ரஜினி வழக்கத்துக்கு மாறாக கோச்சடையான் படம் வெளியாகும் முன்பே தன் அடுத்தப்படம் லிங்காவை ஆரம்பித்துவிட்டார். கோச்சடையான் படத்தை வெளியிட 40 கோடி தேவைப்படுவதால்தான் அவசரஅவசரமாக லிங்கா படத்தை ஒப்புக்கொண்டார் என்று கோடம்பாக்கத்தில் கிசுகிசுக்கப்பட்டுக் கொண்டிருக்க…
அதைப் பற்றி எல்லாம் கவலைப்படாமல் லிங்கா படத்தை இன்று தொடங்கிவிட்டனர். கே.எஸ்.ரவிக்குமார் இயக்கத்தில் ரஜினிகாந்த் ஏற்கனவே முத்து, படையப்பா படங்களில் நடித்திருக்கிறார். தற்போது மூன்றாவது முறையாக இணையும் இருவரும் இணைந்துள்ளனர்.
‘லிங்கா’ படத்தின் படப்பிடிப்பு, ரஜினிக்கு மிகவும் பிடித்தமான மைசூரில் உள்ள சாமுண்டீஸ்வரி கோயிலில் சிறப்பு பூஜையுடன் இன்று ஆரம்பமானது. ரஜினிகாந்ததுக்கு ஜோடியாக அனுஷ்கா, மற்றும் பாலிவுட் நடிகை சோனாக்ஷி சின்ஹா ஆகிய இருவரும் நடிக்கின்றனர்.
ரஜினியின் நண்பரான அம்பரீஷ் உட்பட கன்னடத் திரையுலகினர் திரண்டு வந்து லிங்கா பட பூஜையில் ரஜினியை வாழ்த்தி உள்ளனர். காரணம் லிங்கா படத்தைத் தயாரிக்கும் ராக்லைன் வெங்கடேஷ் கன்னடத் திரையுலகைச் சேர்ந்தவர். கன்னடத்தில் பல படங்களைத் தயாரித்தவர்.
மைசூரில் நடைபெற்றதாலோ என்னவோ லிங்கா படத்தின் துவக்கவிழாவுக்கு தமிழ்த்திரையுலகைச் சேர்ந்த யாருக்கும் அழைப்பு இல்லை. தமிழ்த்திரையுலகத்தை சேர்ந்த அமைப்புகளின் நிர்வாகிகளைக் கூட அழைக்காதது தமிழ்த்திரையுலகினர் மத்தியில் கடும் வருத்தத்தை ஏற்படுத்தி இருக்கிறதாம்.
லிங்கா தொடக்கவிழா… வருத்தத்தில் தமிழ்த்திரையுலகம்!? தாராளமாக வருத்த படட்டும் ,யாருக்கு என்ன லாபம் ,அடக்கமாக லிங்க தொடக்க விழாவை நடத்துவதில் தப்பா ?(40 கோடி தேவைப்படுவதால்தான் அவசரஅவசரமாக லிங்கா படத்தை ஒப்புக்கொண்டார் என்று கோடம்பாக்கத்தில் கிசுகிசுக்கப்பட்டுக் கொண்டிருக்க…) என்ன கிசு கிசு ,?கதை கட்டவதில் தமிழன் பலே கில்லாடி