இன்றைய தலைமுறை நடிகர்களின் ரஜினியின் பாதிப்பு இல்லாத நடிகர்களே இல்லை. சில இளம் நடிகர்களோ ரஜினியின் மேனரிஸத்தை ஃபாலோ பண்ணி நடிப்பதை வழக்கமாக வைத்திருக்கின்றனர். குறிப்பாக சிவகார்த்திகேயனின் நடிப்பில் அநியாயத்துக்கு ரஜினித்தனம்.
இது பற்றி கேட்டால், நான் அவரோட ரசிகன். அவர் நடிச்ச ஒரு படத்தைக் கூட நான் மிஸ் பண்ணினதில்லை. அப்படிப்பட்ட என் நடிப்பில் ரஜினி ஸாரோட பாதிப்பு இருப்பது ஆச்சர்யப்படுகிற விஷயம் இல்லை. என் நடிப்பில் ரஜினி ஸாரோட பாதிப்பு இல்லைன்னாத்தான் ஆச்சர்யப்படணும் என்று வெளிப்படையாகவே சொல்கிறார் சிவகார்த்திகேயன்.
தன் அடுத்தப் படத்துக்கு ரஜினி முருகன் என்று பெயர் சூட்டி இருப்பதன் மூலம், சிவகார்த்திகேயன் ரஜினி ரசிகர்களை தன் பக்கம் இழுக்க திட்டமிட்டிருக்கிறார் என்பது தெளிவாகிறது. கோச்சடையான் படத்தில் நடிக்கவே விருப்பமில்லை, வேறு வழியில்லாமல் நடித்தேன், நடிப்பிலிருந்து ரிடையர்ட் ஆக விரும்புகிறேன் என்றெல்லாம் அவ்வப்போது சொல்லி வருகிறார் ரஜினி.
அவர் இதே மனநிலையில் இருந்தால் இன்னும் ஒன்றிரண்டு வருடங்களில் நடிப்புக்கு குட்பை சொல்லிவிடுவார். எனவே இப்போதே ரஜினி ரசிகர்களை டார்கெட் வைத்தால் பிற்காலத்தில் மொத்த பேரும் தன் பின்னால் அணி திரள்வார்கள் என்பதுதான் சிவகார்த்திகேயன் போட்டு வைத்திருக்கும் கணக்காம்.
சிவகார்த்திகேயன் படிக்கும் காலங்களில் கணக்கில் புலியாய் இருந்திருப்பாரோ?
மற்றவர்களைக் காப்பி அடித்தால் நீண்ட நாள் நிலைக்க முடியாது! ஏதோ தமிழன் என்கின்ற ஆதங்கம். புத்திசாலித் தனமாக நடந்து கொண்டால் சரி!
AR RAHMAN இசையால் கொச்சடையான் படம் மாபெரும் தோல்வி அடையும் .AR RAHMAN என்ற திலீப்குமார் ,இவரின் இசை பொதுவாக சகிக்க முடியாது ,இசையில் ஒரு இனிமை இருக்காது ,,ரஜினிக்கும் இந்த படம் திருப்தி அளிக்கவில்லை என்று அவரே ( ரஜினி ) THAN வாயால் சொல்லி இருக்கிறார் . .தன் குடம்ப உறுப்பினருக்கு படம் தயாரிக்கும் வாய்ப்பை ரஜினி அவர்கள் கொடுத்து இருக்க கூடாது ! பசங்கள் கல்யாணம் பண்ணி கொடுத்தும் விரட்டி அடித்திருக்க வேண்டும் .அவர்களை சினிமா தயாரிப்பில் எடுப்படுததினால் ரஜினிக்கு கேட்ட பெயர்தான் ,இந்த தவறை ரஜினி சார் அவர்கள் மீண்டும் செய்யாமல் இருப்பது நல்லது .மொத்தத்தில் கொச்சடையான் படம் படு தோல்வி அடையும் என்பதில் சந்தேகம் இல்லை .,,இதில் ஏன்னா அதிசயம் என்றால் AR ரஹ்மான் மலேசிய வருவதை பற்றி எந்த செய்தியையும் செம்பருத்தி இந்த வளாகத்தில் போட வில்லை ,,கி கி கி
நகல் நடிகர்கள் தேவையில்லை.நடிப்பு சொந்த பாணியில் இருக்க வேண்டும். தனி வழியாக இருந்தால்தான் பிரகாசிக்க முடியும். முயற்சி செய்க.
தம்பி கார்திகேய ,,,,,,,நீ பாக்யராஜ் மாதிரி ,,,,,,,,,,சூப்பர் இல்ல
நன்றி செம்பருத்தி