் கேள்வி ஞானத்தைக் கொண்டு கருத்து எழுதியுள்ளார் என்பது. இதற்கும் இன்றிரவு பதில் அளிக்கப்படும்.
தேனி எழுதுங்கள் காத்திருக்கிறேன்.
பினாங்குக்காரரும் தேனீயும் காணும் கருத்துக் களம் அருமையாக இருக்கிறது. இருவரின் வாதங்களும் கருத்துக் களத்திற்கு நல்ல முன்னுதாரணமாக அமைந்துள்ளன. நான் மிகவும் விருப்பமாகவும் உன்னிப்பாகவும் இருவரின் வாதங்களையும் கவனிக்கின்றேன். நெருடல் இல்லாமல் தொடர வாழ்த்துகள்! காயீக்கு… அறிவு நூல்கள் என்று தாங்கள் குறிப்பிடுவதில் இந்த நாரதர் பகவான் இருவரும் கூடிக்களித்த சித்திரைப் புத்தாண்டுப் பற்றிய சரிதத்தைச் சொல்லும் புராணமும் அடக்கமோ? அடியேனுக்கு தெளிவுபடுத்த வேண்டுகிறேன்! அதன் ஆழ அகலங்களைத் தாங்கள்தான் எனக்கும், செம்பபருத்தி வாசகர்களுக்கும், இந்தத் தமிழினத்திற்கும் அருள்கூர்ந்து விளக்கவேண்டும். நன்றி காயீ!
திரு பினாங்குக்காரன் அவர்களே வணக்கம். நால்வர் வாழ்த்த காலத்துற்கு முன்பு தமிழர்களுக்கு தெய்வ சித்தனை இருந்தது என்று நீங்கள் குரியது உன்னை. ஆனால் அது செய்வதுடன் சேர்த்து பல இருந்தனர். தொல்காப்பியர் நிலநங்களை ஐந்தாக வகுத்தார். ஐந்து நிலம்துகு ஐந்து தேவன்கள். குறிஞ்சி நிலதுற்கு முருகன், முல்லை நிலதற்கு திருமால், மதுர நிலதுற்கு இந்திரன், கடல் கரைக்கு வருணன் மற்றும் பாலவனதற்கு கொற்றவரை. தோடு சேது குல தேவைவம், ஊர் காவல் தெய்வம் போன்ற பல வெளிப்பாடு இருந்தது. இதுநான் சேர்த்து சிவா வல்லிபாடும் தலைதுக்கி இருந்தது.
ஆரிய வருகைக்கு முன்பு இந்திய பெருநிலம் முழுவதும் தமிழர்கள் வாழ்தனர். சிது நதி நாகரிகம் இருந்த இடத்தில தோண்டி ஆய்யு செய்தத பொது ஆயிரத்துக்கு மீர்பஅத்த சிவா லிங்கங்கள் கண்டு எடுக்க பட்டனர். இது ஓர் அதரம் சைவ சமயம் நால்வருக்கு முன்பே தமிழர்கள் மத்தியில் இருந்தது என்று.
திருவள்ளுவர் தமது ஒன்பதாவது குரலில் என்குணதான் என்று இறைவனை குரிபிடுகிண்டர். என்குணதான் என்றல் எட்டு குணங்கள் உடையவன் என்று பொருள். சைவ சித்தாந்தத்தில் இறைவனுக்கு எட்டு குணங்கள் உண்டு என்று குறிபிட்டு உள்ளது. திருவளுவர் நால்வருக்கு முன்பு வழ்தவர். அவர் களத்தில் சைவ சமயம் இருந்தது.