கோச்சடையான் படத்தின் ரிலீஸ் தேதி முடிவு செய்யப்பட்டு, மே 9 ஆம் தேதி படம் வெளியாக உள்ளநிலையில்…. கோச்சடையான் பற்றிய ரகசிய செய்தி ஒன்று நம் காதுக்கு வந்தது.
அதாவது நடிப்பு பதிவாக்கம் என்கிற மோஷன் கேப்சரிங் டெக்னாலஜி தொழில்நுட்பத்தில் இப்படம் தயாராகி வருகிறது. அவதார் படத்தில் பயன்படுத்தப்பட்ட இந்த தொழில்நுட்பம் ஆசியாவிலேயே முதன்முறையாக கோச்சடையான் படத்தில் பயன்படுத்தப்பட்டிருக்கிறது.
உடல்நிலை சரியில்லாமல் சங்கப்பூரில் சிகிச்சை பெற்றுத்திரும்பிய பிறகு ரஜினியினால் டான்ஸ் ஆடுவது, ஃபைட் பண்ணுவது போன்ற கடினமான பணிகளை செய்ய முடியாது.
எனவேதான் நடிப்பு பதிவாக்கம் மூலம் அவருக்கு கஷ்டம் கொடுக்காமல் கோச்சடையான படத்தை எடுத்திருக்கிறார் அவரது மகள் சௌந்தர்யா.
கோச்சடையான் படத்தில் ஆரம்பத்தில் சில நாட்கள் உற்சாகமாக நடித்த ரஜினியால் தொடர்ந்து நடிக்க முடியாமல் போய் ரொம்பவே சிரமப்பட்டாராம். எனவே ரஜினிக்கு ஓய்வு கொடுத்துவிட்டு அவர் நடிக்க வேண்டிய 90 சதவிகித காட்சிகளை டூப்பை வைத்தே எடுத்திருக்கின்றனர்.
விஜய் டிவி ஜோடி நிகழ்ச்சியில் நடனம் ஆடும் யுவராஜ் என்ற டான்ஸரும், மற்றொரு சிரிப்பு நடிகரும்தான் ரஜினிக்கு டூப் போட்டு நடித்துள்ளனர்.
இதில் முக்கியமாக விஷயம்…கோச்சடையான் படத்தின் நாயகியான தீபிகா உடன் ஒரு ஷாட்டில் கூட ரஜினி நடிக்கவில்லை. டூப்தான் நடித்துள்ளனர்.
சில காட்சிகளோ, பல காட்சிகளோ ரஜினி பேரைச் சொன்னா அதிருதல்ல!
நடிக்காமலே பல கோடி சம்பாதிக்கப் போகிறது ரஜினி குடும்பம். தமிழர்கள் ஏமாளிக்ள், இளிச்சவாயர்கள் அள்ளி கொடுப்பார்கள்
அப்படி என்றால் படம் படு தோல்வி அடையும் ,,மகள் தயாரிப்பாளராக இருந்தால் உருப்பிட்டாபல தான்
சரவணன் ராமசாமி,தமிழர்கள் ஏமாளிகளா ! அட போயா ,தமிழர்கள் அறிவாளிகள் ,அரசியல் வாதிகள் உழைக்காமலேயே கொள்ளை அடிக்கிறார்கள் ,ஒரு படம் தயாரிக்க உழைப்பை போட்டு ,ஒரு தரமான படைத்தை எடுத்து வெளியிடு செய்து அதில் கிடைக்கும் ஆதாயத்தை கொண்டு சம்பாரிக்கிரார்கள் ,என்ன தப்பு ,,கடைகளில் போயி விருப்பபட்ட உடையை வாங்குறேலே ,அது போலதான் சந்தோசமாக பொழுது போக்கு களிக்கு விருப்பட்ட படங்களை பார்க்கிறார்கள் ,உனக்கேன்னையா போராம ,போயி சரைக்கிரத பாருயா ,வந்துட்டாரு புலவர் புளுவாண்டி
ரஜினியின் மீது அப்படி என்னா கோபம் ….நன்றாக உழைக்கிறார் நன்றாக சம்பாதிக்கிறார் …..ரஜினி நடிக்கும் ஒரு தமிழ்படத்தில் பல தமிழர்கள் முன்னேறுகிறார்கள் ….பல கலைஞர்கலை வாழ வைப்பவர் நம்ப தலைவர் ….