-முனைவர் ஆறு. நாகப்பன், மார்ச் 18, 2014
இந்து சமயம் அல்லது சைவ சமயம் எதுவாக இருந்தாலும் தமிழர் சமயம் குறித்த சரியான பார்வை இக்காலம் வரை எங்கும் பார்க்கப்படவில்லை. சமய விளிம்புகளின் இரு கோடிகள் மட்டுமே இது வரை பேசப்பட்டுள்ளன. முரட்டுத் தனமான நம்பிக்கைகள் ஒரு பக்கமும் அதே முரட்டுத்தனமான மறுப்புகள் ஒரு பக்கமும் காணப்பட்டன. காட்டப்பட்டன.
ஏதோ சில நூல்களின் அடிப்படையில் கட்டமைக்கப்பட்ட நம்பிக்கைகளே சமயங்களுக்கான பொதுத் தளம் என்பது பிழையல்ல. ஆனால் இது எல்லாச் சமயங்களுக்கும் பொருந்தாது. பலவாகிய இந்திய சமயங்கள் அனைத்தையும் ஆராய்வது இந்த இடத்தில் வேண்டாம் என்பதால் இரண்டே இரண்டு சிந்தனைக் கட்டுமானங்களை மட்டும் தேவைப்பட்ட அளவுக்கு பார்த்துக் கொண்டால் சமயம் குறித்த சரியான பார்வை ஒன்று கிடைக்கும் என்பது என் கருத்து.
முதலாவது இந்து சமயம் என்ற பொதுப் பெயரில் வைதீகம் விரித்திருக்கும் அகன்ற வலை. இருக்கு முதலிய வேதங்களின் அடிப்படையில் அமைந்த வைதீகப் பண்பாடு வேள்வி, வருணாசிரமம், சமற்கிருதம் ஆகியவற்றை உள்ளடக்கிய பிராமணீய வாழ்க்கை முறையைக் குறிக்கிறது. பிறப்பால் வரும் சாதிமையைப் போற்றுவது வருணாசிரமம் . இதுவே பிராமணீயத்தின் அடித்தளம்.
பிராமணீயம் இந்தியப் பெருநிலம் முழுவதும் பரவியது. உலகியல் செல்வம் அனைத்தும் பெறலாம் என்னும் வேட்கையை முன்னிறுத்தியதால் வேத வேள்வி தமிழ் அரசர்களையும் செல்வந்தர்களையும் விரைந்து கவர்ந்தது. இதன் வழித் தமிழ் நாட்டு அரண்மனைகளின் செங்கோல்களை வைதீகம் கைப்பற்றியது.
மற்றொன்று தமிழர் உருவாக்கிய மெய்ப்பொருள் சிந்தனை. மரபு சார் ஊர்த்தெய்வங்கள் பலவும் நம்பிக்கைத் தளங்களில் ஊன்றி நின்றன. குல தெய்வம் அல்லது இல்லுறை தெய்வம், காவல் தெய்வங்கள், வீரர்களுக்கான நடுகல் வழிபாடு போன்றவை தமிழரின் மரபு சார் மதங்கள் ஆகும். தொல்காப்பியம் குறிக்கும் குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல், பாலை என்னும் ஐவகை நிலத்திணைகளுக்கும் முறையே முருகன், திருமால், இந்திரன், வருணன், கொற்றவை ஆகியவை தமிழரின் தொன்மைத் தெய்வங்கள். இவற்றுள் இந்திரன், வருணன் என்பவை வைதீகத்தின் சாயல் பெற்றுத் திரிந்த பெயர்கள்.
சங்க காலத்தில் மரபு சார் சிறுதெய்வங்கள் பலவும் வழக்கில் இருந்த போது சிவபெருமான் ‘பிறவா யாக்கை பெரியோன்’ என இளங்கோவடிகளால் குறிப்பிடப்பெற்றார். சிவபெருமானின் தோற்றப் பொலிவைக் குறிக்கும் தொடர்கள் பலவும் சங்க இலக்கியங்களில் காணப்படுகின்றன.
நம்பிக்கை சார்ந்த சிறுதெய்வங்களின் வழிபாடு மலிந்திருந்த காலத்தில் அறிவு சார்ந்த சிவ வழிபாடு சான்றோர் சிந்தனையில் வளர்ந்து சித்தாந்தம் என்ற மெய்யறிவுத் துறையாக அமைந்தது.
கடவுளுக்குக் கடவுள் தேவையில்லை, சடப் பொருள்களுக்கு அறிவும் உணர்வும் இன்மையால் அவற்றுக்கும் கடவுள் தேவையில்லை. ஆகவே சடப் பொருள்களைக் கருவி கரணங்களாகக் கொண்டு உலகைத் துய்க்கும் அறிவும் உணர்வும் உடைய உயிர் என்னும் பொருள் இருக்கத்தான் வேண்டும் என்பது உயிர் உண்மையை நிறுவும் வாதம். இல்லது தோன்றாது என்னும் வாதத்தால் உள்ளதாகிய மூலப் பொருள் ஒன்றிலிருந்தே உலகம் தோன்றியிருக்க வேண்டும் என்பது மாயையை நிறுவும் வாதம்.
உலகின் இருப்பை ஆராய்ந்து அவன், அவள், அது என்னும் அவயவப் பகுப்புடையதாய் இருக்கும் இவ்வுலகம் சடமாதலால் தானே தோன்றி, நின்று அழியாது என்றும் எல்லா உலகங்களையும் முற்றாக அழிக்கும் ஆற்றல் உள்ளவனே உலகைப் படைப்பவனாயும் உலகுக்கு ஆதியாயும் இருப்பான் என்றும் கடவுள் இருப்பைச் சைவம் நிறுவுகிறது.
உயிர், மாயை, கடவுள் தவிர வேறு இரண்டு பொருள்களும் கடவுளால் படைக்கப்படாமல் என்றும் உள்ள பொருள்களாக உள்ளன. என்றும் உள்ள உயிர்களின் இயல்பாகிய அறிவு, இச்சை, செயல் ஆகிய ஆற்றல்களை மறைத்து அவற்றுக்கு அறியாமையை ஏற்படுத்தியிருக்கும் ஆணவம் என்பது ஒன்று. ஆணவத்தை அகற்றுவதற்கு உயிர்களைச் செயல்படுத்திப் பக்குவப்படுத்தும் வினை மற்றொன்று.
அறிவு சார்ந்த இந்த வாதங்களால் உயிர், மாயை, கடவுள், ஆணவம், வினை ஆகிய பொருள்கள் தோற்றம் அழிவு இன்றி என்றும் இருப்பவை என்று கூறுவது சித்தாந்தம். கடவுளின் இருப்பைப் பதி உண்மை என்றும் கடவுளின் சிறப்பைப் பதி இலக்கணம் என்றும் சித்தாந்தம் விரித்துப் பேசியது.
என்றும் உள்ள உயிர்களுக்கு என்றும் உள்ள மாயையிலிருந்து உடல், உலகங்கள், உயிர்க்கான நுகர்ச்சிப் பொருள்களை இறைவன் படைத்துக் கொடுக்கிறான். படைத்தவற்றை உயிர்கள் நுகர்ந்து பக்குவப்படும் வரை காக்கின்றான். உயிர்கள் பிறந்தும் இறந்தும் பக்குவப்படும் வரை தன்னை மறைக்கின்றான். பிறப்பு இறப்பிலிருந்து இளைப்பாறும் பொருட்டு படைத்தவற்றை அழிக்கின்றான். பக்குவப்பட்ட உயிர்களை இடையறா இன்பத்தில் நிலைக்க அருளுகின்றான். இவ்வாறு படைத்தல், காத்தல், மறைத்தல், அழித்தல், அருளல் என்னும் ஐந்தொழிகளை உயிர்கள் பொருட்டு இறைவன் செய்தபடி இருக்கின்றான் என்பது சித்தாந்தம்.
இருபத்தெட்டு சைவ ஆகமங்களைத் தனக்கு வேதமாய்க் கொண்டது சிவனைப் போற்றும் சைவம். ஆகமங்களின் செயல்முறை நூலாக அமைவது பன்னிரு திருமுறைகள். இவ்விரண்டு நூல்களின் வழியில் அமைந்தவை பதினான்கு மெய்கண்ட சாத்திரங்கள். இவற்றுள் ஆகமம் விதி நூல், திருமுறை செயல் நூல், மெய்கண்ட சாத்திரங்கள் சைவத்தின் இலக்கண நூல்கள். மற்றோர் முறையில் கூறினால் சைவத்தின் வேதம் ஆகமம், மெய்யறிவு நூல் மெய்கண்ட சாத்திரங்கள், மெய்யுணர்வு (பத்தி) நூல் திருமுறைகள்.
சைவம் இமயம் முதல் குமரி வரை பல அடைமொழிகளைக் கொண்டு விரிந்தது. என்றாலும் தென் தமிழ் நாட்டில் நுண்ணிய தத்துவத் துறையாக செம்மைப்பட்டது. இதன் வளத்தை இந்தியச் சிறு மதங்கள் யாவும் பங்கிட்டுக் கொண்டன. கணபதியைப் போற்றும் காணாபத்தியம், முருகனைப் போற்றும் கெளமாரம், சக்தியைப் போற்றும் சாக்தம் ஆகிய மதங்கள் யாவும் முறையே சிவனின் பிள்ளைகள் என்றும் மனைவி என்றும் உறவு முறைகளால் தம் நிலையை உறுதிப்படுத்திக் கொண்டன.
உறவுமுறைகளை வலிமைப்படுத்த ஏராளமான புராணங்கள் உருவாக்கப்பட்டன. தமிழர் சமயக் கிரியைகளோடு வைதீக வேள்விக் கிரியைகள் கலந்தன. ஆரிய பிராமணர்களின் தொழில் வளம் கருதி உருவாக்கப்பட்ட கிரியைகள் அறிவுக்கு ஒவ்வா நம்பிக்கைகளை உருவாக்கின. இன்றும் உருவாக்கிக் கொண்டிருக்கின்றன.
தனிப்பெரும் சமயமான சைவம் தென்னிந்தியச் சிறு சமயங்கள் உயிர்த்து உறுதி பெற உதவிய காலத்தில் வைதீகம் சைவம் உட்பட அனைத்துச் சமயங்களையும் வாரி விழுங்கித் தன் வயிற்றில் அடக்கிக் கொண்டது. இதனால் வேதங்களை ஏற்காத சமணம், பெளத்தம் அவைதீகம் என்றும் மற்றவை அனைத்தும் வைதீகம் என்றும் ஆரிய மயப்பட்டன.
இக்காலத்தில் தமிழரின் பழஞ்சமயங்களான கிராமத்துத் தெய்வங்கள் வைதீகத்தின் கைகளுக்குத் தப்பித் தம் மரபுகளைக் காத்துக் கொண்டன. சிற்றூர்களைக் கடந்து விரிந்த சமயங்கள் வைதீகத்தில் கலந்து உரு மாறின. முருகன் சுப்ரமணியன், கந்தன் என்றும் திருமால் விஷ்ணு என்றும் மாற்றம் கண்டனர். நிலத்திணை கடந்து பொதுக் கடவுளாய் இருந்த சிவன் உருத்திரன் ஆனான். தமிழர் அமைத்த கோயில்களில் பிராமணர் பூசகராயும் சமற்கிருதம் பூசனை மொழியாகவும் ஆனது. சங்கம் வைத்துத் தமிழ் வளர்த்த அரசர்களே இதற்கெல்லாம் வழி கொடுத்து வணங்கி நின்றனர்.
ஆரிய மயப்பட்ட சைவ சமயத்தை மீட்டுப் புத்துருவாக்கம் செய்யும் முயற்சியில் திருஞானசம்பந்தர், திருநாவுக்கரசர், சுந்தரர், மாணிக்கவாசகர் என்னும் நால்வர் பெருமக்கள் அரும்பாடு பட்டனர். சமண, பெளத்த மதங்களின் வலிமையை எதிர்கொள்ள இயலாத நிலையில் வைதீகத்தைப் பகைத்துக் கொள்ளாமல் அதே வேளையில் சைவத்தையும் தமிழையும் மீட்கும் போராட்ட முறையை மேற்கொண்டனர்.
சமற்கிருத மொழியைத் தேவபாஷை என்று கூறும் பிராமண மரபில் வந்த திருஞானசம்பந்தர் தன்னைத் தமிழ்ஞானசம்பந்தர் என்று வலிந்து பல பாடல்களில் குறிப்பிட்டார். வைதீக நெறிக்கு ஒவ்வாத உருவ வழிபாட்டு மரபை மீட்டார். தமிழால் சிவபெருமானைப் பாடும் பதிகங்கள் இயற்றினார். இவர் வழியில் திருநாவுக்கரசர் மேலும் உறைத்தெழுந்தார்.
கிரியைகள் மட்டும் வழிபாடு ஆகிவிடாது, உண்மை அன்பே வழிபாடு என்றார். ‘ நெக்கு நெக்கு நினைபவர் நெஞ்சுளே புக்கு நிற்கும் பொன்னார் சடைப் புண்ணியன்’ (5.90.9) என்றார். ‘சாத்திரங்கள் பல பேசும் சழக்கர்காள், கோத்திரமும் குலமும் கொண்டு என்செய்வீர்’ (5.60.3)என்று சமூக நீதியுரைத்த திருநாவுக்கரசர் ‘நாமார்க்கும் குடியல்லோம் நமனை அஞ்சோம்’ (6.98.1)என்று முடியரசை எதிர்த்த முதல் குடியரசர் ஆனார்.
‘அங்கமெலாம் குறைந்தழுகு தொழுநோயராய்
ஆவுரித்துத் தின்றுழலும் புலையரேனும்
கங்கைவார் சடைக்கரந்தார்க்கு அன்பராகில்
அவர்கண்டீர் நாம்வணங்கும் கடவுளாரே (6.95.10)
என்று சாதிமை கடந்த பத்திமையை அப்பர் முன்னைலைப்படுத்தினார்.
இவர்கள் வழியில் வந்த சுந்தரர் இல்லறத்தினின்றும் இறைவன் திருவடியைச் சென்றடைய முடியும் என்று வாழ்ந்து காட்டினார்.
‘சாதி குலம் பிறப்பென்னும் சுழிப்பட்டுத் தடுமாறும்
ஆதம் இலி நாயேனை…’ (8.கண்டபத்து 5)
என்று சாதி, குலம், பிறப்பால் மக்களை உயர்ந்தோர் தாழ்ந்தோர் எனக் கூறுவதை இழிந்த பண்பு எனச் சாடினார் மாணிக்கவாசகர்.
இவ்வாறு நால்வர் பெருமக்களும் ஏனைய சைவச் சான்றோரும் ஆரிய வருணாச்சிரமத்தைக் கண்டிக்கும் போராட்டத்தின் மறுதலையாகச் சைவம் குறிக்கும் ‘ஒன்றே குலமும் ஒருவனே தேவனும்’ (10.2072) என்ற மனித குல ஒருமைப்பாட்டை வலியுறுத்தினர்.
ஆரிய மாயை என்று கூறி வைதீகம் கலந்த தமிழர் சமயங்களைப் புறக்கணிக்கும் தமிழ்ச் சிந்தனையாளர் ஆரியமும் வைதீகமும் நீங்கிய தமிழர் சமயங்களை அடையாளம் கண்டு மீட்டெடுக்கும் பணியை மேற்கொள்ள வேண்டும். இவற்றுள்ளும் சைவம் தமிழர் வளப்படுத்திய தத்துவக் களஞ்சியம் என்பதை உணர்ந்து அதனைப் போற்றிக் கைக்கொள்ள வேண்டும்.
‘தமிழருக்குச் சமயமே இல்லை’ என்ற முரட்டு வாதம் தமிழரின் சமயம் இருந்த இடத்தில் அந்நிய மதங்களுக்கு ஆட்சி பீடங்களை அமைத்திருக்கிறது. தமிழர் சமயங்களைச் சார்ந்தோரைப் பார்த்து ‘கடவுள் இல்லை, இல்லவே இல்லை’ என்போர் அந்நிய மதங்களைச் சார்ந்துவிட்ட தமிழரையும் தமிழரை மதம் மாற்றும் அந்நியரையும் பார்த்து அப்படிச் சொல்வதில்லை என்பதால் கடவுள் மறுப்பாளர் வந்தாரை வாழ வைப்பதை மறைமுகப் பணியாகச் செய்து கொண்டிருக்கின்றனர் என்பதை உணர்த்த வேண்டியுள்ளது.
தமிழரின் மரபு சார்ந்த சமயங்களை வைதீகப் பிடியிலிருந்து மீட்கும் முயற்சியில் தோற்றுப் போனவர்கள் தமிழருக்குச் சமயமே இல்லை என்று மறுதலிப்பது தமிழரின் பண்பாட்டு வரலாற்றை ஊனப்படுத்திவிடும். குறிப்பாகச் சைவ சமயத்தையும் சைவ சித்தாந்தத்தையும் மறுதலிப்பது ஆய கலைகள் அறுபத்து நான்கையும் அறிந்த தமிழனுக்குக் கடவுள் பற்றிய சிந்தனை மட்டும் இல்லை என்று கூறுவதாய் முடியும். இப்பார்வையினின்று மாறி வைதீகப் பிடியிலிருந்து சைவத்தை மீட்க வேண்டும். மீட்டால் சைவம் அறிவார்ந்த சமயமாகச் சமய உலகைத் தலைமை கொள்ளும் என்பது உறுதி.
பினாங்குகாரரே, “தமிழ் தேசம் ஆண்ட மன்னர்கள் ஆரிய அடிமைகள் ஆக சைவம் போற்றும் இந்த நாள்வர்தான் முழு முதல் காரணம்” என்று ஆதரமற்ற குற்றத்தைச் சுமத்தினீர். திருஞானசம்பந்தர் தான் வாழ்ந்த 6-ம் நூற்றாண்டில், அகம்பாவத்தில் தன்னிலை இழந்த இலங்கை வேந்தன் இராவணனை சிவபெருமான் ஒடுக்கியதை தனது பல்வேறு பதிகங்களில் 8-வது பாடலாக பாடி, அக்காலத்தில் வாழ்ந்த பாண்டிய, சோழ மன்னர்களுக்கு நினைவுறுத்தி வந்ததன் நோக்கம் இம்மன்னர்கள் அறவழியில் கோலோச்ச வேண்டும் என்பதற்காகவே. சமண மதத்தில் ஊறித் திளைத்த கூன்பாண்டியனுக்கு ஏற்பட்ட வெப்ப நோயைப் போக்கி பாண்டிய மண்ணை சிவநெறியில் நிலைக்க வைத்த திருஞானசம்பந்தர் ஆரிய மதத்திற்கு வழி கோலினார் என்பது ஆதாரமற்ற குற்றச்சாட்டு. இரவில் தொடரும்.
சங்க கால இலகியம்மான புரனனுர்ரிலே ஒரு பாதில் சிவனை பத்ரி குறிப்பு உண்டு. ‘பணிமியர் அந்தை நின்குடையே முனிவர் முக்கட் செல்வர் நகர்வலம் செயற்கே (புறம்,6)’. இதில் ‘முக்கட் செல்வர்’ என்ற வார்த்தை மூன்று கண்களை உடையவன் என்று பொருள். சிவனின் அடையாளங்களை கொண்டு சிவனை பற்றி சொலும் மரபு இருந்தன. இதிலிர்த்து நாம் தெரிந்து ஒல்ல வேண்டியது, சிவனும், சிவவழிபாடும் சங்க கால தமிழர்கள் மத்தியில் அழமான புளகம் உடையது. சிவனை பதறிய அடையாளங்களையோ, அல்லது செயல்கள்ளையோ சொல்லும் போதே அவர்கள் புரிந்து கொள்வார்கள். சங்க காலம் என்பது சைவ சமயம் தலை துக்கி இருந்த காலம். பிறகு ஆரிய வருகையால் சைவம் வைதிக பிடியுள் சிக்கிகொண்டது. சமணர் போதர்கழலும் மறுக்கபதடு. பல தமிழர்கள் சமணர்கல்லாகவும் போதர்கலாகவும் மதம் மாரின்னர். இன்னையில் சைவ சமயம் அழிய தொடங்கியங்கியது. அழிந்து கொண்டிருந்த சைவ சமயத்தை நால்வர் மிட்டு எட்டுதனர். நால்வர் மிட்டு எடுது கட்டி கர்த சைவ சமய, தமிழ் அரசர்கள், உலகியல் ஆசையை நிறைவேற்றும் வேள்வியின் மிது உள்ள மோகத்தினால் மறுபடியும் சைவத்தை வைதிக பிடிக்கு பூகவைது வித்தர்கள்.
ஒரு படகில் மூன்று பேர் ஒரு பயில்வான் ,ஒரு பிராமண அய்யர் ,ஒரு வக்கீல் பயணம் செய்தனர் ,அந்த படகை
படிப்பறிவு இல்லாத படகோட்டி செலுத்தினான் , படகு அக்கறைக்கு செல்லும் வரை பேசுவோம் என்பதற்காக
முதலில் அந்த வக்கீல் படகோட்டி நீ எவ்வளவு படித்திருக்கிராய் என்று கேட்டார் ,உடனே நான் பள்ளிக்கூடமே செல்லவில்லை அய்யா என்று படகோட்டி
பதில் கூறினான் , நீ அறவே அப்டிக்கவில்லை யா உன் வாழ்வில் கால்வாசியை நீ இலந்துவிட்டாய் என்றார் .
உடனே படிப்பு இல்லாத நீ தற்காப்பு கலையை கற்று இருக்கிறாயா என்று பயில்வான் கேட்டார் ,அதற்கு அந்த படகோட்டி அது எல்லாம் எனக்கு தெரியாது என்று கூறினார் ,
தற்காப்பு கலை தெரியாதவன் தன் வாழ்கையில் பாதியியை
இழந்தவன் என்று கூறியவுடன் ,சும்மா இருப்பான பிராமன அய்யர் , படகோட்டி உனக்கு சமயத்தை பற்றி ஏதாவது தெரியுமா என்று கேட்டார் அது எல்லாம் எனக்கு தெரியாது சாமி என்று கூறிய படகோட்டி நீங்க மூன்று பேர் என்னிடம் கேள்வி கேட்டர்கள் இப்போது உங்களை ஒரு கேள்வி கேட்கலாமா என்று கூறி , உங்க மூன்று அறிவாளிக்கும் நீந்த தெரியுமா என்று கேட்டான் . அந்த மூன்று அறிவாளிகள் தங்களுக்கு நீந்த தெரியாது என்றனர் .நீங்க ஏதேதோ வாழ்க்கைக்கு தேவை இல்லாதவற்றை படிச்சு இருக்கிறீர்கள் ,இந்த படகு எப்போதே ஓட்டை விழுந்து கொஞ்சம் கொஞ்சமாக மூழ்கி கொண்டு இருக்கிறது , வாழ்க்கைக்கு மிக முக்கியமான நீந்துதலை கற்காதலால் உங்கள் வாழ்கையின் முழு வதையும் கொஞ்ச நேரத்தில் இழ க்கப் லக்கப் போகிறீர்கள் என்று கூறிவிட்டு படகோட்டி நீந்தி கரைக்கு வந்து சேர்ந்தான ,அந்த மூன்று பெரும் நீந்த தெரியாமல் பரிதாமாக மூழ்கி செத்தார்கள் .அதனால் வாழ்க்கைக்கு எது தேவையோ அதை மட்டும் படியுங்கள் theni அவர்களே .சரியா நைனா .
ராமகிருஷ்ண பரமாத்மா சொன்னது,தினமும் கோவிலுக்கு குலித்துவிட்டு,பூ போன்ற பொருள்களுடன் ஆலயம் செல்லுமாம் ஒரு கோவில் யானை அப்போது எதிரே ஒரு பன்னி சகதியுடன் ஓடி வந்ததாம்,அதைகண்ட கோவில் யானை பன்னிக்கு ஒதுங்கி வழி விட்டதாம்,அதை கண்ட மக்கள் பெறுத்த ஆச்சரியத்துடன் விழித்தனர்,ஒரு பன்னியை கண்டு கோவில் யானையே பயப்படுதுயென்று.செம்ம காமடியாயில்லை.நீீர் சொல்வது வுண்மையாணால் வும் மனைவி மக்களும் எம் பெறுமான் கிருஷ்ணர் இச்சிக்கபட்டவையோ வும்மை பொருத்தமட்டில் வுண்மை தானே,நாராயண நாராயண.
ஆஸ்தீகரே,இன்று ஏன் சைவம் தேவை என்று எழுதும் வோய்,ஆரியனை விரல் காட்டி தப்பிக்க நினைக்காதீர் மக்கள் கம்ப்யூட்டர் காலத்தில் வாழ்கின்றனர்,இன்றின் நிலவரம் மிக சோசியலாகவே மக்கள் வாழ புரப்பட்டுவிட்டனர்.வேதம்,ஆகமம்,புராணம்,இதிகாசங்களை மக்கள் நம்ப மாட்டர்.திருக்குறலையாவது உதாரணம் காட்டி விமர்ச்சனம் வரையுங்கள்.அதை தொடர்ந்து ஆண்மீகத்தின் அவசியத்தை புகட்டலாம் புரியவைக்கலாம்.1=நிலையாமை,2=துறவு,3=மெய்யுணர்தல்,4=அவா அறுத்தல்.வுமக்கு புகழ் மீது மோகம் கொண்டதுபோல் தெரிகிறது,வும் கருத்து சபை ஏற வேண்டி தவிப்பது தெரிகிறது.1=நிலையாமையை கடக்காமல் இருக்குறீர்.தம் பொருளை தன் மக்களுக்கு கொடுப்பது வேறு பிறர்க்கு கொடுப்பது வேறு.ஒப்புரவறிதலுக்கும் ஈகைக்கும் வித்தியாசம் வுண்டு,வாழ்க நாராயண நாமம்.
தமிழ் பிதர் அவர்களே. நிங்கள் எல்லுதிய கதையை படித்தேன். இதில் நான் அரிது கொள்வது என்ன வென்றால் யாரையும் நாம் குறைவாகஇடை போடுவிட முடியாது என்பது. இது நம் சிதனையை துண்டும் ஒரு கதை. அவர் அவர் கற்றவை அவர் அவருக்கு பெரிதாக இருந்தாலும் அந்த படகோட்டி கற்ற நிச்சல் தான் அவர்கள் உயிரை கபர்து. அதை போலே நாம் ஆயிரம் கல்வியை கற்றாலும் நாம் இந்த பிறவி கடலை கடகுவதற்கும் நிச்சல் கற்று கொல்லதான் வேண்டும். அந்த நிச்சல்தான் ஆன்மீகம். ‘அற ஆழி அந்தணன் தாள்சேர்ந்தார்க்கு அல்லால் பிற ஆழி நீந்தல் அரிது’ (ஏதாம் திருக்குறள்). இக்குறளில் வள்ளுவர் இறைவனை நினைக்காதவர்கள் பிறவி கடலை கடப்பது கடினம் என்று குரிப்பிதுள்ளர். நம்மில் பலர் எட்தேதோ படிக்கிறோம். அதை எல்லாம் உயர்வாக நினைக்கிறோம். ஆனால் நம்மை இந்த பிறவி கடலில் இருந்து கபர்துவது இறைவனின் திருவடி மட்டுமே. சிவாய திருச்சிற்றம்பலம்.
“தமிழனுக்கு தெய்வ சிந்தனை இருந்தது உண்மை. ஆனால் அது சைவம் அல்ல.” என்பது பினாங்குகாரரின் குற்றச் சாட்டு. இது சரியா? என்பதனையே கேள்வியாகக் கொண்டு பதில் அளிக்கின்றேன். சைவ சமயம் அல்லது சிவநெறி என்பது தமிழர்களின் பொது சமயமாக விளங்கியது என்பதற்கு ஆதாரம் இரு வகையில் காணலாம் (1) வரலாற்றுப் பின்னணி (2) பக்தி நெறி. எவ்வொரு சமயமும் நிலை நிற்க அதற்கு ஒரு தனி தத்துவ நெறி இருக்க வேண்டும். தருக்க நெறியில் சிந்தனை செய்து கூடி வந்த தத்துவத்தின் கட்டுமான அமைப்பில் நின்றதுதான் சைவ சித்தாந்தம் என்னும் கோட்பாடு. சித்தாந்தம் பரம்பொருளாகிய இறைவனை “எண்குணத்தான்” என்று அவரின் பண்புகளை/குணங்களை வகுத்துக் கூறுகின்றது. இதனை, 2,045 ஆண்டுகளுக்கு முன், தமிழரின் பண்பாட்டு வளர்ச்சி அதன் பொற்காலத்தில் இருந்த பொழுது திருவள்ளுவரால் “கோளில் பொறியில் குணமிலவே “எண்குணத்தான்” தாளை வணகாத் தலை” என்று குறிப்பிட்டுள்ளார். சைவ சித்தாந்தம் அன்றே தமிழரிடையே வேரூன்று நின்றிருந்தது என்பதற்கு இதை விட வேறு சான்று வேண்டுமோ?. குறளின் ஆளுமைத் திறனை கண்டு உலகமே வியக்கும் அக்காலகட்டத்தில் சைவ சித்தாந்தம் இருந்தது என்றால் இச்சமயம் கூறும் சிவ வழிபாட்டு முறை இக்காலக் கட்டத்தை விட இன்னும் பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னமே தமிழரிடையே இருந்திருக்க வேண்டும் அல்லவா?. காரணம் வழிபாட்டு நெறி ஒன்று தோன்றி அதன் பின்னரே அந்நெறிக்கு முறைமையை/கோட்பாட்டை வகுக்க தமிழர் அவர்தம் இன பரிணாம வளர்ச்சியில் கண்டிருக்க வேண்டும். இதன் அடிப்படையில் ஆராய்வோமானால், தொல்பொருள் ஆராட்சியாளர்கள் 6,000 ஆண்டுகளுக்கு முன்னமே சிந்து வெளியில் வாழ்ந்த மக்களிடையே இந்த சிவ வழிபாடு இருந்ததிர்க்கான சான்றுகளை மொஹாஞ்சோதாரோ, ஹரப்பா அகழ்வாராச்சியில் கண்டெடுத்துள்ளனர். ஆக, சிவ வழிபாட்டு நெறி தொன்மையானது. இது தமிழர்களிடையே இன்று கிடைக்கக்கூடிய தொல்காப்பியத்திற்கும் முந்தையது என்று அறுதியிட்டுக் கூறலாம். தமிழரின் பொது சமயம் “சைவம்” என்னும் சிவநெறியே உண்மை என்பது திண்ணம். இச்சைவ சமயம் தமிழரிடையே பொது சமயமாக விளங்கிய காலகட்டத்திலேயே, திணையின் அடிப்படையில் தமிழரின் மரபு சார்ந்த சமயங்களும் இருந்தன என்பதனை தொல்காப்பியம் நமக்குத் தெரிவிக்கின்றது. மேற்கூறிய வினாவுக்கு இப்பதில் போதுமானது. தொடரும்.
செல்வராஜ் அவர்களே, குறளில் எண்குணத்தான் என்னும் பதம் சிவனையோ சைவத்தையோ குறிப்பிடவில்லை என்பது பல அறிஞர்கள் ஏற்றுக் கொண்ட கூற்று. அது சமண கடவுளான அருகுகரைக் குறிக்கிறது என்பது அவர்கள் முடிவு. மேலும் குறளில் இந்திரன், கண்ணன் போன்ற பதங்களும் வருகின்றன ஆகவே குறளை வைணவ நூல் என்று கூற முடியுமா? குறள் சைவசமய நூல் அல்ல என்பதற்கு மிக எளிய விளக்கமாக நாம் சைவ சமய அறிவுப்பெட்டகமான பன்னிரு திருமுறைகளில் திருக்குறள் இடம் பெறாமையே போதிய சான்றாக கொள்ளலாம். முனைவர் ஆறுமுகம் சில கட்டுரைகளில் திருக்குறளை சைவ சமய ஞான நூலாக அவராகவே முடிவு செய்து கூறிக் கொள்வதை நாம் இங்கு பொருட்படுத்த தேவை இல்லை. காலத்தால் மிக பழமையான திருக்குறள் சைவ சமய அறிவு நூலாக அன்றைய அறிஞர்கள் ஏற்றுக் கொள்ளவில்லை. காரணம் அவர்களுக்கு குறள் வேதங்களை ஆதரிக்கும் நூல் அல்ல என்பது தெரியும். பக்தி காலத்தில் தோன்றிய தேவார திருவாசகங்களை அவர்கள் சைவ சமய நூலாக ஏற்று அவற்றை சைவ சமய தலைமை நூல்களாக கொண்ட அடிப்படைக் காரணம் அவை சதுர் வேதங்களை மறுப்பன அல்ல என்பதே. ஆகவே இப்போது முனைவர் போன்ற சில தமிழ் சைவ சான்றோர் குறளை சைவ நூல் என்று சொல்வது குறளின் புனிதத்திற்கு மாசு ஏற்படுத்தும் என்றே கருதப்படவேண்டும். காரணம் குறள் சைவ நூல் என்று ஏற்றுக் கொள்ளப்பட்டால் அதுவும் நான்மறைகளை ஏற்றுக் கொண்ட நூல் அதாவது வள்ளுவனும் வேதத்தையும் , வர்ணாஸ்ரம கொள்கைகளையும் ஏற்றுக் கொண்டவனே என்று பொருள்படும். வள்ளுவ ஆசானுக்கு இதை விட பெரிய இழுக்கு என்ன இருக்க போகிறது தோழர்களே. ஆகவே திருக்குறள் சைவசமய நூல் என்பது மிகவும் அபத்தமான கூற்றாகும்.
தேனி அவர்களே, நால்வர் வருகைக்கு பின்னர்தான் தமிழ்ச்ச்முதாயம் முழுக்க ஆரிய கட்டுப்பாட்டுக்கு வந்தது என்பது ஆதாரமற்ற கூற்று அல்ல. அது வரலாற்றை கூர்ந்து நோக்கும் போது உணரப்படும் உண்மை. நால்வர் காலம் என்பதை பக்தி காலம் என்றும் கூறுவது வழ்க்கம். பக்தி காலத்திற்கு முன்னர் களப்பிரர் காலம் இருந்ததாகவும் அதை இருண்ட காலம் என்றும் சொல்வர். களப்பிரர் காலம் ஆரிய விரோத காலம் என்பதே இன்றைய வரலாற்று அறிஞர்களின் கருத்து. கா.பரமசிவம் போன்றோர் இதை உறுதியாக நிருவுகின்றனர். ஆரியர்களின் கொட்டம் அடக்கப்பட்டு அவர்களுக்கு மன்னர்கள் ஒதுக்கி இருந்த அனைத்து சலுகைகளும் பரிக்கப்பட்ட காலம் அது. தமிழ் நாட்டில் சமணம் செழித்து வளர்ந்த காலமும் அதுவே. தமிழில் திருக்குறள் உட்பட பல அற நூல்கள் அப்போதுதான் இயற்றப்பட்டன. பதினென்கீழ்கணக்கு என்று அவற்றை இலக்கியத்தில் நாம் பயில்கிறோம். அவை சமய நூல்கள் அல்ல. வேதங்களை உட்பொருளாக கொண்டவையும் அல்ல. ஆனால் பக்தி காலத்தில் இயற்றப்பெற்ற சைவ குறவர்களின் பாடல்கள் முழுக்க முழுக்க வேதத்தை ஆதாரமாக கொண்ட நூல்கள். ஆகவே அவை தமிழ் வேதமாகவும் போற்றப்பட்டன. வாதங்களில் தோற்ற சமண துறவிகள் கழுவேற்றி கொள்ளப்பட்டனர். ஆகவே வேத எதிப்பு தமிழ் சமுதாயத்தில் கொஞ்சம் கொஞ்சமாக மறைய தொடங்கியது. தமிழ் சமுதாயத்தை அதன் மொழியை பயன்படுத்தியே வெல்வதில் ஆரியம் வெற்றி கண்டது. சோழர்கள் சைவ குறவர்களையும் பாண்டியர்கள் ஆழ்வார்களையும் கொண்டாடி சிறப்பு செய்தது பக்தி காலத்தில்தான். இதன் தொடர்ச்சியாக மண்ணாசையும் பெண்ணாசையும் மிக்க தமிழ் மன்னர்களும் ஆரிய குருமார்களுக்கு தங்கள் முழு ஆதரவையும் தந்து ‘மங்கலம்’ ஒதுக்கி தமிழ் நாட்டில் வாழவைத்தனர். மன்னன் ராஜராஜன் காலத்தில் தமிழகத்தில் சைவம் தழைத்தது . மக்கள் சைவ நெறி மீராமல் வாழ மன்னன் அயரா பணி ஆற்றினான். கற்றாளைகள் கட்டினான். ராஜேச்சுவரம் கட்டிணான். ஆனால் அவன் காலத்தில் தான் சாதி பிரிவினையும் ஆரிய தாக்கமும் தமிழகத்தில் உச்சத்தில் இருந்ததாக நம் ஊர் எழுத்தாளர் மலாக்கா முத்து கிருஷ்ணன் கூட அன்மையில் ஒரு கட்டுரை எழுதி இருந்தார்.
சமண துறவிகள் அறத்தின் வழியே தங்கள் சமயத்தை பரப்பினர். தமிழர்கள் ஆதியில் வாழ்ந்த வாழ்க்கையில் சைவ நெறி என்ற ஒன்று கிடையாது. அவர்கள் இயற்கையையும் இயற்கையோடு ஒத்த தெய்வங்களையும், வீரர்களையும் வணங்கினர். அவர்களின் வாணங்கு முறையை சிதைக்காமல் சமணம் அவர்கள் வாழ்க்கையில் அறத்தை விதைத்தது. பேராசிரியர் சாமி சிதம்பரனார் தொல்காப்பியத்தை ஆதாரமாக கொண்டு விளக்கும் பண்டை தமிழர் வாழ்க்கை நாம் அனைவரும் வாசித்தறிய வேண்டிய ஒன்று. நன்றி. நாளை சந்திப்போம்
பக்தி நெறியின் அடிப்படையில் சிவநெறி அல்லது சைவ சமயம் தமிழர்களின் பொது சமயமாக விளங்கியது என்பதற்கு 3-ம் நூற்றாண்டில் தோன்றி திருமந்திரத்தை 10-ம் திருமுறையாக வழங்கிய திருமூலரின் காலத்தில் இருந்துக் காண்போம். “அன்பும் சிவமும் இரண்டென்பார் அறிவிலார் அன்பே சிவமாவது ஆரும் அறிகிலார்” என்று அடியெடுத்துக் கொடுத்த திருமூலரின் காலத்திலேயே சிவநெறி தமிழர்களின் பொது சமயமாக இருந்தற்கு அத்தாட்சி. 6-ம் நூறாண்டு இறுதியிலும் 7-ம் & 8-ம் நூற்றாண்டிலும் சமகாலத்தில் வாழ்ந்த சம்பந்தர், அப்பர், பின்னர் சுந்தரமூர்த்தி மாணிக்கவாசகர் முதலியோரும் சிவநெறியில் நின்றவரே என்பதற்கு அவர்களின் படைப்புகளாக விளங்கும் தேவாரம் மற்றும் திருவாசகமுமே போதுமான சான்று. சிவநெறியில் நின்ற அதனால் இந்நால்வர் பெருமக்கள் வேத நெறியை வேறருக்க வேண்டியதில்லை. அன்பை புகட்டும் சிவநெறியில் நின்ற இவர்கள் பகைவருக்கும் அன்பை காட்டி நண்பராக்கிக் கொள்வதில் தப்பேதும் உளதோ?. இந்த தனிப்பெரும் பண்பு நாயன்மார்களுக்கே உரிய பெருமை. ஆதால்தான் அவர்கள் நாயன்மார்கள் என்ற பேறு பெற்று முத்தி அடைந்தனர். பகமை காட்டும் நாம் இன்னும் பக்குவப் பட வேண்டி வினைபயனை நுகர்ந்த வண்ணமாகவே இருக்கின்றோம். நாயன்மார்களும் நாமும் இரு வெவ்வேறு துருவத்தில் நிற்கின்றோம். அப்புறம் எப்படி நால்வரின் நற்பண்புகளை பினாங்குக்காரர் அறிய முடியும். இதற்க்கு ஆண்டான், அடிமை என்ற நிலைமை மாற வேண்டும். இன்னும் மேல் சாதி, கீழ் சாதி என்ற என்ன அலைகளை விட்டொழித்து சைவம் கூறும் உயிர்கள் அனைத்தும் சமம் என்ற நிலைக்கு வர வேண்டும். இன்னும் பற்பல நிலைகளில் தேற்றம் பெற வேண்டும். இவ்வாறு வேற்றுமையில் ஒற்றுமையைக் கண்டால் உண்டு வாழ்வு. வேதத்தை தவறாக கையாண்டு தன்னலம் பேணும் மனப்பாங்கு பிராமணர்களிடையே விட்டொழிக்கப் பட வேண்டும். மரியாதை என்பது கேட்டுப் பெறுவது அன்று அது தானாக ஒவ்வொருவரின் நிலையையும் அறிந்து வருவது. நேரத்தை எண்ணி இத்துடன் முடிக்கின்றேன்.
“எண்குணத்தான்” என்னும் பதம் சிவனையோ சைவத்தையோ குறிப்பிடவில்லை என்பது பல அறிஞர்கள் ஏற்றுக் கொண்ட கூற்று” என்று கூறும் பினாங்குக்காரரே அந்த அறிஞர்களை பட்டியலிடுங்கள் அதில் எத்துனை அறிஞசர்கள் திராவிட மயக்கத்தில் இருக்கும் கடவுள் மறுப்பாளர்கள் என்று ஆராய்ச்சி செய்யலாம். .
அட என்னாப்பா இது, திருக்குறளை கண்டவர்களெல்லாம் என்னுடையது, என்னுடையது என்று சொந்தம் கொண்டாடிக் கொண்டிருப்பவர்களையும், திருக்குறளின் அடிப்படையே பைபிள் என ஆய்வுநூல் எழுதி அண்ணாமலை பல்கலைகழகத்தில் முனைவர் பட்டம் வாங்கிக் கொண்டு போன ஒரு கிறிஸ்துவரையும் இந்த திராவிடர்களால் ஒன்னும் பண்ண முடியல. கடவுள் வாழ்த்தினையே முதல் அதிகாரமாக கொண்ட திருக்குறளை அறவழி காட்டும் சமய நூல் (சமயம் என்பது முறைமைபடுத்தப் பட்ட ஒரு நெறி) என்றால் அதன் தரம் குறைந்து விடும் என்பது அறிவிலிதனத்திலும், அறிவிலித்தனம் இல்லையா!.
ஒரு “முறைபடுத்தபட்ட நெறி” என்பது இறை நெறி என்பது மட்டுமல்ல அது அறநெறி போன்ற பிற நெறிகளாகவும் இருக்கலாம். அறத்துப்பால், பொருட்பால் காமத்துப்பால் என்ற அறவழி இப்படிதான் இருக்க வேண்டும் என்று காலம்காலமாக தமிழர்களின் பண்பாட்டுக் களஞ்சியத்தில் சமைந்து பக்குவப்பட்டு ஒரு நெறிபடுத்தப்பட்டு திருவள்ளுவரால் தமிழர்களுக்கு ஊட்டப்பட்டதே திருக்குறள். இது உலக மக்கள் அனைவருக்கும் எக்காலத்திலும் பொருந்தும் என்பதால் உலக திருமறையாகியது. ஆகையால் அறவழி சமய நூல் என்றதுமே ஏதோ கோவிலில் மணி அடித்து மந்திரம் பாடி போதிக்கும் நூல் என்ற கருத்துக்குப் போய் விட வேண்டாம். திருக்குறள் இவ்வாறு அறவழியைப் போதிக்கும் நூலாகி இருக்கும் வேளையில் அதனை பக்தி நெறியாகிய திருமுறையில் ஏன் வைக்கவில்லை என்று கேட்கும் கேள்வியே பிழையானது. திருக்குறளும், திருமுறையும் ஒரே வழியில் தனித்தனியே ஓடும் இரு நீரோடைகள் போன்றது, இந்நீரோடைகளின் நீர் ஒன்றோடு ஒன்று கலக்காமல் அவை பாயும் வழியில் இருக்கும் பயிர்களுக்கு பயன் தருவத்தைப் போல, திருக்குறளும், திருமுறையும் அதனனதன் வழியில் நின்று மக்களுக்கு பயன் தரும் நிலையைக் கொண்டவை என்பதை நாம் அறிந்துக் கொண்டால் இங்கே போராட்டத்திற்கு இடமில்லாமல் போகும். பினாங்குகாரரின் மற்ற கருத்துக்களுக்கு இரவில் பதில்.
சமய சிந்தனை தேனீக்கு அதிகமாக இருக்கிறது என்று சொல்வதை விட அதிகமாக பிடிவாத குணம் இருக்கிறது
என்று தான் கூறவேண்டும் . பக்தகோடிகள் இறைவனுக்கு
பூஜையின் போது போடும் பூக்களின் தேனை உறிஞ்சி குடித்து விட்டு அந்த பூ எச்சில் பூவாகி விட்டது ,எச்சில் பூவை பகவானுக்கு படைக்க காரணமான தேனீ எல்லோர் பிரச்சனையில் தலையிடாதே அப்புறம் எச்சில் பூக்களை
பக்த கொடிகள் படைக்க காரண மான உன்னை சிவன் கோபித்து கொள்ள போகிறார் ,அதும் மட்டுமா அன்பே சிவம் என்று சொல்கிறோம் ,எல்லா சாமிகளும் ஆயுதங்களை கையில் வைத்துக்கொண்டு இருக்கின்றன ,பார்த்துக்கோ தேனீ சாமி கண்ணை குத்திடும் சரியாய் தேனீ , நைனா முதலில் தீனியை தேடுவோம் அப்புறம் தேவையற்றவைகளை பேசி நாமும் காலத்தை வீணாக்கி கொண்டிருப்போம் நைனா .
“அன்பும் சிவமும் இரண்டென்பார் அறிவிலார் அன்பே சிவமாவது ஆரும் அறிகிலார்” தேனீ… இது போதும் சிவனுக்கான விளக்கம். இது போதும் இறைவனுக்கான விளக்கம். இதுவே மிகச் சரியான கடவுளுக்கான விளக்கம். இதைவிட எளிமையாக எந்தக் கொம்பனாலும் இறைவனுக்கு( சிவனுக்கு) யாரும் விளக்கம் தந்துவிட முடியாது. இதைப் புரிந்துகொண்டால்தான் தாயின்,தந்தையின், பிள்ளைகளின், உறவுகளின், இனத்தின், மனிதகுலத்தின் அன்பை விளங்கிக்கொள்ள இயலும். இந்த அன்பில் (இறைவனில்) சக உயிர்களை ஒருவனால் நெருங்கவும் நேசிக்கவும் இயலாவிட்டால் இந்த உலகத்தில் அவன் உயிரோடு இருக்கும் காலம்வரை அறமானது காய்த்து எறித்துவிடும் என்று குறளும் செப்புகிறது. அன்பில்லாதான் சுயநலவாதியாக இருப்பான் என்றும் வள்ளுவம் கூறுகிறது. இதுவே சிவத்திற்கான சிறந்த விளக்கமாகும். மற்றதெல்லால் பிறரின் தர்கத்திற்கான பொருளாகி வாதத்தை முடிவில்லாமல் நீளச்செய்யும்.
“அன்பிலார் எல்லாம் தமக்குரியர் அன்புடையார்
என்பும் உரியர் பிறர்க்கு”
” என்பு இலதனை வெயில்போலக் காயுமே
அன்பு இலதனை அறம்”
அனேகமாக இதுவே என்னுடைய கடைசிப் பதிவாக இருக்கும். இந்தப் பகுதியில் உண்மையான தேடுதலோடும் தமிழ் உணர்வோடும் கருத்துகளைப் பதிவுசெய்த தேனீக்கும் ஆழமாக சிந்தித்து கேள்விகளைத் தொடுத்து விடைகாண விளைந்த பினாங்குகாரருக்கும் நிறைய எழுத்துப் பிழைகளோடு எழுதினாலும் கருத்தோடு எழுதிய சிவராஜ் கேசவனுக்கும் என் உள்ளத்தின் ஆழத்திலிருந்து வணக்கத்தையும் வாழ்த்துதலையும் தெரிவித்து இப்பகுதியிலிருந்து விடைபெறுகிறேன்.நன்றி!
நிறைய எழுதி விட்டிர்கள்,ஆனால் என் கேள்விக்கு பதில் வரவில்லையே ? கடவுள் ஆணா பெண்ணா ? சுருக்கமாக சொல்லுங்கள் வழ வழா கொழா கொழா என்று வேண்டாம்.
பினாங்காரே, தாங்கள் “லேட்’ டாக வந்தாலும் “லேட்டசான” கருத்துக்களை முன் வைத்ததற்கு நன்றி. “பக்தி காலத்தில் இயற்றப்பெற்ற சைவ குறவர்களின் பாடல்கள் முழுக்க முழுக்க வேதத்தை ஆதாரமாக கொண்ட நூல்கள்” என்பது முழு பிழை. திருமுறைகளில் முதன்மை தோத்திரமாக விளங்கும் தேவாரமும் திருவாசகமும் முழுமையாக சிவநெறியைப் போற்றி சித்தாந்த தத்துவங்கள் பரவலாக பரவிக் கிடக்க கொண்டவை. இது பிறர் சொல்லி அல்லது எழுதிய கருத்துக்களைக் கொண்டு யாம் அறிந்ததல்ல. சித்தாந்தப் பள்ளியில் தேவாரப் பயிற்சியும் அதன் பொருளையும் கற்றுணர்ந்ததில் கண்ட உண்மை. வேதக் குறிப்புகள் ஆங்காங்கே காண இருப்பினும் அவை வைதீக சிறப்புகளை எடுத்துச் சொல்ல வந்தவன அல்ல மாறாக வேத வேள்விகளை சிறுமைப்படுத்திய சமண புத்த மதத்தினர்களின் பொய்யுரைகளை வேரறுக்க ஒப்புநோக்கிர்க்காக குறிக்கப்பெற்றன. மேலும் வைதீக பண்பாட்டில் நிற்க எவ்வொரு நாயன்மார்களும் வழிகோலியது இல்லை. பெரியபுராணத்தில், சேக்கிழார் வைதீகம் நிலைக்க சைவம் தளைத்தோங்க பிள்ளையவர்கள் சைவ தொண்டாட்டினார் என்றே குறித்துள்ளார். இது அன்றைய நிலையில் வைதீக பண்பாடு தமிழர்களின் ஒரு பகுதியினரிடம் வேரூன்றி இருந்ததையும் குறிக்கின்றது. அதே வேளையில் சைவத்தை மீட்டெடுக்க பிள்ளையவர்கள் ஆற்றிய சீரியத் தொண்டினையும் குறிக்கின்றது. ஆக, நால்வர் பெருமக்களால்தான் ஆரியம் தமிழர்களிடையே நிலைபெற்றது என்பது முழு கருத்துப் பிழை. சொல்லப்போனால் ஆரியர்களுக்கு சிவ வழிபாடே கிடையாதே!. ஆரியர்களின் வழிபாடு வேள்வி வழிபாடு மட்டுமே. அப்புறம் எப்படி நால்வர் காட்டிய வழியால் ஆரியம் தமிழர்களிடையே புகுந்தது என்ற குற்றச்சாட்டை முன் வைக்க முடியும்?. நால்வர் பெருமக்கள் வருணாசிரம கோட்பாட்டை ஏற்றுக் கொண்டனர் என்பதற்கு தாங்கள் எவ்வொரு ஆதாரத்தையும் முன் வைக்கவில்லை. ஆயினும் சாதி பேதங்கள் அன்றும் தமிழர்களிடையே இருந்ததை மறுப்பதற்கில்லை. இருப்பினும் யாம் கற்ற தேவாரங்களிலும் திருவாசகத்திலும், திருமந்திரத்திலும் சாதி வேற்றுமையை முன்வைத்ததர்க்கான சான்றுகள் இல்லை எனலாம். அவ்வாறு இருப்பின் தாங்கள் முன் வைக்கலாம். அது சிந்தனைக்குரிய களமாக இருக்கும். திருமுறைகள் தமிழ் வேதமாக போற்றப் பட்டது என்பது தவறு. அவை சைவ வேதமாக போற்றப்பட்டது என்பதே சரி. “தமிழ்” மொழி. “சைவம்” சமயத்தின் இறை நெறி. சைவம் என்ற வார்த்தை திருமூலரின் காலமாகிய 3-ம் நூற்றாண்டில் இருந்துதான் (திருமந்திரத்தில்) காணப்படுகின்றது. சம்பந்தரின் தேவாரத்தில் (3.108.7) “தழல் இலங்கு திருவுருச் சைவனே” என்று பாடபெற்றுள்ளதைக் காணாலாம். இக்காலகட்டத்திற்கு முன்பு (ஆதிகாலத்தில்) சிவநெறி “பாசுபதம்” (பாசுவதம் அல்ல) என்றே குறிக்கப் பெற்றிருக்க வேண்டும் என்று இந்திய மெய்யியல் நூல்கள் குறிக்கின்றன. நம் முன்னோர்கள் வரலாற்றை கை தவற விட்ட காரணத்தினாலேதான் நாம் 3000 ஆண்டுகளுக்கு முந்தைய முன்னோர்களின் வரலாற்றைக் காண இயலாமால் தவிக்கின்றோம். தொடரும்.
தேனீ அவர்களே, தமிழ்தென்றல் திரு. வி.க, மயிலை சீனி வெங்கடசாமி, தொ.பரமசிவம், பேரா. வையாபுரி பிள்ளை, போன்ற மொழி அறிஞர்களும் வரலாற்று ஆசிரியர்களும் திருக்குறள் சைவசமய நூல் அல்ல என்றும் அது சமண சமய கருத்துக்களை உள்ளடக்கியது என்றும் கூறி உள்ளனர். நீங்கள் விரும்பினால் மேற்கண்ட அறிஞர்கள் திராவிட சிந்னையாளர்களா?, சைவ மரபினரா? வைதீக சார்பு உடையவர்களா? சைவ பிள்ளைமார்களா? அல்லது மாக்சிய சிந்தனையாளர்களா? என்று ஆய்ந்து அறிந்து முடிவு செய்து கொள்ளுங்கள். மேலும் சமகால இலக்கிய உலகம் நன்கு அறிந்த எழுத்தாளர் ஜெயமோகன், இந்து சமய தத்துவ மரபுகள் குறித்து அதிகம் பேசியும் எழுதியும் வருகிறார். அவர் நிச்சயமாக திராவிட சிந்தனை உடன்பாட்டாளர் அல்ல. ஆனால் அவரும் திருக்குறள் சமண கருத்துகளின் வெளிப்பாடே என்று உறுதியாக கூறுகிறார்.
உங்கள் கூற்றுப்படியே அவர் அவரும் திருக்குறள் தங்கள் நூல் என்று போட்டி இடுவது போல்தான் சைவர்களும் திருக்குறளை தங்கள் நூல் என்று போட்டியிடுகின்றனர். மற்றபடி அது சைவ நூல்தான் என்பது நிரூபனமற்றது. முதல் பத்து குறளும் இறையை பாடுவதை மறுக்கும் எண்ணம் யாருக்கும் இல்லை. ஆனால் அதை சைவ நூல் என்று கூறிக்கொள்வதுதான் ஏற்பற்றது.
நண்பரே, நான் முன்வைத்த ஒரு கேள்விக்கு நீங்கள் இன்னும் பதில் தரவில்லை. திருக்குறள் ஏன் பன்னிருதிருமுறைகளில் சேர்த்து வணங்கப்படவில்லை என்பதே என் கேள்வி. ஆனால் நீங்கள் கூறுவது வெறும் சமாளிப்புதானே அன்றி விளக்கமாகாது. தேனீ அவர்களே, நம் தமிழ் பண்டை இலக்கியங்களை படைத்த அறிஞர்கள் தங்கள் கருத்தின் சமய நிலைப்பாட்டை மிக தெளிவாகவே முன்வைத்திருப்பதை காணலாம். ஒளித்து மறைத்து பேசவேண்டிய அவசியம் அவர்களுக்கு இருந்ததில்லை. வள்ளுவ ஆசானும் திருமூலரை போன்றோ நாயன்மார்கள், ஆழ்வார்கள் போன்றோ தன் சமய சார்பு நிலையை மிக தெளிவாக முன்வைக்காமல் போனதேன் என்று நாம் சிந்திக்க வேண்டும். அவர் சைவ சமய ஈர்ப்பு உடையவராக இருப்பின் அதை எந்தவித மறைப்பும் இன்றி மிக தெளிவாக பாடியிருக்க மாட்டாரா? அவரே விரும்பாத ஒரு நிலையை இன்று சைவர்கள் வழிந்து கூறுதல் முறையன்று.
மேலும் நாம் தமிழர் சமூகவியல் நிலையிலிருந்து சிந்திக்கும் போது, சில சாதீய வழக்கங்களை மறுக்க முடியாது. வள்ளுவன் என்பவன் இன்று ஒடுக்கப்பட்டோராக இருக்கும் ஒரு சாதி மக்களின் (அன்று அந்நிலை இல்லை என்பதை கவனிக்கவும்) தலைவனாக, குருவாக, சடங்குகள் நிகழ்த்துவோனாக, முதுமகனாக வாழ்ந்தவன் என்பது சமூகவியல் கூறும் உண்மை. ‘வள்ளுவன்’ என்பது குரு போன்ற நிலை ஆகும். அவனுக்கு தம் மக்களுக்கான அறங்களை வகுக்கும் உரிமையை அன்றைய சமூக வழங்கியது. இவ்வித சமூகவியல் கட்டமைப்பு தமிழகத்தில் பின்பற்றப்பட்ட காலம் சமணம் செழித்திருந்த காலமாகும். அந்த பின்புளத்தில் தோன்றியதே திருக்குறள் என்னும் அற நூலாகும். ஆனால் சைவம் செழித்து வளர்ந்த பக்தி காலத்தில் இந்நிலை முற்றாக மாற்றம் கண்டு சமூகங்கள் பல்வேறு சாதி பிரிவுகளில் வாழ தலைப்பட்ட நிலையில் சைவ சமயம் தீட்சிதர்கள் வசமும் சைவ பிள்ளைமார்கள் வசமும் நிலைத்து வளர்ந்தது. சமய விதிமுறைகளையும் தர்மங்களையும் முடிவு செய்யும் பொறுப்பு இவர்களிடமே கொடுக்கப்பட்டது. நம்பியாண்டார் நம்பிகளை தொடர்ந்து, பின்னர் தோன்றிய சேக்கிழார் சைவ சமயம் தமிழினத்தின் பொது சமயமாக இருக்கும் பொருட்டு பல்வேறு சாதி மக்களை சிவ அடியார்களாக குறிப்பிட்டு பெரியபுராணம் பாடினார். பதினெட்டாம் நூற்றாண்டு தமிழ்ப்பண்டிதர்கள் தமிழ்லோடு சைவத்தையும் போற்றி வளர்த்தனர். ஆனால் அவர்கள் யாரும் திருக்குறளை சைவ நூலாக கொண்டாடாதன் காரணம் அது தோன்றிய தளம் சைவ சமயதளம் அல்ல என்பதனால்தான். ஆகவே வள்ளுவரே வெளிப்படுத்தி கூறாத ஒன்றை, சைவ சமய ஆகமங்களை வகுத்த மெய்யறிஞர்கள் செய்யாத முடிவுகளை இன்று நாம் செய்ய நமக்கென்ன உரிமை உள்ளது. நன்றி
பினாங்காரே, தாங்கள் கூறிய குற்றச்சாட்டு, சைவத்தினால்தான் ஆரிய மரபும், பிராமணிய வருணாசிரம தர்மமும் தமிழகத்தில் தமிழர்களிடையே நிலைத்திருக்க வழிவகுத்தது என்பதில் ஓரளவு உண்மை இருக்கின்றது. ஆனால், இது இந்த நால்வர் பெருமக்கள் அடங்கிய 63 நாயன்மார்களின் குற்றமல்ல. அவர்களின் காலத்திற்கு பிறகு 15-ம் நூற்றாண்டுகளில் இருந்து தமிழ் நாட்டு ஆதினங்கள் சிவநெறியை “தளைத்தோங்க” வைக்காமல் “தலை தொங்க” வைத்து விட்டனர். ஆதினங்களும், ஆதீனகர்த்தர்களும் வைதீக பண்பாட்டில் திளைத்து வைதீக சைவ ஆதினங்களாக மாறியதால் வந்த வினையே இன்று சைவம் படும் பாடு. இன்றும் தமிழகத்தில் பிராமண மரபினரே இந்த ஆதினங்களின் ஆட்சிப் பொறுப்பையும், கணக்காய்வாளர்கள் பொறுப்புகளையும் தம் வசம் வைத்திருக்கின்றனர். அப்புறம் எப்படி ஆதினங்கள் அவர்களை மீறி செயல்பட முடியும்? அப்புறம் இவர்களின் குட்டுகளும் கையாலாகத்தனமும் வெளி வந்துவிடுமல்லவா. இதில் மதுரை ஆதினகர்த்தர் ஒரு விளையாட்டுப் பிள்ளை!. இன்னும் பல ஆதீனகர்த்தர்கள் இறைவழிபாட்டை சமஸ்கிருத்தத்தில் செய்தால்தான் சிவபெருமான் ஏற்றுக்கொள்வார் என்ற நம்பிக்கையில் இருந்து மாறவே இல்லை!. அப்புறம் எப்படி தமிழர்கள் சிவநெறியை மீட்டெடுப்பது? தமிழ் நாட்டில் பல சிவ அடியார்கள் சிவ தொண்டினைச் செய்து சைவத்தை மீட்டெடுக்கும் முயற்சியில் இறங்கியுள்ளனர். இம்மலை நாட்டில் சுத்த சைவம் தளைத்தோங்க உரமேறிய சிவனடியார்கள் இருக்க எல்லாம் வல்ல எம்பெருமானால் விரைவிலேயே மனமாற்றத்தைக் காணாலம் என்று நம்புவோமாக. சாமி கொடுக்கும் வரத்தை பூசாரி தடுக்காமல் இருக்க வேண்டுமே!. இதுவரையில் இப்பகுதியில் கருத்துகளத்தில் பங்கெடுத்து கொண்ட வாசக பெருமக்களுக்கு நன்றி கூறி விடை பெறுகின்றேன்.
பழமையை பேசி பேசி பெருமை கொள்ளும் தமிழன் எதிர்கால சிந்தனையின்றி எது வெந்ததை தின்று வாழ்கிறான் ,நாய் அப்போதும் சரி இப்போதும் சரி தண்ணீரை நாக்கால் நக்கி தான் குடிக்கும் ஆரம்பத்தில் மாமிசத்தை பச்சையாக தின்ன
மனிதன் , காடுகள் தீ பற்றி எரிந்து மிருகங்கள் எரிந்து கிடந்த
போது அதை எடுத்து சாப்பிட்டவன் ,பிறகு தான் வேட்டையாடும் மிருகங்களை தீயில் வேகவைத்து சாப்பிட்டான் ,அதன் பிறகு சுவையாக சமைத்து சாப்பிட்டான் ,ஆனால் இன்னமும் ஒரு சிலர் விருந்து என்ற பெயரில் மாமிசங்களை தீயில் சுட்டு சாப்பிடுகிறார்கள் கேட்டால் நாம் வந்த சுவடுகளை மறக்க கூடாது என்கிறார்கள் ,அது போல theni யும் மனிதனுக்கு அறிவு வளர்ச்சி அடையா முன்பு தோன்றிய சமயங்களை உடும்பு பிடியாக பிடித்துகொண்டு வாதாடுகிறார்கள் , இவர்களை திருத்த
10000 பெரியார்கள் தோன்றினாலும் முடியாது இவர்கள் தூங்கிக்கொண்டு கனவு காணும் ஜென்மங்கள் ,ஆமாம் theni நைனா ஏன் தமிழ்பித்தன் கேள்விகளுக்கு பதில் கூற முடியவில்லை , கற்றது கையளவு கல்லாதது உலகளவு என்று புரிந்து விட்டதா நைனா .
என் கேள்விக்கு எப்பதான் பதில் கிடைக்கும் ?
சிவனேன்னு அமைதியாக இருக்கலாம் என்றிருந்தேன். ஆனால் இந்த தமிழ் பித்தர் என்னை மேலும் உசுப்பி விட்டு வேடிக்கைப் பார்ப்பதில் சுகம் காண விரும்புகின்றார். இங்கே கருத்து எழுதுவதும், மற்றவர்களுடைய கருத்துக்கு ஒட்டியோ, மறுதளித்தோ பதில் எழுதுவதும் சுலபமான காரியமல்ல என்பது தமிழ் பித்தரை போன்ற சுண்டக்கா மண்டக்கா பையன்களுக்குத் தெரியாது. இதனால் எங்களுடைய இதர காரியங்களைக் கவனிக்க போதுமான நேரம் கிடைப்பதில்லை என்பது அவருக்கு புரியவும் புரியாது. இங்கே பேசப்படும் விடயம் பொது அறிவு விடயம் அல்ல மாறாக ஒரு குறிப்பிட்ட துறையைச் சார்ந்த விடயங்கள். இதில் நுண்ணிய அறிவு இல்லையேல் பட்டி மன்றத்தில் பேர் போட முடியாது. தமிழ் பித்தர் எம்மை உசுப்பியதால் பினாங்குகாரருக்கு பதில் எழுத வேண்டிய நிர்பந்தத்திற்குள் உள்ளானேன். அடுத்து வருவது பினாங்க்க்குக்காரர் கேட்ட கேள்விக்குப் பதில். தொடரும்.
பினாங்காரே, தங்களின் கேள்வி (1) “திருக்குறள் ஏன் பன்னிருதிருமுறைகளில் சேர்த்து வணங்கப்படவில்லை”. பதில். முதலில், 16/4/14 @ 1:24 மற்றும் 16/4/14 14:35-க்கு எழுதிய கருத்துக்களை மீண்டும் ஒரு முறை படித்து வாருங்கள். “திருக்குறள்” அறவழி நூல் என்றேன். “திருமுறை” பக்தி நெறி நூல் என்றேன். இதனையே ஓர் உவமையைக் கொண்டு விளக்கினேன். அதை தாங்கள் புரிந்துக் கொள்ளவில்லை. இதோ மீண்டும் இங்கே. “திருக்குறளும், திருமுறையும் ஒரே வழியில் தனித்தனியே ஓடும் இரு நீரோடைகள் போன்றது, இந்நீரோடைகளின் நீர் ஒன்றோடு ஒன்று கலக்காமல் அவை பாயும் வழியில் இருக்கும் பயிர்களுக்கு பயன் தருவத்தைப் போல, திருக்குறளும், திருமுறையும் அதனனதன் வழியில் நின்று மக்களுக்கு பயன் தரும் நிலையைக் கொண்டவை” என்றேன். இதனையே வள்ளுவர் பெருமான் கீழ்வருமாறு “செங்கோன்மை” என்னும் அதிகாரத்தில் 543 குறளில் விளக்குகின்றார். தொடரும்.
குறள் 543: “”அந்தணர் நூற்கும்” “அறத்திற்கும்” ஆதியாய் நின்றது மன்னவன் கோல்”. செங்கோல் ஆட்சி நடத்தும் ஒரு மன்னனின் கடமை, (i) அந்தணர் போற்றும் மறைநூலுக்கும், (ii) அறத்திற்கும் அடிப்படையாய் நின்று ஆட்சி செய்ய வேண்டும் என்பது. இதை உணர்த்தவே, இவை இரண்டும் ஒரே நேர் வழியில் செல்லும் இரண்டு தெளிந்த நீரோடைகள் என்று சொன்னேன். அதன் பயனையும் சொன்னேன். இப்ப தாங்கள் புரிந்துக் கொள்ள வேண்டியது “அறவழி நூலை”, பக்தி நெறியில்” கொண்டு புகுத்துவது முறையாகுமோ?. பொருட்பாலையும் இன்பத்துப்பாலையும் பக்தி நெறியில் நிறுத்த தெளிந்த ஞானிகள் ஒப்புவார்களா?. ஆதாலால், திருக்குறளை ஏன் திருமுறையில் சேர்க்கவில்லை என்று கேட்பது பிழை. இதை அறிந்த திருவள்ளுவரே இவ்விரு நூல்களையும் (நெறிகளையும்) தனித்து குறிப்பிட்டு அதன் வழி ஆட்சி செய்ய வேண்டும் என்றார். திருவள்ளுவரே இவ்விரு நெறியும் தனித்து அறியப்பட வேண்டும் அதன் வழி நிற்க வேண்டும் என்று கூறுவதை அறிவீராக. தொடரும்.
இப்ப பினாங்குகாரருடைய இன்னொரு கேள்வி (2) திருக்குறள் சைவ சமய நூலா?. யாரப்பா திருக்குறளை சைவ சமய நூல் என்றது?. அவ்வாறு சைவ சித்தாந்தத்திலேயே குறிக்கப் படவில்லையே. அப்படியானால் “எண்குணத்தான்” என்பதை சைவ சித்தாந்தக் கருத்து என்று எப்படி சொல்ல முடியும் என்று கேட்பீர்கள் அல்லவா. இந்திய மெய்யியல் தத்துவங்களிலேயே சைவ சித்தாந்தம் ஒன்றே இறைவனின் பண்புகளை/குணங்களை 8 வகையாக பிரித்துக் கூறுகின்றது. வேதாந்தம் இதை முக்கூருகளாகத்தான் குறிகின்றது. சமண புத்த மதத்திலோ இறைக் கோட்பாடே இல்லை. அப்புறம் எதற்கு இம்மதத்தினர் இறைவனை எண்குணத்தான் என்று கூற வேண்டும்? இறைவன் எண்குணத்தான் என்பது சைவ சித்தாந்தக் கோட்பாடே என்று நிறுவுவதற்கு. திருமூலர் அவர்தம் திருமந்திரத்தில் (3.3.536) பின்வருமாறு உரைக்கின்றார். “கொல்லான் பொய்கூறான் “எண் குணன்” நல்லான், ………..” என்று கூறுகின்றார். ஆக “எண்குணத்தான் என்று திருவள்ளுவர் கடவுள் வாழ்த்தில் குறித்தது “சிவபெருமானையே” அன்றி வேற்றொரு பரம்பொருளை அல்ல. திருநீலகண்டம். தொடரும்.
பினாங்குகாரரின் மேலும் ஒரு கருத்து எம் மனதை நெருடுகின்றது. ஒரு சில நூல் ஆசிரியர்கள் தத்தம் கருத்துக்களின் வழி “திருக்குறள்” சமண மத அறவழியையே குறிப்பிடுகின்றது என்று மேற்கோள் காட்டினார். இதைத்தான் கட்டுரையாளர் “வீட்டினுள் இருந்த அம்மிக் கல்லை எடுத்து தெருவில் போட்டால், தெருவில் போகின்றவன் எல்லாம் மிதித்து விட்டுப் போவான்” என்றார். இறைக்கோட்பாடே இல்லாத சமணர்களுக்கு ஏன்னையா முதல் அதிகாரத்திலேயே இறை வாழ்த்தை வைக்க வேண்டும்?. துறவத்தைப் பேணும் சமணர்களுக்கு ஏன்னையா இன்பத்துப்பாலை புகட்ட வேண்டும். கொஞ்சம் தர்கரீதியில் (“logically”) சிந்தியுங்கள். விடை கிடைக்கும். அந்த தெரு நாய் குலைத்தது அதனால் நானும் குலைத்தேன் என்ற பாணியில் பேச வேண்டாம். ஜெயமோகன், சித்தாந்தத்தையோ, வேதாந்த்தையோ அல்லது சமண மத தத்துவத்தையோ முழுமையாக கற்றுவிட்டு வந்து இங்கு நமக்கு பாடம் போதிக்கவில்லை. அவருக்கு இருக்கும் இலக்கிய அறிவைக் கொண்டு அதில் கொஞ்சம் தத்துவ ஞானத்தை ஏற்றி மற்ற தமிழ் நாட்டு “அறிஞர்களைப்” போல திருக்குறள் தமிழர்களுடையது அல்ல அது சமணர் கோட்பாடுகளைக் கொண்டது என்று பாடம் புகற்ற கிளம்பி விட்டார் போலும். ஜெயமோகனின் கருத்துக்கள் தமிழ் நாட்டில் கடுமையாக விமர்சிக்கப்பட்டன என்பதை தாங்கள் அறிவீர்களோ இல்லையோ எனக்குத் தெரியாது. ஏனைய நூல்களின் ஆசிரியர்களின் கருத்துக்கள் திருக்குறள் சம்பந்தப்பட்ட கட்டுரை வரும்பொழுது சிந்தனைக் களத்திற்கு எடுத்துக் கொள்வோம். அதுவரையில் கொஞ்சம் ஓய்வு எடுத்துக் கொள்வோம். இப்ப திருப்தியா தமிழ் பித்தரே.
தேனீ அவர்களே, அறிவு தளத்தில் தொடர்ந்து நிற்க முடியாமல் உணர்ச்சியில் கொந்தளிக்கும் உங்களுடன் இந்த வாதத்தை தொடர்வதில் எனக்கு விருப்பம் இல்லாவிட்டாலும் உங்கள் இனிய மொழியில் ‘அந்த தெரு நாய் குலைத்தது அதனால் நானும் குலைத்தேன் என்ற பாணியில் பேச வேண்டாம்’, என்கிற உங்கள் ‘அறிவுரை’ என்னை எழுதத் தூண்டுகிறது. திருக்குறளை சைவ சமய நூல் என்பதை நிருவுவதில் உங்களுக்கு இருக்கும் ஆர்வம் அக்குறளில் ஒன்றையாவது வாழ்வில் கடைபிடிக்கும் எண்ணம் இல்லையா? முடிந்தால் உங்கள் மத மாச்சரியங்களை கலற்றி வைத்து விட்டு, நாவடக்கத்தை மீண்டும் ஒருமுறை ஓதி உணர்க. திருக்குறள் சமய நூல் அல்ல. அதன் கருத்துகள் எந்த சமயத்திற்கும் தனி சொத்து அல்ல என்னும் கருத்தை பரிமேலழகர் முதல் பாவாணர் வரை பலரும் கூறியுள்ளதால் அவர்களை எல்லாம் ‘குரைக்கும் தெரு நாய்’ என்று நீங்கள் சுட்டுவதாக நான் பொருள் கொள்ளலாமா? என்பதை தெளிவாக்குங்கள். அதன் பின் நான் ‘தெரு நாய் போல் குரைக்காமல்’ இருக்க முயற்சி செய்கிறேன். அடிப்படை சமயவாதம் பேசுவோர் தங்கள் கருத்துக்களை ஞாயப்படுத்த எந்த அளவும் கீழ் இறங்கி தாக்குதல் நடத்தக் கூடியவர்கள் என்பதை நீங்கள் மெய்பிக்கிறீர்கள். எனினும் பேரா.இரா. மோகன் ( உங்கள் மொழியில் சொன்னல் வேறு ஒரு தெரு நாயின் குரைப்பு) அவர்கள் எழுதிய இலக்கிய பதில்கள் என்னும் எளிய நூலில் ‘வள்ளுவர் வலியுறுத்தும் இறைநிலை’ என்னும் கட்டுரையின் முன் பகுதியை இங்கு பதிப்பது வாசகர்களுக்கு பயனாக இருக்கும் என்று கருதியதால் அப்பகுதியை கீழே தருகிறேன்.
” திருக்குறள் காட்டும் இறைவன் எனக் கூறாமல், ‘திருக்குறள் காட்டும் இறைமை’ என சுட்டுவதே ஆழ்ந்திருக்கும் கவியுளத்தைக் காட்டுவதாகும். எல்லா நூலினும் நல்லன எடுத்து, எல்லோருக்கும் பொதுப்பட மொழிவதே தெய்வப் புலவர் திருவள்ளுவரின் தனிப்பெரும் பண்பாகும்; சிறப்பும் ஆகும். ‘கடவுள் வாழ்த்து அதிகாரத்தில் அவர் எந்த குறிப்பிட்ட சமயத்தையும் சார்ந்தவனாக இறைவனைச் சுட்டவில்லை. இன்னும் சொல்லப் போனால் ‘கடவுள்’ என்ற சொல்லே, திருக்குறளில் கையாளப்பெறவில்லை. ‘இறைவன் ‘ என்ற சொல்லாட்சி கடவுள் வாழ்த்து அதிகாரத்தில் இரண்டு இடங்களில் (5, 10) இடம்பெற்றுள்ளது. ஏனைய குறட்பாக்களில் எல்லாம் ‘ஆதி பகவன்’, வாலறிவன், மலர்மிசை ஏகினான்’, வாலறிவன், மலர்மிசை ஏகினான் வேண்டுதல் வஏண்டாமை இலான்’, பொறிவாயில் ஐந்தவித்தான், தன்க்குவமை இல்லாதான், அறவாழி அந்தணன், எண் குணத்தான், என்றாற் போல் இறைமைப் பண்புகளையே வள்ளுவர் சுட்டிச் செல்கின்றனர். குறிப்பாகவும் கூர்மையாகவும் கூறுவதென்றால், வள்ளுவரின் இறைமைக் கோட்பாடு தனிப்பட்ட முறையில் எந்த சமயத்தையும் சார்ந்து இராமல் (secular) உலகளாவிய நிலையில் பொதுமையானதாகவே (Universal) விலங்கிற்று. பரிமேலழகரில் இருந்து பாவணார் வரையிலான அனைத்து உரையாசிரியர்களும் தத்தம் உரைகளில் ஆங்காங்கே இக்கருத்தினைச் சுட்டிக் காட்டியுள்ளனர். பதச் சோறாக, ‘கடவுள் வாழ்த்து’ அதிகாரத்தின் ஒன்பதாவது குறட்பாவில் இடம்பெற்றுள்ள ‘ எண் குணத்தான்’ என்னும் தொடருக்குப் பரிமேழகரும், திரு.வி.கவும் எழுதிச் செல்லும் உரை விளக்கங்களை முறையே ஈண்டுக் காணலாம்…’
தேனீக்கு (அந்த தெரு நாயின் குரைப்பை) அறிய ஆவல் இருந்தால் நூலை வாசித்து அறியலாம். இது போன்ற மேலும் பல கட்டுரைகள் உள்ளன. ஆனால் தேனீ போன்றவர்களுக்காக எழுதுவது நேர விரையம் என்பதால் விடை பெருகிறேன். நன்றி
பினங்குகாரரே, எம் கருத்தை தாங்கள் மீண்டும் தவறாக புரிந்துக் கொண்டீர்கள். யாம் சொல்ல வந்தது திருக்குறள் “சமணர்களுடைய சமய மத கருத்துக்கள் உள்ளடக்கியது” என்று ஒரு சில நூலாசிரியர்கள் எழுதியுள்ளதை ஆய்ந்து நோக்காமல் அப்படியே அது உண்மை என்பது போல தாங்கள் எடுத்துக் கொண்டு இங்கே ஒப்புவிப்பதை அறியாத்தனம் என்பதா அல்லது மடமை என்பதா?. அல்லது கற்றறிந்த தமிழர்களின் கையாலாகாதத் தனம் என்பதா?. தமிழர்களின் வாழ்க்கை பண்பாட்டின் சாரத்தை கசக்கி பிழிந்து நெரிபடுத்தி வள்ளுவன் வழங்கிய திருக்குறள் என்னும் அறவழியை வேற்றானுக்கு தாரைவார்த்துக் கொடுக்கும் உம்மையும் தாங்கள் கூறும் பிற நூல் ஆசிரியர்கள் போன்றவர்களினால்தான் தமிழன் இன்று வரலாறு தெரியாமால் போய் விட்டான் போலும். எப்படி இந்து அரசன் “பரமேஸ்வரா” இன்று மாற்றி எழுதப்பட்ட வரலாற்றினால் மலேசியாவில் வரலாறு மாறியதோ அதைப்போலவே பச்சைத் தமிழனால் தெள்ளத் தெளிய தமிழில் எழுதிய திருக்குறளை தாரைவார்த்து மாற்றானுக் கொடுத்து மானங்கெட்ட பிழைப்பு நடத்த நான் தயாரில்லை. திருக்குறள் “சைவ சமய நூல்” என்றா எழுதினேன். மீண்டும் ஒரு முறை படித்துப் பாருங்கள். “திருக்குறள்” தமிழரின் “அறநூல்” என்று எழுதினேன். திருத்திக் கொள்ளுங்கள். தொடரும்.
பேரா. இரா. மோகன் அவரின் நூலில் ‘ஆதி பகவன்’, வாலறிவன், மலர்மிசை ஏகினான்’, வேண்டுதல் வேண்டாமை இலான்’, பொறிவாயில் ஐந்தவித்தான், தனக்குவமை இல்லாதான், அறவாழி அந்தணன், எண் குணத்தான், என்றாற் போல் இறைமைப் பண்புகளையே வள்ளுவர் சுட்டிச் செல்கின்றனர்” என்று கூறினீர். இந்த இறைப் பண்புகள் யாரை குறிக்கின்றது என்று அவர் எழுதவில்லையோ?. இந்த இறைப் பண்புகள் எங்கிருந்து வந்தது என்று அந்த மொழி அறிஞர் சொல்லத் தெரியாமல் போனதில் ஆச்சரியம் ஒன்றுமில்லை. காரணம் அவர் சைவ சித்தாந்தம் அறியாதவர். தங்களை போலவே!. மேற்கூறிய வார்த்தைகள் அனைத்தும் பரம்பொருளாகிய சிவ பெருமானை குறிக்கும் வார்தைகளேயாம். அவ்வார்த்தைகளுக்கு அர்த்தம் தெரியாவிட்டால் கேளுங்கள் விளக்கம் தருகின்றேன். “எண்குணத்தான்” என்னும் பதத்திற்கு பரிமேழகரே “சிவ ஆகம” முறைப்படி குறித்தது என்றே பொழிவுரை எழுதியுள்ளார். சில நேரங்களில், எம்மின தமிழர்களுக்கு நெத்தியில் அடிச்ச மாதிரி சொன்னாதான் கொஞ்சம் மண்டைக்கு ஏறும். அப்பத்தான் கொஞ்சம் சிந்தித்துப் பார்பார்பார்கள். இல்லையென்றால் மற்றவர்கள் சொல்வதர்க்கெல்லாம் “ஆமாம், ஆமாம் அப்படியும் இருக்கும்” என்று தலை ஆட்டிவிட்டுப் போகும் பொம்மைகள் நம்மில் ஏராளம், ஏராளம். கருத்து தொடர்ந்தால், திருக்குறள் பற்றிய ஆய்வறிக்கையுடன் பதில் மேலும் தொடரும்.
இப்பொதாவது திருக்குறலை முதலடியாக வைத்து,வாததொகுப்பை துவங்கினால் வழி காட்டியாக பிறர்க்கும் பயனாக அமையுமே,நன்றி,வாழ்க நாராயண நாமம்.
லைப் ஈஸ் ஈசி பட் பேட் டு அன்டர்ஸ்டென்,ஒற்றுமை பலம் பெறவே ஐக்கியம் பற்றி யோசிக்கிரோம்.ஆண்மீகத்துக்கு நுழையும் தனி மனிதர் கருத்து சமுதாயத்தை மோசமான பிலவுகளை ஏற்படுத்திவிடும்.இறைவனால் அருளப்பட்ட வேதம்,சாஸ்திரம்,புராணம்,இதிகாசங்கள் என்றும் மனித குலத்திற்கு நிதானத்தை கொடுக்கும்,அமைதியான வாழ்வை கொடுக்கும்.சைவமும் 6 சாஸ்திரத்தில் ஒன்ரே.குரு இன்மையால் ஞானம் பெறாதமையால் படுத்தும் அவஸ்தை நிம்மதியின்மையை தரும்.வேதங்கள் கற்றவரை குருவாக பெறுவது சிறப்பு,வுலகெங்கு போனாலும் ஒரே கருத்தை தான் சொல்வர்.பைபில்,குரான்,போன்று.சாஸ்திரம் அதையொத்த புராணம்,இதிகாசங்களை கடைபிடிப்பவர் கடைபிடிக்கலாம்.ஆனால் வேதம் முதல் யென்று அறிக.தாய்,தந்தை,குரு,வார்தைகளை விமர்சிக்ககூடாது அப்படியே ஏற்றுக்கொள்ளவ் வேண்டும்.கல்வி அடிப்படையில் கற்றுக்கொள்ளுங்கள்,அறிவை தேடுங்கள் தெழிந்த பின் ஞானம் தானே சுரக்கும்.பள்ளியில் கற்க இலவசம் ஆனால் அங்கே வாசிப்பு மாத்திரம் கொடுக்கபடுகிரது அதே ஆசிரியை அதேபாடத்திற்கு வீட்டில் டியூஷன் நடத்துகிரார்,டியூஷன் படித்தபிள்ளை வெற்றி பெருகிறது ஆனால் பள்ளிபடிப்போடு முடித்த பிள்ளை தோல்வியடைகிரது.ஆசிரியர் எல்லாம் பணம் செய்ய புரப்பட்டுவிட்டனர்,பெற்ற பிள்ளையை வளர்பதைவிட்டு தாய் பணம் பார்க புரப்பட்டுவிட்டால்,மருத்துவர் தனியே கிளினிக் வைத்து அங்கே வரசொல்லுகிரார்.பணம்3.வாழ் நாராயண நாமம்.
தேனீ அவர்களே //திருக்குறள் “சைவ சமய நூல்” என்றா எழுதினேன். மீண்டும் ஒரு முறை படித்துப் பாருங்கள். “திருக்குறள்” தமிழரின் “அறநூல்” என்று எழுதினேன். திருத்திக் கொள்ளுங்கள் // இது என்னையா புது குழப்பம். நான் திருக்குறளை தெலுங்கர் அறநூல் என்றா கூறுகிறேன்? அது தமிழ் அறநூல் என்பதில் யாருக்கு சந்தேகம்.? இங்கு விவாதம் தொடர்வதன் காரணம் நீங்கள் குறளை சைவச்மய சார்பு உடையது என்கிறீர். நான் அதை மறுத்து அது சமண தத்துவங்களை அடிப்படையாக கொண்டது என்கிறேன். அவ்வளவுதான். ஆனால் உங்கள் கருத்துகளை உற்று கவனிக்கும் போது நீங்கள் அடிப்படியிலேயே மிகவும் பிழையான கருத்தாக்கத்தோடு வாதத்திற்குள் வந்திருப்பது தெரிகிறது. உங்கள் கருத்துகள் தமிழினதின் தொன்மை சமயம் சைவம் என்பதில் இருந்து புறப்பட்டு வருவதை உணர்கிறேன். அதனால்தான் நான் குறள் சமண தத்துவங்கள் சார்ந்தது என்று கூறுவதை ஏற்க முடியாமல் ”தமிழர்களின் வாழ்க்கை பண்பாட்டின் சாரத்தை கசக்கி பிழிந்து நெரிபடுத்தி வள்ளுவன் வழங்கிய திருக்குறள் என்னும் அறவழியை வேற்றானுக்கு தாரைவார்த்துக் கொடுக்கும் உம்மையும் தாங்கள் கூறும் பிற நூல் ஆசிரியர்கள் போன்றவர்களினால்தான் தமிழன் இன்று வரலாறு தெரியாமால் போய் விட்டான் போலும் ‘ என்று குமுறுகிறீர்கள். நீங்கள் யாரை வேற்றான் என்கிறீர்? சமணனையா? அல்லது சைவன் அல்லாத அனைவரையுமா? தமிழ் இன வரலாற்றில் சமணத்தின் பங்கும் கொடையும் நீங்கள் அறிந்திருக்க வாய்பில்லை. காரணம் நீங்கள் சைவ சித்தாந்த பயிற்சி பெற்றவர். உங்களுக்கு ‘அமனை அழித்து வாதில் வெல்லும்’ கலை மட்டுமே தெரிந்திருக்கும். தொல் தமிழகத்தில் சமண பெளத்த மதம் ஆற்றிய சமூக கடப்பாடுகளை அறிய வரலாறு பயிலுங்கள். உயர் ஜாதியில் பிறந்தவனுக்கே கல்வியும் ஞானமும் என்று கட்டுபடுத்திய வைதீக மதங்களின் (சைவம் உட்பட) சட்டங்களை உடைத்து கல்வி மக்களுக்கு பொதுவானது என்று போதித்தது சமணம். வள்ளுவர் கல்வி என்ற அதிகாராத்தை எழுதி தமிழனுக்கு கல்வி பொது என்ற விழிப்பை கொடுத்தது சமண சிந்தனையின் தாக்கமே. கொல்லாமை, கள்ளுண்ணாமை, துறவு போன்ற வலிமையான சட்டங்களை சமண சமய சிந்தனை இன்றி நிகழ்த்த முடியாது. குறள் கொல்லாமையையும் கள்ளுண்ணாமையும் வாழ்வியில் நெறிகளாக வகுத்துக் காட்டியும் இன்றும் அதனை தமிழ் சமூகம் முழுவதுமாக பின்பற்ற முடியாமைக்கு காரணம் சமண மதத்தின் வீழ்ச்சியும் வைதீக சமயங்களின் வளர்சியுமே ஆகும். உயிர் கொல்லாமையை உலகுக்கு வகுத்துக்காட்டிய முதல் சமயம் சமணம்தான். திருக்குறள் சைவ சமய சார்பு உள்ளது என்று நீங்கள் தொடர்ந்து வாதாட ‘கடவுள் வாழ்த்தும்’, ‘எண்குணத்தானும் ‘ மட்டும் போதுமானது அல்ல. கடவுள் வாழ்த்தில் தமிழர் வாழ்வியலில் இறைமை குறித்து நிழவிய சிந்தனைகளை தொகுத்து வழங்கி இருப்பது தெளிவு. வள்ளுவனின் அறம் குறித்த சிந்தனை தெளிவை பெற அறத்துப்பாலை முழுவதுமாக ஆய்வு செய்ய வேண்டும். சமண துறவிகள் வகுத்த வாழ்வியல் நெறிகள் பலவற்றை (கொல்லாமை, கள்ளுண்ணாமை, கல்வி, துறவு, என்னும் பல) அங்கு காணலாம். சமண சிந்தனையில் ஊறி திளைத்த வள்ளுவன் அதன் அறங்களை தமிழர் வாழ்வியலோடு கலந்து உலக நெறியாக வகுத்துள்ளான். ஆனால் ஒரு போதும் அவன் எந்த சமய சார்பையும் வழிந்து கூறாமல் விட்டுவிட்டான்.
அன்பரே, நான் இந்த வாதத்தில் முன் வைத்த பல அறிஞர் பெருமக்களின் கருத்தை தாங்கள் மிக துச்சமாக தூக்கி வீசி விட்டு உங்கள் ஒற்றை கருத்தை விடாமல் பிடித்து தொங்குவது சரியல்ல. அறிஞர் அனைவரையும் ‘நாய்களின் குரைப்பு’, ‘சைவ சித்தாந்தம் கற்காதவர்’ என்று மிக துடுக்காக பேசும் உங்கள் பேச்சு மிக அநாகரீகமானது என்பதை உணருங்கள். தமிழ் தென்றல் திரு.வி.க போன்ற சான்றோர்களையும் சைவ சமய அறிவு அற்றவர் என்று கூற உங்களுக்கு எப்படி துணிவு வந்தது? உங்கள் சார்பு கருத்துகளை நிறுவ அறிஞர்களின் கருத்துகளை சான்று காட்டுங்கள். வாதத்திற்கு அதுதான் அழகு. இதுவரை நீங்கள் ஒரு அறிஞரின் சான்றையும் காட்டாமல் நீங்கள் மட்டுமே உங்கள் கருத்துகளுக்கு சான்றாக இருப்பதால் உங்கள் வாசிப்பு தரம் என்ன என்பது நன்கு தெரிகிறது. இது போன்ற வாதங்களில் கலந்து கொள்ள சமய அறிவு மட்டும் போதாது. வரலாற்று அறிவும் வேண்டும் என்பதை வலியுறுத்த விரும்புகிறேன். நன்றி
இப்பொழுது தாங்கள் கூறும், திருக்குறள் சமண மத கோட்பாடுகளைச் சார்ந்தது என்ற கருத்து எங்கிருந்து, எப்பொழுது வந்தது?. எப்பொழுது திராவிட இயக்கத்தினர் கடவுள் மறுப்புக் கொள்கையை முன் வைத்தனரோ அப்பொழுதே அவர்களுடைய நம்பிக்கையை நிலைநிறுத்த ஆதாரமாக ஒரு பிரமான நூல் தேவைப்பட்டது. இருக்கவே இருக்கின்றது உலகத் திருமரையாகிய திருக்குறள் அதை நாம் எடுத்துக் கொள்வோம். அதை சொந்தம் கொண்டாட ஆரியனனுக்கோ, சைவனுக்கோ நாம் வழி விடக் கூடாது என்று முடிவு கட்டினர். அதற்க்குச் சிறந்த வழி திருக்குறள் சமண மத கோட்பாடுகளை அடிப்படையாகக் கொண்டது என்ற ஒரு வெடி குண்டை போட்டால் போதும் என்ற நிலைப்பாட்டிற்கு வந்தனர். இப்படிச் செய்தால், வைணவ, சைவ சமயத்தாருக்கு இந்நூல் சொந்தமில்லை என்று வாதிட்டு அது பொது நூல் அதையே திராவிடர்கள் வாழ்க்கை நெறியாக பின்பற்றுகின்றோம் என்ற மாயை வெளிப்படுத்த துவங்கினர். இத்தைய உள்நோக்கத்தின் விளைவே திராவிட இயக்கம் தோன்றிய பிறகு திருக்குறளுக்கு சமண மத சாயம் பூசப்பட்டது. நீங்கள் கூறும் தமிழ் அறிஞர்களின் புரட்சிகர சமண சாயல் நூல்களும் இத்திராவிட காலத்திற்குப் பின் வந்ததே என்பது அவற்றின் வெளியீடு வருடங்களில் இருந்து தெரியும். இப்ப நான் சொல்ல வருவது என்னவென்றால் தாங்கள் ஒரு திராவிட இயக்கத்தின் தலைவராக இருந்து திராவிட இயக்கத்தின் மரபை திருக்குறளின் வழி இங்கே புகுத்த துணிந்தீர். திருக்குறள் சமண மத சார்புடையது அல்ல என்பதற்கு திருக்குறளில் கடவுள் வாழ்த்தை முதல் அதிகாரமாக வைத்தது ஒன்றே போதுமான ஆதாரம். ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு பதம் என்பது போல. மேலும் விளக்கம் வேண்டும் என்றால் எழுதுங்கள் பதில் கிடைக்கும்.
பினாங்காரே, திரு வி.க. -வை தாங்கள் தொடர்பு படுத்தி எழுதி இருந்தீர்கள் ஒழிய அவரின் கருத்துக்களை ஆதாரபூர்வமாக முன் வைக்கவில்லை. ஆதாரத்தை முன் வையுங்கள் அதற்கும் எம்மிடம் பதில் இருக்கின்றது. அறிஞர்களை “நாய் குறைப்பது போன்றது” என்பது எம் வழக்கமல்ல. அவர்களின் அறிவாற்றலை மதிப்பதே எம் வழக்கம். ஆனால், அந்த அறிவு நூல் ஒரு தலைபட்சமாக இருந்து அதற்க்கு வக்காலாத்து வாங்க எம்மால் முடியாது. யாம் சொல்ல வந்த கருத்தை ஒரு உவமையைக் கொண்டு விளக்கியதை வியாக்கீனப் படுத்தி திசை திருப்புவதில் அர்த்தமில்லை.
பினாங்காரே, நீங்கள் சமணர் என்று குறிப்பிடுவது தென்னாட்டில் வாழ்ந்த தமிழர்களையே என்று உறுதிபடுத்திக் கொள்வோமா?. இல்லை நீங்கள் சொல்லும் “சமணர்” தமிழர் அல்லாத வேற்று இனத்தவர் என்று சொல்ல வருகின்றீர்களா?.
பினாங்காரே, திருவள்ளுவர் சமயம் யாது என்பதற்கு பாவாணர் தமது “திருக்குறள் தமிழ் மரபுரை” என்னும் நூலில் இவ்வாறு குறிப்பிடுகின்றார்: “கடவுள் மதமாவது, காலமும் இடமும்போல முதலும் முடிவும் உருவமும் நிறமுமின்றி, இயல்பாகவே எங்கும் நிறைந்தவனாகவும், எல்லாம் வல்லவனாகவும், எல்லாம் அறிந்தவனாகவும், எல்லாம் உடையவனாகவும், முற்றின்பனாகவும், முழுத் தூயனாகவும், எல்லையில்லா அருளனாகவும், எல்லா உலங்கங்களையும் படைத்துக் காத்தழிப்பவனாகவுமிருந்து ஒப்புயர்வற்று மனமொழி கடந்த கடவுளை, உள்ளத்தில் எங்கும் என்றும் தொழுது, எல்லா உயிர்களிடத்தும் அன்பும் அருளும் பூண்டோழுகுதலேயாம். திருவள்ளுவர் சமயமும் அதுவே”. ஐயா, பாவாணர் சொன்ன அத்துணை பண்புகளுமே பரம்பொருளாகிய சிவபெருமானுக்கே உரிய 8 சிறப்பு குணமாகும் என்பது சைவ சித்தாந்த கோட்பாடு. இறைவனின் சிறப்புக்களை கூறும் குறளின் முதல் அதிகாரத்தை இறைவன் என்று பெயர் குறிப்பிடாமலேயே “இறைமையைத்தான்” வள்ளுவர் குறிப்பிட்டார் என்பது திராவிடரின் வாதத் திறமை.. ஆனால் அது நிழலை நிஜமாக்கும் வஞ்சகத் திறமை என்பது அறிவார்ந்த மக்கள் அறிவர். பாவாணர். திராவிடத்தில் ஊறித் திளைத்த தமிழ் அறிஞர். ஆகையால், வள்ளுவனின் சமயத்தை மேலும் இவ்வாறு கூறுகின்றார்: ” இதனாலேயே அவர் எச் சமயத்தையும் தழுவாது எல்லாச் சமயங்கட்க்கும் பொதுவாக கூறியதும், எல்லாச் சமயங்களும் கூறும் இறைவன் பெயர்களையும் கடவுட்க்குப் பொருந்தியதும் என்க.” என்று குறிப்பிடுகின்றார். திருவள்ளுவர் கூறுவது “பொதுசமயம்” என்று யாமறிந்த தமிழிலே சொன்னாலும், அக்கூற்று, ஒரு நீதிபதி தான் முன்னமே செய்து விட்ட முடிவுக்கு காரணக்காரியங்களை தேடி எழுதும் நீதியாகும். இது நெறி தவறி வழங்கும் நீதி. காரணம் நீதிபதியானவர் காரணக்காரியங்களை சீர்தூக்கிப் பார்த்து எவ்வொரு சனலமும் இல்லாமால் அதற்க்கு பின்பே தீர்ப்பு சொல்வதேயாம். இதுவே, நீதி வழங்குவோருக்கு உரிய நெறி. பாவாணர் இந்நெறியில் தவறி விட்டார் என்று உறுதியுடன் கூறுவதில் தப்பேதும் இல்லை. இதற்க்கு பாவாணரைச் சொல்லி குற்றமில்லை காரணம் அவர் திராவிட பாசறையில் இருந்து வந்தவர். இவரின் நிலையை பார்க்கும் போது “உன்னைச் சொல்லி குற்றமில்லை, என்னைச் சொல்லி குற்றமில்லை, காலம் செய்த கோலமடா” என்றே பாடத் தூண்டுகின்றது. கடவுள் மறுப்பில் கட்டுண்ட திராவிடத்தை கொண்டே திருவள்ளுவரின் சமயத்தை சொல்லச் சொன்னால் அவர் என்ன செய்வார் பாவம் . சொல்ல விரும்பியதை சொல்ல முடியாமல் கண்டத்தில் வைத்துக் கொண்டு, வாயில் வந்ததையே சொன்னார். தொடரும்.
பினாங்காரே, தாங்கள் குறிப்பிட்ட “உயர் ஜாதியில் பிறந்தவனுக்கே கல்வியும் ஞானமும் என்று கட்டுபடுத்திய வைதீக மதங்களின் (சைவம் உட்பட) சட்டங்களை உடைத்து கல்வி மக்களுக்கு பொதுவானது என்று போதித்தது சமணம்.” வருணாசிரம தர்மங்களைக் கொண்ட வைதீகமும், அதனை முழுமையாக உள்வாங்கிய வைணவமும் வெறுக்கப்பட வேண்டியவையே. ஒதுக்கப்பட வேண்டியதும் கூட. ஆனால் எவ்வொரு ஆதாரக் கருத்துக்களும் இல்லமால் சைவத்தையும் அந்த ஓட்டைக் கப்பலில் கொண்டு போய் சேர்ப்பது எவ்விதத்தில் நியாயமாகும்?. மனிதனை உடம்பால் பார்க்காமல் உயிரின் அளவில் பார்த்து “அனைத்து உயிர்களும் சமமே” என்று நிறுவிய சித்தாந்தம் இந்திய மெய்யியல் தத்துவங்களில் தனிச் சிறப்பு பெற்று நிற்கின்றது என்பதனை இந்திய கிறிஸ்துவ மத போதகர்களே ஒற்றுக் கொண்ட உண்மை. சைவ சித்தாந்த தத்துவத்தில் குறை இல்லை. உள்ளதை உள்ளபடியே பின்பற்றாமல் அதனையும் வைதீக சிவமாக்க உதவிய தமிழ் நாட்டு சைவ ஆதினங்களைக் குறை சொன்னால் நான் உங்களுடன் சேர்ந்தே ஒற்றுமையில் வாதிடுவேன். அன்பே நெறி என்று இருக்கும் தமிழர்களின் சைவத் தன்மையை உரசிப் பார்ப்பது “சொக்கத் தங்கத்தை உரசிப் பார்பதற்குச்” சமமாகும். தாங்கள் வேண்டுமானால் உண்மைச் சைவர்களுடன் ஒற்றி வாழ வேண்டாம் என்று ஒதுங்கலாம். ஆனால், எமது அன்பு பிறப்புகளுடன் சேர்ந்து வாழ்வதே சிறப்பாகும் என்று அரவணைக்க வரும் எங்களைப் போன்றோரை ஒதுக்கித் தள்ளுவது முறையாகுமோ?. சைவம் யாரையும் பாகுபடுத்தவில்லை. பொய்யான சைவன் செய்த காரியத்துக்கு சிவபெருமான் பொருப்பேர்க்கத்தான் வேண்டுமா?.
பினாங்காரே, “வள்ளுவர் கல்வி என்ற அதிகாராத்தை எழுதி தமிழனுக்கு கல்வி பொது என்ற விழிப்பை கொடுத்தது சமண சிந்தனையின் தாக்கமே. கொல்லாமை, கள்ளுண்ணாமை, துறவு போன்ற வலிமையான சட்டங்களை சமண சமய சிந்தனை இன்றி நிகழ்த்த முடியாது.” என்று கருத்து எழுதினீர். தாங்கள் திராவிட மரபில் கற்ற வரலாற்றை மட்டுமே கொண்டு தமிழரின் சமூகவியலை அளவுகோல் கொண்டு மதிப்பீடு செய்வது முறையாகாது. திருவள்ளுவரின் சமகாலத்திலோ அல்லது அதற்கும் முன்போ வாழ்ந்த சிவஞான சித்தர் திருமூலர் நீங்கள் மேலே சொல்லிய அனைத்தையும் முன்னமே சொல்லிவைத்து விட்டாரப்பா. (1) கொல்லாமை (தந்திரம் 1.239 முதல் 241 வரை) (2) கள்ளுண்ணாமை (தந்திரம் 1.311 முதல் 322 வரை) (3) கல்வி (தந்திரம் 1.277 முதல் 286 வரை) (4) புலால் மறுத்தல் தந்திரம் 1.242 முதல் 243 வரை) (5) துறவு என்பதற்கு யாக்கை நிலையாமை, செல்வம் நிலையாமை, இளமை நிலையாமை உயிர் நிலையாமை என்று 1.187 தந்திரத்தில் இருந்து துவங்கும் மந்திரங்களைப் படித்தறியுங்கள். பின்னர் திருக்குறள் சமண சார்புடையதா அல்லது சைவ சார்புடையதா என்பதை தாங்கள் அறிவீர்கள். கடைத்தெருவில் இருக்கும் விளக்க உரையுடன் கூடிய ஒரு திருமந்திரத்தை வாங்கிப் படியுங்கள். அப்பொழுதாவது தமிழன் வாழ்வாங்கு வாழ்வதற்கு சமண தத்துவம் அவசியமற்றது என்பதை அறிவீர்கள். மாற்றான் வீட்டு மல்லிகை மணக்கும் என்ற போக்கில் போனால் தமிழர்கள் தடம் புரண்டு போவார்கள். தங்களைப் போல பலர் அப்படித்தான் போய் விட்டார்கள். என்ன செய்ய. சைவ சித்தாந்தத்தை தமிழன் அறியாது போனது யார் குற்றம்.?. மீண்டும் “உன்னைச் சொல்லி குற்றமில்லை, என்னைச் சொல்லி குற்றமில்லை, காலம் செய்த கோலமடா” என்றே பாடத் தூண்டுகின்றது!
முடிவுரை
தேனீ அவர்களே, நான் இந்த உரையாடலுக்குள் இரண்டு கருத்துகளை முன்வைத்து உட்புகுந்தேன் 1. கட்டுரையாளரின் ‘நால்வரும் பார்ப்பணரை பகைத்துக் கொள்ளாமல் தமிழ்ப் பணி செய்தனர்’ என்ற கூற்று மிகவும் பசப்பலானது என்பதனால், நால்வர் காலத்திற்கு (பக்தி காலத்திற்கு) பிறகுதான் தமிழ்ச் சமுதாயம் ஆரிய அடிமைத்தனத்தில் படு மோசமாக வீழ்ந்தது என்பது என் குற்றச்சாட்டாக இருந்தது. ஆதாரமாக 7ஆம் நூற்றாண்டு முதல் 12 –ஆம் நூற்றாண்டு வரை தமிழ் மண்ணில் இறைவனின் பெயராலும், பக்தியின் பெயராலும் அரசுகளின் அதிகாரத்துடன் ஆரியம் தன் முழு பலத்தையும் பயன்படுத்தி தமிழரை அடிமை படுத்தியது. அரண்மனைகளும் கோயில்களும் இப்பணிக்கு களம் அமைத்துக் கொடுத்தன. இந்த மாபெரும் சமுதாய சுழற்சிக்கு வித்திட்டது நால்வர் காலத்து சமுதாய சமய பணியே என்பது தெளிவு. நால்வரும் வேதத்தை ஏற்றுக் கொண்டு கொண்டாடியதாலேயே அவர்களை வைதீக உலகம் இன்றும் போற்றுகிறது. வட மொழியை ஊடகமாக கொண்டு ஆரியம் தமிழ்மண்ணில் காலூண்ற முடியாமல் தத்தளித்த போது, நால்வரின் திருத்தமிழ் அக்காரியத்தை மிகச்சுலபமாக செய்து முடித்தது என்பதும் உண்மை. தமிழ் ஞான உலகம் வேதத்தை ஏற்றுக் கொள்கிறது என்பதை பறைசாற்றியவர்கள் சைவ குறவர்களும் வைணவ ஆழ்வார்களுமே என்பது என் வாதம். ஆகவே அவர்கள் பண்டை தமிழ் ஞான மார்கத்திற்கும் வைதீக உலகத்திற்கும் பாலமாக இருந்து சமரசம் செய்து வைத்தவர்கள் என்பதே உண்மை. இந்த சமரசத்தின் விளைவாக சமுதாயத்தில் வர்ணாசர்ம கோட்பாடு மிகவும் உறுதியாக காலூண்றியது என்பதையும் நான் சுட்டினேன். இக்கருத்துகளை நீங்கள் ஓரளவு மறுத்தும் ஓரளவு ஏற்றும் கொண்டீர்கள்.
இன்று சைவ சமயத்தை வைதீக கட்டுப்பாட்டில் இருந்து மீட்டு அதை தமிழர் சமயமாக நிறுவ பலர் போராடினாலும் தேவார திருவாசகங்கள் வேதத்தில் இருந்து வேறுபட்ட கருத்துகளை உடையன அல்ல என்பதால் இப்பணி பல வினாக்களில் முடங்கி விடுவதை பார்க்க முடிகிறது. தமிழக முருகனார் போன்றவர்களின் தீவிர சைவ சமய ஈடுபாடும் தமிழ் ஈடுபாடும் நால்வர் பாடல்களில் கூறப்படும் நான்மறை என்பது ஆரியர் வகுத்த சதுர்வேதமன்று, அது வேறு இது வேறு என்பன போன்ற விளிம்புநிலை கருத்தாக்கங்களை முன்வைக்கும் அளவுக்கு நிலமை உள்ளதை உணருங்கள். இந்நிலைக்கு காரணம் பக்தி இலக்கிய எழுட்சி காலமே என்பது என் முடிவு.
அடுத்து திருக்குறள் சைவ சமய தத்துவங்களை அடிப்படையாக கொண்டது என்று நீங்கள் கூறிய கருத்தையும் நான் மறுத்தேன். திருக்குறள் சமண மத தத்துவங்களை உள்ளடக்கியது என்பதோடு அது எந்த சமயத்தையும் சார்ந்து தன் நெறிகளை வகுத்துக் கூறவில்லை என்பது என் நிலை. இந்நிலையை முன் வைத்து நான் பல தமிழ் அறிஞர்கள் கூறிய கருத்துகளையும் மேற்கோள் காட்டினேன். தமிழ் உலகம் கொஞ்சம் அசந்தாலும் வள்ளுவனுக்கு பூணூலும் திருநீறும் போட்டு அழகு பார்க்க பலர் தயாராக இருப்பதால் இக்கருத்தாடலை நான் மிக தீவிரமாக தொடர்ந்தேன். பல சான்றுகளை முன்வைத்து பேசினேன். ஆனால் நீங்கள் எனது எல்லா ஆதாரங்களையும் எந்த முகாந்திரமும் இன்றி புறந்தள்ளி விட்டு உங்களின் ஒரே நிலை பாட்டை வேறு வேறு சொற்களைக் கொண்டு மீண்டும் மீண்டும் வெவ்வேறு வகையில் கூறுவதையே வாடிக்கையாக கொண்டிருந்தீர்கள்.
எனது கருத்துகளை மறுக்க நீங்கள் இரண்டு வகை உக்திகளோடு முன்றது தெளிவு. ஒன்று நான் முன் வைக்கும் வைதீக சார்பு அறிஞர்களின் கருத்துகளை ‘சைவ சமய ஞானம் அற்றவர்கள்’ என்று ஒதுக்குவது. இரண்டு, மாற்று கருத்து உடைய அறிஞர்களை மொத்தமாக திராவிட தாக்கத்தில் பிதற்றியவர்கள் என்று ஒதுக்குவது. ஆகவே இதன் வழி நீங்கள் யாருடைய கருத்தையும் ஏற்க தயார் இல்லை என்பது தெளிவாகிறது. (தங்கள் கருத்துக்கு) மாற்று கருத்து உடைய அறிஞர்களின் கருத்துகளை பிற்போக்கு தனமான காரணங்களை கூறி ஒதுக்கும் நீங்கள் உங்கள் சார்பு கருத்தை நிறுவ ஒரு அறிஞர் பெருமக்களையும் அடையாளம் காட்டாதது விந்தை. நான் நீங்கள் பர்மேழலகரின் மூல உரையில் இருந்தோ, பி.சி கணேசன் போன்ற தற்கால உரை ஆசிரியர்களின் கருத்துகளில் இருந்தோ எதாவது அடையாளம் காட்டுவீர்கள் என்று நம்பி ஏமாந்தேன். உங்களுக்கு உங்களை விட்டால் வேறு மேற்கோள் காட்ட ஆள் இல்லாமல் போனது வியப்பு. உங்கள் கருத்துக்கு நீங்களே சான்று சொல்லும் புதிய பாணியை தர்க்க உலகம் ஏற்காது அன்பரே.
மேலும் தமிழ் இனத்தின் தொன்ம சமயம் சைவமே என்கிற சமய அடிப்படை வாதத்தை முன் நிருத்தி நீங்கள் சிந்திப்பது மிகப்பெரிய வரலாற்று பிழை என்பதையும் நான் சுட்டினேன். தமிழ்
சமுதாயத்தின் பண்டை அறிவு உலகம் சமண ஞானத்தை உள்வாங்கி உள்ளதையும் கோடிட்டு காட்டினேன்.
எனினும் நீங்கள் மற்றவர் கருத்தை ஏற்காமலும் உங்கள் கருத்துக்கு எந்த வழுவான சான்று வைக்காமலும் வரட்டு பிடிவாதம் பிடித்து வாதத்தை நீட்டுகிறீர்கள். இறுதியாக என்னை உங்களிடம் வினா தொடுத்து விடை பெருமாறு பணிக்கிறீர்கள்.
ஐயா, உங்களிடம் கேள்விகள் கேட்டு விடை பெரும் நிலையில் நான் இல்லை. காரணம் நான் என்ன கேள்வி கேட்டாலும் அதற்கு உங்கள் பதில் எப்படி இருக்கும் என்பதை என்னால் துல்லியமாக ஊகிக்க முடிகிறது. பாவாணர் நீதி தவறி பேசக்கூடியவர் அல்ல. அந்த நெருக்கடி அவருக்கு என்றுமே இருந்தது இல்லை. பாவாணரையும் குறை சொல்லக்கூடிய உங்கள் மனநிலை வருத்தம் அளிக்கிறது. உண்மையில் நீங்கள் தான் முன் முடிவுகளுக்கு ஏற்ப சூழலை வளைத்து பதில் தறும் குணம் உடையவராக இருக்கிறீர்கள். பாவாணரையும் விமர்சிக்கும் அளவுக்கு நீங்கள் ‘பெரிய ஆள்’ என்றான பின்பு, தமிழ் தென்றல் கருத்தை ஆதாரத்தோடு உங்கள் முன் வைக்கவும் நான் விரும்பவில்லை. இது வரை தாங்களாக ஒரு அறிஞர் பெருமக்களையும் சான்று காட்டாததோடு நான் முன்வைத்த எல்லா அறிஞர்களையும் இரண்டு வித காரணங்களை கூறி உதாசினப்படுத்திய பிறகு திரு வி கவின் கருத்துகளும் தேவைப்படாது. அதேப் போன்று அறிஞர் அ.பா. அறவாணர் முன்வைக்கும் சில கருத்துகளையும் கூறலாம் என்று நினைத்தும் அதையும் எழுதாமலே விடுகிறேன். அதேனோடு ஆர்வமுள்ள வாசகர்கள், ஞானி எழுதிய ‘தமிழ் மெய்யியல் அன்றும் – இன்றும்’ என்னும் நூலையும் வாசித்து தெளிவு பெறலாம். திருக்குறள் சைவசமய மையமானது என்னும் கருத்து உங்களைப் போன்ற சிலரின் அவாவாக, எதிர்ப்பார்பாக, லட்சிய கனவாக, போராட்டமாக கூட இருக்கலாம். ஆனால் அது வரலாற்று அடிப்படையிலும் இலக்கிய அடிப்படையிலும் நிரூபனமற்றது என்பதே உண்மை.
இறுதியாக, ஒரு மாற்று கருத்தை முன் வைப்பரை சட்டென ஏதாவது ஒரு குழுவுடன் இணைத்து குறைத்து பேச கூடாது. தாங்கள் கூறுவது போல் நான் திராவிட கழக தலைவனோ பாசறை உறுப்பினனோ அல்ல. திராவிட அமைப்புகளின் மீதான என் விமர்சனங்கள் வேறானவை. அவை இங்கு முக்கியம் அல்ல. அறிவு தளத்தில் நின்று உரையாட எந்த கட்சி, கழக, சமய பின்புலமும் தேவை இல்லை என்பதை வழியுறுத்தி விடைபெருகிறேன். இத்துடன் இந்த வாதங்களில் இருந்து நான் விலகிக் கொள்கிறேன். மீண்டும் ஒரு வாய்ப்பு அமைந்தால் உரையாடலை தொடரலாம். தேனீக்கும் மிக்க நன்றி. உரையாடலை தொடர்ந்து வந்த வாசகர்களுக்கும் நன்றி
பினாங்குகாரருக்கு … நான் செம்பருத்தியிலிருந்து முற்றாக வெளியேறிட நினைத்தே என்னுடைய கடந்த 16/4/14 பதிவில் குறிப்பிட்டிருந்தேன். ஆனாலும் தாங்களும் தேனீயும் பரிமாறிய ஆழமான வாதங்களை தொடர்ந்து வாசித்தேன்;களிகூர்ந்தேன். திடீரென தாங்கள் வெளியேறி கருத்துக் களம் இத்தோடு நின்று விடுமோ என்று நினைக்கும்போது ஏமாற்றமாகிடுமோவென அஞ்சுகின்றேன். திருக்குறள் குறித்து தங்களோடு கருத்துகளைத் தனிப்பட்ட வகையில் பரிமாறிக்கொள்ள விரும்புகின்றேன்.தங்களின் அறிவும், தேனியின் தமிழ்ப்பற்றும் என்னை வெகுவாக கவர்ந்தது. உங்களோடு மின்னஞ்சலில் தொடர்புகொள்ள விரும்புகின்றேன். என்னுடைய இ மெயில், [email protected] நன்றி.
நன்றியுரை.
பினாங்காருக்கும், ஜே.வி.பி.-க்கும், உழவருக்கும், சிவராஜ்க்கும் இன்னும் பலருக்கும் இக்கருத்துக் களத்தில் பங்கெடுத்து அறிவார்ந்த கருத்துக்களை முன் வைத்து உரையாடியதற்கு நன்றி. மீண்டும் மற்றொரு தலைப்பில் சிந்திப்போம்.
சரித்திரம் கூறும் கதை,முலுமை அடையா கதை,பயன் தராத கதை வாழ்க நாராயண நாமம்.
நல்ல கட்டுரை. கடவுள், சைவ சமயம் பற்றி நல்ல விளக்கம். என்றாலும் ஐயா, எனக்கு என்றென்றும் தீராத சந்தேகம் ஒன்று உள்ளது; தெளிவு படுத்துவீர்களா?
சரி, கடவுள் நம்மைப் படைத்து, நமக்கு என்னென்னவெல்லாம் கிடைக்கவேண்டுமோ அத்தனையையும் கிடைக்கப் பண்ணுவது அவரின் கடமை அல்லவா? பின்னர் ஏன்தான் நாம் இங்குள்ள பிரச்சனைகள் பற்றி அவருக்கு அறிவித்துக் கொண்டே இருக்க வேண்டும்? ஏன், நாம் சொல்லாவிடின் அவருக்குத் தெரியமாட்டாதா? எல்லாம் அவன் செயல் என்றால், நான் ‘வேண்டுவதும்’ அவன் செயல் தானே? பின்பே ஏன்தான் நான் வணங்கவில்லை என்று குறை கூறவேண்டும்?
வணங்கும்போது அவரின் சொந்தங்கள், உறவுகள், செய்கைகளைச் சொல்லிக் கும்பிட்டால் அவர் மனம் குளிர்ந்து, மனம் இரங்கிப் பலன் தருவாராமே? இது கொஞ்சம் கடவுள் தன்மை போலத் தெரியவில்லையே?
அவர் நமக்குப் பொருளும் தந்து, ஐம்புலன்களையும் தந்து எல்லாவற்றையும் அனுபவிக்கும்படிதானே நம்மைப் படைத்திருக்கின்றார்? இத்தோடு திருப்திப்படாமல், ஏன்தான் பலர் பேராசை கொண்டு, மேலும் பொருள் வேண்டி தினம் தினம் வழிபடுகின்றார்கள்? இன்னும் பென்னாம் பெரிய மகாப் பேராசை என்னவென்றால், எங்கோ, எப்போவோ, ஏதொவாகவோ பிறக்கவிருக்கும் புல்லோ, பூடோ, உயிரோ, கலமொ, கரப்போத்தானோ, கோரப்பொத்தானோ எதோ ஒன்று நல்லாய் இருக்க வேண்டும் என்று, காணாத மறு பிறப்பை நோக்கி ஏன்தான் பிதற்றுகின்றார்கள்?
கடவுளின் எண் குணங்களின்படி அவர் தாமாகவே எல்லாம் செய்ய வேண்டியவர். நாங்கள் வணங்கினாலும் சரி, விட்டாலும் சரி அவர் தன கடமையைச் செய்து கொண்டிருப்பார் என்றுதான் எனது விளக்கம்.
ஆகவே, ஏன்தான் இந்த ‘கும்பிடுதல்’ என்பது அவசியம் ஆகின்றது?
அந்நிய மதம் என்று சொல்லும் நீங்கள் தான் ஒன்றே குலம் ஒருவனே தேவன் என்று சொல்கிறீர், உலகின் முதல் மனிதன் எந்த மதம்? விளக்க முடியுமா?
“மதம்” என்ற வார்த்தையில் அடங்கி இருக்கும் பொருளின் பின்னணி “நம்பிக்கை” தான். மனிதன் எதன் மீது முதலில் நம்பிக்கை வைத்தான் என்று ஒரு 20,000 வருடங்கள் பின்னே சென்று ஆராய்ந்து விட்டு வந்து சொன்னீர்களானால் பதில் சொல்ல எங்களுக்கும் வசதியாக இருக்கும் அசோக். “மதம்” என்ற வார்த்தைக்கும் “சமயம்” என்ற வார்த்தைக்கும் வித்தியாசம் உள்ளது.
சந்திரா, தங்களின் கேள்விக்கு பதில் அளிக்க கட்டுரையாளருக்கு நேர அவகாசம் இல்லை போலும். இருப்பினும் தங்கள் கேள்விக்கு கட்டுரையாளரின் “ஐயம் தெளிக” என்ற கட்டுரைகளில் ஒரு கட்டுரையின் இணைய சுட்டியை இத்துடன் இணைத்துள்ளோம். “அவனுக்கென்ன வந்தது இதைச் செய்ய” என்ற பகுதியைப் படித்து ஏன் நாம் இறைவனை வணங்கி அவனை உணர வேண்டும் என்று தெளிவு பிறக்கலாம். “பொய்ப் பொருளை விட்டு, மெய்ப் பொருளை உணருவதே “இறைவனை கும்பிடும்” நோக்கமாகும். இணைய சுட்டி http://saivaperavai.org/wp-content/uploads/2012/09 – யில் “ஐயம்-தெளிக-05Fஎப்2013” என்ற தலைப்பில் இருக்கும் கட்டுரையைப் படிக்கவும்.
அருமையான கருத்துக்கள்
நன்றி தேனி .
தேனீ “உன்னைச் சொல்லி குற்றமில்லை, என்னைச் சொல்லி குற்றமில்லை, காலம் செய்த கோலமடா” என்ற பாடல பாடி எடுக்கவும் ,நாலு காசு கிடைக்கும்ல ,,பெரிய புலவி என்ற நினைப்பா ,,,போயி வேலைய பாருங்கடி
தனக்குவமை இல்லாதான் தாள் சேர்ந்தார்க்கல்லால் மனக்கவலை மாற்றல் அரிது என்பது வள்ளுவர் வாக்கு. இக்குறளின் பொருள்: தனக்குவமை இல்லாதவனாகிய சிவனின் சேவடி சேர வேண்டும். அவ்வாறு சேராதவர்களுக்கு வாழ்வில் கவலைகள் தீரவே மாட்டா. பிறவித் துன்பம் தீர, வாழ்வை சஞ்சலமில்லாமல் வாழ சிவனடியை நினைக்க வேண்டும் என்பதுவே தெய்வப் புலவரின் வழிகாட்டல். ஆரிய வேதங்கள் நமக்கு முக்கியமில்லை. பன்னெடுங்காலமாக தமிழ்நாட்டில் வாழ்ந்து வந்த நம் பாட்டன் முப்பாட்டன் யாராவது வேத மாத்திரம் படித்தார்களா? இப்போது படிக்கிறார்களா? இல்லையே? அது அவசியமில்லை. விரும்புவோர் விரும்பிய பகுதியைப் படித்துக் கொள்ளட்டும். Black magic, vengeance, உயிர் பலி போன்றவை வேதத்தில் உள்ளவை. நமக்கு அது தேவையில்லை. தமிழருக்கென்று உள்ள சமயம் ஆசிரியர் ஆறு நாகப்பனார் சொன்னதுதான். திருமாலும் முருகனும் கொற்றவையும் தமிழர் வழிபட்ட இறை சக்திகள். எந்த வித கவன அலைபாய்தலும் இன்றி (without distractions) ஒரே கவனமாக ஆன்மீக இன்பத்தில் திளைக்க விரும்புவோர் சிவ சிந்தனையில் மட்டும் மூழ்கினால் போதும். இது இறை அருளாளர்கள் நமக்குக் காட்டிய வழி. இந்த வழியை மறுத்தும் அவமதித்தும் இப்பக்கத்தில் எழுதுவோர் தங்கள் தீவினையின் அளவை அதிகரித்துக் கொள்பவர்கள்தான். அவர்களுக்குப் பதில் எழுத வேண்டிய அவசியம் கிடையாது. ஏனெனில் அவர்கள் ஒரு தீய நோக்கத்தோடுதான் இங்கு வருவார்கள். அவர்களின் உள்நோக்கம் அறிந்து நாம் நடந்து கொள்ள வேண்டும். I would just ignore them and concentrate on raising awareness among our people. Hats off to those who give useful quotes, especially Theni.
நாத்திக வாதம் புரியும் தமிழ்ப் பற்றாளர்களுக்கு ஒரு வேண்டுகோள். வேத சமயத்தையும் தமிழ்ச் சமயத்தையும் ஒரு சேரப் பார்க்க வேண்டாம். அவ்வாறு பார்த்தவர்கள் பலர் பிராமணீய சமயத்தின் கோளாறுகள் கண்டு வெறுத்து மத்திய கிழக்கில் உருவான சில சமயங்களில் சென்று சேர்ந்துவிட்டனர் என்பது நாம் அறிந்த வரலாறுதான்.. அதனால் அவர்களின் கலாசாரம் மாறிவிட்டது என்பது கண்கூடு. அவர்களின் பெயர்கள் தமிழில் இல்லை. ஆங்கிலம் அல்லது அரபு மொழியில்தான் உள்ளது. அவர்கள் பெரும்பாலும் தமிழ் இலக்கியம் படிக்க விரும்புவதும் இல்லை. இவ்வாறு கொஞ்சம் கொஞ்சமாகத் தமிழின் பயன்பாடு அழிய முக்கிய காரணம், ஆரிய மதத்தை மறுதலித்து நாம் மேற்கொள்ளக் கூடிய சிறந்த தமிழ்ச் சமயம் பற்றிய விழிப்புணர்வு இல்லாமல் போனதே ஆகும். நமக்கென்று இனிய தமிழில் பக்தி இலக்கியம் உண்டு. சைவம் மட்டுமல்ல வைணவமும் இனிய தமிழில் திவ்வியப் பிரபந்தம் ொண்டுள்ளது. இவற்றை விடுத்து ஆரிய மதநூல்களை நமதென்று தவறாகக் கருதி நாத்திக வாதம் பேசினால் தமிழ் மொழியின் முக்கிய அங்கம் ஒன்றை நாம் இழக்க நேரும். மொழிப் பற்றாளர்கள் சிந்திக்க வேண்டுகிறேன்.
இப்படிக்கு மீனாட்சி, சிங்கப்பூர். (ஆறு நாகப்பன் ஐயாவின் சித்தாந்த வகுப்பு மாணவி)