தனுஷ், ‘ராஞ்சனா’ படம் மூலம் இந்திக்கு சென்று விட்டார். அதனால் தமிழில் அவர் இடத்தை நான் பிடிப்பேன் என்று ஒரு மேடையில் தனுஷை வைத்துக்கொண்டே சொன்னார் சிவகார்த்திகேயன்.
ஆனால் அதற்கு பதில் கொடுத்த தனுஷ், தமிழ் சினிமாவைப்பொறுத்தவரை எனது இடத்தை நான் யாருக்கும் விட்டுத்தர மாட்டேன்.
இன்னும் 12 வருடங்கள் நான் தமிழ் படங்களில்தான் நடிப்பேன். அதன்பிறகுதான் மற்ற மொழிகளுக்கு செல்வேன். அதன்பிறகு வேண்டுமானால் யார் வேண்டுமானாலும் என் இடத்தை பிடித்துக்கொள்ளட்டும் என்றார்.
இந்த விசயத்தில் அதர்வாவும் சிவகார்த்திகேயனை ஒத்துப்போகிறார். பரதேசிக்குப்பிறகு ஒரு முக்கிய நடிகராக களத்தில் நிற்கும் அவரது கையில் தற்போது இரும்புக்குதிரை, ஈட்டி, கணிதன் போன்ற படங்கள் உள்ளன.
இந்த படங்களுக்குப்பிறகு கோலிவுட்டில் தனக்கென ஒரு வியாபார வட்டம உருவாகும் என்று எதிர்பார்க்கும் அதர்வா, இப்படங்களில் கடினமான உழைப்பைக் கொடுத்துள்ளாராம்.
அவரது மெனக்கெடலைப்பார்த்து சிலர், சினிமாவில் உங்கள் அப்பா முரளி விட்டுச்சென்ற இடத்தை பிடிக்க முயற்சிக்கிறீர்களா? என்று அவரிடம் கேட்டதற்கு, என் அப்பா பாணி எனக்கு வேண்டாம். நான் சூர்யா மாதிரி ஒரு நடிகராக வளரவே ஆசைப்படுகிறேன்.
அதனால்தான் படத்துக்குப்படம் எனது உழைப்பை அதிகப்படுத்திக்கொண்டே வருகிறேன். அதற்கான பலன் தற்போது நடித்து வரும படங்கள் திரைக்கு வரும்போது எனக்கு கிடைத்து விடும் என்ற நம்பிக்கை உள்ளது என்கிறாராம் அதர்வா.
அதர்வா உங்க அப்பாவுக்கு எத்தனை வயதனாலும் கல்லூரி
மாணவர் வேடமும் ,காதலை சொல்ல தயங்கும் வேடமும்
கிடைத்துக்கொண்டே இருந்தது ,இப்போது நீங்களும் உங்க மாதிரி நடிக்க மாட்டேன் என்றால் தமிழ் நாட்டில் இனி இது போன்ற படங்கள் வராதே நைனா.