ரஜினி நடித்துள்ள கோச்சடையான் அனிமேஷன் படத்தை பார்த்தவர்களெல்லாம் அந்த படத்தைப்பற்றி எந்த குறையும் சொல்லவில்லை. வித்தியாசமான அனுபவமாக இருந்தது என்றுதான் கூறி வருகிறார்கள்.
அதிலும் ரஜினியின் நண்பரான கமல், படத்தைப்பார்த்து விட்டு, இயக்குனர் செளந்தர்யாவை வெகுவாக பாராட்டியுள்ளார். மற்றபடி படத்தைப்பற்றி அவர் பெரிதாக எந்த கருத்தும் சொல்லவில்லை.
இந்த நிலையில், கோச்சடையான் பற்றி சிம்பு தனது மனதில் உள்ளதை வெளிப்படையாக சொல்லியிருக்கிறார். அதாவது, கோச்சடையான் படத்தை ஹாலிவுட் தரத்தில் இருப்பதாக சொல்கிறார்கள்.
ஆனால், அந்த அளவுக்கெல்லாம் படம் இல்லை. இந்த படத்தை ஹாலிவுட் படங்களுடன் ஒப்பிடக்கூடாது, அதேசமயம் இப்படியொரு படத்தை கொடுத்ததற்காக செளந்தர்யாவுக்கு பாராட்டுக்கள் என்று தனது மனதில் பட்டதை தைரியமாக சொல்லியிருக்கிறார்.
சிம்புவின் இந்த எதிர்மறையான விமர்சனத்தினால், கோச்சடையான் புகழ் பாடிக்கொண்டிருக்கும் ரஜினியின் ரசிகர்களும், அபிமானிகளும் கொதிப்படைந்துள்ளனர்.
இருப்பினும், கோச்சடையான் டைரக்டரான செளந்தர்யாவோ, சிம்புக்கு எதிராக எந்தவொரு வார்த்தையையும் பயன்படுத்தாமல், தங்களது கருத்துக்கு நன்றி என்று ஒரு வார்த்தையோடு முடித்துக்கொண்டுள்ளார்.
இதில் கொதிப்படைவதற்கு என்ன இருக்கிறது? அவர் கருத்தை அவர் சொன்னார்! கமல் கூட கருத்து ஒன்றும் சொல்லவில்லை ரஜினி அவர் நண்பர் என்பதால்! அப்படியும் இருக்கும் இப்படியும் இருக்கும்! தமிழ் நாட்டுக்காரனுக்கு இதெல்லாம் ஒரு பிரச்சனை!
சிம்பு உண்மையிலே நீ சொன்னதுதான் உண்மை
டேய் சிம்பு ,விடல பயலே ,நீ நடித்த படம் எல்லாம் ஹாலிவுட் தரத்தில் எட்டிவிட்டதா ?? டேய் தமிழ் மொழி படத்துக்கு இது உயர்ந்த தரம்டா.இது ஒரு நல்ல முயச்சி ,,வரும் காலங்களில் இன்னும் தமிழ் படம் தரத்தை உயர்த்தி விடுவார்கள் ..போட்ட செம்பு