தயாரிப்பாளர்களில் அதிர்ஷ்டக்கார தயாரிப்பாளர் யார் என்றால்…. நடிகர் தனுஷ்தான். நடிகராக பல கோடிகள் சம்பளம் வாங்கும் தனுஷ், இன்னொரு பக்கம் படத்தயாரிப்பிலும் செமத்தியாய் அறுவடை செய்து வருகிறார்.
தற்போது அவர் நடித்து வரும் வேலையில்லா பட்டதாரி படத்தையும், சிவகார்த்திகேயனை வைத்து டாணா என்ற படத்தையும் தயாரித்து வருகிறார் தனுஷ்.
இவ்விரு படங்களின் சாட்டிலைட் உரிமையையும் மதுரையைச் சேர்ந்த பைனான்சியரிடம் சில கோடிக்கு விற்றுவிட்டாராம். இதில் குறிப்பிட வேண்டிய விஷயம் என்னவென்றால், டாணா படம் தொடங்குவதற்கு முன்பே இந்த டீல் முடிந்துவிட்டதுதான்.
சாட்டிலைட் உரிமையை விற்ற வகையிலேயே பெரும் தொகையைப் பார்த்த தனுஷ், வேலையில்லா பட்டதாரி, டாணா ஆகிய இரண்டு படங்களின் நெகட்டிவ் ரைட்ஸை, மான் கராத்தே படத்தைத் தயாரித்த எஸ்கேப் ஆர்ட்டிஸ்ட் மதனிடம் மிகப்பெரிய தொகைக்கு விற்றுவிட்டார்.
கையிலிருந்து பணத்தை செலவு செய்யாமலே படங்களை ஆரம்பித்து, அந்தப் படங்களை முடிப்பதற்கு முன்பே சாமர்த்தியமாக பல கோடி லாபத்தையும் சம்பாதித்து பாக்கெட்டில் போட்டுக் கொண்டிருக்கிறார் தனுஷ்.
வியாபாரத்தில் கில்லாடியாகிவிட்டார்!?
தமிழனை தவிர தமிழரல்லாத திராவிடங்கள் அனைவரும் கில்லாடிதான் !!!!!!!!!!!!!!!
வர்த்தகம் என்பது இது தான், அதே சமயத்தில் பல கோடிகளைப் போட்டு லாபம் பார்க்காமல் இருப்பதுவும் இது தான்!
CHAKARAVARTHY அவர்களே ,பலகோடி வெள்ளி போட்டு ஒரு கம்பெனியை திறந்து அதில் கோடி கணக்கில் லாபம் பார்க்கிறார்களே ,அது போலதானே சினிமா கம்பெனியும் ? .அது ஏன் சார் சில மடையனுங்களுக்கு புரிய மாடடிகிது?சொல்லுங்கண்ணே சொல்லுங்க