கஹானி படத்தின் தெலுங்கு ரீமேக்கான அனாமிகா, தமிழ் ரீமேக்கான நீ எங்கே என் அன்பே ஆகிய படங்களை இயக்கியவர் தெலுங்கு இயக்குனர் சேகர் கமமுலா. தெலுங்கில் லீடர் உள்பட 7 படங்களை இவர் இயக்கியுள்ளார்.
அதில் பல படங்களுக்கு ஆந்திர அரசின் நந்தி விருது கிடைத்திருக்கிறது. அந்த வகையில், தற்போது ஆந்திராவின் முக்கிய இயக்குனர்களில் சேகர் கம்முலாவும் ஒருவராகியிருக்கிறார்.
அதனால்தான் கஹானி ரீமேக் படங்களை மிகப்பெரிய பட்ஜெட்டில் இயக்கியிருக்கிறார். இரண்டு மொழிகளிலுமே நயன்தாராவை கதாநாயகியாக்கி உள்ளார். ஆனால், படப்பிடிப்பு நடந்தபோது அவருக்கும், நயன்தாராவுக்குமிடையே அடிக்கடி மோதல் நடந்திருக்கிறது.
அதனால், படப்பிடிப்பு முடிகிற வரைககும் அதை பொறுத்துக்கொண்ட நயன்தாரா, பூசணிக்காய் உடைத்தபோது விடைபெற்று வந்தவர்தானாம். அதன்பிறகு அந்த படம் சம்பந்தமாக எதையும் விசாரிக்காததோடு, அவர்களாக தொடர்பு கொண்டாலும் அட்டன் பண்ணுவதில்லையாம்.
அதோடு, படத்தின் ப்ரமோஷன் நிகழ்ச்சிகளுக்கும் செல்லாமல் டேக்கா கொடுத்துக் கொண்டிருக்கிறார் நயன்தாரா. அதனால் இதுவரை இந்த விசயத்தில் நயனை விட்டுப்பிடித்த சேகர் கம்முலா, தற்போது விரட்டிப்பிடிக்கும் முடிவுக்கு வந்திருக்கிறார்.
அதனால் ஆந்திராவில் சமீபத்தில் நடைபெற்ற அப்படத்தின் ப்ரமோஷனுக்கு அவர் வராததால், இந்த விசயத்தை ஆந்திரா சினிமா சங்கங்களுக்கு கொண்டு சென்றிருப்பவர், இனிமேல் நயன்தாராவுக்கு யாரும் படம் கொடுக்காதீர்கள் என்று கேட்டுக்கொண்டு அவர் மீது புகாரும் அளித்திருக்கிறார்.
இதற்கு சில ஆந்திர படாதிபதிகளும், இயக்குனர்களும் செவி சாய்த்துளளார்களாம். ஒரு படத்தின் பிரதான வேடத்தில் நடித்திருப்பவர் கண்டிப்பாக ஆடியோ மற்றும் ப்ரமோஷன் நிகழ்ச்சிகளில் பங்கேற்க வேண்டும் என்று சேகர் கம்முலாவுடன் சேர்ந்து நயனுக்கு எதிராக குரல் கொடுத்து வருகிறார்களாம்.
இதனால் ஆடிப்போன நயன்தாரா, சில முன்னணி ஹீரோக்களின் தயவை நாடி, இந்த பிரச்சினையில் இருந்து தன்னை காப்பாற்றுமாறு கேட்டுக்கொண்டு வருகிறாராம்.
இவள் ஒரு …………..!!!!!!!!!!