யாரும் என்னை முத்தமிடவில்லை, யாரையும் நான் கன்னத்தில் அறையவில்லை என மீரட் தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் நக்மா தெரிவித்துள்ளார்.
உத்தரபிரதேச மாநிலம் மீரட் மக்களவை தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளராக நடிகை நக்மா நிறுத்தப்பட்டுள்ளார். இவர் கடந்த வாரம் தொகுதியில் தீவிர தேர்தல் பிரசாரம் மேற்கொண்டார். பிரசாரத்தின் போது நடிகை நக்மாவின் கன்னத்தில் மீரட் சட்டமன்ற தொகுதி காங்கிரஸ் எம்எல்ஏ முத்தமிட முயற்சித்தார். அவரை தள்ளிவிட்டு நக்மா கோபமாக சென்றார். இது டிவியில் ஒளிபரப்பானது. இதன் பின்னர் மற்றொரு சமயம் தன்னை கட்டிப்பிடிக்க முயன்ற இளைஞர் ஒருவரை நக்மா கன்னத்தில் அறைந்தார். இதுவும் டிவியில் ஒளிபரப்பானது.
இதை தொடர்ந்து நக்மாவுக்கு கூடுதல் பாதுகாப்பு அளிக்க உத்தரவிட வேண்டும் என காங்கிரஸ் சார்பில் தேர்தல் ஆணையத்துக்கு கோரிக்கை விடப்பட்டது. இந்நிலையில் தன்னை யாரும் முத்தமிடவில்லை என்றும் யாரையும் தான் கன்னத்தில் அறையவில்லை என்றும் நக்மா தெரிவித்துள்ளார். இது தொடர்பாக தனியார் தொலைக்காட்சி ஒன்றுக்கு அவர் அளித்த பேட்டியில், என்னை முத்தமிட்டதாக கூறப்படும் எம்எல்ஏ என்னை மகளாக நடத்தினார்.
அவர் என்னிடம் ஏதோ சொல்ல முயன்றார். அதனை மீடியாக்கள் தவறாக புரிந்து கொண்டன. அதே போல் யாரையும் நான் கன்னத்தில் அறையவும் இல்லை. மீரட்டுக்கு செல்ல மாட்டேன் என எந்த சமயத்திலும் கூறவும் இல்லை என்றார்.
இந்தியாவின் அடுத்த பிரதமருக்கு முத்த மாலை
அனால் மலேசியாவில் ,1995 தில் டத்தோ சுப்ரா ( மக்கள் தலைவர் )உன்னை கெண்டிங் மலையிலே கொண்டு போயி….!!!
மலேசியாவில் கூத்தாடி கும்மாளம் போட்டு தங்கி இருந்த ஹோட்டலின் பில்லை கட்ட முடியாமல் அப்பொழுது இருந்த ஒரு மாஜி நிதி அமைச்சருடன் சல்லாபம் பாட வைத்த நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்களின் வற்புறுத்தலை மறந்து விட்டீரோ?
ஏனப்பா! அந்தப் பழைய குப்பைகளையெல்லாம் கிளறுவதுதால் யாருக்கு என்ன லாபம்? நீங்கள் இதையெல்லாம் தெரிந்து வைத்துகொண்டுஅதன் மூலம் என்ன பாடம் படித்தீர்கள்? நாம் எதைத் தெரிந்து கொண்டாலும் அதன் மூலம் ஏதாவது பயன் இருக்க வேண்டும்!
மக்களுக்கு இவ்விவகாரம் தெரிய வேண்டும் மக்கள் தலைவர்களின் இலட்ச்னம்
டேய் … shankar! மக்காளுக்கு என்ன தெரிய வேண்டுமோ அதை அவர்கள் பார்த்து கொள்வார்கள் நீ … போ!
மற்றவரின் அந்தரங்கம் நமக்கு தேவையில்லாத ஒன்று..
கொவபடாத யானோமியோ
தம்பி ஏனோநோமியோ புழு மேல் பட்ட தீ பிழம்பு போல் உன் மனம் துடிப்பது புரிகிறது உன் தலைவன் செய்த அசிங்கதிற்கு மற்றவர் மீது கோப படலாம?