“தெனாலிராமன்’ திரைப்படத்தை வெளியிட தடை விதிக்கக் கோரி தமிழ்நாடு தெலுங்கு மக்கள் பேரவை சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தாடெர்ந்துள்ளது.
இது தொடர்பாக அந்தப் பேரவையின் தலைவர் பாலகுருசாமி மற்றும் தமிழ்நாடு தெலுங்கு யுவசக்தி தலைவர் ஜெகதீஸ்வர ரெட்டி ஆகியோர் உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனு விவரம்: ஏ.ஜி.எஸ். நிறுவனம் நடிகர் வடிவேலு நடிப்பில் “தெனாலிராமன்’ என்ற படத்தை தயாரித்துள்ளது.
அந்தப் படம் விஜயநகர அரசர் கிருஷ்ணதேவராயரை இழிவுபடுத்தும் வகையில் தயாரிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக, அந்தப் படத்தை திரையிட்டுக் காட்டுமாறு ஏ.ஜி.எஸ். நிறுவனத்துக்கு நோட்டீஸ் அனுப்பினோம்.
அதற்கு அவர்கள் கிருஷ்ணதேவராயரை தவறாக சித்திரிக்கவில்லை என பதில் அளித்தனர். ஆனால், படத்தின் நாயகனான வடிவேலு, கிருஷ்ணதேவராயராக தான் நடிக்கவில்லை எனவும், வேங்கை மன்னன் என்ற கதாபாத்திரத்தில் மட்டுமே நடித்துள்ளதாகவும் ஒரு பேட்டியில் தெரிவித்
துள்ளார். ஆனால், தணிக்கைச் சான்றிதழில் கிருஷ்ணதேவராயர் மற்றும் தெனாலிராமன் ஆகிய கதாபாத்திரங்கள் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அவர்கள் தெரிவித்த தகவல்கள் மாறுபட்டவையாக உள்ளன.
வரலாற்றுக் கதை என்றால், வரலாற்று ஆவணங்கள் மற்றும் புத்தகத்தின் அடிப்படையில் படத்தை எடுக்கலாம். ஆனால், ஏ.ஜி.எஸ். நிறுவனம் கிருஷ்ணதேவராயரின் உண்மையை மறைத்து வணிக நோக்கத்துக்காக இந்தப் படத்தை எடுத்துள்ளனர்.
அவர்களது சொந்தக் கருத்தில், உண்மை வரலாற்றை திரித்து, தவறான நிகழ்வை உருவாக்கி படத்தை தயாரித்துள்ளனர்.
மேலும் பட நிறுவனமும், இயக்குநரும் தெலுங்கு அமைப்புகளுக்கு படத்தை திரையிட்டுக் காண்பிப்பதாக தெரிவித்தனர். ஆனால், அதற்கான நடவடிக்கையை எடுக்காமல் ஏப்ரல் 18-ஆம் தேதி படத்தை வெளியிட திட்டமிட்டுள்ளனர். எனவே, “தெனாலிராமன்’ படத்தை வெளியிட தயாரிப்பு நிறுவனத்துக்குத் தடை விதிக்க வேண்டும். தெலுங்கு அமைப்புகளுக்கு அந்தப் படத்தை திரையிட்டுக் காண்பிக்க உத்தரவிட வேண்டும் என மனுவில் கோரப்பட்டது. இந்த மனு தலைமை நீதிபதி (பொறுப்பு) சதீஷ் கே.அக்னிஹோத்ரி, நீதிபதி எம்.எம்.சுந்தரேஷ் ஆகியோர் அடங்கிய முதல் அமர்வுக்கு முன்பு வெள்ளிக்கிழமை விசாரணைக்கு வந்தது. மனுவை விசாரித்த நீதிபதிகள் வேறு அமர்வுக்கு இந்த வழக்கை மாற்றம் செய்து உத்தரவிட்டனர்.
எவன் தமிழ் படத்துக்கு வழக்கு போடுறானோ அவனை அங்கேயே … அடிங்கடா ,,
இவன் ஒரு கொள்ளைக்காரன் .. தமிழர்களின் மண்ணை கொள்ளையடிக்க வந்த வடுக வந்தேறி ஆக்கிரமிப்பாளன் ..
இவன் ஆட்சிக்கு வந்ததும் நமது முன்னோர்கள் கட்டிய ஆலயங்கள் எல்லாம் அன்னியர்கள் ஆக்கிரமித்து விட்டார்கள் ..
வடுகர்களிடம் தமிழர்கள் மிகவும் கவனமாக பழகவேண்டும் ..
மலாய்காரனை நம்பு சீனனை நம்பு வடுகனை நம்பாதே …
இந்துசங்க தலைவர் பதவி போச்சா? .. விலாயா மாநில தலைவர் பதவியும் போச்சா ? செலாங்கொர் ஆட்சிக்குழு உறுப்பினர் பதவியும் போச்சா ? பி என் வென்றிருந்தாலும் போய்தான் இருந்திருக்கும் .. ஏன்னா கேம் அப்படிதான் ..
ஒரு நல்ல தமிழன் ஒரு அஞ்சு வருசத்தில தமிழர்களுக்கு தமிழுக்கு எத்தனை காரியம் செய்தான் ,,, இப்ப உள்ளவன் சங்கத்துக்கு நன்னா செய்றான் …
கலை….முன்பு இருந்த …..செலாங்கொர் ஆட்சிக்குழு உறுப்பினர்…..எந்த பிரிவை சார்ந்தவன்…..சற்று….அறியவும்………..இந்து சங்கம்…..முன்பை…..விட….சொத்துகள்…..அதிகம்…….பழைய கடனை….செலுத்திய பெருமை……இப்ப….உள்ளல தலைவர்தான்……